Quick refrence
Download Links:-
eKalappai 2.0b(Anjal) | eKalappai 2.0b (tamilnet99) - இங்கே தேர்வு செய்யவும்,
Key board layout :- e- kalappai (Anjal) |e-kalappai (Tamil 99) இதே மாதிரி இன்னும் ஏதாவது quick refrence சேர்த்தால் உபயோகமாக இருக்குமானால் பின்னூடத்தில் தெரிவிக்கவும்
Key board layout :- e- kalappai (Anjal) |e-kalappai (Tamil 99) இதே மாதிரி இன்னும் ஏதாவது quick refrence சேர்த்தால் உபயோகமாக இருக்குமானால் பின்னூடத்தில் தெரிவிக்கவும்
Subscribe to:
Post Comments (Atom)
30 comments:
கடந்த 4-5 மாசமா தமிழ்99 பாவிச்சாலும் எல்லாரும் ஏதாவது பட்டைய போடறாங்களே நாமளும் ஏதாவது போடலாம் அப்பிடின்னு நேத்து தான் ஒரு பட்டைய போட்டேன்.இங்கே
உங்க விளம்பர உத்தியும் நல்லா இருக்கு, சத்தியா
உங்கள் தமிழ் 99 போராட்டத்தை ரொம்ப குற்ற உணர்ச்சியோடு ஆதரிக்கிறேன்.
:-(
ரவிசங்கர்
இது வரை ஒருவர் தான் வந்துள்ளார்,ஒரு வேளை பலர் உபயோகப்படுத்த ஆரம்பித்தால் அதன் உண்மை நன்மைகள் தெரியக்கூடும்.
எதிர்க்கட்சி வரிசையில் நாம் உட்காரத் தடையேதும் உள்ளதா
நான் ஆரம்ப நாட்கள் முதலே தமிழ் 99 தான் பாவிக்கிறேன். இதைவிட இலகுவான, தமிழில் இலக்கண அடிப்படையில் அமைந்த தட்டச்சுப் பலகை இல்லை என்பது உண்மையே.
நான் முரசு அஞ்சல் செயலியில், தமிழ் 99 பலகையின் உதவியுடனேயே விருபா தளத்தின் அத்தனை தகவல்களையும் உள்ளீடு செய்துள்ளேன்.
Phonetic தட்டச்சுப் பலகையில் சில இடங்களில் "ர", "ற" வேறுபாடு வரும் இடங்களில் ஆங்கில பெரிய எழுத்தையும் (Capital Letter), சாதாரண எழுத்தையும் சேர்த்து அடித்தால்தான் உதாரணமாக ( றெ = R + e , ரெ = r + e , றே = R + E , ரே = r + E ) வரும். எந்த இடத்தில், எந்த அடிப்படையில் பெரிய எழுத்தையும் சிறிய எழுத்தையும் சேர்த்து அடிக்க வேண்டும் என்பது எனக்குப் பெரிய குழப்பமாகவே உள்ளது. ஆனால் நண்பர்கள் பலர் இலகுவாக Phonetic தட்டச்சுப் பலகை பயன்படுத்துவதையும் பார்த்துள்ளேன்.
உங்களுடைய ""தமிழில் சிந்திப்போம் - தமிழ் 99 விசைப்பலகை" விழிப்புணர்வுப் படத்தை எங்களுடைய வலைப்பதிவில் சேர்க்க முயன்றபோது, எமது வலைப்பதிவின் Template உடன்பட மறுக்கின்றது, விரைவில் இதனைச் சேர்த்துக் கொள்கிறோம்.
எங்கள் ஆதரவு "தமிழ் 99" விசைப் பலகைக்கே.
வடுவூர் குமார் - ஐயோ, தமிழ்99 பயன்படுத்துவது ஒருவர் மட்டும்னு நினைச்சீங்களா? சிந்தாநதி, voice on wings, மாஹிர்-னு வலையுலகில் அறிமுகமான பலரும் இன்னும் முகம் தெரியாமல் பலரும் இதைப் பயன்படுத்திக்கிட்டு தான் இருக்காங்க. தமிழ்நாடு அரசு அங்கீகாரம் உள்ள விசைப்பலகை முறை என்பதால் அரசு அலுவல்களிலும் இதன் பயன்பாடு அதிகம் இருக்கக்கூடும். உறுதிப்படுத்த இப்போது இயலவில்லை.
பாமினிக்காரன் - நாம பாமினிக்கு எதிர் இல்ல ஐயா. தமிங்கிலப் பலகை போல் அல்லாது பாமினிக்காரர்கள் தட்டச்சும் போது தமிழில் தான் எழுத்துக்களைச் சிந்திக்கிறார்கள். தவிர, தமிங்கிலத்தில் இருந்து தமிழ்99க்கு மாறுவது எளிது. பாமினி போன்ற பிற தமிழ் விசைப்பலகையில் இருந்து மாறுவதற்கு நாளாகும். அதனால், பாமினிக்காரர்களை மாறச்சொல்லி வலியுறுத்துவதில்லை. ஆனால், புதிதாக யாருக்காவது தமிழ்த் தட்டச்சு சொல்லிக் கொடுத்தால் அவர்களுக்கு தமிழ்99ஐப் பரிந்துரைக்கக் கேட்டுக்கிறேன்.
விருபா - ர, ற, ண, ன, ந, ல, ழ, ள - எழுத்துப் பிழை குழப்பங்கள், அதைத் தட்டச்ச தேவைப்படும் கூடுதல் shift விசைகள் எல்லாம் தமிழ்99ல் தேவைப்படாது. இலகுவாகத் தட்டச்சலாம். இதைச் சுட்டிக் காட்டியதற்கு நன்றி.
விரைவில் widgetல் என்ன கோளாறு என்று பார்க்கிறோம். இது ப்ளாகர் பதிவுகளுக்கு மட்டுமேயான widget தான்.
விருபா,
இந்த விட்ஜட், புது ப்ளாக்கர் வார்ப்புருக்களில் மட்டுமே வேலை செய்யக் கூடியது.. உங்கள் பதிவின் வார்ப்புரு புதுப் ப்ளாக்கர் அமைப்பில் இல்லை. அதனால் தான் இந்த விட்ஜட் அதில் பொருந்த மறுக்கிறது என்று நினைக்கிறேன்.
பழைய ப்ளாக்கர் பதிவுகளில் அணிய நிரல்துண்டை தனியாகவே தர முயல்கிறோம்..
தமிழ் 99,
நீங்க என்னதான் விளம்பரம் (??) செய்தாலும் என்னால இன்னமும் இதை ஏத்துக்க முடியல. அதனால என்னோட ஆதரவு இதுக்கு இல்ல. (ரவிசங்கருக்கு என்னோட ஆதரவு எக்கச்சக்கமா இருக்கு)
விருபா, இலகுவானது சரி அது என்ன இலக்கண அடிப்படையில் அமைந்த விசைப்பலகை?? இதென்ன கவிதை கட்டுரையா?? இலகுவாக தட்டச்சலாம் என்று மட்டும் சொல்லுங்கள். அல்லது விளக்குங்கள்...
பகீ,
தமிழ்99 விசைப்பலகையின் அறிவியல், இலக்கண அடிப்படையை அறியும் முன் தமிங்கிலப் பலகையின் வடிவமைப்பு அடிப்படையின் போதைமையைப் பார்ப்போமா?
தமிங்கிலப் பலகைக்கு அடிப்படையாக இருக்கும் asdf அல்லது qwerty பலகையில் ஆங்கில எழுத்துக்கள் அமைந்திருக்கும் வரிசைக்கு காரணம் சொல்ல முடியுமா? தட்டச்சுப் பொறிகள் இருந்த காலத்தில் அவற்றில் வேகமாகத் தட்டச்சினால் அவை பழுதடைந்து விடுகின்றன என்ற காரணத்துக்காக, எழுத்துக்களைக் கலைத்துப் போட்டு தட்டச்சும் வேகத்தைக் குறைக்க உருவாக்கபட்டத்தே இப்போது உள்ள ஆங்கில விசைப்பலகை. ஆங்கில எழுத்து வரிசைக்கே அடிப்படை இல்லாத போது அதை அடிப்படையாகக் கொண்டு தமிங்கில விசைப்பலகை உருவாக்குவது எப்படி பொருந்தும்? தவிர w = ந போன்ற முட்டாள்த்தனமான விசை அமைப்புகள் மனதில் பதிவதால் weenga nallaa irukkengkaLaa என்று தமிங்கில மடல் எழுதுவோரைப் பார்த்திருக்கிறேன். இருக்கிற தமிழ் எழுத்துகளுக்கு விசைப்பலகையில் இடம் இல்லை என்று இருக்கிற போது p, b = ப்; t, d = ட்; s, c = ச்; k, g = க என்று ஒரே எழுத்துக்களுக்கு இரண்டு விசைகளைத் தந்து இடத்தை வீணாக்குகிறோம். q, x, f விசைகளுக்கு வேலையே இல்லை! அதிகம் பயன்படாத ஜ போன்ற எழுத்துக்களுக்குத் தனி விசையாக j. அந்த இடத்தை அதிகம் பயன்படுத் ற, ண, ள போன்றவற்றுக்குத் தந்திருக்காமே?அந்த இடத்தை பிற ள, ழ, ண போன்ற எழுத்துக்களுக்குத் தந்திருந்தால் ஒவ்வொரு முறை அவற்றை எழுதும்போதும் shift அடிக்கத் தேவை இல்லையே?
இந்தத் திறம் குறைந்த qwerty பலகைக்கு மாற்றாகத் திறம் கூடிய dvorak விசைப்பலகை 1936லேயே பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், வணிகக் காரணங்களுக்காக அதைப் பரவலாக்காமல் செய்து விட்டார்கள்.
பார்க்க -
http://en.wikipedia.org/wiki/Dvorak_Simplified_Keyboard
தமிழுக்கும் அப்படி நேராமல் இருக்கவும் உலகெங்கும் சீர்தரமாக ஒரு பலகை இருக்கவும் தமிழ்99 முறை அறிஞர்களின் ஆலோசனைக்கு ஏற்ப தமிழக அரசால் 1999ல் பரிந்துரைக்கப்பட்டது. இதில் என்ன இலக்கணச் சிறப்பு என்றால்,
http://i16.photobucket.com/albums/b7/ravidreams/tamil99key.gif
இங்கு உள்ள படத்தைப் பாருங்கள்.
உயிர் குறில்கள் - இட நடு வரிசை
உயிர் நெடில்கள் - இட மேல் வரிசை.
அதிகம் பயன்படாத ஒ, ஓ, ஔ இட கீழ் வரிசை.
அதிகம் பயன்படும் க ச த ப - வல நடு வரிசை.
அடிக்கடி ஒன்றாக வரும் ஞ்ச, ன்ற, ண்ட, ந்த, ம்ப, ங்க போன்ற எழுத்து வரிசைகள் பக்கம் பக்கமாக உள்ளன.
ஞ ச வரிசையாக அடித்தால் அதுவே ஞவுக்குப் புள்ளி வைத்து ஞ்ச என்று எழுதி விடும். ஏனென்றால் தமிழ் இலக்கணப் படி ஞவும் சவும் அடுத்தடுத்து வரும்போது கண்டிப்பாக ஞ்ச என்று தான் வரும். எனவே, பயனர் தனியாக ஞவுக்குப் புள்ளி வைக்கத் தேவை இல்லை. ன்ற, ங்க, ஞ்ச, ந்த, ம்ப, ண்ட எல்லாமே இப்படித் தானாகப் புள்ளி வரும். ட ட என்று இரு முறை அடித்தால் ட்ட ஆகி விடும். ன்ன, க்க, ப்ப, த்த, ண்ண, ட்ட எல்லாமே தானாகவே புள்ளி வைத்துக் கொள்ளும். தமிழ்ச் சொற்களைக் கூர்ந்து கவனித்தால் இது போன்ற விசை வரிசைகள் எவ்வளவு அடிக்கடி வருகின்றன என்று உங்களுக்குத் தெரியும். இப்படி புத்திசாலித்தனமாக வடிவமைக்கப்பட்டுள்ளதால் நீங்கள் தட்டச்சுவதில் 40% மிச்சப்படும். ஓரிரு சொற்களில் பின்னூட்டம் போடும் போது இதன் அருமை தெரியாது. ஆனால், பக்கம் பக்கமாகப் புத்தகம் எழுதுகிறவர்கள், மணிக்கணக்கில் விக்கி தளங்களில் கட்டுரை எழுதுகிறவர்களுக்கு இது தட்டச்சு வேகத்தை அதிகரிக்கும் வரப்பிரசாதம்.
தமிங்கிலப் பலகையில் கவனக்குறைவால் ர வர வேண்டிய இடத்தில் ற வும் ன-ண-ந, ல,ழ,ள குழப்பங்களும் தட்டச்சுப் பிழைகளும் மலிய வாய்ப்பு உண்டு. தமிழ்99ல் எல்லாமே தனித்தனி விசைகள் என்பதால் தவறுதலாக ஒன்றுக்குப் பதில் இன்னொன்றை அழுத்தி விட வாய்ப்பில்லை.
தமிங்கிலத்தில் த என்று எழுது tha என்று மூன்று விசைகளை அழுத்த வேண்டும். தமிழ்99 த என்று ஒரு விசை அழுத்தினால் போதும். த்+உ =து போன்ற இலக்கண அடிப்படையில் தான் எல்லா உயிர்மெய் எழுத்துக்களும் தமிழ்99ல் வருகின்றன.
அடிக்கடிப் பயன்படும் எழுத்துக்கள் நம் விரலகள் இலகுவாகச் சென்று வரக்கூடிய விசைகளில் இருப்பதாலும், அவை இடம், வலம், மேல், கீழ் என்று முறையாகப் பிரிக்கப்பட்டிருப்பதாலும் கை வலிக்காது.
சிந்திக்கத் தெரியாத தட்டச்சுப் பலகைக்குத் தான் ஒவ்வொன்றையும் சொல்லித் தர வேண்டும். கணினி என்றாலே வேலைகளை இலகுவாகச் செய்யத் தானே? நம் மொழியின் எழுத்து வரிசையை அதற்குச் சொல்லித் தந்து விட்டால், அது நம் வேலையை மிச்சப்படுத்தி விடும். எளிதான உவமை சொல்வது என்றால் செல்பேசியில் dictionary modeலும் no dictionary modeலும் சொற்களை எழுதுவதற்கு உள்ள வித்தியாசம் போல் தான் இது.
தமிழ்99ல் விசையின் இடங்களை நினைவில் கொள்வது எளிது. தமிழ் பட்டும் தெரிந்து கணினிக்கு வரும் ஒருவர் முதலில் ஆங்கில விசைப்பலகை எழுத்துக்கள் எங்கிருக்கு என்று பார்த்து , அப்புறம் அதில் எந்த எழுத்து தமிழுக்கு என்று புரிந்து மனதுக்குள்ளேயே map செய்து அடிப்பதற்குள், நேரடியாக தமிழைத் தட்டச்சும் முறையைப் புரிந்து கொள்ளவும் நினைவில் கொள்ளவும் பழகவும் அவருக்கு எளிது. ஆங்கில விசைப்பலகை அறிந்த ஒருவருக்கு தமிழ் விசைப்பலகைக்கு மாற எவ்வளவு தயக்கம் இருக்குமோ அவ்வளவு தயக்கம், சுணக்கும் தமிழ் மட்டுமே அறிந்தவருக்கு ஆங்கிலப் பலகையைக் கற்று பிறகு தமிழில் தட்டச்ச வேண்டி இருப்பதால் வரலாம். ஆங்கிலம் அறிந்த தலைமுறையை மட்டும் கணக்கில் கொள்ளலாகாது. கணித்தமிழைப் பரவலாக மக்களிடையே கொண்டு செல்ல தமிழ் மட்டும் போதுமானதாக இருக்கும்போது, இன்னொரு விசைப்பலகை எதற்கு? தமிழில் தட்டச்ச வேண்டும் என்றால் முதலில் ஆங்கிலம் பழகு என்று சொல்வது எப்படி நியாயம்? நம்முடைய மொழியின் தேவை, சிறப்புக்கு ஏற்ப ஒரு இலகுவான விசைப்பலகையைக் கூட வடிவமைத்துக் கொள்ள இயலாத ஆங்கிலச் சார்பின்மை, அடிமை மனப்பான்மையைத் தான் தமிங்கில விசைப்பலகை வெளிப்படுத்துகிறது. புதிதாக நமக்காக ஒன்றாக சிறப்பாக வடிவமைக்கப்பட்டது என்றாலும் அதை ஏற்றுக் கொள்ள,முயல விரும்பாத சோம்பலை என்னவென்று சொல்வது?
தவிர, தமிங்கிலப் பலகையால் ஆங்கிலமும் குழம்பலாம். ஒலிகளுக்கும் எழுத்துக்களுக்கும் நம் மனதில் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கிறோம். ஆங்கிலத்தில் e (ஈ, இ) அதுவே தமிழில் எ. அங்கே i (ஐ) நமக்கு இ, ஈ என்று குழப்பிக் கொள்ள வேண்டாம். தமிழ்99ல் இந்த ஆங்கில எழுத்துக்கு இந்தத் தமிழ் எழுத்து என்று கொள்ளாமல் அனைத்து விசைகளையும் தமிழ் எழுத்துக்களாத் தான் மனதில் பதிகிறோம். அதனால் எந்த குழப்பமும் வராது.
முக்கியமாகத் தமிங்கிலத்துக்குப் பழகியவர்கள் மனதில் தமிழ் ஒலிகள் ஆங்கில எழுத்துக்களாகவே பதிந்திருக்கும். நன்றி என்ற சொல் w a n shift r i என்று மனதில் பதிவது நல்லது ந ன் றி என்று மனதில் பதிவது நல்லதா? தமிழ்99ஐப் பரிந்துரைப்பது வேகம், திறம், போன்ற காரணங்களைத் தாண்டி இந்தத் தமிழ்ச் சிந்தனையை முன்மொழியும் கொள்கையும் முக்கிய காரணம். இதே காரணத்துக்காகவே பாமினி போன்ற பிற விசைப்பலகை அமைப்புகளை நான் எதிர்ப்பதுமில்லை.
தமிழ்99க்கு மாறவே முடியாத அளவுக்கு பழக்கம்,மனத்தடை இருக்குமானால், குறைந்தபட்சம் புதிதாகத் தமிழ்த் தட்டச்சை அறிமுகப்படுத்தி வைப்பவர்களுக்காவது தமிழ்99 சொல்லிக் கொடுக்கலாமே? இப்பொழுது விழித்துக் கொண்டால் தான் ஆயிற்று. இல்லாவிட்டால், காலம் கடந்து விடும்.
//பாமினி போன்ற பிற விசைப்பலகை அமைப்புகளை நான் எதிர்ப்பதுமில்லை.//
அந்தப் பயம் இருக்கட்டும் மனசில.. ஆமா..
மேலே உள்ள மறுமொழியில் தமிழ்99 விசைப்பலகை படத்துக்கான இணைப்பு அறுந்திருக்கிறது. அதை இங்கே காணலாம்.
சொல்ல மறந்த இன்னொரு இலக்கண அடிப்படை - தமிழில் அ, க, ச, ப, வ என்று அகரங்கள் அடிக்கடிப் பயன்படுவது வாடிக்கை. தமிழ்99ல் இவற்றை ஒரே விசையில் அழுத்தி விடலாம். அடுத்து அதிகம் பயன்படும் நெடில் ஒலிகளையும் ஒரே விசையில் அழுத்தலாம். தமிங்கிலத்தில் தோ என்று எழுத thoo அல்லது th shift o என்று நான்கு விசைகள் தேவை. தமிழ்99ல் த ஓ இரண்டு விசைகளில் எழுதி விட முடியும். எல்லா நெடில்களுக்கும் இப்படியே.
தமிங்கிலம், தமிழ்99 இரண்டிலும் தேர்ச்சி பெற்றவர்களின் key strokes per minute rate ஒன்றாக இருந்தாலும் கூட letters written per minute நிச்சயம் தமிழ்99ல் 40% கூடுதலாக இருக்கும்.
பாமினிக் காரன் - எதிர்க்கட்சி வரிசை எதற்கு :)? தமிழ்99க்கு வெளியில் இருந்து ஆதரவு தரலாமே :)
பாமினிக் காரி - நீங்க எல்லாம் குடும்பமா கிளம்பி வர்றதால் ஒரு பயம் இருக்கு தான் ;)
குறிப்புக்காக - ஆங்கில எழுத்துக்களையே பயன்படுத்தும் ஜெர்மன், பிரெஞ்சு விசைப்பலகைகளில் கூட எழுத்துகள் இடம் மாறி இருக்கும். ஜெர்மனில் zம் yம் இடம் மாறி இருக்கும். ஏனெனில் அதில் zன் பயன்பாடு அதிகம். பிரெஞ்சு மொழியில் இன்னும் ஏகப்பட்ட எழுத்துக்களை இடம் மாற்றிப் போட்டு வைத்திருப்பார்கள். அருகருகே உள்ள மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த ஒரே எழுத்துக்களைப் பயன்படுத்தும் மொழிகள் கூட தங்கள் மொழியின் கட்டமைப்புக்கு ஏற்ப விசைப்பலகையை மாற்றிப் பயன்படுத்துகிறார்கள். தொடர்பே இல்லாத தமிழ் ஏன் ஆங்கிலத்துக்கே திறமற்ற ஒரு விசைப்பலகை அமைப்பைப் பின்பிற்றித் தொங்கிக் கொண்டிருக்க வேண்டும்?
விசைப்பலகை தொடங்கி பல அறிவியல் கண்டுபிடிப்புகள், நடைமுறைகளிலும் உலக அல்லது இன்னொரு குழுவைப் பின்பற்றாமல் நம் தேவைகள், சிறப்புகளுக்கு ஏற்ப localisedஆக சிந்திப்பது தான் சிறந்தது. எல்லார் காலுக்கும் ஒரே செருப்பு பொருந்துமா? இருக்கிற செருப்பை வைத்து ஒப்பேற்றுவோம் என்று நினைப்பதுண்டா?
நான் எந்த வரிசையில் உட்கார்வது என்று ஒரே குழப்பமாக இருக்கிறது.
நான் பயன்படுத்தும் விசைப்பலகை, ஆவரங்கால் வடிவம்.
அநேகமாக இதை விரல்விட்டு எண்ணக்கூடிய ஆட்களே பயன்படுத்துகிறார்கள்.
இதனை தமிங்கிலக்காரர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. காரணம் ஆங்கில எழுத்தின்படி இல்லாமல் ஒரு சில எழுத்துக்கள் வேறாக இருக்கின்றன.
தவிர shift விசை அழுத்த வேண்டிய தேவை இந்த வடிவத்துக்கு இல்லை.
எப்போதும் எனது ஆதரவு தமி 99 இற்கே.
ரவிசங்கர், மின்னஞ்சலில் குறிப்பிட்டதற்கு மிக்க நன்றி.
உங்கள் விளக்கம் மிக அருமை. இதனை நீங்கள் நிச்சயம் ஒரு பதிவாக இடவேண்டும்.இருந்தாலும் அதனிலும் சில சந்தேகங்கள் உள்ளது. தமிங்கலத்தோடு நான் போராடியதில்லை. நான் பாமினி வகை சார்ந்தவன்.
சந்தேகங்களை கேட்க முதல் தமிழ் 99 விசைப்பலகையை ஒருமுறை பூரணமாக பயன்படுத்தி பார்த்துவிட்டு கேட்கின்றேன். (இதற்கு இதுவரை பயன்படுத்தி பார்த்ததேயில்லை என அர்த்தமில்லை).
"இலக்கண அடிப்படையில் அமைந்த" என்ற பதம் பயன்படுத்தப்படக்கூடாது என்றுதான் விருபாக்கு சொன்னேனே தவிர அது விசைப்பலகையை குறைசொன்னதாக அமையாது. (நான் அவ்வாறு எண்ணித்தான் சொன்னேன், உங்கள் புரிதல் வேறுவகையாய் இருந்திருக்கக்கூடும்). உண்மையில் அந்த பதம் மொழிநடைக்கு பயன்படுத்தப்படும் பதம். அதனை வேறு எங்கு பயன்படுத்துவதிலும் எனக்கு உடன்பாடு இல்லை.
தவறிருப்பின் மன்னிக்கவும்.
பொன்ஸ்~~Poorna
பழைய ப்ளாக்கர் பதிவுகளில் அணிய நிரல்துண்டை தனியாகத் தந்தமையை பாராட்டுகிறோம். நிரல்துண்டை இணைத்து விட்டோம். இதற்காக புது ப்ளாக்கர் Template மாற்றும் வேலையை, நேரத்தை குறைத்துள்ளீர்கள்.
பகீ
அது என்ன இலக்கண அடிப்படையில் அமைந்துள்ள விசைப்பலகை என்று கேட்டுள்ளீர்கள், உயிரும் மெய்யும் சேர்ந்தால் வருவது உயிர் மெய் என்பது தமிழில் உள்ள ஒரு அடிப்படை இலக்கணம்தானே. இதனைத்தான் நான் இலக்கணம் என்று குறிப்பிட்டேன்.
இதற்கு ஏற்கனவே ரவிசங்கர் தந்த விளக்கம் போதுமானதுதானே.
\\ த்+உ = து போன்ற இலக்கண அடிப்படையில் தான் எல்லா உயிர்மெய் எழுத்துக்களும் தமிழ்99ல் வருகின்றன. \\
பகீ - அடுத்த கட்ட பிரச்சாரத்தில் :) இந்தப் பெரிய்ய்ய்ய பின்னூடத்தைத் தனி இடுகையாக இடுவோம்.
இந்த விசைப்பலகை தமிழ் இலக்கண அடிப்படையில் அமைந்தது என்று சொல்வதில் தவறில்லை என்று நினைக்கிறேன். ஒரு தமிழ்ச் சொல்லில் ஒரு குறிப்பிட்ட எழுத்துக்கு அடுத்து இந்த எழுத்து மட்டுமே வரக்கூடும் என்பதைப் புரிந்து கொண்டு இந்த விசைப்பலகை அமைந்திருக்கிறது. எடுத்துக்காட்டு த+த என்ற வரிசையாக நான் இரண்டு முறை த அழுத்தினாலும் அது தத என்று வராது. த்த என்று தான் வரும். ஏனென்றால் தமிழ் இலக்கணப்படி தத என்று எந்த சொல்லிலும் எழுத்து வரிசை வராது. க+அ = கஅ என்று காட்டாது. க மட்டும் தான் வரும். இதைத் தமிழ்99 புரிந்து கொள்வதால் நமக்குப் புள்ளி வைக்கும் வேலைகள் மிச்சம். கவனக்குறைவான தட்டச்சுப் பிழைகள் குறையும். பல தமிழ்ச் சொற்களில் எந்த எழுத்துகளில் கூடுதல் frequencyல் வருகின்றன என்பதைக் கவனித்து அந்த எழுத்துக்களுக்கு இலகுவான இடம் ஒதுக்கப்பட்டுள்ளதால் இதை அறிவியல் பூர்வமாக விசைப்பலகை வடிவமைப்பு முறையாகவும் கருதலாம்.
ரவிசங்கர்
எனக்கும் தமிழ்99 வசதி போலத்தான் படுகிறது.தமிங்கிலமும் பாமினியும் கைப்பழக்கம் ஆகிவிட்டமையால் சற்று கடினமாகவிருக்குமோ என ஒரு அச்சம்.
இன்னும் ஒருமுறைகூட பயன்படுத்தி பார்க்கவில்லை.
எனினும் உங்களது இந்த பதிவிற்குப்பிறகு ஒரு முறை முயற்சித்துபார்க்க யோசித்துள்ளேன்.
அண்மைக்காலமாக உங்களைப்போல பல வீரியமான இளைஞ இளைஞிகளை
வலைப்பதிவு மூலம் அறியக்கூடியதாய் உள்ளது.
அடுத்த தலைமுறை பற்றி இனி கவலையில்லை.
-suratha-
நன்றிங்க!
உங்களின் ஒரு தமிழ் 99 பற்றிய இடுகையை படித்து தமிங்கில romanised விசைப்பகையை பயன்படுத்திக்கொண்டிருந்த நான் தமிழ் 99 முறைக்கு மாறிவிட்டேன்.
இப்போது தமிங்கில romanised விசைப்பகையை பயன்படுத்த முடிவதில்லை. கை தானாக தமிழ் 99 விசையை நோக்கியே செல்லுகிறது ;-)) Firefox ல் Tamilkey நீட்சியை நிறுவி தமிழில் தட்டச்ச alt+f9 ஐ பயன்படுத்துகிறேன்.
Tamilnet 99 PDF படத்திற்கு ஆவரங்கால் அவர்களின் இணைப்பு இங்கே.
http://www.araichchi.net/kanini/TamilNet99-Keyboard.pdf
மகிழ்ச்சி குறும்பன். தமிழ்99 கைவந்தால் தமிங்கிலம் பக்கம் திரும்பிப் பார்க்க மனசும் வராது விரலும் வராது :)
தமிழ்விசையில் alt+f9 அடிச்சு தான் தமிழ்99க்குத் தாவணும்னு இல்ல..right click செஞ்சு வர்ற பட்டியல்ல தெரிவுகள்னு ஒன்னு இருக்கு பாருங்க. அதை வைச்சு உங்களுக்கு எளிமையான shortcut விசைக்கு மாத்திக்கலாம்.
த் + அ = த
என்கின்ற விருபாவின் தமிழ் இலக்கணம் சார்பில் மிகவும் வீரியமான விமர்சனம் என்னிடத்துண்டு. இருந்தாலும் அது தலைப்போடு பொருந்தாது என்பதால் பிறிதொருமுறை அதை பேசுவோம்.
தமிழில் இணையத்தில, கணினியில் ஏதாவது செய்ய வேண்டும் என்பதில் சுராதா தான் எனது துரோணர். அவரது பின்னூட்டம் இங்கு காண்பதில் மிகுந்த மகிழ்ச்சி.
இரவிசங்கர், நான் FireFox 2.0.0.4 பயன்படுத்துகிறேன்.
TamilKey 0.3.2 என்ற Add-On ஐ நிறுவியுள்ளேன் Defalut ஆன Alt+F9 இருக்கட்டும் என்று விட்டாயிற்று ;-)
இங்கு Shortcut விசைக்கு மாற Tools -> Add-ons - TamilKey Options box மூலமாக தான் குறுக்கு விசையை தெரிவு செய்ய முடியும். நீங்க சொன்ன முறை இ-கலப்பைக்கு என்று எண்ணுக்றேன்.
சரி பகீ, இன்னொரு இடத்தில் பேசுவோம். உயிரும் மெய்யும் சேர்ந்து உயிர்மெய் என்று தானே படித்திருக்கிறோம். அதைத் தான் குறிப்பிட்டோம். உங்களுக்கு மட்டும் அல்ல, என்னையும் சேர்த்து பலருக்கும் சுரதா ஒரு முன்மாதிரி நபர் தான்.
குறும்பன், நான் தமிழ்விசை தெரிவு குறித்து தான் சொன்னேன். உலாவிச் சாளரத்தில் எங்கு வேண்டுமானாலும் வலது சொடுக்கி தமிழ்விசை-->தெரிவுகள் போய் அமைப்புகளை மாற்றலாம். நீங்கள் சொன்ன மாதிரி tools - addon போயும் மாத்தலாம். alt+F9 என்று அழுத்துவதற்கு அமைப்புகளை மாற்றனால் alt இல்லாமல் வெறும் F9 மட்டும் அழுத்திக் கொள்ளலாம். நான் தமிழ்99க்கு F12ம் ஆங்கிலத்துக்கு F9ம் வைத்திருக்கிறேன். ஒரு முறை தமிழ்99ஐ முடுக்கி விட்டால், பிறகு F9ஐயே on-off switch போல் பயன்படுத்தலாம்.
http://i16.photobucket.com/albums/b7/ravidreams/tamil99key.gif
முந்தய பின்னூட்டம், தவறுதாலாக இடப்பட்டது. மன்னிக்க.
இது என்ன ஒரு மென்பொருளா? மென்பொருள் என்றால் எங்கிருந்து தரவிறக்கம் செய்வது? எப்படி பயன்படுத்துவது?
தமிழ்99 ஒரு மென்பொருள் இல்லீங்க. அது ஒரு keyboard layout. இப்பொழுது நீங்கள் வைத்திருக்கும் எ-கலப்பையில் ammaa என்று எழுதினால் அம்மா என்று வருகிறதல்லவா? அதே போல் தமிழ்99ஆல் இயங்கும் எ-கலப்பையில் அ ம ம ஆ என்று அழுத்தினால் அம்மா என்று வரும். நீங்கள் பயன்படுத்துவதற்குப் பெயர் எ-கலப்பை (அஞ்சல்). இதற்குப் பெயர் எ-கலப்பை (tamilnet99). எல்லா எ-கலப்பைகளுமே வழமையான எ-கலப்பை பதிவிறக்கப் பக்கத்திலேயே கிடைக்கும்.
firefoxல் தமிழ்விசை நீட்சி நிறுவி உள்ளவர்களும் தமிழ்99 கொண்டு எழுதலாம்.
ரவிசங்கர்,
கணித்தமிழ் விசைப்பலகைகளிலேயே புத்திசாலித்தனமானது(Intelligent) என்று தமிழ்99 விசைப்பலகையைச் சொல்லலாம்.
இன்னும் எனது தகடூர் தமிழ் மாற்றியில் தமிழ்99 விசைப்பலகை இல்லை. கூடிய விரைவில் அதற்கான நிரலையும் சேர்க்க வழி செய்கிறேன்.
Post a Comment