Quick refrence

Download Links:- eKalappai 2.0b(Anjal) | eKalappai 2.0b (tamilnet99) - இங்கே தேர்வு செய்யவும்,
Key board layout :- e- kalappai (Anjal) |e-kalappai (Tamil 99) இதே மாதிரி இன்னும் ஏதாவது quick refrence சேர்த்தால் உபயோகமாக இருக்குமானால் பின்னூடத்தில் தெரிவிக்கவும்

Wednesday, June 27, 2007

தமிழில் சிந்திப்போம் - தமிழ்99 விழிப்புணர்வு widget

தமிழ்99 விசைப்பலகை விழிப்புணர்வு widget

Monday, June 18, 2007

கூட்டு பதிவில் "பதிவு-செய்தவர்" பெயரை அவர்-அவர் profile க்கு இணைக்க

நமக்கு தெரிஞ்ச சில விஷயங்களை மத்தவங்களுக்கு சொல்லரதுக்கும்,, நமக்கு தெரியாத பல விஷங்களை தெரிஞ்சுக்கிரதுக்கும் கூட்டுபதிவு ரொம்பவே உதவியா இருக்கு. இப்படியிருக்க.. ஒவ்வொரு பதிவுக்கு கீழே பதிவுசெய்தவர் பெயர் இருக்கும்.. (என்ன பிரமாதம்..அதான் எங்களுக்கு தெரியும்லே..ன்னு தங்கவேலு/வடிவேலு மாதிரி சொல்லப்படாது..)பதிவர்-பெயரை எங்கேயும் default ஆ பிளாக்ர் இணைத்திருக்காது..அதாவது..பதிவர் பெயர் வெறும் ஒரு சொல் தான்

ஒவ்வொரு பதிவர் பெயரை ஒரு சுட்டி மாதிரி அவர்-அவர் profileக்கு இணைக்க முடியும். பதிவு நிர்வாகி பண்ணவேடியதெல்லாம் இது தான்
step:1 ஒவ்வொரு பதிவரின் profile-URL லிருந்து அவர் பெயரும்(Profile Name ) & pID ( Profile ID) ஐ எடுத்து notepad ல் பத்திரப்படுத்தவும்

உதாகரணம்:- என் பிரொபைல் URL இது :- http://www.blogger.com/profile/08368941819092880320


இதில் 08368941819092880320 தான் என் pID. உங்கள் கூட்டுபதிவில் செயல்படும் பதிவர்களின் Profile Name & pID ஐ கீழே சொல்லியிருப்பது போல் பட்டியல் போட்டு வைக்கவும். Profile Name படத்தில் காட்டியிருப்பது போல் பதிவரின் Profile லில் இருக்கும் பெயர் தான் தேவை.. ஏன்னா <data: postauthor> tag பிரொபைலில் இருக்கும் பெயர் தான் பதிவில் வெளிப்படுத்தும்

Team_Member ( profile லில் இருக்கும் பதிவர் பெயர்)
pID ( profile ID number)

Team_Member 1 : pID
Team_Member 2 : pID
Team_Member 3 : pID
Team_Member 4 : pID
Team_Member 5 : pID
Team_Member 6 : pID

இந்த பட்டியல் தெயாரானதும் அந்த notepad ஐ பத்திரப்படுத்திகொள்ளவும் ( எல்லாம் ஒரு முன்-ஜாகிரதை தான்)

STEP:2 : கீழே இருக்கும் code ஐ இன்னொரு Notepad ல் ஒட்டி.. Team_member க்கு பதிலாக Profile லில் இருக்கும் பதிவர் பெயரும் , pID க்கு பதிலாக .. பதிவரின் profile லிருந்து எடுத்த pID எண்ணையும் போடவேண்டும்

<script type='text/javascript'>
var team = new Array();
team[' Team_Memeber 1 ']=' pID number ';
team[' Team_Memeber 2 ']=' pID number ';
team[' Team_Memeber 3 ']=' pID number ';
team[' Team_Memeber 4 ']=' pID number ';
team[' Team_Memeber 5 ']=' pID number ';
team[' Team_Memeber 6 ']=' pID number ';

function makeprofilelink (authorname)
{
var pid = team[authorname];
document.write("<a href='http://www.blogger.com/profile/" + pid + "'>" + authorname + "</a>");
}
</script>


Notepad ஐ பத்திரப்படுத்தி கொள்ளவும் ( எல்லாம் ஒரு முன்-ஜாகிரதை தான்)

STEP 3:- மேலே இருக்கும் கோடில் பெயரும் pID எண்ணையும் சரிபார்த்து..திருப்தியானப்புறம்... அதை உங்கள் டெம்ப்ளேட்டின் </head> tag க்கு மேலே இணைக்கவும்

STEP4 :- உங்கள் டெம்ப்ளேட்டில் கீழே இருக்கும் code ஐ கண்டுபிடிக்கவும்
  1. கண்டுபிடிக்க:-

    <b:if cond='data:top.showAuthor'>
    <data:top.authorLabel/>
    <data: post.author/>
    </b:if>
  2. இதில் <data: post.author/> க்கு பதிலாக இதை எழுதவும்


  3. <script type='text/javascript'> makeprofilelink('<data: post.author/>');
    </script>
  4. அதாவது.. மாற்றங்கள் செய்தப்புறம் உங்க கோட் பார்க்க இப்படி இருக்கும்

<b:if cond='data:top.showAuthor'>
<data:top.authorLabel/>
<script type='text/javascript'> makeprofilelink('<data: post.author/>');
</script>

</b:if>


STEP:5 Save செய்து உங்கள் பிளாகை browser ல் பார்க்கவும்.. எல்லா பதிவர்களும் அவரவ்ர் Profile க்கு ஆடோமேட்டிகா இணைக்கப்பட்டிருப்பார்கள்.
பிளகர் உதவி பக்கத்தில் இதுக்காக சொல்லியிருக்கும் கோட் வெலைகாவாதுஅம்புட்டுதேன்..

Friday, June 15, 2007

வார்ப்புரு மேம்பாட்டுக் கருவி

புதிய ப்ளாக்கருக்கு மாறியபின் தமிழ்மணப் பட்டி தொடங்கி வார்ப்புரு மாற்றங்கள் எல்லாமே கொஞ்சம் கடினமான விசயமாகத் தான் ஆகி விட்டது. அந்தப் பிரச்சனையிலிருந்து விடுவிக்க இதோ ப்ளாக்கர் மேம்பாட்டுக் கருவி.

குழலி செய்யத் தொடங்கிய இந்தக் கருவியில், மேலும் பல மாற்றங்களுடன் முன்னேற்றங்களுடன், பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு, இதோ, உங்களுக்காக: புதிய ப்ளாக்கர் வார்ப்புரு மேம்பாட்டுக் கருவி

இந்த புதிய ப்ளாக்கர் வார்ப்புரு மேம்பாட்டுக் கருவியின் மூலம் நீங்கள் பெறக்கூடிய வசதிகள் பின்வருமாறு:

  • தமிழ்மணத்தின் கருவிப்பட்டையைச் சேர்த்துக்கொள்ளலாம்.
  • பழைய ப்ளாக்கரிலிருந்து மாறியவர்களுக்கு ஒருங்குறி எழுத்துக்களை சரியான முறையில் தெரிய வைக்கலாம்.
  • நாளும் நேரமும் தமிழில் காட்டலாம்.
  • தேன்கூட்டின் பின்னூட்டங்கள் திரட்டும் பட்டியைச் சேர்த்துக் கொள்ளலாம்..
  • யாஹூ சிரிப்பான்களைப் பதிவில் காட்டும் நிரலியையும் சேர்த்துக் கொள்ளலாம்.

ஒரே ப்ளாகர் கணக்கின் கீழ் இருக்கும் வெவ்வேறு பதிவுகளில் பதிவர் பெயரை javascript இல்லாமலும் மாற்றலாம்

இந்த பதிவுக்கு ஐடியா தந்தவர் பொன்வண்டு..பிளாகரில் உள்ள conditional tags உபயோகபடுத்தி இதே வேலையை செய்யமுடியும்.

DONOT FORGET TO SAVE AND BACK UP YOUR TEMPLATE

1. பதிவுகளின் கீழே வரும் பதிவர் பெயரை மாற்ற :-
டெம்ப்ளேட்டில் இப்படி ஒரு கோட் இருக்கு

<span class='post-author'>
<b:if cond='data:top.showAuthor'>
<data:top.authorLabel/> <data: post.author/> </b:if>
</span>

இதில் <data:top.authorLabel/> தான் Posted by ன்னு காட்டுது.. ஸோ.. அந்த ஒரு code ஐ மட்டும் அழித்துவிட்டு .."எழுதியது / சொன்னது / சொன்னவர் / பதிவு போட்டவர்.." இப்படி என்ன வேணும்னாலும் எழுதலாம்

அதே மாதிரி<data: post.author/> தான் உங்கள் Profile ல் இருக்கும் பெயரை காட்டுகிரது.. ஸோ அதை அழித்துவிட்டு.. உங்க பெயருக்கு பதிலா என்ன பெயர் போடணும்ன்னு விரும்புரீங்களோ அதை தாராளமா போடலாம்... அது தான் எல்லா பதிவுக்கு கீழே தெரியும்

2.மறுமொழியில் உங்கள் பெயரை மாற்றி காட்ட.. மற்றும்.. அதிலிருந்து உங்கள் profile க்கு தொடுப்பு இல்லாமல் செய்ய

இது பின்னூட்டப் பக்கத்தில் காணக்கிடைக்காது. அவையெல்லாம் உங்கள் பதிவு காணக்கிடைக்கும் URL பக்கத்திலேயே தெரியும். முழுமையான பதிவு எக்ஸ்புளோரரில் தெரியும் போது அதனுடன் பின்னூட்டங்களும் தெரியும்.. இங்கே மட்டுமே இது சாத்திம்..

comments page ல் உங்கள் original profile name ம்.. அதனுடன் உங்கள் profile க்கு தொடுப்பும் இருக்கும்

டெம்ப்ளேட்டில் சிகப்பு நிறத்தில் இருக்கும் code ஐ இணைக்க வேண்டும்
மஞ்சள் நிறத்தில் இருப்பதை உங்க விருப்பம் போல மாற்றி எழுதலாம்


<b:if cond='data:comment.author == data: post.author'>
my name is YIPPIE-YIPPE..YEEEEE
<b:else/>
<b:if cond='data:comment.authorUrl'>
<a expr:href='data:comment.authorUrl' rel='nofollow'> <data:comment.author/></a>
<b:else/>
<data:comment.author/>
</b:if>
</b:if>
<data:commentPostedByMsg/>
</dt>


இதில் <data:commentPostedByMsg/> தான் said.. ன்னு காட்டும்.. விருப்பபட்டா.. இதையும் அழித்துவிட்டு .. உங்க கற்பனைக்கேற்றால் போல் மாற்றி அமைக்கலாம்

Thursday, June 14, 2007

Blogger Draft - ப்ளாகரின் அடுத்த பதிப்புக்கான சோதனைத் தளம்

http://draft.blogger.com என்ற முகவரியில் ப்ளாகரின் அடுத்த பதிப்புக்கான சோதனைத் தளம் வந்திருக்கிறது. இதில் தற்போது பலரும் பயன்படுத்தும் புது ப்ளாகரைக் காட்டிலும் கூடுதல் வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டு சோதிக்கப்படும். தற்போது, இடுகையில் இருந்தே நேரடியாக நிகழ்படத்தைப் (video) பதிவேற்றும் வசதி இங்கு கிடைக்கிறது. Blogger draftக்கு மாறியவர்கள் விரும்பினால் திரும்ப தற்போது இருக்கும் ப்ளாகருக்கே எந்த சிரமமுன்றி மாறிக் கொள்ளலாம்.

மேலதிகத் தகவல்களுக்கு - http://bloggerindraft.blogspot.com/

ஒரே ப்ளாகர் கணக்கின் கீழ் இருக்கும் வெவ்வேறு பதிவுகளில் பதிவர் பெயரை மாற்றலாம்

இந்தக் குறிப்பைத் தருபவர் - பொன்வண்டு

எல்லோரும் பிளாக்கர் டெம்ப்ளேட்டில் ஜாவா ஸ்கிரிப்டில் புகுந்து விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்து எனக்கும் அப்படி ஏதாவது செய்ய மாட்டோமா என ஆவல் இருந்து வந்தது. அதற்கேற்றார் போல போன வாரம் நான் ஒரு பிரச்சினையை எதிர் கொண்டேன். ஜாவா ஸ்கிரிப்ட் மூலம் சரி செய்தேன். தீபா, ஜெகத் போன்ற ப்ளாக்கர் விஞ்ஞானிகளின் ; -) script-களை ஒப்பிடும்போது என்னுடையது மிகவும் சிறியது தான்.

எனது கூகுள் account-ன் கீழ் இரண்டு Blogs உள்ளன. அதில் ஒன்று தான் இந்த பொன்வண்டு வலைப்பதிவு தளம்.

ஆனால் நம்மால் ஒரு account-க்கு ஒரே ஒரு profile மட்டுமே வைத்துக் கொள்ள முடியும். அந்த profile-ல் நாம் கொடுக்கும் display name-தான் நமது பதிவுகளில் author name-ஆக வரும் என்பது எல்லோருக்கும் தெரியும்.

நான் ஒரு வலைப்பதிவில் பொன்வண்டு என்ற பெயரில் எழுதுகிறேன். எனது மற்றொரு வலைப்பதிவில் வேறொரு பெயரில் எழுத நினைத்தாலும் முடியவில்லை. ஏனென்றால் ஒரு account-ன் கீழ் இருக்கும் எல்லா வலைப்பதிவுகளுக்கும் ஒரே profile-ல் இருந்தே display name-ஐ எடுத்துக் கொள்கிறது. எனது ப்ளாக்கர் profile-ல் display name பொன்வண்டு என்று உள்ளது.

அதனால் என்னுடைய இரண்டாவது தளத்தில் நான் வேறொரு பெயரில் எழுத நினைத்தேன். எப்படி என்று யோசித்தபோது கை கொடுத்தது ஜாவா ஸ்கிரிப்ட்.

ஒரு வலைப்பதிவு தளத்தில் 2 இடங்களில் author name தெரியும்.

1. பதிவின் கீழ், எழுதியவர் பெயர் தெரியுமிடத்தில்.
2. பின்னூட்டங்களில்

எனவே எந்த வலைப்பதிவு தளத்தில் மாற்றம் செய்ய வேண்டுமோ அங்கு அந்த tag-களைக் கண்டுபிடித்து template-ல் மாற்றி விட்டால் பிரச்சினை சரியாகிவிடும்.

செய்ய வேண்டியது :

1. Edit HTML போய் Expand widgets தேர்வு செய்து கொள்ளவும்.

2. கீழே இருக்கும் script-ல் profile_name-ல் உங்கள் profile-ல் உள்ள name-ஐக் கொடுங்கள். new_name-ல் உங்கள் விருப்பப் பெயரைக் கொடுங்கள்.
வழக்கம் போல் script-ஐ </head> tag-க்கு மேலே copy-paste செய்யவும்.

<script type='text/javascript'>
function replace_profile_name(str)
{
var profile_name='பொன்வண்டு';
var new_name='கழுதை';
if (str == profile_name)
str = new_name;
return str;
}
</script>

3. பின்னர் <data: post.author/> tag-ஐக் கண்டுபிடித்து கீழே உள்ள வரியால் replace செய்யவும்.

<script>document.write(replace_profile_name('<data: post.author/>'))</script>

4. பின்னர் <data:comment.author/> tag-களைக் கண்டுபிடித்து கீழே உள்ள வரியால் replace செய்யவும்.

<script>document.write(replace_profile_name('<data:comment.author/>'))</script>

5. Template-ஐ Save மாடி.




என்னுடைய இன்னொரு வலைத்தளம் - மாற்றம் செய்வதற்கு முன்







மாற்றம் செய்த பின்





இந்தக் குறிப்பைத் தருபவர் - பொன்வண்டு

--
பதிவர் உதவிப் பக்கத்தில் இதைப் பதிப்பிக்க அனுமதி தந்ததற்கு நன்றி - ரவி.

wordpress.comன் நீளமான தமிழ் URLகளை மாற்றுவது எப்படி?

wordpress.comல் பதிபவர்களின் இடுகைகளின் URL முகவரிகள் நீளமாக வருவதைக் காணலாம். இதனால், பக்கங்களை address barல் தட்டச்சு செய்து சென்று பார்ப்பது வரை, திரட்டிகள் மற்றும் பிற இடங்களில் இருந்து இணைப்பு தருவது வரை பிரச்சினைகள் வருகின்றன. எடுத்துக்காட்டுக்கு, கீழ் உள்ள பாமரன் அவர்களின் வலைப்பதிவின் திரைப்பிடிப்பைப் பாருங்கள்.



இந்தப் பிரச்சினையைத் தீர்க்க ஒவ்வொரு இடுகைக்கும் நாம் விரும்பும் சுருக்கமான ஆங்கில அல்லது வரிசை எண் அடிப்படையில் URLகளைத் தரலாம்.

wordpress.comல் write post பக்கத்தின் வலப்புறம் உள்ள post slug என்ற இடத்தில் உங்கள் விருப்பத் தலைப்பைத் தரலாம். இங்கு முழு urlஐத் தரத் தேவை இல்லை. மாற்றுத் தலைப்பை மட்டும் தந்தால் போதும். எடுத்துக்காட்டுக்கு, சோதனை என்று உங்கள் இடுகைத் தலைப்பு இருக்குமானால், test என்று post slug தரலாம். இல்லை, உங்கள் இடுகையின் வரிசை எண்ணோ ஏதாவது ஒரு எண்ணோ தரலாம்.

கீழே உள்ள விளக்கப் படத்தைப் பாருங்கள்.



இதே சொந்தத் தளத்தில் wordpress நிறுவி உள்ளவர்கள் options-->permalinks போய் ஒட்டு மொத்தமாக எல்லா இடுகைகளுக்கும் இந்த அமைப்பை மாற்ற முடியும்.

இங்கு, கவனிக்க வேண்டியது, இந்த நீளமான தமிழ் முகவரிகள் இருந்தால், ஒருவேளை, கூகுள் போன்ற தேடு பொறிகளில் உங்கள் இடுகைகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் கிடைக்கலாம். அதனால், சுருக்கமான முகவரி வேண்டுமா தேடு பொறிகளில் கூடுதல் முக்கியத்துவம் வேண்டுமா என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்.

மேலதிக விளக்கம் தேவைப்பட்டால் மறுமொழிகளில் கேளுங்கள்.

ரவி

Wednesday, June 13, 2007

ஆர்க்குட்டில் உங்கள் பதிவு ஓடைகளை இணைக்கலாம்

ஆர்க்குட் பயனரா நீங்கள்? இப்போது உங்கள் Orkut profileல் உங்கள் wordpress, blogger பதிவுகளுக்கான ஓடைகளை இணைக்கலாம். இதன் மூலம் உங்கள் ஆர்க்குட் பக்கத்தில் இருந்தே உங்கள் நண்பர்கள் உங்கள் பதிவுகளை முழுமையாகப் படிக்க இயலும். இவை தவிர, உங்கள் விருப்பத் தளங்களின் ஓடைகள், பிக்காஸா படத்தொகுப்புகளின் ஓடைகளையும் இணைக்கலாம்.

நிரல் துண்டுகளை காண்பிப்பது

இடுகைகளின் நடுவில் நிரல் துண்டு்களைப் பிறருக்குத் தருவதற்காகச் சிறப்பாய் ஒரு உரைப் பெட்டியை இடுவது வழக்கம். இந்தப் பதிவில் நிரல்கள் சிறப்பு பெட்டிக்குள் இருக்கின்றன. இதைச் செய்ய textarea எனும் HTML குறியீடு பயன்படுகிறது.

<textarea name="testtext" rows="2" cols="20"> நிரல் துண்டை இங்கே தரலாம்</textarea> என்று நிரல் இட்டால் கீழ் உள்ளது போல் பெட்டி தோன்றும்.


Cols, rows என்பவற்றில் தேவைக்கேற்ப அளவை தேர்ந்தெடுக்கவேண்டும். இவ்வாறு இடாத நிரல்கள் பதிவில் HTMLஆகவே காண்பிக்கப்படும் வாய்ப்புள்ளது.

மேலும் சில வழிமுறைகள்

கோப்பிலிருந்து Random பதிவை காண்பிக்க

உங்கள் பதிவு இடுகை ஒன்றை படித்த ஒருவர் உங்கள் முந்தைய இடுகை ஒன்றை Randomஆக எடுத்துப் படிக்க வகை செய்ய கீழ்கண்ட வார்ப்புரு மாற்றங்களை செய்யுங்கள்.

1. வார்ப்புரு(Template) மாற்றுமிடத்துக்குச் சென்று. Edit HTML தேர்வு செய்து உங்கள் வார்ப்புருவின் HTMLஐ சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்.
2. Expand Widget Templatesஐ தேர்வு செய்யுங்கள்.
3. கீழ் வரும் நிரலை /head> என்பதற்கு முன்பாக ஒட்டுங்கள்.



4. மேலுள்ள நிரலில் var _yourBlogUrl = "http://purplemoggy.blogspot.com/"; என்பதில் உங்கள் பதிவின் சுட்டியை தாருங்கள்.

5. டெம்ப்ளேட்டை சேமித்துவிட்டு Page Elements பகுதிக்குச் சென்று புதிய குறும்பட்டை ஒன்றை Add a Page Element என்பதை க்ளிக் செய்து உருவாக்குங்கள். HTML/JavaScript என்பதை தேர்ந்தெடுத்து (ADD TO BLOG) கீழுள்ள நிரலை ஒட்டுங்கள்.



Button வடிவில் வேண்டுமெனில் கீழுள்ள நிரலை பயன்படுத்தவும்.



இரண்டிலுமே "View Random Post" என்பதை எடுத்துவிட்டு தமிழில் தரலாம்.

உதாரணத்திற்கு தேன் பதிவைப் பார்க்கலாம்.

நன்றி: Purplemoggy

புது பிளாகரில் மறுமொழிகளைத் திருத்த முடியாதது ஏன்?

பொன்வண்டு எழுதிய பதிவில் உண்மைத் தமிழன் & முகவைத்தமிழன் மறுமொழிகள் குறித்து இந்த கேள்வி கேட்டிருந்தாங்க.. நானும் பல தடவை சிரசாசனம் செஞ்சு மாஞ்சு போய் தெரிஞ்சுகிட்ட விஷயத்தை உங்க கூட பகிர்ந்துக்கறேன்

கேள்வி:-
//////அப்படியே புதிய பிளாக்கரில் கமென்டஸ் (மறுமொழி) எடிட் பன்னுவதற்கு ஏதாவது வழி இருக்குதான்னு சொல்லு தல!!
/////கமெண்ட்டுகளில் ஒரே ஒரு சொல்லால் அதைப் போட முடியாத நிலைமைஏற்படுகிறது ////////////

இதுக்கு காரணம் மறுமொழிகள் பக்கத்தில் பிளாகர் பயன்படுத்தும் security token ID .. இது மறுமொழிகள் பக்கத்தில் இருந்தால் தான் பிளாகர் .. அந்த பக்கத்தை மறுமொழிகள் பக்கம்ன்னு அடையாளம் காட்டும்..

இந்த security token .. எப்பொவுமே ஒரே மாதிரி இருக்காது... பிளாகர் வழங்கி (server) தான் இதை நிர்ணயிக்க்கும்

இந்த security token ன் பயணத்தை இப்போ பார்ப்போம்
  1. நாம் "Post a comment " ஐ சொடுக்கும்போது வழங்கியிலிருந்து இந்த security-token ID நம் மறுமொழி பக்கதுக்கு வரும்...
  2. நாம் மறுமொழி எழுதிய பிறகு submit ஐ சொடுக்கும்போது... வழங்கி... உள்ளே வந்திருக்கும் security token ID யும்... கொஞ்ச முன்னாடி வெளியே அனுப்பி வைத்த security token ம் ஒண்ணுதானான்னு சரி பார்க்கும்..
  3. அப்படி ஒண்ணா இருக்கும் பட்சத்தில் மட்டுமே அந்த மறுமொழியை மறுமொழியாக உறுதி செய்து வேண்டியது செய்யும்
இந்த security token .. வழங்கியிலிருந்து வருவதால்.. நாம என்ன தலைகீழே நின்னாலும் ( ஜாவாஸ்க்ரிப்ட்) ஒண்ணும் பண்ண முடியாது. இதுக்கு ஒரே வழி .. பிளாகர் வழங்கியை hack பண்ணணும்... இல்லை பிளாகர்ல வழங்கி நிர்வாகியா (Server administrator) வேலைக்கு விண்ணப்பம் போடணும்....

அப்போ சொல்லுங்க..இருக்கிர மறுமொழி வச்சு அட்ஜச்ட் பண்ணபோறீங்களா... இல்லை பிளாகருக்கு விண்ணப்பிக்கப் போறதா உத்தேசம் இருக்கா ? ?

Tuesday, June 12, 2007

ப்ளாக்கரின் Widget Installer - ஒரு அறிமுகம்

Widget Installer அல்லது 'தன்விருப்ப நிரல் துண்டு நிறுவி' புது ப்ளாக்கரின் மிக முக்கியமான அம்சம். உங்கள் பதிவைப் பற்றிய சிறு குறிப்பு அல்லது, ஏதும் விளம்பரம் கொடுக்க இந்த விட்ஜட் மிகச் சுலபமான வழி.

'மகளிர் சக்தி'யை உங்கள் பதிவில் இட உதவும் 'சக்தி கொடு' பொத்தானும், சமீபத்தில் சென்னை பதிவர் சந்திப்புக்காக அளிக்கப்பட்ட விளம்பரம் தரும் பொத்தானும் இப்படி உருவாக்கப்பட்டவையே.

இந்த விட்ஜட்கள் இரண்டு வகையானவை:
1. Static widget installer
2. Dynamic Widget installer

Static என்னும் மாறா நிரல்துண்டு நிறுவி எல்லா பதிவுகளுக்கும் ஒரே விதமான நிரல்துண்டுகளைக் கொடுப்பவை. எடுத்துக்காட்டுக்கு, மேலே சொன்ன சக்தி கொடு பொத்தானே ஒரு மாறா நிறுவி தான். யார் பதிவில் இட்டாலும் அதன் உள்ளடக்கம் ஒன்றாகத் தான் இருக்கும். இதை விளம்பரங்களுக்கும், இது போல் ஏதேனும் ஒரு பதிவின் ஓடைகளைப் படிக்கவும் பயன்படுத்தலாம்

Dynamic என்னும் மாறும் நிரல்துண்டு நிறுவி, அவரவர் பதிவுகளுக்கு வேண்டிய வகையிலான நிரல்துண்டை நிறுவிக் கொள்ள உதவும். அண்மைய ஐந்து இடுகைகள், அண்மைய ஐந்து பின்னூட்டங்கள் போன்றவற்றிற்கு நாம் விட்ஜட் கொடுத்தால் அந்தந்த பதிவர்கள் அவரவர் பதிவுகளின் இட்டுக் கொள்ள முடியும் வகையிலானவை இந்த dynamic widget installers.

இந்தப் பதிவில் static installer களை உருவாக்குவது எப்படி என்று மட்டுமே எழுதப் போகிறேன். விட்ஜட் நிறுவும் இந்த நிரலியை ப்ளாக்கர் பதிவில் மட்டும் தான் செய்து பார்க்க முடியும்.

1: நீங்கள் கொடுக்க விரும்பும் விட்ஜட்டை முதலில் உங்கள் பதிவில் நீங்களே இட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.எடுத்துக்காட்டுக்கு, எய்ட்ஸ் விழிப்புணர்வு பற்றிய பக்கப்பட்டித் துண்டை பலரது வலைபதிவில் பார்த்திருப்போம். இது போன்ற ஒரு விட்ஜட் கொடுக்க விரும்பினால், முதலில் அந்த பக்கப்பதிவுத் துண்டை நீங்களே உங்கள் பதிவில் "Add New Widget" வழியாக சேர்த்துக் கொள்ளுங்கள்.
2. மேற்குறிப்பிட்ட விழிப்புணர்வு பற்றிய widget உருவாக்க தேவையான நிரலியின் ஒரு எடுத்துக்காட்டு பின்வருமாறு:


இந்த நிரல்துண்டை உங்கள் பதிவின் Layout பக்கத்தில் "Add New Widget" என்ற பொத்தானை அமுக்கி, அதிலும், "HTML/Java Script" வகையான Widget ஆக இந்த நிரல்துண்டை இட வேண்டும்.

[குறிப்பு: & lt; , & gt; போன்றவற்றில் நான்கு எழுத்துக்களும் அருகருகே வர வேண்டும். அனாவசிய space ஐ விட்டு விட்டு எழுத வேண்டும்]

நிரல்துண்டின் வரி விளக்கம்:
Widget Installerகள் பொதுவாக படிவங்களாக (form) இருக்கின்றன. உங்கள் பக்கத்தில் தனக்கென சின்ன மினி பக்கத்தை உருவாக்கிக் கொண்டு அதில் சில வேலைகள் செய்யவே இந்த படிவ வகை தேவைப்படுகிறது.

<form action="http://www.blogger.com/add-widget" method="post">

என்ற பகுதியை எல்லா விட்ஜட் நிறு்வி நிரலியிலும் இட்டே ஆக வேண்டும்.

Form பகுதிக்குப் பின்னர் வரும் எல்லா input வரிகளும், இந்த widget installer form இல் நிரப்ப வேண்டிய சில மாறிகள் (variables) தான். அதில் ஒவ்வொரு வரியாக அடுத்து பார்ப்போம்:
1. தலைப்பு/Widget Title : நிரல்துண்டின் தலைப்பை இந்த இடத்தில் இட வேண்டும். உங்கள் installer வழியாக நிறுவிக் கொண்டவர்களின் பதிவுகளில் அந்த widgetஇன் தலைப்பாக இது இருக்கும்.
இலக்கணம்:
<input type="hidden" value=நீங்கள் விரும்பும் தலைப்பு name="widget.title">


எ.கா:
<input type="hidden" value="விழிப்புணர்வு" name="widget.title">


2. உள்ளடக்கம்/Content: நீங்கள் கொடுக்க விரும்பும் நிரல்துண்டில் உள்ளடக்கம் என்ன இருக்க வேண்டும் என்பதே இது. மேற்குறிப்பிட்ட மாதிரி உங்கள் பதிவில் நீங்களே இந்த விட்ஜட்டை ஒருமுறை செய்து பார்த்திருப்பீர்கள் தானே? அப்படிச் செய்யும் போது பயன்படுத்திய நிரலியைத் தான் இங்கு கொடுக்கப் போகிறோம்.

ஆனால் நேரடியாக பதிவின் வார்ப்புருவில் இடுவதற்கும், இது போல் இடுவதற்கும் ஒரு வேறுபாடுகள் உண்டு:
அ. <, > போன்றவை இந்த வரியின் உள்ளே பயன்படுத்தினால் ஏற்கனவே இருக்கும் <input> இன் <, > குறிகளுடன் குழப்பம் ஏற்படும் என்பதால், இவற்றிற்குப் பதிலாக, முறையே & lt; யும், & gt;யும் பயன்படுத்த வேண்டும் (space இல்லாமல்)
ஆ. சுட்டிகளைக் கொடுக்கும் போது, ஒற்றை மேற்கோள்(') குறியை இட வேண்டும்.

இலக்கணம்:
<input type="hidden" value="அவசியமான உள்ளடக்கம்" name="widget.content">


எ.கா:
<input type="hidden" value="& lt;a href='http://manggai.blogspot.com/2007/04/blog-post_27.html'& gt;& lt;img src=http://poorna.rajaraman.googlepages.com/aids_aware.jpg& gt;& lt;/a& gt; எயிட்ஸ் பற்றிய சரியான புரிதலுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை கரம் நீட்டுவோம் நேசமுடன்." name="widget.content">


மேல் உள்ள உள்ளடக்கப் பகுதி, input வரிக்கான சமரசங்கள் இல்லாமல் எழுத வேண்டுமாயின் :
<a href='http://manggai.blogspot.com/2007/04/blog-post_27.html'><img src="http://poorna.rajaraman.googlepages.com/aids_aware.jpg></a>எயிட்ஸ் பற்றிய சரியான புரிதலுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை கரம் நீட்டுவோம் நேசமுடன்."


3. வார்ப்புரு/template: form என்பது குட்டிப் பக்கம் என்று முன்பே சொல்லிவிட்டேன். தனிப்பக்கம் என்பதால் அதற்குரிய வார்ப்புருவையும் தனியே தர வேண்டியது அவசியமாகிறது. பொதுவாக மாறா widget நிறுவிகளில், இந்த வார்ப்புருவும், உள்ளடக்கமும் ஒன்றாகத் தான் இருக்கும்.

இலக்கணம்:
<input type="hidden" value=அவசியமான வார்ப்புரு name="widget.template">


எ.கா:
<input type="hidden" value="<data:content/>" name="widget.template">


4. ஒப்படை/Submit: இறுதியாக விட்ஜட் நிறுவியி பொத்தானுடன் இந்த நிரல் துண்டு முடிவடையும்.

இலக்கணம்:
<input type="submit" value="கை கொடுப்போம்" name="go">


இதே படிகளில் உருவாக்கிய விட்ஜட் நிறுவி பொத்தான் இந்தப் பக்கத்தில் இருக்கிறது. இதை வைத்து நீங்கள் உங்கள் பதிவில் எய்ட்ஸ் விழிப்புணர்வுக்கான விட்ஜட்டை அணிந்து கொள்ளலாம்..

Widget Installerஐ உருவாக்கும் விதத்தை முயல விரும்புபவர்கள் மேலுள்ள நிரலியை வைத்தே முதல் நிறுவுனரைச் செய்து பார்க்கலாம்.. சந்தேகம் இருந்தாலும்/புரியவே இல்லைன்னாலும் சொல்லுங்க..

மேலும் படிக்க: How do I create new widgets for other people to add to their layouts?

Sunday, June 10, 2007

திரட்டி செய்வது எப்படி?

கூகுள் ரீடர், யாகூ பைப்ஸ் கொண்டு வலைப்பதிவுத் திரட்டி, ஓடைத் திரட்டிகள் செய்வதற்கான வழிகாட்டி