Quick refrence

Download Links:- eKalappai 2.0b(Anjal) | eKalappai 2.0b (tamilnet99) - இங்கே தேர்வு செய்யவும்,
Key board layout :- e- kalappai (Anjal) |e-kalappai (Tamil 99) இதே மாதிரி இன்னும் ஏதாவது quick refrence சேர்த்தால் உபயோகமாக இருக்குமானால் பின்னூடத்தில் தெரிவிக்கவும்

Friday, August 17, 2007

கோயிந்தும் விட்ஜட்டும்

"இன்னாமே பொன்சு, இன்னும் சென்னைல தான் கீறியா?" என்றபடி வந்தான் கோயிந்து..

"ஏன்? இங்க தானே இருக்கேன்?!" என்றபடி புரியாமல் பார்த்தேன் நான்..

"இல்ல, அப்படியே ரொம்ப புரியாத தமிழ்ல எழுதித் தள்ளுறியாமே! அதான் டைம் ட்ராவல் பண்ணப் போயிட்டியோன்னு..."

"கோயிந்து, என்ன இப்படி கிண்டலடிச்சா எப்படி? என்ன விசயமா வந்த?"

"அதான் ஏதோ, இன்னா துண்டு அது, ஆங், நிரல் துண்டு நிறுவுனராமே! அத்தப் பத்தி ஏதோ சொன்னியாம், உனக்கு மட்டுமே பிரியற மாதிரி எழுதிட்டு உதவிப் பதிவுன்னு வேற சொல்லிகினு சுத்துறியாம்.. ஒரே கம்ப்ளேய்ண்ட் மேல கம்ப்ளேய்ண்ட் உம்மேல.. ."

விவகாரமான புகாராக இருக்கிறதே என்று பயந்து கொண்டே, குரலே எழும்பாமல் "இப்ப அதில என்ன புரியலை உனக்கு? ரொம்ப தெளிவாத்தானே எழுதிருக்கேன்.." என்றேன்

"நல்லா எழுதினியே தெளிவா! ஒரு மண்ணாங்கட்டியும் புரியலை.. என்னை மாதிரி சாதா ஜனங்களுக்கும் பிரியற மாதிரி சொல்ல தாவலியா?! அதான் உன் கழுத்துல துண்டப் போட்டு இந்த நிரல்துண்டக் கத்திட்டு வரச் சொல்லி தல அனுப்பிவச்சிருக்காரு என்ன.. இது ஒனக்கு மொத எச்சரிக்கை.. இந்த தபா ஒயுங்கா சொல்லலைன்னு வையி.... "

"சொல்லலைன்னா?... " இந்த முறை என் குரல் எனக்கே கேட்கவில்லை..

"அப்பால தல பாலா நேரில் வந்திடுவாரு.. என்ன நடக்கும்னு யாருக்குமே தெரியாது.." பயங்கரமாக முடித்தான் கோயிந்து..

"கோயிந்து, அந்தப் பதிவ எத்தனை நல்லா எழுதி இருக்கேன்.. இப்படிச் சொல்லிட்டியே! இப்ப என்ன புரியலை அதில?" என்றேன் லேசாக நடுங்கியபடி

"விட்ஜட்டுன்னு அழகான பேரு இருக்க சொல, அதென்ன துண்டு, துப்பட்டான்னு பேஜாரான ஒரு பாஷைல எளுதிகிட்டு?.. சரி அத்த வுடு.. இப்ப இந்த விட்ஜட் இன்ஸ்டால்லர் எதுக்குப் பயன்படுது? "

"அது வந்து கோயிந்து, இந்த விட்ஜட் இன்ஸ்டாலர் வச்சி ஏதாச்சும் குட்டி நிரல் துண்டை.."

"இஸ்டாப்பு... மறுபடி துண்டுக்கு வந்திட்டியா! இந்த துண்டு, குண்டு, நிரலி, குறளி எல்லாம் இல்லாம, நல்ல டமில்ல, பிரியற மாதிரி, விட்ஜட்டு, கோடுன்னு சொல்லு.. இல்லையின்னா..."

விட்ஜட்டும் கோடும் நல்ல தமிழான மாயத்தைக் கண்டு என்னை நொந்து கொண்டு தொடர்ந்து சொல்ல ஆரம்பித்தேன்.

"சரி கோயிந்து.. இனி எல்லாருக்கும் பிரியிற தமிழ்லயே சொல்றேன்.. விட்ஜட் என்கிறது இப்ப புதுப்ளாக்கர் கொடுத்திருக்கும் ஒரு சேவை.. சின்னச்சின்ன விளம்பரம், செய்தியோடை, படம் எதுனாச்சும் உங்க பதிவில் போட இந்த விட்ஜட் உதவியா இருக்கும்.. "

"இஸ்டாப்பு" என்றான் கோயிந்து..

"என்ன?" என்பது போல் நிமிர்ந்து பார்த்தேன்.

"கூவத்து ஓடைலயே தண்ணி இல்லை.. காஞ்சு போன செய்தியோடையை பதிவுல போட்டு இன்னா பண்ணுறது?"

"கோயிந்து, இது அந்த மாதிரி ஓடை இல்லை.. பதிவோட ஓடை.. feed, இதை போட்டா நீ போடுற ஒவ்வொரு இடுகையும் இதில் அப்டேட் ஆகும். தெரியும். பிரியுதா? ச்சே.. புரியுதா?" என்றேன்

"இப்பிடி பிரியுறாப்புல சொல்லுன்னு இன்னும் எத்தினி தபா சொல்லணுமோ ஒனக்கு! ம்கும்.. " அலுத்துக் கொண்டான் கோயிந்து..

"சரி, இந்த விட்ஜட்டை என் பதிவில் நான் போடுறது சுலபம். ஆனா மத்தவங்க பதிவில் நான் விரும்பும் விட்ஜட் வரணும்னா அதுக்கும் புது ப்ளாக்கரில் சுலப வழி இருக்கு.. அது தான் விட்ஜட் இன்ஸ்டால்லர் அதாவது நிரல்துண்டு நிறுவுனர்" அந்த வார்த்தையைக் கேட்டவுடனேயே மீண்டும் துண்டை எடுத்து மிரட்டிய கோயிந்தை அட்ஜஸ்ட் செய்தவாறே தொடர்ந்தேன்..

"விட்ஜட் இன்ஸ்டால்லர்ங்கிறது ஒரு சின்ன பட்டன் மாதிரி இருக்கும். இதை அமுக்கினதும் உங்க புது ப்ளாக்கர் பதிவுகளில் எதில் விட்ஜட்டை போடுறதுன்னு கேட்கும். எதுன்னு முடிவு சொன்னது அதில் போட்டு அழகாக்கி வுட்ரும்.. உதாரணத்துக்கு இந்த பதிவில் வலப்புறம் உள்ள தமிழ்99 பட்டனைத் தட்டிப் பாரு!"

"அட!" என்றான் கோயிந்து, அதைத் தட்டிப் பார்த்து தன் பதிவில் சேர்த்த பின்னர். "சரி, இதை இப்ப எப்படி நான் பண்ணுறது?"

"சொல்றேன். ரொம்ப சுலபம். கொஞ்சமே கொஞ்சம் HTML தெரிஞ்சாலே போதும். அதிகம் வேண்டாம். முதல்ல நீ எந்த விட்ஜட் கொடுக்கணுமோ, அதை உன்னோட சொந்த ப்ளாக்குல ஒரு பக்கத்துல போட்டு வச்சிக்கணும். இப்ப இந்தப் ப்ளாக்குல ஒரு தமிழ்99 விட்ஜட் போட்டுருக்கம் இல்ல, அதையே உதாரணமா எடுத்துக்குவோம். இந்த விட்ஜட்டை எங்க பதிவுல போட


ங்கிற மாதிரி கோட் எழுதி அதை Add New widget வழியா பதிவுல போட்டுக்கிடணும்.."

"ஆமாம் பொன்சு, இது மாதிரி விட்ஜட் போட அல்லாருக்குமே தெரியுமே.. இதைத் தானா இத்தினி நீட்டி மொழக்கி சொன்ன? மத்தவங்க பதிவுல வர இன்னா செய்யணும்? அத்தச் சொல்லு மொதல்ல.."

"இரு கோயிந்து, அடுத்து அதான்.. " என்று சமாதானப்படுத்திவாறே அடுத்த பகுதியை ஆரம்பித்தேன்.

"இப்ப நம்ம பதிவில் விட்ஜட் போட்டாச்சு.. இதை மத்தவங்க பதிவில் போட விட்ஜட் இன்ஸ்டால்லர் உருவாக்கணும். ஒரு சுலபமான விட்ஜட் இன்ஸ்டால்லரோட கோடு கீழ சொல்லிருக்கிறது மாதிரி இருக்கும்..



"இரு இரு.. இதில எதெல்லாம் மாத்தினா எனக்கு ஒரு சுலபமான விட்ஜட் உருவாக்க முடியும்.. அதை மட்டும் சொல்லு.. போன தபா மாதிரி பார்ட் பார்ட்டா பிரிச்சி மேஞ்சி உசுர எடுக்காத.."

"ம்ஹூம்.. உன்னைக் குத்தம் சொல்ல முடியாது கோயிந்து.. மெட்ராஸ் ட்ராபிக்ல ஷார்ட் கட்டுல போயே பழகிட்ட! என்னத்த பண்ண?!" அலுத்துக் கொண்டே கோயிந்தின் மூடுமாறுவதற்குள் சொல்ல ஆரம்பித்தேன்...

"இதுல, widget.title னு இருக்கு பத்தியா.. அது தான் மத்தவங்க பதிவில் தெரியப் போகும் உன் விட்ஜட்டின் தலைப்பு. தலைப்பு என்னவா இருக்கணுமோ, அதை அந்த வரியில் இருக்கும் 'value=' வுக்கு அப்புறம் கொடுக்கணும்.."

"ஓ.. அப்ப உன்னோட விட்ஜட்டுக்கு டைட்டிலு தமிழ்99, கரீகிட்டா? "

"ரொம்ப சரி. அடுத்து, widget.contentனு இருக்கு பத்தியா, அந்த வரியை மாத்தணும்.. உன்னோட பக்கதுலயே உருவாக்கி வச்சிருந்தியே ஒரு விட்ஜட், அதோட கோட் என்ன இருக்கோ, அது முழுக்கவும் இந்த widget.content வரியின் value பகுதியில் கொடுக்கணும்.."

"சொல்றதப் பாத்தா சுளுவாதாங்கீது.. ஆனா அதுல நீ இப்ப எளுதியிருக்கது பிரியவேல்லேயே!"

"அது என்னன்னா, <,> இது ரெண்டும் இந்த widget.content ஓட value பகுதியில் வரக் கூடாது.. அதுனால < இருக்கிற இடத்தில் எல்லாம் &lt; உம்.. > இருக்கிற இடத்தில் எல்லாம் &gt; உம் போடணும். அப்படி மாத்தி போட்டா இந்த மாதிரி வந்திடும்.. அதான் குழப்பமா இருக்கு.. "

"அப்ப இவ்வளவு தானா? ரொம்ப ஈஸி தான்.. ரெம்ப நாளா ஒரு பொகச விட்ஜட் போட்டு வுடணும்னு நெனச்சிகினே இருந்தேன்.. இப்பத் தான் அதுக்கு வேள வந்திருக்கு.. வர்ட்டா? " என்றபடி கிளம்பினார் கோயிந்து..

"அடப்பாவி.. இதான் சொந்த செலவில் சூன்யமா?! " என்று கேட்டுக் கொண்டே நான் வாயைப் பிளந்தது அவனுக்கு காதில் கேட்கவே இல்லை போலும்..

பழைய கோயிந்து இடுகைகள்:
1. பாலபாரதி - இஞ்ஜினியர், தமிழ் வலைப் பதிவுகள்
2. எடிட்.. edit.. எடிட்…
3. மீண்டும் கோயிந்து
4. பாலபாரதியின் செல்போன்

10 comments:

A Simple Man said...

< மற்றும் > கொஞசம் குழப்புது பாருங்க... உங்களுடைய விளக்கத்தில் & lt; மற்றும் & gt; என்று இருந்திருக்க‌ வேண்டும்..

ஒருவேளை என்னுடைய IE தான் அவற்றை < , > என்று மாற்றிவிட்டதோ தெரியவில்லை... டெக்னிக்கலாக HTML தெரியாதவர்களுக்கு இன்னும் கொஞ்சம் குழப்பும் .. சரி பண்ண முடியுமா பாருங்கள்..

குறிப்பு: நான்தான் தேவையில்லாம குழப்பறேன்னு சந்தேகமாயிருந்தா இந்த மறுமொழியை வெளியிட வேண்டாம்.
நன்றி.
-அபுல்

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

//அதுனால < இருக்கிற இடத்தில் எல்லாம் < உம்.. > இருக்கிற இடத்தில் எல்லாம் > உம் போடணும். //

?? lt gtக்குப் பதில < > திரும்ப வந்திருச்சா?

கோவிந்துக்கு புரிஞ்சிருக்கலாம். ஆனா, உதவிக் குறிப்ப இப்படி நீட்டி முழக்கி சென்னைத் தமிழில் கொடுத்தால் பெரிசா கொடுத்தா படிக்கப் பொறுமை இல்லாமப் போயிடுது எனக்கு :) உதவிக் குறிப்புகளை சுருக்கமா "நச்"னு :) கொடுங்கப்பா..

Deepa said...

< க்கு பதிலா...&lt; யும்
> க்கு பதிலா...&gt; யும் போடணும்

வடுவூர் குமார் said...

புரிகிறது,தீபா கொடுத்த பின்னூட்டத்துடன் சேர்த்துப்பார்கையில்.
நன்றி

பொன்ஸ்~~Poorna said...

அபுல், தீபா, ரவி,
ரொம்ப நன்றி.. code tag பயன்படுத்தி தான் எழுதிருக்கேன்.. ஆனா ஏனோ வர மாட்டேங்குது.. இப்ப கூட space விட்டு தான் சரி கட்டிருக்கேன்.. வேற ஏதாச்சும் வழி இருக்கா?

ரவி,
முன்னாடி எழுதியது நிறைய பேர் புரியலைங்கிறாங்களே.. அது தான் இந்த format.. இந்த தொடரின் பழைய இடுகைகள் சுலபமா இருந்ததா feedbacks வந்ததுண்டு.. இப்ப பார்ப்போம். இதைப் படிச்சபின்னால இன்னும் ரெண்டு மூணு பேர் விட்ஜட் போட ஆரம்பிச்சாங்கன்னா நல்லாருக்கும்..

நன்றி குமார்,

Deepa said...

பூர்ணா...
final ஆ...< ..வரணும்னா -- &lt; ன்னு கோட் எழுதுவோம்..

&lt; வரணும்னா --- &amp;lt; எழுதணும்

ஏன்னா & க்கும் html code இருக்கு.. அதான் &amp;
இதிலே எங்கேயுமே space இல்லை

confuse பண்ணரா மாதிரி இருந்தா... இந்த பின்னூடத்தை அழிச்சிடலாம்

பொன்ஸ்~~Poorna said...

தீபா,
சூப்பரப்பு..அழகா வந்திடுச்சு.. இதை நினைவில் வச்சிக்கிறேன் :)

Anonymous said...

பொன்ஸ்,

நீங்க விட்ஜெட் பற்றி முதலில் எழுதிய போதே வலைப்பதிவர் உதவிப்பக்கத்துக்காக ஒரு விட்ஜெட் தயார் பண்ணி என் பதிவில் போட்டு வச்சிருந்தேன். சீந்துவார் இல்லாமப் போனதால போன வாரம் தான் எடுத்து விட்டேன். :(

சரி. மறுபடியும் முயற்சி செய்கிறேன்.

பொன்ஸ்~~Poorna said...

ஆகா.. கலக்குறீங்களே பொன்வண்டு.. இங்க விட்ஜட் போட்டு வச்சா மட்டும் பத்தாது.. அது பத்தி ஒரு இடுகையும் எழுதி promote பண்ணனும் :)))

Anonymous said...

பொன்ஸ், கண்டிப்பாக மீண்டும் ஒரு விட்ஜெட் வலைப்பதிவர் உதவிப்பக்கத்துக்காக செய்து விட்டு சொல்கிறேன். :)