சில பேர் பதிவை படிச்சு பின்னூடமும் போடுவாங்க.. சில பேர் பதிவை படிச்சுட்டு மட்டும் பொயிடுவங்க (அவங்களுக்கு என்ன அவசரமோ..).. ஸோ.. பின்னூடத்தை கொண்டு மட்டுமே ஒரு பதிவின் தரத்தை நிர்ணயிக்க முடியாது.இப்போ இருக்கும் அவசர உலகத்திலே...ஒரு பதிவு நல்லா இருக்கா இல்லையான்னு வெறும் சில நொடிகளிலேயே "வாசிப்பவர்" தீர்மானித்துவிடுவார்... (சும்மா மேலோட்டமா ஒரு பார்வை... அப்புறம் தான் முழு பதிவை படிக்கிரது).
இப்படி இருக்க.. இந்த மாதிரி அவசர விருந்தாளிகள் உங்க பதிவை குறித்து என்ன நினைக்கிறாங்கன்னு தெரிஞ்சுக்க தான் இந்த 5- நட்சத்திர பதிவு.. அதாவது... ஒவ்வொருக்கு பதிவிலேயும் 5 நட்சத்திரங்களுக்கான இடம் இருக்கும்..உங்க பதிவுக்கு எவ்வளவு நட்சத்திரம் குடுக்கலாம்ன்னு பதிவை படித்தவர் / பார்வையிட்டவர் நினைக்கிராரோ.. அத்தனை நட்சத்திரத்தை க்ளிக்கினா போதும்.. சிம்பிள்.. தேவையில்லாத்த Pop -up இல்லை... உட்புகுதல் இல்லை... எல்லாமே ப்டா-ப்ட். .. சந்தேகம் இருந்தால் இந்த முறையை தொடுவானத்தில் சோதித்து பார்க்கவும்
- தேறாத கேசு
- பரவாயில்லை
- சாதாரணம் தான்
- நல்லது
- மிகச்சிறந்தது
இதை செய்யும் முறையை கவனிக்கவும்
1. SAVE AND BACKUP YOUR TEMPLATE -- டெம்ப்ளேட்டின் தாரக மந்திரம்
2. TEMPLATE-EDIT HTML - "expand widget template" ல் டிக்-மார்க் செய்யவும்
Template ல் <div class='post-header-line-1'/> இதை கணுபிடித்து....அதுக்கு கீழே ( <div class='post-body'> க்கு மேலே) 3. சிகப்பு நிறத்தில் இருக்கும் code ஐ சேர்க்கவும்
செய்த பிறகு code இப்படி இருக்கும்
<div class='post-header-line-1'/>
<div style='float:left; margin-right:10px;'>
<div class='js-kit-rating' expr:path='data:post.url' expr:title='data:post.title'>
</div>
</div>
<div class='post-body'>
4. Template ல் </body> tag ஐ கண்டுபிடிக்கவும்
5 சிகப்பு நிறத்தில் இருக்கும் code ஐ சேற்த்து எழுதவும்
<script src="http://js-kit.com/ratings.js ">
</script>
</body>
6. SAVE AND VIEW THE BLOG
இனிமேல் உங்கள் ஒவ்வொரு பதிவுக்கும் இந்த வாக்கெடுப்பு தானாவே வரும்.. படிக்கிரவங்க அதை க்ளிக் மட்டும் செய்தால் போதும்.. இதை நமக்கு தந்தவர்் http://js-kit.com. அங்கே இன்னும் இது மாதிரி code எல்லாம் இருக்கு.. போய் பாருங்க.. கண்டிப்பா உங்களுக்கும் பிடிக்கும்ன்னு நினைக்கறேன்.. சரிதானே
ஆங்கிலத்தில் செய்முறைவிளக்கம்
Quick refrence
Download Links:-
eKalappai 2.0b(Anjal) | eKalappai 2.0b (tamilnet99) - இங்கே தேர்வு செய்யவும்,
Key board layout :- e- kalappai (Anjal) |e-kalappai (Tamil 99) இதே மாதிரி இன்னும் ஏதாவது quick refrence சேர்த்தால் உபயோகமாக இருக்குமானால் பின்னூடத்தில் தெரிவிக்கவும்
Key board layout :- e- kalappai (Anjal) |e-kalappai (Tamil 99) இதே மாதிரி இன்னும் ஏதாவது quick refrence சேர்த்தால் உபயோகமாக இருக்குமானால் பின்னூடத்தில் தெரிவிக்கவும்
Wednesday, July 11, 2007
Subscribe to:
Post Comments (Atom)
10 comments:
நல்லா இருக்கு ஆனா அந்த தமிழ்மணம் பட்டையில் இருப்பதை என்ன செய்வது?
ஒரே வசதி 2 இடங்களில்?
நல்லா இருக்கே. ஆனா யாரு ஓட்டு போட்டதுன்னு தெரிந்துக் கொள்ள முடியாதா? ரொம்ப டூ மச்ன்னு சொல்லிடாதீங்க. அப்படி ஒரு வசதி இருந்தால் மட்டுமே இது லாபம் இல்லையெனில் பின்னூட்டம் வராமலும் கவுண்டரின் எண்ணிக்கை பார்த்தே மக்களின் வருகையை சராசரியாக கணித்துக் கொள்ள முடியுமே? நான் பின்னூட்டங்களின் எண்ணிக்கையை நம்புவதை விட கவுண்டரின் எண்ணிக்கையை வைத்துதான் திருப்தியடைந்துக் கொள்வேன் (வேற வழி :-)? )
வாங்க குமார்
தமிழ்மணம் பட்டையில் இருப்பது "பதிவு-பக்கத்தில் மட்டும் தானே தெரியும் .. இந்த நட்சத்திரம் உங்க பிளாகின் முகப்பு பகுதியிலேயே தெரியும்...
வாங்க ஜெஸிலா..
///கவுண்டரின் எண்ணிக்கை பார்த்தே மக்களின் வருகையை சராசரியாக கணித்துக் கொள்ள முடியுமே///
இருக்கலாம்... ஆனா.. வரவங்க எல்லாரும் எல்லா பதிவையும் படிக்க மாட்டாங்க இல்லையா... அப்பொ படிக்கும் பதிவை குறித்து ரத்தின சுருக்கமா அவங்க அபிப்பிராயம் தான் இந்த 5 நட்சத்திரம்
///ஆனா யாரு ஓட்டு போட்டதுன்னு தெரிந்துக் கொள்ள முடியாதா////
இப்போதேக்கு இல்லை... நாளடைவிலேவந்தா சொலல்றேண்
தீப்பா ரெம்ப ந்நாளா இதா டீப்பா தேடிகிட்டிருந்தேன்...
நன்றி நன்றி்றி நன்றி.
வணக்கம் சிறில்..
இப்போ கிடைச்சாச்சில்லே.. இனிமே என்ன.. ஜமாயிங்க..
ஷ்..ஷ்.. ஒரு ரகச்யம் சொல்லவா.. கிட்டதட்ட 1 மாதம் ஆச்சு தேடி கண்டுபிடிக்க..
நன்றி தீபா.
வைசா
இது நான் விரும்புர மாதிரி மாத்திகிற வசதி இருக்கா...அப்படி பன்ன என்ன பன்னனும்...சொல்லுங்களேன்...அதுல பாருங்க...நாம எப்ப நல்ல பதிவு எழுதி அவங்க நல்ல இருக்குன்னு சொல்லுறது..அதுக்கு தான்..மொக்கை, அறுவை, சூப்பர் மொக்கை, டீ.வி. சீரியல்..பாக்காலாம் இதுக்கு..அப்படின்னு கஸ்டமஸ் பன்னிட்ட..இன்னும்..பாப்புலார..ஆக்கலாம் இத...அப்பல...மீன் பிடிக்க கத்து தரீங்க..நன்றி...
i have not found this word.. div class='post-header-line-1'/
what can i do?
Anon
We would require u r blog url
and info on ur template..
ie are u using new blogger template or the classic template.
Post a Comment