'மகளிர் சக்தி'யை உங்கள் பதிவில் இட உதவும் 'சக்தி கொடு' பொத்தானும், சமீபத்தில் சென்னை பதிவர் சந்திப்புக்காக அளிக்கப்பட்ட விளம்பரம் தரும் பொத்தானும் இப்படி உருவாக்கப்பட்டவையே.
இந்த விட்ஜட்கள் இரண்டு வகையானவை:
1. Static widget installer
2. Dynamic Widget installer
Static என்னும் மாறா நிரல்துண்டு நிறுவி எல்லா பதிவுகளுக்கும் ஒரே விதமான நிரல்துண்டுகளைக் கொடுப்பவை. எடுத்துக்காட்டுக்கு, மேலே சொன்ன சக்தி கொடு பொத்தானே ஒரு மாறா நிறுவி தான். யார் பதிவில் இட்டாலும் அதன் உள்ளடக்கம் ஒன்றாகத் தான் இருக்கும். இதை விளம்பரங்களுக்கும், இது போல் ஏதேனும் ஒரு பதிவின் ஓடைகளைப் படிக்கவும் பயன்படுத்தலாம்
Dynamic என்னும் மாறும் நிரல்துண்டு நிறுவி, அவரவர் பதிவுகளுக்கு வேண்டிய வகையிலான நிரல்துண்டை நிறுவிக் கொள்ள உதவும். அண்மைய ஐந்து இடுகைகள், அண்மைய ஐந்து பின்னூட்டங்கள் போன்றவற்றிற்கு நாம் விட்ஜட் கொடுத்தால் அந்தந்த பதிவர்கள் அவரவர் பதிவுகளின் இட்டுக் கொள்ள முடியும் வகையிலானவை இந்த dynamic widget installers.
இந்தப் பதிவில் static installer களை உருவாக்குவது எப்படி என்று மட்டுமே எழுதப் போகிறேன். விட்ஜட் நிறுவும் இந்த நிரலியை ப்ளாக்கர் பதிவில் மட்டும் தான் செய்து பார்க்க முடியும்.
1: நீங்கள் கொடுக்க விரும்பும் விட்ஜட்டை முதலில் உங்கள் பதிவில் நீங்களே இட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.எடுத்துக்காட்டுக்கு, எய்ட்ஸ் விழிப்புணர்வு பற்றிய பக்கப்பட்டித் துண்டை பலரது வலைபதிவில் பார்த்திருப்போம். இது போன்ற ஒரு விட்ஜட் கொடுக்க விரும்பினால், முதலில் அந்த பக்கப்பதிவுத் துண்டை நீங்களே உங்கள் பதிவில் "Add New Widget" வழியாக சேர்த்துக் கொள்ளுங்கள்.
2. மேற்குறிப்பிட்ட விழிப்புணர்வு பற்றிய widget உருவாக்க தேவையான நிரலியின் ஒரு எடுத்துக்காட்டு பின்வருமாறு:
இந்த நிரல்துண்டை உங்கள் பதிவின் Layout பக்கத்தில் "Add New Widget" என்ற பொத்தானை அமுக்கி, அதிலும், "HTML/Java Script" வகையான Widget ஆக இந்த நிரல்துண்டை இட வேண்டும்.
[குறிப்பு: & lt; , & gt; போன்றவற்றில் நான்கு எழுத்துக்களும் அருகருகே வர வேண்டும். அனாவசிய space ஐ விட்டு விட்டு எழுத வேண்டும்]
நிரல்துண்டின் வரி விளக்கம்:
Widget Installerகள் பொதுவாக படிவங்களாக (form) இருக்கின்றன. உங்கள் பக்கத்தில் தனக்கென சின்ன மினி பக்கத்தை உருவாக்கிக் கொண்டு அதில் சில வேலைகள் செய்யவே இந்த படிவ வகை தேவைப்படுகிறது.
<form action="http://www.blogger.com/add-widget" method="post">
என்ற பகுதியை எல்லா விட்ஜட் நிறு்வி நிரலியிலும் இட்டே ஆக வேண்டும்.
Form பகுதிக்குப் பின்னர் வரும் எல்லா input வரிகளும், இந்த widget installer form இல் நிரப்ப வேண்டிய சில மாறிகள் (variables) தான். அதில் ஒவ்வொரு வரியாக அடுத்து பார்ப்போம்:
1. தலைப்பு/Widget Title : நிரல்துண்டின் தலைப்பை இந்த இடத்தில் இட வேண்டும். உங்கள் installer வழியாக நிறுவிக் கொண்டவர்களின் பதிவுகளில் அந்த widgetஇன் தலைப்பாக இது இருக்கும்.
இலக்கணம்:
<input type="hidden" value=நீங்கள் விரும்பும் தலைப்பு name="widget.title">
எ.கா:
<input type="hidden" value="விழிப்புணர்வு" name="widget.title">
2. உள்ளடக்கம்/Content: நீங்கள் கொடுக்க விரும்பும் நிரல்துண்டில் உள்ளடக்கம் என்ன இருக்க வேண்டும் என்பதே இது. மேற்குறிப்பிட்ட மாதிரி உங்கள் பதிவில் நீங்களே இந்த விட்ஜட்டை ஒருமுறை செய்து பார்த்திருப்பீர்கள் தானே? அப்படிச் செய்யும் போது பயன்படுத்திய நிரலியைத் தான் இங்கு கொடுக்கப் போகிறோம்.
ஆனால் நேரடியாக பதிவின் வார்ப்புருவில் இடுவதற்கும், இது போல் இடுவதற்கும் ஒரு வேறுபாடுகள் உண்டு:
அ. <, > போன்றவை இந்த வரியின் உள்ளே பயன்படுத்தினால் ஏற்கனவே இருக்கும்
<input>
இன் <, > குறிகளுடன் குழப்பம் ஏற்படும் என்பதால், இவற்றிற்குப் பதிலாக, முறையே & lt; யும், & gt;யும் பயன்படுத்த வேண்டும் (space இல்லாமல்)ஆ. சுட்டிகளைக் கொடுக்கும் போது, ஒற்றை மேற்கோள்(') குறியை இட வேண்டும்.
இலக்கணம்:
<input type="hidden" value="அவசியமான உள்ளடக்கம்" name="widget.content">
எ.கா:
<input type="hidden" value="& lt;a href='http://manggai.blogspot.com/2007/04/blog-post_27.html'& gt;& lt;img src=http://poorna.rajaraman.googlepages.com/aids_aware.jpg& gt;& lt;/a& gt; எயிட்ஸ் பற்றிய சரியான புரிதலுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை கரம் நீட்டுவோம் நேசமுடன்." name="widget.content">
மேல் உள்ள உள்ளடக்கப் பகுதி, input வரிக்கான சமரசங்கள் இல்லாமல் எழுத வேண்டுமாயின் :
<a href='http://manggai.blogspot.com/2007/04/blog-post_27.html'><img src="http://poorna.rajaraman.googlepages.com/aids_aware.jpg></a>எயிட்ஸ் பற்றிய சரியான புரிதலுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை கரம் நீட்டுவோம் நேசமுடன்."
3. வார்ப்புரு/template: form என்பது குட்டிப் பக்கம் என்று முன்பே சொல்லிவிட்டேன். தனிப்பக்கம் என்பதால் அதற்குரிய வார்ப்புருவையும் தனியே தர வேண்டியது அவசியமாகிறது. பொதுவாக மாறா widget நிறுவிகளில், இந்த வார்ப்புருவும், உள்ளடக்கமும் ஒன்றாகத் தான் இருக்கும்.
இலக்கணம்:
<input type="hidden" value=அவசியமான வார்ப்புரு name="widget.template">
எ.கா:
<input type="hidden" value="<data:content/>" name="widget.template">
4. ஒப்படை/Submit: இறுதியாக விட்ஜட் நிறுவியி பொத்தானுடன் இந்த நிரல் துண்டு முடிவடையும்.
இலக்கணம்:
<input type="submit" value="கை கொடுப்போம்" name="go">
இதே படிகளில் உருவாக்கிய விட்ஜட் நிறுவி பொத்தான் இந்தப் பக்கத்தில் இருக்கிறது. இதை வைத்து நீங்கள் உங்கள் பதிவில் எய்ட்ஸ் விழிப்புணர்வுக்கான விட்ஜட்டை அணிந்து கொள்ளலாம்..
Widget Installerஐ உருவாக்கும் விதத்தை முயல விரும்புபவர்கள் மேலுள்ள நிரலியை வைத்தே முதல் நிறுவுனரைச் செய்து பார்க்கலாம்.. சந்தேகம் இருந்தாலும்/புரியவே இல்லைன்னாலும் சொல்லுங்க..
மேலும் படிக்க: How do I create new widgets for other people to add to their layouts?
6 comments:
நல்ல பதிவு!
அனைத்து பதிவர்களுக்கும் உதவும் டெக்னிக்கல் விஷயம்!
(நமக்கெல்லாம் புரிய கொஞ்சம் டைம் ஆகும்னு நினைக்குறேன்)
சிபி,
:((( உங்களுக்கே புரியலைன்னா.. கொஞ்சம் சிரமம் தான்.. மறுபடி இன்னும் எளிமைப்படுத்தி எழுதணுமா?
//உங்களுக்கே புரியலைன்னா//
பிளாக் கோடிங்க்லே எனக்கு அவ்வளவா ஞானம் இல்லை! அதான் எனக்கு புரிய டைம் ஆகும்னு சொன்னேன்!
எனக்கே புரியலைன்னு சொன்னா அது தலைக் கணம்!
எனக்கும் அப்புறமா புரியும்னு சொன்னா தன்னம்பிக்கை!
பொன்ஸ்,
நன்றி. இந்த இடுகை எப்ப வரும்னு காத்துட்டு இருந்தேனாக்கும். :)
-மதி
பதிவுக்கு நன்றிங்க டீச்சர்.
ஆனா நீங்க கொடுத்திருக்கற நிரலை எடுத்து ஒட்டினா வேலை செய்ய மாட்டேங்குது. gt, lt க்கு முன்னாடி இருக்கற space எடுத்தாலும் வேலை செய்ய மாட்டேங்குது. எப்டியோ கைகொடுப்போம் மூலமா என்னோட பக்கத்திலயும் போட்டுட்டேன்.
என்னை மாதிரி வாழைப்பழ சோம்பேறிகளுக்கு அதெல்லாம் சரி பண்ணி போடுறதில்லையா :)
முனி,
கொஞ்சம் மாற்றங்கள் செய்து போட்டிருக்கேன்.. இப்ப வேலை செய்யுதான்னு பார்த்துச் சொல்லுங்களேன்..
Post a Comment