
இந்தப் பிரச்சினையைத் தீர்க்க ஒவ்வொரு இடுகைக்கும் நாம் விரும்பும் சுருக்கமான ஆங்கில அல்லது வரிசை எண் அடிப்படையில் URLகளைத் தரலாம்.
wordpress.comல் write post பக்கத்தின் வலப்புறம் உள்ள post slug என்ற இடத்தில் உங்கள் விருப்பத் தலைப்பைத் தரலாம். இங்கு முழு urlஐத் தரத் தேவை இல்லை. மாற்றுத் தலைப்பை மட்டும் தந்தால் போதும். எடுத்துக்காட்டுக்கு, சோதனை என்று உங்கள் இடுகைத் தலைப்பு இருக்குமானால், test என்று post slug தரலாம். இல்லை, உங்கள் இடுகையின் வரிசை எண்ணோ ஏதாவது ஒரு எண்ணோ தரலாம்.
கீழே உள்ள விளக்கப் படத்தைப் பாருங்கள்.

இதே சொந்தத் தளத்தில் wordpress நிறுவி உள்ளவர்கள் options-->permalinks போய் ஒட்டு மொத்தமாக எல்லா இடுகைகளுக்கும் இந்த அமைப்பை மாற்ற முடியும்.
இங்கு, கவனிக்க வேண்டியது, இந்த நீளமான தமிழ் முகவரிகள் இருந்தால், ஒருவேளை, கூகுள் போன்ற தேடு பொறிகளில் உங்கள் இடுகைகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் கிடைக்கலாம். அதனால், சுருக்கமான முகவரி வேண்டுமா தேடு பொறிகளில் கூடுதல் முக்கியத்துவம் வேண்டுமா என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்.
மேலதிக விளக்கம் தேவைப்பட்டால் மறுமொழிகளில் கேளுங்கள்.
ரவி
3 comments:
சூப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!
பழைய பதிவுகளை எடிட் செய்தால்... மீண்டும் திரட்டிகளில் சேர்க்க வேண்டியதிருக்கும். அதனால்.. இனி புதிய பதிவுகள் தங்களின் திட்டம் படியே வரும்.
நன்றி ரவி!
பாலா, சோதனைக்கு,திரட்டியில் இணைந்துள்ள முந்தைய இடுகை ஒன்றுக்கும் post slug கொடுத்துப் பாருங்களேன். ஒரு வேளை வழிமாறுதான்னு பார்க்கத் தான். இதைச் செய்யும் முன்னர் பழைய urlஐ எதுக்கும் copy பண்ணி வெச்சுக்குங்க..ஒருவேளை வழிமாறாட்டி பழைய urlல் இருந்து post slug கொடுத்து இணைப்பை மீட்கலாம்
நன்றி. மாத்தியாச்சு. :)
Post a Comment