Quick refrence

Download Links:- eKalappai 2.0b(Anjal) | eKalappai 2.0b (tamilnet99) - இங்கே தேர்வு செய்யவும்,
Key board layout :- e- kalappai (Anjal) |e-kalappai (Tamil 99) இதே மாதிரி இன்னும் ஏதாவது quick refrence சேர்த்தால் உபயோகமாக இருக்குமானால் பின்னூடத்தில் தெரிவிக்கவும்

Thursday, June 14, 2007

ஒரே ப்ளாகர் கணக்கின் கீழ் இருக்கும் வெவ்வேறு பதிவுகளில் பதிவர் பெயரை மாற்றலாம்

இந்தக் குறிப்பைத் தருபவர் - பொன்வண்டு

எல்லோரும் பிளாக்கர் டெம்ப்ளேட்டில் ஜாவா ஸ்கிரிப்டில் புகுந்து விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்து எனக்கும் அப்படி ஏதாவது செய்ய மாட்டோமா என ஆவல் இருந்து வந்தது. அதற்கேற்றார் போல போன வாரம் நான் ஒரு பிரச்சினையை எதிர் கொண்டேன். ஜாவா ஸ்கிரிப்ட் மூலம் சரி செய்தேன். தீபா, ஜெகத் போன்ற ப்ளாக்கர் விஞ்ஞானிகளின் ; -) script-களை ஒப்பிடும்போது என்னுடையது மிகவும் சிறியது தான்.

எனது கூகுள் account-ன் கீழ் இரண்டு Blogs உள்ளன. அதில் ஒன்று தான் இந்த பொன்வண்டு வலைப்பதிவு தளம்.

ஆனால் நம்மால் ஒரு account-க்கு ஒரே ஒரு profile மட்டுமே வைத்துக் கொள்ள முடியும். அந்த profile-ல் நாம் கொடுக்கும் display name-தான் நமது பதிவுகளில் author name-ஆக வரும் என்பது எல்லோருக்கும் தெரியும்.

நான் ஒரு வலைப்பதிவில் பொன்வண்டு என்ற பெயரில் எழுதுகிறேன். எனது மற்றொரு வலைப்பதிவில் வேறொரு பெயரில் எழுத நினைத்தாலும் முடியவில்லை. ஏனென்றால் ஒரு account-ன் கீழ் இருக்கும் எல்லா வலைப்பதிவுகளுக்கும் ஒரே profile-ல் இருந்தே display name-ஐ எடுத்துக் கொள்கிறது. எனது ப்ளாக்கர் profile-ல் display name பொன்வண்டு என்று உள்ளது.

அதனால் என்னுடைய இரண்டாவது தளத்தில் நான் வேறொரு பெயரில் எழுத நினைத்தேன். எப்படி என்று யோசித்தபோது கை கொடுத்தது ஜாவா ஸ்கிரிப்ட்.

ஒரு வலைப்பதிவு தளத்தில் 2 இடங்களில் author name தெரியும்.

1. பதிவின் கீழ், எழுதியவர் பெயர் தெரியுமிடத்தில்.
2. பின்னூட்டங்களில்

எனவே எந்த வலைப்பதிவு தளத்தில் மாற்றம் செய்ய வேண்டுமோ அங்கு அந்த tag-களைக் கண்டுபிடித்து template-ல் மாற்றி விட்டால் பிரச்சினை சரியாகிவிடும்.

செய்ய வேண்டியது :

1. Edit HTML போய் Expand widgets தேர்வு செய்து கொள்ளவும்.

2. கீழே இருக்கும் script-ல் profile_name-ல் உங்கள் profile-ல் உள்ள name-ஐக் கொடுங்கள். new_name-ல் உங்கள் விருப்பப் பெயரைக் கொடுங்கள்.
வழக்கம் போல் script-ஐ </head> tag-க்கு மேலே copy-paste செய்யவும்.

<script type='text/javascript'>
function replace_profile_name(str)
{
var profile_name='பொன்வண்டு';
var new_name='கழுதை';
if (str == profile_name)
str = new_name;
return str;
}
</script>

3. பின்னர் <data: post.author/> tag-ஐக் கண்டுபிடித்து கீழே உள்ள வரியால் replace செய்யவும்.

<script>document.write(replace_profile_name('<data: post.author/>'))</script>

4. பின்னர் <data:comment.author/> tag-களைக் கண்டுபிடித்து கீழே உள்ள வரியால் replace செய்யவும்.

<script>document.write(replace_profile_name('<data:comment.author/>'))</script>

5. Template-ஐ Save மாடி.




என்னுடைய இன்னொரு வலைத்தளம் - மாற்றம் செய்வதற்கு முன்







மாற்றம் செய்த பின்





இந்தக் குறிப்பைத் தருபவர் - பொன்வண்டு

--
பதிவர் உதவிப் பக்கத்தில் இதைப் பதிப்பிக்க அனுமதி தந்ததற்கு நன்றி - ரவி.

9 comments:

Anonymous said...

ஸ்க்ரிப்ட் தெரியலியே?

Yogi said...

ரவிசங்கர், script தெரியவில்லை. பதிவினை tamilblogging-support [at] googlegroups [dot] com க்கு மின்னஞ்சல் செய்கிறேன். நன்றி.

Yogi said...

மின்னஞ்சலிலும் bounce ஆகிறது. பதிவின் HTML நிரலை அனுப்ப எண்ணுகிறேன். எப்படி அனுப்புவது?

Yogi said...

நிரலை அனுப்பியாயிற்று. :)

பொன்ஸ்~~Poorna said...

பொன்வண்டு,
ஏன் bounce ஆகிறதென்று தெரியவில்லை.. எனக்கே (poorna.rajaraman@gmail.com) அனுப்பிவிடுங்க.. போட்டிடலாம்..

பொன்ஸ்~~Poorna said...

நானும் பதிவில் திருத்திவிட்டேன்.. :) நன்றி :)

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

திருத்தங்களுக்கு நன்றி பொன்ஸ். script இடம் பெறாததை கவனிக்கத் தவறிட்டேன்:( சுட்டிக் காட்டியதற்கு நன்றி, பொன்வண்டு

Santhosh said...

ரொம்ப உபயோகமாக இருந்தது ரவி, நன்றி. Script tag இன்னும் சரியாக close செய்யப்படவில்லை சரி செய்ய முடியுமா?

சிறில் அலெக்ஸ் said...

super duper.
என் ஆங்கிலப் பதிவுக்கு விடிவு வந்துச்சு.

நன்றி ரவிசங்கர்.