Quick refrence

Download Links:- eKalappai 2.0b(Anjal) | eKalappai 2.0b (tamilnet99) - இங்கே தேர்வு செய்யவும்,
Key board layout :- e- kalappai (Anjal) |e-kalappai (Tamil 99) இதே மாதிரி இன்னும் ஏதாவது quick refrence சேர்த்தால் உபயோகமாக இருக்குமானால் பின்னூடத்தில் தெரிவிக்கவும்

Friday, July 27, 2007

கூகுள் ரீடருக்குள் இருந்தே பின்னூட்டம் இடலாம்!

Firefox பயனர்கள் greasemonkey நீட்சியையும் இந்த நிரலையும் நிறுவிக் கொண்டால், கூகுள் ரீடருக்குள் இருந்தே பதிவுப் பக்கத்தை உள்ளிறக்கிப் பார்க்க முடியும். ஒவ்வொரு பதிவாகச் சென்று பார்க்கத் தேவை இல்லை.

இதனால் ஓடை கத்தரிக்கப்பட்ட பதிவுகளின் முழு உள்ளடக்கத்தையும் கூகுள் ரீடருக்குள் இருந்தே படிக்கலாம். கூகுள் ரீடருக்குள் இருந்தே பின்னூட்டம் இடலாம்.

பதிவுப் பக்கத்தின் முன்தோற்றத்தைப் பார்க்க shift+V அல்லது இடுகைத் தலைப்பு அல்லது இடுகையின் கீழ் உள்ள preview என்னும் தெரிவை அழுத்தலாம். அவற்றையே திரும்ப அழுத்தினால் RSS தோற்றத்தில் காணலாம்.

9 comments:

துளசி கோபால் said...

க.கை.நா.க்கு த.பு. வா.பு (-:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

துளசி கோபால் - கூகுள் ரீடர் என்பது நம்ம மின்மடல் போல எல்லா இணையத்தளங்கள், பதிவுகளையும் ஒரே இடத்தில் இருந்து படிக்கப் பயன்படுவது. இதில் பதிவுகளின் ஓடையை மட்டும் தான் படிக்க முடிந்து வந்தது. ஓடை முழுமையாக இல்லாவிட்டாலோ பின்னூட்டம் போட வேண்டும் என்றாலோ அங்கிருந்து திரும்ப ஒவ்வொரு பதிவாக வர வேண்டி இருந்தது. இந்த முறையில் கூகுள் ரீடருக்குள் இருந்தே இந்த பணிகளைத் தற்போது செய்து கொள்ளலாம். கூகுள் ரீடர் பயன்படுத்துவது எப்படி என்று நேற்று ஒரு பதிவு போட்டிருக்கிறேன். அதுவும் உங்களுக்கு உதவலாம்.

jeevagv said...

பயனுள்ளதாக இருக்கு, நன்றிங்க ரவிசங்கர்!

Unknown said...

உங்களின் முந்தைய இடுகையில் என்னால் வீடியோவை திறந்து பார்க்க முடியவில்லை. இன்டெர்நெட் எக்ஸ்ப்ளோரரில் எவ்வாறு இடுகையை திறக்காமலே பின்னூட்டங்களை படிப்பது? எவ்வாறு பின்னூட்டமிடுவது? சில நேரங்களில் சில இடுகைகள் பாதியிலேயே முறிந்து விடுகின்றன. முழுவதுமாக எப்படி படிப்பது? தயவு செய்து சுட்டி எதுவும் கொடுக்காமல் பின்னூட்டத்திலோ அல்லது தனி இடுகையிலோ விளக்கவும். சுட்டிகளை திறந்து படிப்பதற்கு மிகவும் தாமதமாகிறது எங்கள் அலுவலகத்தில்.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

ஜீவா - :)

உமையணன் - இன்று மாலை எல்லா பழைய நிகழ்படங்களையும் கோப்பு வடிவம் மாற்றித் தருகிறேன். அப்ப உங்களால் பார்க்க இயலும். பின்னூட்டங்களைப் படிப்பது குறித்தும் பின்னர் விளக்குகிறேன்.

பொன்ஸ்~~Poorna said...

fire fox ஆ! ஹூம்.... (பெருமூச்சு தான்!)

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

பொன்ஸ் - firefox பயன்படுத்துவது அடிப்படை மனித உரிமைகளில் ஒன்று :) இது குறித்து உங்கள் அலுவலகக் கணினி மேலாளரிடம் முறையிடுங்கள் :)

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

உமையணன் - இப்ப முந்தைய இடுகைகளில் உள்ள நிகழ்படங்கள் அனைத்தையும் flash வடிவில் தந்திருக்கிறேன். இவற்றை IE, firefox போன்ற உலாவிகள் கொண்டே திறக்கலாம். நன்றாகத் தெரியும்.

நீங்கள் கேட்க வந்தது - IEல் கூகுள் ரீடரில் இடுகையைத் திறக்காமல் எப்படி பின்னூட்டங்களைப் படிப்பது என்பதா? அப்படியென்றால் Firefoxக்கு இந்த நீட்சி இருப்பது போல் IEக்கு வழி இல்லை. கூகுள் ரீடரே அந்த வசதியை அறிமுகப்படுத்தினால் தான். பதிவுகளின் மொத்தப் பின்னூட்டங்களுக்கும் இடுகை வாரிப் பின்னூட்டங்களுக்கும் தனித் தனி ஓடைகள் உண்டு. அவற்றையும் கூகுள் ரீடரில் சேர்த்துக் கொள்வதன் மூலம் ஓடைகளைப் படிக்கலாம். எடுத்துக்காட்டுக்கு, இந்த இடுகையின் பின்னூட்டத்துக்கான ஓடை இது. இந்த இணைப்பை ஒவ்வொரு ப்ளாகர் இடுகைப் பக்கத்தின் முடிவிலும் காணலாம். இந்தப் பதிவின் மொத்தப் பின்னூட்டங்களுக்குமான இணைப்பு இது

எல்லா ப்ளாகர் பதிவுகளின் பின்னூட்ட ஓடைகளும் இதே வடிவிலேயே இருக்கும்.

கூகுள் ரீடருக்குள் ஒரு சில பதிவு இடுகைகள் முறிந்து போய் இருப்பதற்குக் காரணம், பதிவின் சொந்தக் காரர்கள் முழு ஓடையையும் அளிக்காததே. அந்தந்த பதிவுக் காரர்களிடம் முழு ஓடையையும் அளிக்குமாறு பின்னூட்டத்தில் வேண்டுகோள் விடுங்கள். இதை மாற்ற blogger dashboard-setting-site feed- allow blog feed-full என்று ப்ளாகரில் தர வேண்டும்

துளசி கோபால் said...

நன்றி ரவிசங்கர்.

நானும் கூகுள் ரீடர்லே சில பதிவுகளைப் போட்டு வச்சுருக்கேந்தான்.
ஆனா பின்னூட்டமும் அங்கிருந்தே தரமுடியுமுன்னு உங்க பதிவு பார்த்துத்தான்
தெரிஞ்சது. மீண்டும் நன்றி.