Quick refrence

Download Links:- eKalappai 2.0b(Anjal) | eKalappai 2.0b (tamilnet99) - இங்கே தேர்வு செய்யவும்,
Key board layout :- e- kalappai (Anjal) |e-kalappai (Tamil 99) இதே மாதிரி இன்னும் ஏதாவது quick refrence சேர்த்தால் உபயோகமாக இருக்குமானால் பின்னூடத்தில் தெரிவிக்கவும்

Thursday, August 9, 2007

Paint.net-- Photoshop ன் அம்சங்கள் கொண்ட ஒரு இலவச மென்பொருள்

உங்களில் பலபேர் கிட்டே photoshop (any version... the latest is CS3) இருக்கும்.. ஆதை விட்டா image - editing க்கு வேறே எந்த மென்பொருளும் கிடையாதுன்னு வாதாடுகிரவங்களும் இருப்பீங்க.. ஒண்ணும் தப்பில்லே.. நானும் அப்படி தான் சொல்லுவேன்.. ஏன்னா நானும் ஒரு photoshop fanatic.. வேறே ஏதாவது மென்பொருள் அதை விட சூப்பர்னு யாராவது சொன்னா.. ஒரு காலத்திலே சண்டைக்கே போய்டுவேன்...

ஆனா எல்லாராலெயும் photshop பெரமுடியாதில்லையா... Trial- version 30 நாட்களுக்கு பிறகு உபயோக படுத்த முடியாமல் போவிடுகிரது...மட்டுமில்லை... trial version லே எல்லா விதமான அம்சங்களும் இருப்பதில்லை... ஆனாலும் நம்ம மக்கள் உள்ளதை வச்சு அர்புதமா photo-editing எல்லாம் பண்ணராங்க. அப்படி photoshop ஐ முழுமையா பயன்படுத்த முடியாத்தாவங்களுக்கு இந்த Paint.net ஒரு வரபிரசாதம்.... ஏன்னா.....
  1. இது ஒரு இலவச மென்பொருள்... ...Paint.net
  2. அதனால்... குறிப்பிட்ட காலத்துக்கு தான் பயன்படுத்த முடியும்ன்னு "கெடு" எதுவும் கிடையாது
  3. இதன் அளவு வெறும் 1.4 MB தான்....பட்டியலில் இருக்கும் ஏதாவது ஒன்றை தேற்வு செய்து தரவிறக்கம செய்யலாம்் Download here


  4. இதன் ஒவ்வொரு ஆப்ஷனும் photoshop ஐ போன்றதே...photoshop லே என்னென்ன பண்ண முடியுமோ..(Brightness.. color..crop.. curve.. hue..etc etc).. அவை அனைத்தும் இதெலேயும் பண்ணலாம்....photoshop ன் சில advanced அம்சங்களை தவிர
  5. இதிலும் layer ல் நாம் மாற்றங்கள் செய்யலாம்...


  6. இதன் அம்சங்களை கற்றுக்கொள்ளவும்.. தெரிந்துகொள்ளவும் இவர்களின் Online Documentation்ட இருக்கு...மறக்காம படிச்சுப்பருங்க
  7. புதிதாய் உபயோகிப்பவருக்காக... இவர்களின் உதவி-குழு ரொம்பவும் அருமை.... Paint.net forum
  8. Paint.net தலத்தில் என்னென்ன நிகழ்வுகள் இருக்குன்னு நமக்கு அவங்களுடைய பிளாகிலே சொல்லறாங்க... Paint.net's Blog
  9. Animated Gif ஐ தவிர எல்லா images ம் இதில் நீங்கள் திருத்தலாம்
ஒரு முறை தரவிறக்கம் செய்து உபயோகித்து பாருங்க.. கண்டிப்பா இது உங்களை ஏமாற்றாத்துன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.. உங்க கருத்தை சொன்னா மற்றவர்களுக்கும் உதவியா இருக்கும்

28 comments:

வடுவூர் குமார் said...

பகிர்ந்தமைக்கு நன்றி.
என் வேலைக்கு நான் பெரிதும் நம்பி இருப்பது GIMP.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

GIMPம் நல்ல மென்பொருள். லினக்ஸ், விண்டோஸ் இரண்டிலும் இயங்கும்.

http://www.gimp.org/

வினையூக்கி said...

நன்றி நன்றி

✪சிந்தாநதி said...

dot net framework இல்லாம இது வேலை செய்யாது. ;(

Anonymous said...

அப்பாடி, இதப்பத்தி யாராவது ஒரு review எழுதுவாங்களோன்னு நெனச்சேன். நல்லவேளை, நீங்களே எழுதிட்டீங்க.

நான் இதை முதலில் விண்டோசில்தான் பயன்படுத்திப் பார்த்தேன். லினக்சில் சில ப்ரச்சனைகள் வருகின்றன. ஆனாலும் நல்ல துவக்கம். .NET "எதிரிகளுக்கு" (அதாவது மைக்ரோசாஃப்ட் மென்பொருட்களுக்கும் ஓப்பன் சோர்சுக்கும் எதிரிடையானது என்று வதந்திகள் பரப்பி வருபவர்களுக்கு) நல்ல பதிலடி.

சிந்தாநதி, dotnet framework இல்லாம இது வேலை செய்யாதுதான். ஆனா, GTK இல்லாம Gimpஉம் வேலை செய்யாதே. :-)

Anonymous said...

// சிந்தாநதி, dotnet framework இல்லாம இது வேலை செய்யாதுதான். ஆனா, GTK இல்லாம Gimpஉம் வேலை செய்யாதே. :-)


well said. I like it.

✪சிந்தாநதி said...

க்ருபா

//dotnet framework இல்லாம இது வேலை செய்யாதுதான். ஆனா, GTK இல்லாம Gimpஉம் வேலை செய்யாதே. :-)//

உண்மை தான்

ஆனால்

GTK -2.6 Mb மட்டுமே...

dot net version 2 .exe 22.4 mb

dot net version 3 setup 2.8 mb, + .exe more than 100 mb

சுண்டைக்காய் கால் பணம்- சுமைகூலி முக்கால் பணம்?

இலவசம் என்றாலும் பதிவிறக்கம் செய்து தானே ஆகணும்.பயனர் எளிமை முக்கியம் அல்லவா.

என்னைப் பொறுத்தவரை இப்படி இரட்டைச் சவாரி மென்பொருள்கள் எதுவாக இருந்தாலும் அது பயனர் எளிமைக்கு எதிரானது என்றே சொல்வேன்.

Deepa said...

குமார்..
GIMP ஐ நான் உபயோகித்தது இல்லை.. ரவி சொல்லியிருக்கும் தளத்தை பார்த்தேன்.. i understnad that GIMP's greatest adventage is its capacity to function well in linux, widows..

Deepa said...

சிந்தாநதி..
ம்ம் உணமை தான்.. ம்ம்.. ஆனா எனக்கு தெரிஞ்ச பலபேருக்கு .net frame work இருக்கு ( . net இல்லாத்தவங்க ரொம்ப கம்மிங்கிரது என் அபிப்பிராயம்..தப்பா கூட இருக்கலாம்)

Deepa said...

வாங்க கிருபா ஷங்கர்..
பதிலடி குடுக்கிர நோக்கத்தோட நான் இந்த review எழுதலை.. நம்ம தமிழ் வலைபதிவர் பலபேர் கிட்டே photoshop & மற்ற image editing tools இல்லைனு தெரிய வந்தது...அதுக்கு கிட்ட-தட்ட போட்டோஷாப்பின் முக்கிய அம்சங்கள் அடங்கிய ஒரு இலவச மென்பொருள் கிடைச்சா... அவங்களுக்கு உதவியா.. இருக்குமில்லே...

அப்புறம் download size ...
பெரும்பாலும் internet-connections plans க்கு... இரவு நேரத்தில் "எவ்வளவு வேணும்ன்னலும் " பதிவிறக்கம் செய்யலாம்.. அது பயணர் கணக்கில் வராதுன்னு ஒரு வசதி உண்டு ( night time unlimited download)... அவங்க-அவங்க internet-account ஐ பொறுத்து.. நேரம் - காலம் தெரிஞ்சுகிட்டா... அந்த குறிப்பிட்ட நேரத்திலே பதிவிறக்கம் சிய்யலாமே...at no extra costs...

Anonymous said...

தொடரட்டும் உங்கள் சேவை

அத said...

மிக்க நன்றி தீபா அவர்களே. நான் சோவின் முகத்தினை ராவணன் போல் ரவுடி போல் ஆக்கிப் பார்க்க வேண்டும்.

Anonymous said...

>>என்னைப் பொறுத்தவரை இப்படி இரட்டைச் சவாரி மென்பொருள்கள் எதுவாக இருந்தாலும் அது பயனர் எளிமைக்கு எதிரானது என்றே சொல்வேன்.

சிந்தாநதி, அதற்காக ஒரு பட்டனையும் டெக்ஸ்ட்பாக்சையும் அடிப்படையிலிருந்து எந்த விட்ஜட்டையும் பயன்படுத்தாமலே உருவாக்கிக்கொண்டிருக்க முடியுமா? நிரலாளரின் கால நேரம் விரயம் அல்லவா?

அப்புறம், வெறும் interface விட்ஜட் லைப்ரரிக்கு (GTK) 2.6 mb பதிவிறக்க வேண்டும். அதைவிட முழுக்கட்டுமானமுமே (framework) 20 mb என்பது நல்லதல்லவா?

உபுண்டுவில் (மற்ற லினக்ஸ் வகைகளுடன் அவ்வலவு பரிச்சயமில்லை) இரண்டுமே உள்ளமைந்துதான் இருக்கின்றன (gtk & framework). அப்படியே இல்லாவிட்டாலும், gimp + gtk பதிவிறக்கிக்கொள்ளுமளவுக்கு முடிந்தவர்களுக்கு, இந்த 20 mb பெரிய விஷயமா என்ன?

அல்லது வெறும் spreadsheet + word processorக்காக (கால்ப்பணம், சுண்டைக்காய்) ஒரு முழு இயங்குதளத்தையே (முக்கால் பணம், சுமைக்கூலி) நிறுவிக்கொள்வது மட்டும் சரியா?

Anonymous said...

தீபா,
உங்க பதிவை பதிலடின்னு எல்லாம் சொல்லி உங்களை அரசியல்ல சேர்த்துவிடலை. :-) Paint.NET நல்ல பதிலடின்னு சொன்னேன். அதுவும் gimpக்கு போட்டியான பதிலடின்னு சொல்லலை, .NET ஓப்பன் சோர்சுக்கு உகந்தது இல்லைன்னு புரளி பரப்பரவங்களுக்கு பதிலடின்னு சொன்னேன்.

Deepa said...

திகிலன்..
நன்றி

Deepa said...

அதியமான்..
வணக்கம்.. கர்பனை பண்ணி பார்த்தாலே அட்டஹாசமா இருக்கு.. உங்க கற்பனைக்கு உருவம் குடுத்து படத்தை பதிவிடுங்கள்..

Deepa said...

க்ருபா ஷங்கர்
//உங்க பதிவை பதிலடின்னு எல்லாம் சொல்லி உங்களை அரசியல்ல சேர்த்துவிடலை. :-) ///
ஹப்பாடா.. இப்போ தான் என் வவுத்திலே ஜூஸ் வார்த்தீங்க.. ( எத்தனை நாள் தான் பால்-மோர் ன்னு சொல்லரது... எதுக்கும் ஒரு சேஞ்ச் வேணுமில்லே)

Anonymous said...

இந்த பாய்ண்ட் விட்டுப்போச்சு. பயனர் எளிமைக்கு பூட் ஸ்ட்ராப்பர் பயன்படுத்தலாம்.

Prem Kumar U said...

இந்த மென்பொருளை நான் முன்பு உபயோகித்து உள்ளேன். சிறிது காலம் கடந்து update செய்ய சொல்லிக் கேட்கும். update செய்யாவிடில் program இயங்காது.....

Deepa said...

வாங்க பிரேம்..
நீங்க எந்த வெர்ஷண் ட்ரை பண்ணினீங்க.. சொன்னா தரிஞுக்க உதவியா இருக்கும்.. இதுவரை எனக்கு எந்த பிராபிளமும் வரலை

Prem Kumar U said...

மன்னிக்கவும் சரியாக ஞாபகம் இல்லை. என் Computerல இருந்து uninstall செய்து விட்டேன். ஆனால் பயன்படுத்த எளிய ஒன்று.

SALAI JAYARAMAN said...

thanks deepa for your excellent service of sharing this information.

kindly help me to use tamil fonts as i like to post in tamil.

when i try to write "mikka nandri" in tamil it shows as typed below.


"'mரiனkமkமaஅ nலaஅnலdஉrஐiன"'

what is the real problem in this ?

Deepa said...

வணக்கம் ஜெயராம்
caould you please share what s/w u are using for typing in tamil..
if its e-kalappai.. the the text you have provided will appear only when the keyboard is set to "special characters" (Alt+3).. perhaps instead of doing Alt+2 ( to toggle between eng and Tamil).. you must have accidentaly pressed Alt+3

Please see here for instructions on ekalappai hope this helps

SALAI JAYARAMAN said...

respected deepa,

thanks for your kind response.

i downloaded e-kalappai from the site mentioned in CVR's Blog. I installed and configured the keyboard as "tamil99uni and tamil99Tsc". i tried but all in vain. when typing tamil phonetics, both english and tamil charecters appear. what to do ?
tell me some alternative. i would like to post in my blog in tamil but not able to do so because of lack of tech. knowledge.

by the by your presentation and the way you communicating things are extrodinary. i like your sense of humour in handling topics. your photos are very nice with excellent perspective. visualising the object you clicked is really amazing (esp. your flower collections). i basically an ameature photographer working in State bank of india Pudukottai.

try to meet all friends of "Tamilmanam" through my Blog soon.

thank you for your immediate response.

✪சிந்தாநதி said...

tamil99 is a simple tamil typing layout.

(no need of shift key for all 247 tamil letters)

31 விசைகளில் அடங்கியுள்ள அ முதல் ஔ மற்றும் க முதல் ன வரையான எழுத்துக்களை பயன்படுத்தியே அனைத்து எழுத்துக்களையும் எழுதலாம். உதாரணமாக கோ என்பது க+ஓ, த+ஐ =தை ச+உ=சு வ+ஆ=வா

எகலப்பை தமிழ்99-

mikka nantri - kshh ;ius - மிக்க நன்றி
தமிழ் - lks/f
வலைப்பதிவர் - vnrjfjlsvmf

லேஅவுட்டை புரிந்துகொள்ள

http://kanimai.com/tamil99.html
http://tamil99.kanimai.com/

Deepa said...

Jayaram
I am using ekalappi and the transliteration rules are as follows See this
Perhaps சிந்தாநதி's approach might solve your problem

Thank you for all the appreciation.
Hope to see more of you amongst our blogging community

கோவி.கண்ணன் said...

நானும் டவுன் லோட் பண்ணிவிட்டேன். சுட்டி தந்தமைக்கும், மென்பொருள் அறிமுகப்படுத்தியதற்கும் மிக்க நன்றி !

SALAI JAYARAMAN said...

அனைவருக்கும் வணக்கம். அனைவரது உதவிக்கும் மிக்க நன்றி.
என்னுடைய வேண்டுகோளுக்கு செவிசாய்த்து உடன் தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி.

திருவாளர் சிந்தா நதி, திருமதி தீபா ஆகியோருக்கு என் வணக்கம். நன்றி. இ-கலப்பை மிக வசதியாக உள்ளது.


மீண்டும் சந்திப்போம்.