Quick refrence

Download Links:- eKalappai 2.0b(Anjal) | eKalappai 2.0b (tamilnet99) - இங்கே தேர்வு செய்யவும்,
Key board layout :- e- kalappai (Anjal) |e-kalappai (Tamil 99) இதே மாதிரி இன்னும் ஏதாவது quick refrence சேர்த்தால் உபயோகமாக இருக்குமானால் பின்னூடத்தில் தெரிவிக்கவும்
Showing posts with label உதவிக் குறிப்புகள். Show all posts
Showing posts with label உதவிக் குறிப்புகள். Show all posts

Wednesday, June 10, 2009

வலைப்பதிவுகளை பெரிய எழுத்தில் படிக்க...

வலைப்பதிவுகள், இணையப் பக்கங்களின் எழுத்துரு அளவுகள் சிலருக்கு தங்கள் வாசிப்புக்கு ஏற்றதாக இல்லாமல் இருக்கலாம். குறிப்பாக வயதானவர்கள், கண்பார்வை குறைபாடுள்ளவர்களுக்கு பல தளங்களை வாசிக்க இயலாது. இதனால் இப்போது சில தளங்களில் எழுத்துரு அளவை மாற்றும் ஸ்கிரிப்ட் இணைக்கப் பட்டுள்ளது. அவை இல்லாத தளங்களில் கூட எளிதாக வாசிப்பவர்களே பெரிய எழுத்தில் வாசிக்க உங்கள் விசைப்பலகையில் Ctrl மற்றும் + விசைகளை அழுத்துங்கள். நீங்கள் வாசிக்கும் இணையப் பக்கத்தின் எழுத்து அளவு பெரிதாவதை காணலாம். மீண்டும் இந்த விசைகளை அழுத்துவதன் மூலம் தேவையான அளவுக்கு பெரிதாக்க்கிக் கொள்ளலாம். சிறிதாக்க Ctrl மற்றும் - விசைகளை பயன்படுத்த வேண்டும்.

பெரிதாக்க Ctrl மற்றும் +
சிறிதாக்க Ctrl மற்றும் -

-----------------
தமிழ்.கணிமை

Wednesday, January 16, 2008

PDF பாடம் -1... சாதாரண கோப்புகளை pdf ஆக இணையத்திலேயே இலவசமாக மாற்றலாம்

தகவல் பரிமாற்றம் தவிர்க்க முடியாத்த விஷயம்.. வளர்ச்சிக்கு இது தேவையும் கூட.. ஆனாலும்.. தகவல் பரிமாற்றத்துக்கிடையே எங்கேயோ எப்படியோ.. data manipulation உம் நடக்குது.. ஒரு கட்டத்துகு மேலே எது உண்மை, எது manipulation ன்னு சொல்ல முடியாம போயிடுது..

உதா ;-MS word , Excel ல் எழுதப்பட்ட கொப்புகளை மற்றவர்களுடன் பகிந்துகொள்ள அதை நேரடியாக ஈமெயில் சேய்து விடுவோம்.. ஆனால் அப்படி செய்வதில் பல சிக்கல் இருக்கு.. தர்ச்செயலாக சில data வை மாற்றிவிடலாம் .. மற்றவர்களுக்கு forward செய்து அது ஒரு ரவுண்ட் முடிச்சு வரும்போது நீங்க முதலில் பதிவுசெய்த விஷயத்திலிருந்து மாறுபடலாம்..

இதெல்லாம் தவிற்க்க தான்.. pdfonline.com எல்லா முக்கிய file formats ஐ pdf கோப்பாக மாற்றும் வசதி இணையத்திலேயே செய்திருக்காங்க .. உதா {MS Word (DOC | RTF)--MS PowerPoint (PPT)---MS Publisher (PUB)--MS Excel (XLS)--HTML (MHT)--Text (TXT)--JPG , GIF,TIFF, BMP,PNG, EMF,WMF } இவையெல்லாம் அவர்களுடைய இணையதளத்திலிருந்தே pdf ஆக மாற்றலாம்.. இலவசமாக ..

  1. மாற்ற வேண்டிய கோப்பை இங்கே வலையேற்றவேண்டும்

  2. மாற்றி வரும் கோப்புக்கு என்ன பெயர்ன்னு சொல்லணும்

  3. pdf ஆக மாற்றிய கோப்பை எங்கே அனுப்பவேண்டும்.. உங்க ஈ மெயில் முகவரியை குடுக்கவும் (official மெயில் குடுக்க தயக்கமா இருந்தா.. சும்மா யாகூ - கூகிள் லே.. ஒரு லொளலொலாய் மெயில் create பண்ணி அதை குடுக்கலாம்)

  4. சப்மிட் செய்த 10 min க்கெல்லாம் மாற்றி அமைக்கப்பட்ட கோப்பு உங்க மெயிலில் attachment ஆக இருக்கும்

இனிமேல்.. data manuplation பயம் இல்லாம உங்க கோப்புகளை மற்றவர்களுடன் பரிமாறிக்கொள்ளலாம்

PDF பாடம்-2... PDF கோப்புகளை தரவிறக்கம் செய்யாமலே வலைப்பதிவிலுந்து நேரடியாக படிக்கலாம்்

Sunday, October 28, 2007

பிளாகரில் இடும் மறுமொழிகளின் விவரத்தை உங்கள் மின்-அஞ்சலில் பெறலாம்

ஒரு நாள் நாம பல பதிவுகளை படிக்கறோம்... / பின்னூடம் எழுததோம்.. கொஞ்ச நாள் முன்னே வரை.. நாம எழுதியிருக்கும் கமெண்டுக்கு பதிவாசிரியர் / வேறு யாராவது பதில் கமெண்ட் போட்டிருக்காங்களான்னு தெரிஞ்சுக்க ஒரே வழி.. அதே பதிவை போய் பார்க்கிரதா தான் இருந்தது... அதுவும் பதிவின் சுட்டிய்யை நீங்கள் book mark செய்து வச்சிருந்தா.. ஒரு வேளை url மறந்து போச்சுன்னா.. பதில் ஏதாவது வந்திருக்கான்னு தெரிஞ்சுக்கவே வாய்ப்பில்லை... ( பதில் போட்டவரே உங்க கிட்டே வந்து சொன்னாலொழிய).
இனிமே அப்படி இல்லை.. கமெண்ட் எழுதும் போது கவனிச்சிருப்பீங்க.. உங்க மின் - அஞ்சல் முடவரியோட.. Email Follow up comments ன்னு ஒரு பொட்டி இருக்கும்.. அதை க்ளிக்கி tick -mark குடுத்தீங்கன்னா...போதும். பதில் கமெண்ட் வரும்போதெல்லாம்.. அதன் ஒரு பிரதி உங்க Inbox லெயும் இருக்கும்... ஒருவேளை.. உங்களுக்கே சம்பந்தப்பட்ட டாபிக் போரடிச்சுப்போச்சுன்னா... unsubscribe ஐ க்ளிக்கினா போதும்...
எனக்கென்னமோ இது ரொம நல்ல ஐடியாவாத்தான் தோணுது.. ரொம்ப பிசியா இருக்கும்போது.. (பதிவெழுதவோ.. தமிழ்மணம் போய் படிக்கவோ நேரமில்லாத போது).. நாம எழுதின கமெண்ட்டுக்கு பதில் வந்திருக்கான்னு தெரிஞ்சுக்க பிளாகரின் இந்த feature ரொமவும் உபயோகமாத் தான் இருக்கு.. இதே வேலையை co-Comment மூலமாகவும் செய்யலாம்... ( ஒரு புதிய கணக்கு துவங்கி... )... அது உங்க சௌகர்யம்.. எனக்கு பிளாகரின் Email Follow-up comments தான் சரின்னு படுது... எல்லாம் ஒரே இடத்தில் இருந்தா மிஸ்ஸாக சான்ஸில்லே பாருங்க...
-

Thursday, August 9, 2007

Paint.net-- Photoshop ன் அம்சங்கள் கொண்ட ஒரு இலவச மென்பொருள்

உங்களில் பலபேர் கிட்டே photoshop (any version... the latest is CS3) இருக்கும்.. ஆதை விட்டா image - editing க்கு வேறே எந்த மென்பொருளும் கிடையாதுன்னு வாதாடுகிரவங்களும் இருப்பீங்க.. ஒண்ணும் தப்பில்லே.. நானும் அப்படி தான் சொல்லுவேன்.. ஏன்னா நானும் ஒரு photoshop fanatic.. வேறே ஏதாவது மென்பொருள் அதை விட சூப்பர்னு யாராவது சொன்னா.. ஒரு காலத்திலே சண்டைக்கே போய்டுவேன்...

ஆனா எல்லாராலெயும் photshop பெரமுடியாதில்லையா... Trial- version 30 நாட்களுக்கு பிறகு உபயோக படுத்த முடியாமல் போவிடுகிரது...மட்டுமில்லை... trial version லே எல்லா விதமான அம்சங்களும் இருப்பதில்லை... ஆனாலும் நம்ம மக்கள் உள்ளதை வச்சு அர்புதமா photo-editing எல்லாம் பண்ணராங்க. அப்படி photoshop ஐ முழுமையா பயன்படுத்த முடியாத்தாவங்களுக்கு இந்த Paint.net ஒரு வரபிரசாதம்.... ஏன்னா.....
  1. இது ஒரு இலவச மென்பொருள்... ...Paint.net
  2. அதனால்... குறிப்பிட்ட காலத்துக்கு தான் பயன்படுத்த முடியும்ன்னு "கெடு" எதுவும் கிடையாது
  3. இதன் அளவு வெறும் 1.4 MB தான்....பட்டியலில் இருக்கும் ஏதாவது ஒன்றை தேற்வு செய்து தரவிறக்கம செய்யலாம்் Download here


  4. இதன் ஒவ்வொரு ஆப்ஷனும் photoshop ஐ போன்றதே...photoshop லே என்னென்ன பண்ண முடியுமோ..(Brightness.. color..crop.. curve.. hue..etc etc).. அவை அனைத்தும் இதெலேயும் பண்ணலாம்....photoshop ன் சில advanced அம்சங்களை தவிர
  5. இதிலும் layer ல் நாம் மாற்றங்கள் செய்யலாம்...


  6. இதன் அம்சங்களை கற்றுக்கொள்ளவும்.. தெரிந்துகொள்ளவும் இவர்களின் Online Documentation்ட இருக்கு...மறக்காம படிச்சுப்பருங்க
  7. புதிதாய் உபயோகிப்பவருக்காக... இவர்களின் உதவி-குழு ரொம்பவும் அருமை.... Paint.net forum
  8. Paint.net தலத்தில் என்னென்ன நிகழ்வுகள் இருக்குன்னு நமக்கு அவங்களுடைய பிளாகிலே சொல்லறாங்க... Paint.net's Blog
  9. Animated Gif ஐ தவிர எல்லா images ம் இதில் நீங்கள் திருத்தலாம்
ஒரு முறை தரவிறக்கம் செய்து உபயோகித்து பாருங்க.. கண்டிப்பா இது உங்களை ஏமாற்றாத்துன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.. உங்க கருத்தை சொன்னா மற்றவர்களுக்கும் உதவியா இருக்கும்

Thursday, July 26, 2007

கூகுள் ரீடர் பயன்படுத்துவது எப்படி? - demo video

கூகுள் ரீடர் பயன்படுத்துவது எப்படி என்பது குறித்த 15 நிமிட விளக்க நிகழ்படத்தை இங்கு பதிவிறக்கவும் (.zip கோப்பு, 27 MB). அதை unzip செய்து உள்ளிருக்கும் html கோப்பைத் திறந்தால் Windows உள்ளிட்ட எல்லா இயக்குதளங்களிலும் உங்கள் உலாவியிலேயே flash வடிவில் இந்த நிகழ்படத்தைக் காணலாம்.

ப்ளாகரில் பதிவு தொடங்குவது எப்படி? - Demo video

ப்ளாகரில் பதிவு தொடங்குவது, இடுகை எழுதுவது, அமைப்புகள் மாற்றுவது எப்படி என்பது குறித்த 26 நிமிட விளக்க நிகழ்படத்தை இங்கு பதிவிறக்கவும் (.zip கோப்பு, 30 MB). அதை unzip செய்து உள்ளிருக்கும் html கோப்பைத் திறந்தால் Windows உள்ளிட்ட எல்லா இயக்குதளங்களிலும் உங்கள் உலாவியிலேயே flash வடிவில் இந்த நிகழ்படத்தைக் காணலாம்.

Tuesday, July 24, 2007

தமிழ்99 தட்டச்சு - demo video

தமிழ்99 விசைப்பலகை முறையில் தட்டச்சு செய்வது எப்படி என்பது குறித்த 8 நிமிட விளக்க நிகழ்படத்தை இங்கு பதிவிறக்கவும் (.zip கோப்பு, 9 MB). அதை unzip செய்து உள்ளிருக்கும் html கோப்பைத் திறந்தால் Windows உள்ளிட்ட எல்லா இயக்குதளங்களிலும் உங்கள் உலாவியிலேயே flash வடிவில் இந்த நிகழ்படத்தைக் காணலாம்.

Sunday, July 15, 2007

Wordpressல் பதிவிடுவது எப்படி? - நிகழ்பட விளக்கம்

Wordpressல் பதிவு தொடங்குவது, இடுகை எழுதுவது, அமைப்புகள் மாற்றுவது எப்படி என்பது குறித்த 13 நிமிட விளக்க நிகழ்படத்தை இங்கு பதிவிறக்கவும் (.zip கோப்பு, 31.7 MB). அதை unzip செய்து உள்ளிருக்கும் html கோப்பைத் திறந்தால் Windows உள்ளிட்ட எல்லா இயக்குதளங்களிலும் உங்கள் உலாவியிலேயே flash வடிவில் இந்த நிகழ்படத்தைக் காணலாம்.

Tuesday, July 3, 2007

தனித்தளத்தில் வலைப்பதிவு தொடங்குவது எப்படி?

முதலில், தனித்தளம் தொடங்க தேவையானவை இரண்டு:

1. ஒரு தள முகவரி (Domain name)
2. வலையிட வழங்கி (Web space hosting)

இவ்விரண்டையும் எங்கு பெறுவது?

Godaddy போன்ற தளங்களில் மேற்கண்ட இரண்டு சேவைகளுக்கும் பதிந்து கொள்ளலாம். இல்லை, domain registration, web hosting என்று கூகுளில் தேடினால் பல முடிவுகள் கிடைக்கும். அல்லது, தமிழ் வலைப்பதிவுலகில் தனித்தளம் வைத்திருப்பவர்கள் பட்டியலை இந்தப் பதிவிலும் அதற்கு வந்த பின்னூட்டங்களிலும் காணலாம். அவர்களில் உங்கள் நண்பர்களை அணுகியும் அவர்கள் பயன்படுத்தும் சேவை குறித்து அறியலாம்.

இவற்றைப் பெறுவது எளிதா?

ஒரு மின்மடல் கணக்கு தொடங்குவது போல் எளிதாகச் செய்யலாம். நுட்ப அறிவு தேவை இல்லை.

இவற்றைப் பதிய எவ்வளவு நேரம் ஆகும்?

10 நிமிடங்களுக்குள் செய்து விடலாம். தளம் பொதுப் பார்வைக்கு வர ஓரிரு நாட்கள் காத்திருக்க வேண்டி வரலாம். இது எல்லாருக்கும் வரும் வழமையான தாமதமே.

எவ்வளவு செலவாகும்?

தளப் பெயர் பதிய ஆண்டுக்கு குறைந்தது 300 இந்திய ரூபாய் செலவாகும். வலையிட வழங்கியின் சேவையைப் பெறுவதற்கு ஆண்டுக்குக் குறைந்தது 150 இந்திய ரூபாயே கூட போதும். என்னுடைய வலையிட வழங்கி எனக்கு ஆண்டுக்கு 100 MB இடமும் மாதத்துக்கு 1 GB தரவுப் பரிமாற்ற அளவும் வழங்குகிறது. இதற்கு ஆண்டுக்கு சுமார் 1,000 இந்திய ரூபாய் செலவிடுகிறேன். எனினும், இதை விட விலை குறைவாகவும் இடம் அதிகமாகவும் பல சேவைகள் இருக்கக்கூடும். தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். எவ்வளவு இடம் வேண்டும் என்பதை உங்கள் பதிவின் அளவு, நீங்கள் சேமித்து வைக்கும் ஒலி, ஒளிக்கோப்புகளின் அளவு, வாசகர் வருகை அளவு பொறுத்து முடிவெடுக்க வேண்டும்.

எப்படி பணம் கட்டுவது?

பன்னாட்டு நிறுவனச் சேவைகள் கடன் அட்டை, Paypal மூலமே பணம் பெற்றுக் கொள்ளும். சேரும் போதே இத்தனை ஆண்டுகளுக்குத் தேவை என்று சொன்னால் அதுவே ஒவ்வொரு ஆண்டும் புதுப்பித்துக் கொள்ளும். இல்லையென்றால், நீங்கள் நினைவு வைத்து ஒவ்வொரு ஆண்டும் புதுப்பித்துக் கொள்ளலாம். இந்தியாவில் உள்ள வலையிட வழங்கிச் சேவைகள் இந்திய வங்கிக் கணக்குகள், காசோலைகள், money orderகள் மூலமோ நேரடியாக காசாகப் பெற்றுக் கொண்டோ கூட இந்த சேவையை அளிக்கலாம். கடன் அட்டை இல்லாதவர்களுக்கு இந்த வசதி உதவும். எடுத்துக்காட்டுக்கு, http://www.webspace2host.com கடன் அட்டை இல்லாமலும் பணம் செலுத்தும் வசதிகளை அளிக்கிறது.

வலையிட வழங்கிக்குச் செலவு செய்யாமல் தனித்தள முகவரியில் பதிவிட முடியுமா?

முடியும். தளப் பெயரை மட்டும் பதிந்து கொண்டு ப்ளாகர் தரும் இலவச இடத்திலேயே உங்கள் வலைப்பதிவைத் தொடர்ந்து நடத்த முடியும். எடுத்துக்காட்டுக்கு, http://blog.arutperungo.com/ பாருங்கள். இது குறித்த ப்ளாகர் உதவிக் குறிப்பைப் பாருங்கள். ப்ளாகரின் வசதிகள், இடைமுகப்பு பிடித்துப் போய் வேறு சேவைகளுக்கு மாற விரும்பாதவர்கள் இதைப் பயன்படுத்தலாம். எனினும், இந்த இலவச சேவையில், உங்கள் பதிவு முகவரி, தளத்தில் பிற சேவைகள் நிறுவுவது குறித்த கட்டுப்பாடுகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. மாறாக, சொந்தமாக வலையிட வழங்கிச் சேவை பெற்று அங்கிருந்தும் ப்ளாகர் மூலம் பதியலாம்.

தனித்தளத்தில் வலைப்பதிய உகந்த மென்பொருள் எது?

தனித்தளத்தில் வலைப்பதிய பலரும் பரிந்துரைக்கும் மென்பொருள் Wordpress. இது ஒரு கட்டற்ற மென்பொருள் என்பதால் இலவசமாக நிறுவிக் கொள்ளலாம். இதை நிறுவிக் கொள்வதும் இலகுவே. நுட்ப அறிவு தேவை இல்லை. உங்கள் தளத்தின் கட்டுப்பாட்டகத்தில் உள்ள கருவிகளைக் கொண்டு 5 நிமிடங்களுக்குள் நிறுவிக் கொள்ளலாம். ப்ளாகருக்குப் பழகியவர்கள் wordpress இலகுவா என்று தயங்கத் தேவை இல்லை. ஒரு மணி நேரம் துழாவிப் பார்த்தாலே wordpress இயங்கும் முறையைப் புரிந்து கொள்ளலாம்.

தனித்தளத்துக்கு என் பழைய இடுகைகளை இடம்பெயர்க்க இயலுமா?

முடியும். ப்ளாகர், wordpress.com போன்ற சேவைகளில் உங்கள் இலவச வலைப்பதிவுகளில் உள்ள இடுகைகள், பின்னூட்டங்கள் ஆகியவற்றை இடம்பெயர்த்து உங்கள் பதிவில் இடலாம். இதைச் செய்வதும் இலகுவே. நுட்ப அறிவு தேவை இல்லை. உங்கள் பதிவின் அளவைப் பொறுத்து 5 முதல் 30 நிமிடங்கள் ஆகலாம்.

தனித்தளத்தில் பதிந்தால் திரட்டிகளில் இணைய முடியுமா? தமிழ்மணத்தில் பின்னூட்டம் திரட்டடப்படுமா?

முடியும். தனித்தளத்தில் wordpress நிறுவிச் செயல்படுபவர்களுக்கான கருவிப்பட்டையைத் தமிழ்மணம் வழங்குகிறது. இதை இலகுவாக சேர்த்துக் கொள்வதற்கான பொருத்தை இங்கு பெறலாம். இதனால், தமிழ்மணத்தில் பின்னூட்டங்கள் திரட்டப்படுவதிலும் பிரச்சினை இருக்காது.

தனித்தளத்தில் வலைப்பதிவதால் என்ன இலாபம்?

சொந்த வீட்டில் இருக்கும் ஒரு சந்தோஷம், அடையாளம் தான் :) உண்மையில், தனித்தளத்தில் பதிவதால் உங்கள் பதிவு மீதான கூடுதல் கட்டுப்பாடு உங்களுக்குக் கிடைக்கும். எரிதப் பின்னூட்டங்கள், விரும்பத் தகாத பின்னூட்டங்களைத் தவிர்க்கலாம். வாசகர்கள் எங்கிருந்து வருகிறார்கள், எப்பொழுது வருகிறார்கள், எதைப் படிக்கிறார்கள், எவ்வளவு நேரம் தங்குகிறார்கள் போன்ற துல்லியமான புள்ளி விவரங்கள் கிடைக்கும். வலைப்பதிவு போக பிற மென்பொருள்கள், சேவைகளை உங்கள் தளத்தில் நிறுவிப் பார்க்கலாம். வலைமனையாகவும் பயன்படுத்தலாம். நிறுவனங்கள் வைத்திருப்போர் தங்கள் நிறுவனத்துக்கான வலைப்பதிவை சொந்தத் தளத்தில் நிறுவுவது கூடுதல் நம்பகத்தன்மையையும் தோற்றத்தையும் தரும். உங்கள் பெயரில் அமைந்த தனி மின்மடல் முகவரியும் கிடைக்கும்.

- ரவி

Friday, June 15, 2007

வார்ப்புரு மேம்பாட்டுக் கருவி

புதிய ப்ளாக்கருக்கு மாறியபின் தமிழ்மணப் பட்டி தொடங்கி வார்ப்புரு மாற்றங்கள் எல்லாமே கொஞ்சம் கடினமான விசயமாகத் தான் ஆகி விட்டது. அந்தப் பிரச்சனையிலிருந்து விடுவிக்க இதோ ப்ளாக்கர் மேம்பாட்டுக் கருவி.

குழலி செய்யத் தொடங்கிய இந்தக் கருவியில், மேலும் பல மாற்றங்களுடன் முன்னேற்றங்களுடன், பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு, இதோ, உங்களுக்காக: புதிய ப்ளாக்கர் வார்ப்புரு மேம்பாட்டுக் கருவி

இந்த புதிய ப்ளாக்கர் வார்ப்புரு மேம்பாட்டுக் கருவியின் மூலம் நீங்கள் பெறக்கூடிய வசதிகள் பின்வருமாறு:

  • தமிழ்மணத்தின் கருவிப்பட்டையைச் சேர்த்துக்கொள்ளலாம்.
  • பழைய ப்ளாக்கரிலிருந்து மாறியவர்களுக்கு ஒருங்குறி எழுத்துக்களை சரியான முறையில் தெரிய வைக்கலாம்.
  • நாளும் நேரமும் தமிழில் காட்டலாம்.
  • தேன்கூட்டின் பின்னூட்டங்கள் திரட்டும் பட்டியைச் சேர்த்துக் கொள்ளலாம்..
  • யாஹூ சிரிப்பான்களைப் பதிவில் காட்டும் நிரலியையும் சேர்த்துக் கொள்ளலாம்.

Wednesday, June 13, 2007

ஆர்க்குட்டில் உங்கள் பதிவு ஓடைகளை இணைக்கலாம்

ஆர்க்குட் பயனரா நீங்கள்? இப்போது உங்கள் Orkut profileல் உங்கள் wordpress, blogger பதிவுகளுக்கான ஓடைகளை இணைக்கலாம். இதன் மூலம் உங்கள் ஆர்க்குட் பக்கத்தில் இருந்தே உங்கள் நண்பர்கள் உங்கள் பதிவுகளை முழுமையாகப் படிக்க இயலும். இவை தவிர, உங்கள் விருப்பத் தளங்களின் ஓடைகள், பிக்காஸா படத்தொகுப்புகளின் ஓடைகளையும் இணைக்கலாம்.

Tuesday, June 12, 2007

ப்ளாக்கரின் Widget Installer - ஒரு அறிமுகம்

Widget Installer அல்லது 'தன்விருப்ப நிரல் துண்டு நிறுவி' புது ப்ளாக்கரின் மிக முக்கியமான அம்சம். உங்கள் பதிவைப் பற்றிய சிறு குறிப்பு அல்லது, ஏதும் விளம்பரம் கொடுக்க இந்த விட்ஜட் மிகச் சுலபமான வழி.

'மகளிர் சக்தி'யை உங்கள் பதிவில் இட உதவும் 'சக்தி கொடு' பொத்தானும், சமீபத்தில் சென்னை பதிவர் சந்திப்புக்காக அளிக்கப்பட்ட விளம்பரம் தரும் பொத்தானும் இப்படி உருவாக்கப்பட்டவையே.

இந்த விட்ஜட்கள் இரண்டு வகையானவை:
1. Static widget installer
2. Dynamic Widget installer

Static என்னும் மாறா நிரல்துண்டு நிறுவி எல்லா பதிவுகளுக்கும் ஒரே விதமான நிரல்துண்டுகளைக் கொடுப்பவை. எடுத்துக்காட்டுக்கு, மேலே சொன்ன சக்தி கொடு பொத்தானே ஒரு மாறா நிறுவி தான். யார் பதிவில் இட்டாலும் அதன் உள்ளடக்கம் ஒன்றாகத் தான் இருக்கும். இதை விளம்பரங்களுக்கும், இது போல் ஏதேனும் ஒரு பதிவின் ஓடைகளைப் படிக்கவும் பயன்படுத்தலாம்

Dynamic என்னும் மாறும் நிரல்துண்டு நிறுவி, அவரவர் பதிவுகளுக்கு வேண்டிய வகையிலான நிரல்துண்டை நிறுவிக் கொள்ள உதவும். அண்மைய ஐந்து இடுகைகள், அண்மைய ஐந்து பின்னூட்டங்கள் போன்றவற்றிற்கு நாம் விட்ஜட் கொடுத்தால் அந்தந்த பதிவர்கள் அவரவர் பதிவுகளின் இட்டுக் கொள்ள முடியும் வகையிலானவை இந்த dynamic widget installers.

இந்தப் பதிவில் static installer களை உருவாக்குவது எப்படி என்று மட்டுமே எழுதப் போகிறேன். விட்ஜட் நிறுவும் இந்த நிரலியை ப்ளாக்கர் பதிவில் மட்டும் தான் செய்து பார்க்க முடியும்.

1: நீங்கள் கொடுக்க விரும்பும் விட்ஜட்டை முதலில் உங்கள் பதிவில் நீங்களே இட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.எடுத்துக்காட்டுக்கு, எய்ட்ஸ் விழிப்புணர்வு பற்றிய பக்கப்பட்டித் துண்டை பலரது வலைபதிவில் பார்த்திருப்போம். இது போன்ற ஒரு விட்ஜட் கொடுக்க விரும்பினால், முதலில் அந்த பக்கப்பதிவுத் துண்டை நீங்களே உங்கள் பதிவில் "Add New Widget" வழியாக சேர்த்துக் கொள்ளுங்கள்.
2. மேற்குறிப்பிட்ட விழிப்புணர்வு பற்றிய widget உருவாக்க தேவையான நிரலியின் ஒரு எடுத்துக்காட்டு பின்வருமாறு:


இந்த நிரல்துண்டை உங்கள் பதிவின் Layout பக்கத்தில் "Add New Widget" என்ற பொத்தானை அமுக்கி, அதிலும், "HTML/Java Script" வகையான Widget ஆக இந்த நிரல்துண்டை இட வேண்டும்.

[குறிப்பு: & lt; , & gt; போன்றவற்றில் நான்கு எழுத்துக்களும் அருகருகே வர வேண்டும். அனாவசிய space ஐ விட்டு விட்டு எழுத வேண்டும்]

நிரல்துண்டின் வரி விளக்கம்:
Widget Installerகள் பொதுவாக படிவங்களாக (form) இருக்கின்றன. உங்கள் பக்கத்தில் தனக்கென சின்ன மினி பக்கத்தை உருவாக்கிக் கொண்டு அதில் சில வேலைகள் செய்யவே இந்த படிவ வகை தேவைப்படுகிறது.

<form action="http://www.blogger.com/add-widget" method="post">

என்ற பகுதியை எல்லா விட்ஜட் நிறு்வி நிரலியிலும் இட்டே ஆக வேண்டும்.

Form பகுதிக்குப் பின்னர் வரும் எல்லா input வரிகளும், இந்த widget installer form இல் நிரப்ப வேண்டிய சில மாறிகள் (variables) தான். அதில் ஒவ்வொரு வரியாக அடுத்து பார்ப்போம்:
1. தலைப்பு/Widget Title : நிரல்துண்டின் தலைப்பை இந்த இடத்தில் இட வேண்டும். உங்கள் installer வழியாக நிறுவிக் கொண்டவர்களின் பதிவுகளில் அந்த widgetஇன் தலைப்பாக இது இருக்கும்.
இலக்கணம்:
<input type="hidden" value=நீங்கள் விரும்பும் தலைப்பு name="widget.title">


எ.கா:
<input type="hidden" value="விழிப்புணர்வு" name="widget.title">


2. உள்ளடக்கம்/Content: நீங்கள் கொடுக்க விரும்பும் நிரல்துண்டில் உள்ளடக்கம் என்ன இருக்க வேண்டும் என்பதே இது. மேற்குறிப்பிட்ட மாதிரி உங்கள் பதிவில் நீங்களே இந்த விட்ஜட்டை ஒருமுறை செய்து பார்த்திருப்பீர்கள் தானே? அப்படிச் செய்யும் போது பயன்படுத்திய நிரலியைத் தான் இங்கு கொடுக்கப் போகிறோம்.

ஆனால் நேரடியாக பதிவின் வார்ப்புருவில் இடுவதற்கும், இது போல் இடுவதற்கும் ஒரு வேறுபாடுகள் உண்டு:
அ. <, > போன்றவை இந்த வரியின் உள்ளே பயன்படுத்தினால் ஏற்கனவே இருக்கும் <input> இன் <, > குறிகளுடன் குழப்பம் ஏற்படும் என்பதால், இவற்றிற்குப் பதிலாக, முறையே & lt; யும், & gt;யும் பயன்படுத்த வேண்டும் (space இல்லாமல்)
ஆ. சுட்டிகளைக் கொடுக்கும் போது, ஒற்றை மேற்கோள்(') குறியை இட வேண்டும்.

இலக்கணம்:
<input type="hidden" value="அவசியமான உள்ளடக்கம்" name="widget.content">


எ.கா:
<input type="hidden" value="& lt;a href='http://manggai.blogspot.com/2007/04/blog-post_27.html'& gt;& lt;img src=http://poorna.rajaraman.googlepages.com/aids_aware.jpg& gt;& lt;/a& gt; எயிட்ஸ் பற்றிய சரியான புரிதலுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை கரம் நீட்டுவோம் நேசமுடன்." name="widget.content">


மேல் உள்ள உள்ளடக்கப் பகுதி, input வரிக்கான சமரசங்கள் இல்லாமல் எழுத வேண்டுமாயின் :
<a href='http://manggai.blogspot.com/2007/04/blog-post_27.html'><img src="http://poorna.rajaraman.googlepages.com/aids_aware.jpg></a>எயிட்ஸ் பற்றிய சரியான புரிதலுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை கரம் நீட்டுவோம் நேசமுடன்."


3. வார்ப்புரு/template: form என்பது குட்டிப் பக்கம் என்று முன்பே சொல்லிவிட்டேன். தனிப்பக்கம் என்பதால் அதற்குரிய வார்ப்புருவையும் தனியே தர வேண்டியது அவசியமாகிறது. பொதுவாக மாறா widget நிறுவிகளில், இந்த வார்ப்புருவும், உள்ளடக்கமும் ஒன்றாகத் தான் இருக்கும்.

இலக்கணம்:
<input type="hidden" value=அவசியமான வார்ப்புரு name="widget.template">


எ.கா:
<input type="hidden" value="<data:content/>" name="widget.template">


4. ஒப்படை/Submit: இறுதியாக விட்ஜட் நிறுவியி பொத்தானுடன் இந்த நிரல் துண்டு முடிவடையும்.

இலக்கணம்:
<input type="submit" value="கை கொடுப்போம்" name="go">


இதே படிகளில் உருவாக்கிய விட்ஜட் நிறுவி பொத்தான் இந்தப் பக்கத்தில் இருக்கிறது. இதை வைத்து நீங்கள் உங்கள் பதிவில் எய்ட்ஸ் விழிப்புணர்வுக்கான விட்ஜட்டை அணிந்து கொள்ளலாம்..

Widget Installerஐ உருவாக்கும் விதத்தை முயல விரும்புபவர்கள் மேலுள்ள நிரலியை வைத்தே முதல் நிறுவுனரைச் செய்து பார்க்கலாம்.. சந்தேகம் இருந்தாலும்/புரியவே இல்லைன்னாலும் சொல்லுங்க..

மேலும் படிக்க: How do I create new widgets for other people to add to their layouts?

Sunday, June 10, 2007

திரட்டி செய்வது எப்படி?

கூகுள் ரீடர், யாகூ பைப்ஸ் கொண்டு வலைப்பதிவுத் திரட்டி, ஓடைத் திரட்டிகள் செய்வதற்கான வழிகாட்டி

Sunday, May 20, 2007

ஒலிப்பதிவு இடுவது எப்படி?

கணினியில் ஒலிப்பதிவு செய்து வலைப்பதிவில் இடுவது எப்படி?

Friday, March 2, 2007

நீங்கள் விரும்பும் படத்தை Posted by ல் (அல்லது) date-header ன் பக்கத்தில் காட்ட

இடுகை ஆரம்பமாகும் முன்னே..தேதிக்குப் பக்கத்தில் நீங்கள் விரும்பும் படம்..அதேபோல் பதிவு முற்றும் இடத்தில் posted by <நீங்கள் விரும்பும் படம்> (உங்கள் photoவா கூட இருக்கலாம்..) போட்டால் எப்படி இருக்கும்ன்னு நினைத்து பார்த்ததுண்டா...

எடுத்துக்காட்டுக்கு..மேலே சொல்லியிருக்கும் சுட்டிகளில்... date பக்கத்தில் யும் ... posted by யில் யும் குடுத்துள்ளேன்


செய்முறை விளக்கம் :-
  1. சரியான படத்தை தேர்வு செய்யவேண்டும்


  2. படம் இங்கு வைப்பதாக இருந்தால்WidthHeight
    தேதிக்குப் பக்கத்தில் நீங்கள் விரும்பும் படம்20px20px
    posted by <நீங்கள் விரும்பும் படம்>Any25px


    மேலே சொல்லியிருக்கும் dimension ல் படம் இருந்தால் உத்தமம்..இல்லைன்னா.. ஒவ்வொண்ணும்.. நீயாரோ - நான் யாரோ ன்னு மூஞ்சி்யைத் திருப்பிக்கும்

    PHASE :-1

  3. படத்தை..Googlepages (can use your Gmail account to login), Fileden , Ripway போன்ற ஏதாவது File hosting services ல் கணக்கு துவங்கி பதிவேற்றவும் (upload)
  4. animated gif படங்களை பிளாகரில் பதிவேற்றுவது பெரிய தலைவலி..இதைத் தவிர்க்கவே..மேலே சொல்லியிருக்கும் Free File hosting services ல் பதிவேற்றுகிறோம்
  5. பதிவேற்றிய பிறகு..அந்தப் படத்தின் file-path ஐ (Right-Click செய்து பெறலாம்) notepad ல் copy-paste செய்துகொள்ளவும்


  6. PHASE:-2 posted by <நீங்கள் விரும்பும் படம்>

  7. வார்ப்புருவின் நகலை Edit-HTML போய் பத்திரப்படுத்திக் கொள்ளவும்.
  8. வார்ப்புருவில் கீழே காணும் வரிகளைக் கண்டுபிடிக்கவும்


  9. <span class='post-author'>
    <b:if cond='data:top.showAuthor'>
    <data:top.authorLabel/>
    <data:post.author/>

    </b:if>
    </span>


    <data:top.authorLabel/>.. இது " Posted by " ஐ குறிக்கும்

    <data:post.author/>........ இது உங்கள் பெயரைக் குறிக்கும்
  10. நீங்கள் இணைக்க விரும்பும் படத்தை..மேலே சொல்லியிருக்கும் Tags ஐ அழித்துவிட்டு (எதை வேண்டாம்ன்னு நினைக்கறீங்களோ..அதை மட்டும் அழிங்க..) <img src="File_path "/> குடுத்து...SAVE & view

  11. கவனிக்க : - File_path க்கு பதில் notepad ல் நீங்கள் பத்திரப்படுத்தியுள்ள படத்தின் முகவரியை கொடுக்கவும்


  12. PHASE:-3 தேதிக்குப் பக்கத்தில் நீங்கள் விரும்பும் படம்

  13. வார்ப்புருவின் நகலை Edit-HTML போய் பத்திரப்படுத்திகொள்ளவும்.

  14. வார்ப்புருவில் கீழே காணும் Tag ஐக் கண்டுபிடிக்கவும்

  15. <data:post.dateHeader> அல்லது <data:post.timestamp/>..இது அவரவர் வார்ப்புருவைப் பொறுத்தது
  16. நீங்கள் இணைக்க விரும்பும் ப்டத்தை..மேலே சொல்லியிருக்கும் Tags க்குப் பக்கத்தில்
    <img src="File_path"/>
    குடுத்து...SAVE & view

  17. கவனிக்க : - File_path க்கு பதில் notepad ல் நீங்கள் பத்திரப்படுத்தியுள்ள படத்தின் முகவரியை கொடுக்கவும்


  18. PHASE:-4படத்தைச் சுற்றி border இருந்தால்


  19. கீழே காண்பது போல் மாற்றவும்


  20. .post img (கண்டுபிடிக்கவும்)
    {
    padding: 0px;
    border: 0px solid #cccccc;
    vertical-align:middle;
    }

Thursday, February 22, 2007

பதிவுகளுக்கஎல்லாம்.. மேலே/கீழே....பொதுவாக ஏதாவது காட்ட..

எல்லா இடுகைகளுக்கும் மேலோ கீழோ...ஏதாவது common element வேணும்ன்னு விருப்பம் இருக்கா..செய்யவேண்டியது இது தான்.
  1. வார்ப்புருவின் நகலை Edit-HTML போய் பத்திரப்படுத்திகொள்ளவும். இதுவே வார்ப்புருவின் தாரக-மந்திரம்
  2. TEMPLATE--EDIT HTML ல் கீழே காணும் வரிகளை கண்டுபிடிக்கவும்
    <b:section class='main' id='main' showaddelement='no' >
  3. சிகப்பு நிறத்தில் இருப்பவைகளை அழித்துவிட்டு..
    பச்சை நிறத்தில் சுட்டிக்காட்டியிருக்கும் வரிகளை போல் மாற்றி எழுதவும்

  4. final code looks like <b:section class='main' id='main' showaddelement='yes' > SAVE

  5. TEMPLATE--EDIT HTML ல் கீழே காணும் வரிகளை கண்டுபிடிக்கவும்
    <b:widget id='Blog1' locked='false' title='Blog Posts' type='Blog'>

  6. இதை locked ='false'உறுதி செய்யவும் and SAVE

  7. TEMPLATE-ADD PAGE ELEMENTS ல் வந்து உங்கள் விருப்பம் போல் page-element ஐ எல்லா இடுகைகளுக்கும மேலே இணைக்கலாம்
  8. எல்லா இடுகைகளுக்கும் கீழே..ஏதாவது இணைக்க விரும்பினால்..சம்பந்தபட்ட element ஐ click-and-drag முறையில் பதிவுகளுக்கு கீழேயும் வைக்கலாம்

Tuesday, February 13, 2007

ஒரே நாளில் எழுதப்படும் எல்லா இடுகைகளுக்கும் Date Header வரவேண்டுமா?

நம்மிடையே நிறைய பேருக்கு இந்தப் பழக்கம் உண்டு..ஒரே நாள் 3-4 இடுகைகள் எல்லாம் போடுவாங்க..(அவங்க கிட்டே அத்தனை விஷயம் இருக்கு..ஹ்ம்ம்..) ஆனா ஒரே நாளில் போடப்படும் எல்லா இடுகைகளுக்கும் தேதி விவரம் (..இடுகையைப் பதிப்பித்த தேதி) Bloggerல் இருக்காது. (எனக்கு Wordpress..etc குறித்து தெரியாது)

ஒரு சோதனைப் பதிவில் இதை செய்து பாருங்க
பதிவு எழுதும் நாள் :- 14-Feb-07
பதிவு -1 :: 10.00 am
பதிவு -2 :: 10.30 pm
பதிவு -3 :: 11.00 am
பதிவு -4 :: 11.30 am
Technically நீங்க ஒரே நாள் 4 இடுகை போட்டிருக்கீங்க.ஆனா.. பதிவைப் பார்த்தீங்கன்னா..இடுகை-4 க்கு மட்டும் தான் தேதி இருக்கும்..

இதை தவிர்த்து.. எல்லா பதிவுக்கும் தேதி வரணும்ன்னா.. பண்ணவேண்டியதெல்லாம்..இது தான்
  1. வார்ப்புருவின் நகலை Edit-HTML போய் பத்திரப்படுத்திகொள்ளவும்.இதுவே வார்ப்புருவின் தாரக-மந்திரம்

  2. வார்ப்புருவில் கீழே காணும் வரிகளை கண்டுபிடிக்கவும்
    <div class='blog-posts'>
    <b:loop values='data:posts' var='post'>
    <b:if cond='data:post.dateHeader'>
    <h2 class='date-header'><data:post.dateHeader/></h2>
    </b:if>

    <b:include data='post' name='post'/>

  3. சிகப்பு நிறத்தில் இருப்பவைகளை அழித்துவிட்டு..
    பச்சை நிறத்தில் சுட்டிக்காட்டியிருக்கும் வரிகளை போல் மாற்றி எழுதவும்
  4. <div class='blog-posts'>
    <b:loop values='data:posts' var='post'>
    <div class='date-header'>
    <data:post.timestamp/>
    </div>

    <b:include data='post' name='post'/>
    <b:if cond='data:blog.pageType == "item"'>

Saturday, February 10, 2007

எண்களாகத் தொகுக்கபட்ட பின்னூட்டங்கள்

பொதுவா தமிழ் பதிவுக்கெல்லாம் எக்கசக்கமான பின்னூட்டங்களை பார்த்திருக்கேன்..அதில் அனானி பின்னூட்டங்கள் ஏராளம்..அப்புறம் பதிவு போட்டவர் ...ஒவ்வொருத்தருக்கும் பதில் பின்னூட்டம் ".. முதல் அனானிக்கு -- xyz -பின்னூட்டம் இட்ட நண்பருக்கு.."... அப்படின்னு ஒருவழியா எல்லாருக்கும் பதில் பின்னூட்டம் போட்டு முடிக்குறத்துக்குள்ளே.. கழுத்து ஒரு வழியாயிடும்

இதை எளிமையாக்க.. எல்லா பின்னூட்டத்திற்கும் எண் குடுத்து வரிசைப்படுத்தினா...reference சொல்ல உதவியா இருக்குமில்லே..குறிப்பை கவனமா படிச்சு பண்ணுங்க
  1. வார்ப்புருவின் நகலை Edit-HTML போய் பத்திரப்படுத்திக் கொள்ளவும்.இதுவே வார்ப்புருவின் தாரக-மந்திரம்
  2. வார்ப்புருவில் கீழே காணும் வரிகளைக் கண்டுபிடிக்கவும்
    STEP-1

    <dl id='comments-block'>
    <b:loop values='data:post.comments' var='comment'>
    <dt class='comment-author' expr:id='"comment-" + data:comment.id'>

  3. சிகப்புநிறத்தில் இருக்கும் tags (HTML code) ஐ சுட்டிக்காட்டியிருக்கும் இடத்தில் இணைக்கவும்.
    <dl id='comments-block'>
    <ol>
    <b:loop values='data:post.comments' var='comment'>
    <li>
    <dt class='comment-author' expr:id='"comment-" + data:comment.id'>
  4. TEMPLATE ல் கீழே காணும் வரிகளை கண்டுபிடிக்கவும்
    STEP: 2

    <span class='comment-timestamp'>
    <a expr:href='"#comment-" + data:comment.id' title='comment permalink'> <data:comment.timestamp/>
    <b:include data='comment' name='commentDeleteIcon'/>
    </span>
    </dd>
    </b:loop>
  5. சிகப்புநிறத்தில் இருக்கும் tags (HTML code) ஐ சுட்டிகாட்டியிருக்கும் இடத்தில் இணைக்கவும்.
    <span class='comment-timestamp'>
    <a expr:href='"#comment-" + data:comment.id' title='comment permalink'> <data:comment.timestamp/>
    <b:include data='comment' name='commentDeleteIcon'/>
    </span>
    </dd>
    </li>
    </b:loop>
    </ol>

எண்களாகத் தொகுக்கப்பட்ட பின்னூட்டங்கள், பின்னூட்டப் பக்கத்தில் காணக்கிடைக்காது. அவையெல்லாம் உங்கள் பதிவு காணக்கிடைக்கும் URL பக்கத்திலேயே தெரியும். முழுமையான பதிவு எக்ஸ்புளோரரில் தெரியும் போது அதனுடன் பின்னூட்டங்களும் தெரியும்