Quick refrence

Download Links:- eKalappai 2.0b(Anjal) | eKalappai 2.0b (tamilnet99) - இங்கே தேர்வு செய்யவும்,
Key board layout :- e- kalappai (Anjal) |e-kalappai (Tamil 99) இதே மாதிரி இன்னும் ஏதாவது quick refrence சேர்த்தால் உபயோகமாக இருக்குமானால் பின்னூடத்தில் தெரிவிக்கவும்

Friday, July 27, 2007

கூகுள் ரீடருக்குள் இருந்தே பின்னூட்டம் இடலாம்!

Firefox பயனர்கள் greasemonkey நீட்சியையும் இந்த நிரலையும் நிறுவிக் கொண்டால், கூகுள் ரீடருக்குள் இருந்தே பதிவுப் பக்கத்தை உள்ளிறக்கிப் பார்க்க முடியும். ஒவ்வொரு பதிவாகச் சென்று பார்க்கத் தேவை இல்லை.

இதனால் ஓடை கத்தரிக்கப்பட்ட பதிவுகளின் முழு உள்ளடக்கத்தையும் கூகுள் ரீடருக்குள் இருந்தே படிக்கலாம். கூகுள் ரீடருக்குள் இருந்தே பின்னூட்டம் இடலாம்.

பதிவுப் பக்கத்தின் முன்தோற்றத்தைப் பார்க்க shift+V அல்லது இடுகைத் தலைப்பு அல்லது இடுகையின் கீழ் உள்ள preview என்னும் தெரிவை அழுத்தலாம். அவற்றையே திரும்ப அழுத்தினால் RSS தோற்றத்தில் காணலாம்.

Thursday, July 26, 2007

கூகுள் ரீடர் பயன்படுத்துவது எப்படி? - demo video

கூகுள் ரீடர் பயன்படுத்துவது எப்படி என்பது குறித்த 15 நிமிட விளக்க நிகழ்படத்தை இங்கு பதிவிறக்கவும் (.zip கோப்பு, 27 MB). அதை unzip செய்து உள்ளிருக்கும் html கோப்பைத் திறந்தால் Windows உள்ளிட்ட எல்லா இயக்குதளங்களிலும் உங்கள் உலாவியிலேயே flash வடிவில் இந்த நிகழ்படத்தைக் காணலாம்.

ப்ளாகரில் பதிவு தொடங்குவது எப்படி? - Demo video

ப்ளாகரில் பதிவு தொடங்குவது, இடுகை எழுதுவது, அமைப்புகள் மாற்றுவது எப்படி என்பது குறித்த 26 நிமிட விளக்க நிகழ்படத்தை இங்கு பதிவிறக்கவும் (.zip கோப்பு, 30 MB). அதை unzip செய்து உள்ளிருக்கும் html கோப்பைத் திறந்தால் Windows உள்ளிட்ட எல்லா இயக்குதளங்களிலும் உங்கள் உலாவியிலேயே flash வடிவில் இந்த நிகழ்படத்தைக் காணலாம்.

Tuesday, July 24, 2007

தமிழ்99 தட்டச்சு - demo video

தமிழ்99 விசைப்பலகை முறையில் தட்டச்சு செய்வது எப்படி என்பது குறித்த 8 நிமிட விளக்க நிகழ்படத்தை இங்கு பதிவிறக்கவும் (.zip கோப்பு, 9 MB). அதை unzip செய்து உள்ளிருக்கும் html கோப்பைத் திறந்தால் Windows உள்ளிட்ட எல்லா இயக்குதளங்களிலும் உங்கள் உலாவியிலேயே flash வடிவில் இந்த நிகழ்படத்தைக் காணலாம்.

Sunday, July 15, 2007

Wordpressல் பதிவிடுவது எப்படி? - நிகழ்பட விளக்கம்

Wordpressல் பதிவு தொடங்குவது, இடுகை எழுதுவது, அமைப்புகள் மாற்றுவது எப்படி என்பது குறித்த 13 நிமிட விளக்க நிகழ்படத்தை இங்கு பதிவிறக்கவும் (.zip கோப்பு, 31.7 MB). அதை unzip செய்து உள்ளிருக்கும் html கோப்பைத் திறந்தால் Windows உள்ளிட்ட எல்லா இயக்குதளங்களிலும் உங்கள் உலாவியிலேயே flash வடிவில் இந்த நிகழ்படத்தைக் காணலாம்.

Wednesday, July 11, 2007

உங்கள் பதிவுகளுக்கு 5 - நட்சத்திர அந்தஸ்து குடுக்கலாமே .! !

சில பேர் பதிவை படிச்சு பின்னூடமும் போடுவாங்க.. சில பேர் பதிவை படிச்சுட்டு மட்டும் பொயிடுவங்க (அவங்களுக்கு என்ன அவசரமோ..).. ஸோ.. பின்னூடத்தை கொண்டு மட்டுமே ஒரு பதிவின் தரத்தை நிர்ணயிக்க முடியாது.இப்போ இருக்கும் அவசர உலகத்திலே...ஒரு பதிவு நல்லா இருக்கா இல்லையான்னு வெறும் சில நொடிகளிலேயே "வாசிப்பவர்" தீர்மானித்துவிடுவார்... (சும்மா மேலோட்டமா ஒரு பார்வை... அப்புறம் தான் முழு பதிவை படிக்கிரது).

இப்படி இருக்க.. இந்த மாதிரி அவசர விருந்தாளிகள் உங்க பதிவை குறித்து என்ன நினைக்கிறாங்கன்னு தெரிஞ்சுக்க தான் இந்த 5- நட்சத்திர பதிவு.. அதாவது... ஒவ்வொருக்கு பதிவிலேயும் 5 நட்சத்திரங்களுக்கான இடம் இருக்கும்..உங்க பதிவுக்கு எவ்வளவு நட்சத்திரம் குடுக்கலாம்ன்னு பதிவை படித்தவர் / பார்வையிட்டவர் நினைக்கிராரோ.. அத்தனை நட்சத்திரத்தை க்ளிக்கினா போதும்.. சிம்பிள்.. தேவையில்லாத்த Pop -up இல்லை... உட்புகுதல் இல்லை... எல்லாமே ப்டா-ப்ட். .. சந்தேகம் இருந்தால் இந்த முறையை தொடுவானத்தில் சோதித்து பார்க்கவும்

- தேறாத கேசு
- பரவாயில்லை
- சாதாரணம் தான்
- நல்லது
- மிகச்சிறந்தது

இதை செய்யும் முறையை கவனிக்கவும்
1. SAVE AND BACKUP YOUR TEMPLATE -- டெம்ப்ளேட்டின் தாரக மந்திரம்
2. TEMPLATE-EDIT HTML - "expand widget template" ல் டிக்-மார்க் செய்யவும்
Template ல் <div class='post-header-line-1'/> இதை கணுபிடித்து....அதுக்கு கீழே ( <div class='post-body'> க்கு மேலே) 3. சிகப்பு நிறத்தில் இருக்கும் code ஐ சேர்க்கவும்
செய்த பிறகு code இப்படி இருக்கும்
<div class='post-header-line-1'/>
<div style='float:left; margin-right:10px;'>
<div class='js-kit-rating' expr:path='data:post.url' expr:title='data:post.title'>
</div>
</div>

<div class='post-body'>

4. Template ல் </body> tag ஐ கண்டுபிடிக்கவும்
5 சிகப்பு நிறத்தில் இருக்கும் code ஐ சேற்த்து எழுதவும்

<script src="http://js-kit.com/ratings.js ">
</script>

</body>
6. SAVE AND VIEW THE BLOG

இனிமேல் உங்கள் ஒவ்வொரு பதிவுக்கும் இந்த வாக்கெடுப்பு தானாவே வரும்.. படிக்கிரவங்க அதை க்ளிக் மட்டும் செய்தால் போதும்.. இதை நமக்கு தந்தவர்் http://js-kit.com. அங்கே இன்னும் இது மாதிரி code எல்லாம் இருக்கு.. போய் பாருங்க.. கண்டிப்பா உங்களுக்கும் பிடிக்கும்ன்னு நினைக்கறேன்.. சரிதானே
ஆங்கிலத்தில் செய்முறைவிளக்கம்

Tuesday, July 3, 2007

Techtamil தரும் குறிச்சொல் ஊற்று

புதிய ப்ளாகர் வசதி வந்தபின் குறிச்சொல் பயன்பாடு எளிதானது. தற்போது பல பதிவர்களும் குறிச்சொற்களை பயன்படுத்துகின்றனர்.

குறிச்சொற்கள் என்றால் என்ன?
Labels என வழங்கப்படும் இவற்றைக்கொண்டு உங்கள் பதிவுகளை பல வகைப்பாடுகளுக்குள் சேர்க்கலாம். பதிவை உருவாக்குகையில் அல்லது மாற்றங்கள் செய்யும்போது கீழே Labels எனும் பெட்டிக்குள் ',' (Comma) வால் வேறுபடுத்தி குறிச்சொற்களை சேர்க்கலாம்.

சமூக சிந்தனைக் கவிதை ஒன்றை சமூகம், கவிதை, இலக்கியம் எனும் மூன்று வகைகளில் சேர்க்க இயலும். காதல் கவிதையை காதல், கவிதை, இலக்கியம் என வகைப்படுத்தலாம்.

இதனால் உங்கள் கவிதைகளை வாசிக்க விரும்புபவர் 'கவிதை' எனும் குறிச்சொல்லைச் சுட்டி கவிதை எனும் வகைப்பாட்டில் உள்ள பதிவுகளைக் காண இயலும்.

மேலும் தகவல்கள்
How do I label my posts?
Can I get site feeds for specific labels?
How can I edit labels on multiple posts at once?

Techtamil.in எனும் தளம் தமிழ் பதிவர்களின் குறிச்சொல் பயன்பாட்டைக் பயன்படுத்தி பதிவுகளைத் தேடவும், ஓடைகளைப்(Feeds) பெறவும் கருவி ஒன்றை உருவாக்கியுள்ளது.

http://techtamil.in/tag/உலகம்?isxml&searchmethod=1&txt_feed=FEEDNAME

மேலுள்ள சுட்டி மூலம் இந்தக் கருவியை அடையலாம்.

பிரிவுகள்/குறிச்சொற்கள் என்பதில் ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட குறிச் சொற்களை ','(Comma) வால் வேறுபடுத்திக் கொள்ளலாம்.

அடுத்த பெட்டியில் 'வலைப்பதிவுகள்' என்பதை தேர்ந்தெடுத்தால் எல்லா பதிவுகளிலும் நீங்கள் தந்த குறிச்சொற்களிலான பதிவுகளைப் பெற இயலும்.

'இவைகளிலிருந்து மட்டும்' என்பதைத் தேர்ந்தால் குறிப்பிட்ட பதிவுகளிலிருந்து மட்டும் தேடலாம். இதில் பதிவுகளின் பெயர்களை குறிப்பிடலாம். http://tamilblogging.blogspot.com/ அல்லது tamilblogging என்றோ தரலாம். இங்கேயும் , பயன்படுத்தி பல பதிவுகளைத் தரலாம்.

'இவைகளைத் தவிர்த்து' என்பதில் குறிப்பிட்ட பதிவுகளிலிருந்து தேட வேண்டாம் எனலாம்.

'இன்றுஎல்லா தொடுப்புகளும்' எனும் பகுதியில் இன்று வந்த பதிவுகள் அல்லது எல்லா பதிவுகளிலிருந்தும் எனப் பெற இயலும்.

ஊற்று என்பதில் வரும் உரல் ஓடையின் உரல்.

வலைப்பதிவில் கவிதை எனும் குறியிடப்பட்டுள்ள பதிவுகளுக்கான ஓடை
http://techtamil.in/tag/கவிதை?isxml=1&title=கவிதை&searchmethod=-1&txt_feed=

சிறுகதை
http://techtamil.in/tag/????????day=0&searchmethod=-1&txt_feed=

தமிழ் வலைப்பதிவர்கள் பயன்படுத்தும் குறிச்சொற்களின் முழு பட்டியலையும் தளம் தருகிறது இங்கே http://techtamil.in/tagsdirectory.php

அருமையான கருவி இது. ஓடைகளை உருவாக்கவும், பதிவுகளைத் தேடவும் பயன்படுத்தி மகிழுங்கள்.

தனித்தளத்தில் வலைப்பதிவு தொடங்குவது எப்படி?

முதலில், தனித்தளம் தொடங்க தேவையானவை இரண்டு:

1. ஒரு தள முகவரி (Domain name)
2. வலையிட வழங்கி (Web space hosting)

இவ்விரண்டையும் எங்கு பெறுவது?

Godaddy போன்ற தளங்களில் மேற்கண்ட இரண்டு சேவைகளுக்கும் பதிந்து கொள்ளலாம். இல்லை, domain registration, web hosting என்று கூகுளில் தேடினால் பல முடிவுகள் கிடைக்கும். அல்லது, தமிழ் வலைப்பதிவுலகில் தனித்தளம் வைத்திருப்பவர்கள் பட்டியலை இந்தப் பதிவிலும் அதற்கு வந்த பின்னூட்டங்களிலும் காணலாம். அவர்களில் உங்கள் நண்பர்களை அணுகியும் அவர்கள் பயன்படுத்தும் சேவை குறித்து அறியலாம்.

இவற்றைப் பெறுவது எளிதா?

ஒரு மின்மடல் கணக்கு தொடங்குவது போல் எளிதாகச் செய்யலாம். நுட்ப அறிவு தேவை இல்லை.

இவற்றைப் பதிய எவ்வளவு நேரம் ஆகும்?

10 நிமிடங்களுக்குள் செய்து விடலாம். தளம் பொதுப் பார்வைக்கு வர ஓரிரு நாட்கள் காத்திருக்க வேண்டி வரலாம். இது எல்லாருக்கும் வரும் வழமையான தாமதமே.

எவ்வளவு செலவாகும்?

தளப் பெயர் பதிய ஆண்டுக்கு குறைந்தது 300 இந்திய ரூபாய் செலவாகும். வலையிட வழங்கியின் சேவையைப் பெறுவதற்கு ஆண்டுக்குக் குறைந்தது 150 இந்திய ரூபாயே கூட போதும். என்னுடைய வலையிட வழங்கி எனக்கு ஆண்டுக்கு 100 MB இடமும் மாதத்துக்கு 1 GB தரவுப் பரிமாற்ற அளவும் வழங்குகிறது. இதற்கு ஆண்டுக்கு சுமார் 1,000 இந்திய ரூபாய் செலவிடுகிறேன். எனினும், இதை விட விலை குறைவாகவும் இடம் அதிகமாகவும் பல சேவைகள் இருக்கக்கூடும். தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். எவ்வளவு இடம் வேண்டும் என்பதை உங்கள் பதிவின் அளவு, நீங்கள் சேமித்து வைக்கும் ஒலி, ஒளிக்கோப்புகளின் அளவு, வாசகர் வருகை அளவு பொறுத்து முடிவெடுக்க வேண்டும்.

எப்படி பணம் கட்டுவது?

பன்னாட்டு நிறுவனச் சேவைகள் கடன் அட்டை, Paypal மூலமே பணம் பெற்றுக் கொள்ளும். சேரும் போதே இத்தனை ஆண்டுகளுக்குத் தேவை என்று சொன்னால் அதுவே ஒவ்வொரு ஆண்டும் புதுப்பித்துக் கொள்ளும். இல்லையென்றால், நீங்கள் நினைவு வைத்து ஒவ்வொரு ஆண்டும் புதுப்பித்துக் கொள்ளலாம். இந்தியாவில் உள்ள வலையிட வழங்கிச் சேவைகள் இந்திய வங்கிக் கணக்குகள், காசோலைகள், money orderகள் மூலமோ நேரடியாக காசாகப் பெற்றுக் கொண்டோ கூட இந்த சேவையை அளிக்கலாம். கடன் அட்டை இல்லாதவர்களுக்கு இந்த வசதி உதவும். எடுத்துக்காட்டுக்கு, http://www.webspace2host.com கடன் அட்டை இல்லாமலும் பணம் செலுத்தும் வசதிகளை அளிக்கிறது.

வலையிட வழங்கிக்குச் செலவு செய்யாமல் தனித்தள முகவரியில் பதிவிட முடியுமா?

முடியும். தளப் பெயரை மட்டும் பதிந்து கொண்டு ப்ளாகர் தரும் இலவச இடத்திலேயே உங்கள் வலைப்பதிவைத் தொடர்ந்து நடத்த முடியும். எடுத்துக்காட்டுக்கு, http://blog.arutperungo.com/ பாருங்கள். இது குறித்த ப்ளாகர் உதவிக் குறிப்பைப் பாருங்கள். ப்ளாகரின் வசதிகள், இடைமுகப்பு பிடித்துப் போய் வேறு சேவைகளுக்கு மாற விரும்பாதவர்கள் இதைப் பயன்படுத்தலாம். எனினும், இந்த இலவச சேவையில், உங்கள் பதிவு முகவரி, தளத்தில் பிற சேவைகள் நிறுவுவது குறித்த கட்டுப்பாடுகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. மாறாக, சொந்தமாக வலையிட வழங்கிச் சேவை பெற்று அங்கிருந்தும் ப்ளாகர் மூலம் பதியலாம்.

தனித்தளத்தில் வலைப்பதிய உகந்த மென்பொருள் எது?

தனித்தளத்தில் வலைப்பதிய பலரும் பரிந்துரைக்கும் மென்பொருள் Wordpress. இது ஒரு கட்டற்ற மென்பொருள் என்பதால் இலவசமாக நிறுவிக் கொள்ளலாம். இதை நிறுவிக் கொள்வதும் இலகுவே. நுட்ப அறிவு தேவை இல்லை. உங்கள் தளத்தின் கட்டுப்பாட்டகத்தில் உள்ள கருவிகளைக் கொண்டு 5 நிமிடங்களுக்குள் நிறுவிக் கொள்ளலாம். ப்ளாகருக்குப் பழகியவர்கள் wordpress இலகுவா என்று தயங்கத் தேவை இல்லை. ஒரு மணி நேரம் துழாவிப் பார்த்தாலே wordpress இயங்கும் முறையைப் புரிந்து கொள்ளலாம்.

தனித்தளத்துக்கு என் பழைய இடுகைகளை இடம்பெயர்க்க இயலுமா?

முடியும். ப்ளாகர், wordpress.com போன்ற சேவைகளில் உங்கள் இலவச வலைப்பதிவுகளில் உள்ள இடுகைகள், பின்னூட்டங்கள் ஆகியவற்றை இடம்பெயர்த்து உங்கள் பதிவில் இடலாம். இதைச் செய்வதும் இலகுவே. நுட்ப அறிவு தேவை இல்லை. உங்கள் பதிவின் அளவைப் பொறுத்து 5 முதல் 30 நிமிடங்கள் ஆகலாம்.

தனித்தளத்தில் பதிந்தால் திரட்டிகளில் இணைய முடியுமா? தமிழ்மணத்தில் பின்னூட்டம் திரட்டடப்படுமா?

முடியும். தனித்தளத்தில் wordpress நிறுவிச் செயல்படுபவர்களுக்கான கருவிப்பட்டையைத் தமிழ்மணம் வழங்குகிறது. இதை இலகுவாக சேர்த்துக் கொள்வதற்கான பொருத்தை இங்கு பெறலாம். இதனால், தமிழ்மணத்தில் பின்னூட்டங்கள் திரட்டப்படுவதிலும் பிரச்சினை இருக்காது.

தனித்தளத்தில் வலைப்பதிவதால் என்ன இலாபம்?

சொந்த வீட்டில் இருக்கும் ஒரு சந்தோஷம், அடையாளம் தான் :) உண்மையில், தனித்தளத்தில் பதிவதால் உங்கள் பதிவு மீதான கூடுதல் கட்டுப்பாடு உங்களுக்குக் கிடைக்கும். எரிதப் பின்னூட்டங்கள், விரும்பத் தகாத பின்னூட்டங்களைத் தவிர்க்கலாம். வாசகர்கள் எங்கிருந்து வருகிறார்கள், எப்பொழுது வருகிறார்கள், எதைப் படிக்கிறார்கள், எவ்வளவு நேரம் தங்குகிறார்கள் போன்ற துல்லியமான புள்ளி விவரங்கள் கிடைக்கும். வலைப்பதிவு போக பிற மென்பொருள்கள், சேவைகளை உங்கள் தளத்தில் நிறுவிப் பார்க்கலாம். வலைமனையாகவும் பயன்படுத்தலாம். நிறுவனங்கள் வைத்திருப்போர் தங்கள் நிறுவனத்துக்கான வலைப்பதிவை சொந்தத் தளத்தில் நிறுவுவது கூடுதல் நம்பகத்தன்மையையும் தோற்றத்தையும் தரும். உங்கள் பெயரில் அமைந்த தனி மின்மடல் முகவரியும் கிடைக்கும்.

- ரவி