கேள்வி:-
//////அப்படியே புதிய பிளாக்கரில் கமென்டஸ் (மறுமொழி) எடிட் பன்னுவதற்கு ஏதாவது வழி இருக்குதான்னு சொல்லு தல!!
/////கமெண்ட்டுகளில் ஒரே ஒரு சொல்லால் அதைப் போட முடியாத நிலைமைஏற்படுகிறது ////////////
இதுக்கு காரணம் மறுமொழிகள் பக்கத்தில் பிளாகர் பயன்படுத்தும் security token ID .. இது மறுமொழிகள் பக்கத்தில் இருந்தால் தான் பிளாகர் .. அந்த பக்கத்தை மறுமொழிகள் பக்கம்ன்னு அடையாளம் காட்டும்..
இந்த security token .. எப்பொவுமே ஒரே மாதிரி இருக்காது... பிளாகர் வழங்கி (server) தான் இதை நிர்ணயிக்க்கும்
இந்த security token ன் பயணத்தை இப்போ பார்ப்போம்
- நாம் "Post a comment " ஐ சொடுக்கும்போது வழங்கியிலிருந்து இந்த security-token ID நம் மறுமொழி பக்கதுக்கு வரும்...
- நாம் மறுமொழி எழுதிய பிறகு submit ஐ சொடுக்கும்போது... வழங்கி... உள்ளே வந்திருக்கும் security token ID யும்... கொஞ்ச முன்னாடி வெளியே அனுப்பி வைத்த security token ம் ஒண்ணுதானான்னு சரி பார்க்கும்..
- அப்படி ஒண்ணா இருக்கும் பட்சத்தில் மட்டுமே அந்த மறுமொழியை மறுமொழியாக உறுதி செய்து வேண்டியது செய்யும்
அப்போ சொல்லுங்க..இருக்கிர மறுமொழி வச்சு அட்ஜச்ட் பண்ணபோறீங்களா... இல்லை பிளாகருக்கு விண்ணப்பிக்கப் போறதா உத்தேசம் இருக்கா ? ?
9 comments:
எனக்குத் தலைப்பே புரியலை !!!
புது பிளாகரில் மறுமொழிகளைத் திருத்த முடியாதது ஏன்? அப்படிங்கிறத தான் விளக்க வர்றீங்களா?
ஒரு குறிப்புக்காகச் சொல்றேன், பிளாகருக்குத் தீர்வு கேட்டா, wordpressஅ பரப்பாதன்னு யாரும் பாயாதீங்க :) - wordpressல் நம் சொந்தப் பதிவில் உள்ள அனைத்து மறுமொழிகளையும் திருத்த முடியும். ஆனால், அடுத்தவர் பதிவுகளில் நாம் விட்ட மறுமொழியைத் திருத்த இயலாது.
தீபா,
இப்ப கடைசியா என்ன சொல்ல வரீங்க?.. புது ப்ளாக்கர் பின்னூட்டங்களை திருத்த முடியுமா முடியாதா? ;)
தீபா..
பிளாக்கர் பீட்டா வருவதற்கு முன்பு பால் என்பவர் அதை எனக்கு ஹேக் பண்ணி கொடுத்தார்.புது பிளாக்கரில் பண்ண முடியாது போல.
எனக்கு தெரிந்து புது பிளாக்கரில் வழியில்லை.
ரவி..
புது பிளாகரில் மறுமொழிகளை திருத்த முடியாததுக்கு காரணமே.. பிளாகர் வழங்கி (server)நிர்ணயிக்க்கும் security token தான்.
இது dynamically generated ( ரவி.. இதுக்கு தமிழ் லே என்ன சொல்ல..நீங்க தான் சொல்லிதரணும்)..
அதனால.. view-Source லே போய் கண்டுபிடிச்சு ஒட்டினா..blogger-error ன்னு தான் தூது வரும்
இன்னமும் இதுக்கு முயர்ச்சிகள் நடந்துகிட்டு இருக்கு...Once we get a breakthough.. i will post it
பொன்ஸ்..
இன்னி தேதி வரை கண்டிப்பா முடியாது...
குமார்..
உண்மை.. அதை நானும் கூட உபயோகித்து பார்த்ததுண்டு..admin Id; pID;BlogID;postID.. இதையெல்லாம் கலந்து போட்ட கோட் அது..
இந்த வேலையெல்லாம்ம் இப்போ இருக்கும் பிளாக்ரில் முடியாது..
admin க்கு பதிவை திருத்த மட்டுமே உரிமை உண்டு... மறுமொழியெல்லாம்.. அழிக்க மட்டுமே உரிமை உண்டு...""யாரோ (மறுமொழியில்) சொன்னதை திருத்த நீ யார்..ஜீ-பூம்-பா... இனிமே நீ (மறுமொழியில்) சொன்னதை கூட உன்னால திருத்த முடியாமல் போகட்டும்..."ன்னு யோசிச்சிருப்பாங்க போக
வாங்க sathiya
இன்னமும் முயர்ச்சிகள் செய்துகிட்டு இருக்காங்க
இதுல இன்னோரு சின்ன ஐடியா பண்ணலாமே...
அப்படியே அந்த பின்னூட்டத்தை அதர் ஆப்ஷனிலோ / சொந்த ஆப்ஷனிலோ எடிட் செய்து போட்டு, உங்கள் பின்னூட்டத்தை லைட்டா திருத்தியிருக்கேன், (உபிலைதி) அப்படி போட்டுட்டீங்கன்னா முடிஞ்சுபோச்சு...
பூனைக்குட்டி சோதனையை நமக்கு நாமே திட்டத்துல செய்து பார்க்கனும்ன்ற அவசியம் நமக்குத்தான் கிடையாதே ?
'இதெப்டி இருக்கு.."
Post a Comment