Quick refrence

Download Links:- eKalappai 2.0b(Anjal) | eKalappai 2.0b (tamilnet99) - இங்கே தேர்வு செய்யவும்,
Key board layout :- e- kalappai (Anjal) |e-kalappai (Tamil 99) இதே மாதிரி இன்னும் ஏதாவது quick refrence சேர்த்தால் உபயோகமாக இருக்குமானால் பின்னூடத்தில் தெரிவிக்கவும்

Tuesday, July 24, 2007

தமிழ்99 தட்டச்சு - demo video

தமிழ்99 விசைப்பலகை முறையில் தட்டச்சு செய்வது எப்படி என்பது குறித்த 8 நிமிட விளக்க நிகழ்படத்தை இங்கு பதிவிறக்கவும் (.zip கோப்பு, 9 MB). அதை unzip செய்து உள்ளிருக்கும் html கோப்பைத் திறந்தால் Windows உள்ளிட்ட எல்லா இயக்குதளங்களிலும் உங்கள் உலாவியிலேயே flash வடிவில் இந்த நிகழ்படத்தைக் காணலாம்.

16 comments:

பிருந்தன் said...

சவுண்டு மட்டும்தான் வருது படம் வரவில்லையே என்ன செய்வது?

வடுவூர் குமார் said...

ரவிசங்கர்
இதே மாதிரி லினக்ஸில் நான் ஏற்படுத்திய திரைப்பிடிப்பு ஃபிளாஸ் கோப்பாக இருந்தது,தகுந்த மென் பொருள் மூலம் .avi க்கு மாற்றிய போது எழுத்துகள் எல்லாம் படிக்க முடியாத அளவுக்கு சிதைந்து போய்விடுகிறது.
நீங்கள் எப்படி செய்தீர்கள் என்பதையும் ஒரு பதிவாக போட்டால் நன்றாக் இருக்கும்.

கூமுட்டை said...

ரவி,
கலக்கல். பட்டைய கெளப்பிட்டீங்க. VLC player பயன்படுத்தி விளக்கப் படத்தைப் பார்க்க முடிந்தது.

அதை downloadஆக (http://wk.w3tamil.com/download.html)
கொடுத்தற்கு நன்றி. இணையம் இல்லாமலும் தட்டச்சு பயிலலாம்.

நன்றி.

வடுவூர் குமார் said...

நிகழ்படத்தை மீடியா பிளேயரிலும்,ரியல் மீடியாவிலும் பார்க்கமுடியவில்லை.
குரல் மட்டும் மெலிதாக மீடியா பிளேயரில் கேட்கமுடிகிறது.
கொஞ்சம் பாருங்க.
கோடெக் கேட்கிறது,கிடைகாமல் ஆடியோ மட்டும் வருகிறது.
ரேப்பிட் ஷர்.. ஆ ஆஆ, வேறு இடம் இருந்தால் நல்லது.

ரவிசங்கர் said...

பிருந்தன் -

http://www.techsmith.com/download/codecs.asp

என்ற முகவரியில் இருந்து codecஓ

http://www.techsmith.com/download/camtasiatrial.asp

என்ற முகவரியில் இருந்து camtasia மென்பொருளோ இறக்கிப் பாருங்கள்.

windowsல் vlc, windows media playerல் இரண்டிலும் எனக்குத் தெரிகிறது. பிற பல playerகள், linux போன்ற தளங்களில் வராமல் இருப்பதற்கு வருந்துகிறேன். இந்த மென்பொருளின் துல்லியம் நன்றாக இருப்பதால் இதைப் பயன்படுத்த வேண்டி இருக்கிறது. விரைவில், பிரச்சினை இல்லாத கோப்பு வடிவங்களை மாற்றாகத் தர முயல்கிறேன்.

வடுவூர் குமார் - இது windowsல் camtasia கொண்டு செய்தது. ஒரு மாச trialல் இம்மென்பொருள் கிடைக்கிறது. rapidshare காத்திருப்பு எனக்கும் பிடிக்க வில்லை. ஆனால், பிற பல கோப்புச் சேமிப்புச் சேவைகளில் தொல்லை கண்ட பின் தான் இதை வைத்துக் கொண்டேன். வேறு நல்ல சேவைகள் இருந்தால் தெரிவியுங்கள்.

கூமுட்டை - அந்த தமிழ்99 எழுதி நான் செஞ்சது இல்லை. இணையத்தில் கண்டது :)

வடுவூர் குமார் said...

கோடக் எல்லாம் போட்ட பிறகு நன்றாக தெரிகிறது.
முக்கியமாக அந்த ஸ்கிரீன் கேப்சர் கோடக்கை போடவேண்டும்.
நன்றாக இருக்கிறது.

பிருந்தன் said...

இப்போது நன்றாக தெரிகிறது, நன்றி.

✪சிந்தாநதி said...

எனக்கு கோடக் போட்ட பிறகும் தெரியவில்லை. ஏற்கனவே விண்டோஸ் மீடியா ஏதோ பிரச்சினை. விஎல்சி மீடியாவில் போட்டதும் கணினி ரீபூட் ஆகிறது.

எனது கணினி 800x600 res. இதற்கு ஏற்ற ஒரு கோப்பாக கிடைத்தால் நன்று.

ரவிசங்கர் said...

வடுவூர் குமார் - உங்களால் லினக்ஸ் / உபுண்டுவில் பார்க்க இயல்கிறதா? என்ன player, codec எப்படி போட்டீர்கள் என்ற சொல்ல இயலுமா? வேறு யாரேனும் லினக்ஸில் பார்க்க முடிந்தாலும் சொல்லுங்கள்.

ரவிசங்கர் said...

சிந்தாநதி - camtasia மென்பொருளை நிறுவினால் அதிலேயே ஒரு ஊடக இயக்கி இருக்கிறது. அதில் முயலுங்கள். இல்லாவிடில், அதற்கான மூலக் கோப்பை அனுப்பி வைக்கிறேன்

Anonymous said...

மிகவும் அருமையான பதிவு. உங்கள் விளக்கப்பயிற்சி பார்த்து, தமிழ்99 விசைப்பலகை முறையில் தட்டச்சு செய்து இந்த பின்னுட்டம் இடுகிறேன். நன்றி.

-வந்தியன்.

பிருந்தன் said...

தட்டச்சு போன்று அடித்து பழக இதற்கு ஏதாவது வழிமுறைகள் இருக்கிறதா? அல்லது ஆங்கில தட்டச்சு முறை போன்றதுதானா? அதற்க்கான பயிற்சி முறைகள் எங்காவது இருக்குமா?

ஜெஸிலா said...

அட! என் பதிவில் இப்பதான் யோசனை தந்தேன் அதற்குள் செயல்படுத்திவிட்டீர்களே. வாழ்த்துகள்.

வடுவூர் குமார் said...

ரவிசங்கர்
இன்னும் லினக்ஸில் முயலவில்லை.
முயன்ற பிறகு சொல்கிறேன்.

ரவிசங்கர் said...

வந்தியன் - மகிழ்ச்சி. http://wk.w3tamil.com/ தளம் பயிற்சிக்கு மட்டுமே. நேரடியாக கணினியில் எல்லா இடங்களிலும் தமிழ்99 முறையில் தட்டச்சு செய்ய எ-கலப்பை பயன்படுத்தலாம். அல்லது, firefoxல் தமிழ்விசை நீட்சி பயன்படுத்தலாம். இதை அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

பிருந்தன் - இதற்கான தட்டச்சுப் பயிற்சிக் கருவிகளோ பாடங்களோ இல்லை. ஆங்கில விசைகளைத் தட்டச்சும் முறையிலேயே அந்தந்த விசைகளுக்கான விரல்களைக் கொண்டு தட்டச்சலாம் என்பது தான் என் பரிந்துரை. ஏனெனில், ஆங்கிலத் தட்டச்சு முறையில் விசை இருக்கும் இடங்களையும் அதற்கான விரல்களையும் தான் பழக்குகிறோம் அல்லவா? அதே முறையைத் தமிழ்99க்கும் பயன்படுத்தலாம்.

ஜெஸிலா - இது நீங்க சொல்லும் முன்னமே போட்டாச்சு :)

ரவிசங்கர் said...

இப்ப எல்லா இயக்குதளங்களயும் உலாவிகள்லயே பார்க்கிற மாதிரி கோப்பை மாற்றித் தந்திருக்கேன்.