Quick refrence

Download Links:- eKalappai 2.0b(Anjal) | eKalappai 2.0b (tamilnet99) - இங்கே தேர்வு செய்யவும்,
Key board layout :- e- kalappai (Anjal) |e-kalappai (Tamil 99) இதே மாதிரி இன்னும் ஏதாவது quick refrence சேர்த்தால் உபயோகமாக இருக்குமானால் பின்னூடத்தில் தெரிவிக்கவும்

Sunday, December 16, 2007

கணினியில் தமிழ் எழுதுவது எப்படி?

திரட்டிகள் மூலமாகவோ, பத்திரிகைகள் மூலமாகவோ, நண்பர்கள் அறிமுகப் படுத்துவதாலோ புதிதாக பலர் வலைப்பதிவுகளை வாசிக்க வருகிறார்கள் ...

பதிவுகளை வாசிக்க ஆரம்பித்ததும் விரைவிலேயே தாங்கள் படித்த பதிவுகளில் மறுமொழி இட விரும்புவார்கள்...அவர்களில் சிலரேனும் தாங்களும் ஒரு வலைப்பதிவு செய்ய வேண்டும் என்று விரும்புவார்கள்....

ஆனால் தமிழை வாசிக்க முடிந்தாலும் தமிழில் எழுதுவது எப்படி என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருக்கும்... அதை இன்னொரு வலைப்பதிவரிடமோ, வேறு நண்பர்களிடமோ கேட்டுத் தெரிந்து கொண்டு முதலில் மறுமொழி இடுவார்கள். அடுத்து தங்களுக்கான வலைப்பதிவை உருவாக்கி தங்கள் எண்ணங்களை பதிவாக்குவார்கள்.

இதில் தமிழை கணினியில் எழுதுவது என்பது மிகவும் முக்கியமான கட்டம். இங்கே பலரும் பலராலும் அறிமுகப் படுத்தப் படுவது ரோமன் அல்லது அஞ்சல் எனப்படும் தமிங்கில தட்டச்சு முறையாகும். இது புரிந்து கொள்ள எளியது போலத் தோன்றினாலும் இந்த தட்டச்சு முறையின் சிக்கல்களை அதன் உள, உடல் ரீதியான பிரச்சினைகளை பலரும் உணர்வதில்லை.

அம்மா என்று எழுத்துக் கூட்டி சொல்லச் சொன்னால் சின்னக் குழந்தை கூட "அ-ம்-மா அம்மா" என்று சொல்லும்... நம்ம பதிவர்களோ "a-m-m-a-a அம்மா" என்று சொல்கிறார்கள்.

வலைப்பதிவில் எழுத, பின்னூட்டமிட புதுசா கணினியில் தமிழ் எழுத கற்றுக் கொள்ள விரும்புகிறீர்களா? மிக எளிமையான ஒரு வழி இருக்கு... இங்கே போய் கற்றுக் கொள்ளுங்கள்.

ஏற்கனவே தமிங்கிலத்தில் தட்டச்சிக் கொண்டு இருப்பவர்களும் முயன்று பாருங்கள்... இதன் எளிமையை உடனே உணர்வீர்கள்.