- வலைப்பதிவு (Blog) என்றால் என்ன?
வலைப்பதிவு - தமிழ் விக்கிபீடியா கட்டுரை பார்க்கவும். - வலைப்பதிவு கணக்குகளை துவக்குவது எப்படி?
ப்ளாக்கர் (எ) வோர்ட்பிரஸ் - ஒப்பீடு - இன்பா - சொந்த தளங்களிலிருந்து எப்படி வலைப்பதிவிடுவது?
- குழு வலைப்பதிவுகளை எப்படி அமைப்பது?
முதலில் ஒரு வலைப்பதிவு தொடங்குகள்.
Blogger - dashboard->settings->permissions->add authors சென்று உங்கள் குழுவில் சேர்த்துக் கொள்ள விரும்பும் நண்பர்களுக்கு அழைப்பு அனுப்புங்கள்.
Wordpress.com - dashboard -> Users -> Add user from Community சென்று நண்பர்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள். - செய்தியோடை என்றால் என்ன? எப்படி வேலை செய்கிறது?
- பதிவில் இணைக்கப்படும் நிரல்கள் என்ன செய்கின்றன?
பதிவில் இணைக்கப்படும் நிரல்கள் உங்கள் பதிவின் செயல்பாடு, தோற்றத்தை மாற்ற உதவும். உங்கள் வலைப்பதிவுக்கான வருகையாளர் புள்ளிவிவரங்கள், வலைப்பதிவுத் திரட்டிகளின் சேவைகள் போன்றவற்றைப் பெறவும் நிரல்களை இணைக்கலாம். - நிரல்களை பதிவு வார்ப்புருவில் சேர்ப்பது எப்படி?
Blogger -> Dashboard - > Layout -> Add Page element - > HTML / JavaScript சென்று உங்கள் நிரலை சேருங்கள்.
Wordpress.com - > Dashboard - > Presentation - > Widegets - > Text 1 சென்று உங்கள் நிரலை சேருங்கள். - வார்ப்புருக்களில் மாற்றம் செய்வது எப்படி?
Blogger -> Dashboard - > Layout -> Template -> Edit HTML சென்று உங்கள் வார்ப்புருக்களில் மாற்றம் செய்யலாம்.
Wordpress.com இலவச சேவை பயனர்கள் வார்ப்புரு மாற்றம் செய்ய இயலாது. சிறு நிரல்களை பக்கப்பட்டையில் இணைக்க Wordpress.com - > Dashboard - > Presentation - > Widegets - > Text 1 சென்று உங்கள் நிரலை சேருங்கள். - தமிழில் வார்ப்புருக்கள் எங்கே கிடைக்கும்?
சில தமிழ் வார்ப்புருக்கள் (template) தமிழ்மணத்தில் இருந்து சுட்டப்பட்டுக் கிடைக்கின்றன. - புகைப்படங்களை இணைப்பது எப்படி?
பதிவில் படத்தை இணைக்க அதிரடி வழி - செந்தழல் ரவி - கோப்புகளை பதிவுடன் இணைக்க முடியுமா?
புகைப்படங்கள் - Photobucket
ஒலிக்கோப்புகள் - ijigg
ஒளிக்கோப்புகள் - Youtube
போன்ற சேவைகளில் உங்கள் கோப்புகளை இணைத்துக் கொண்டு அதற்கான நிரலை உங்கள் இடுகையில் பொதிந்து கொள்ளுங்கள். - எழுதியதை மற்றவர்களுக்கு எப்படித் தெரிவிப்பது?
தமிழ்மணம், தேன்கூடு, தமிழ்ப் பதிவுகள்டெக்னாராட்டி போன்ற திரட்டிச் சேவைகளுடன் இணைத்துக் கொள்ளுங்கள். - profileல் சில வலைப்பதிவுகளை மறைத்து விடுவது எப்படி?
Blogger -> Dashboard -> Edit profile - > Select blogs to display சென்று வேண்டிய பதிவுகளை மட்டும் தெரிவு செய்யுங்கள். சேவைகள் - நூற்றுக் கணக்கான வலைப்பதிவுகளை படித்துப் பிடித்தவற்றைக் குறித்துக் கொள்வது எப்படி?
தேன்கூடு பெட்டகம் - சிறில் அலெக்ஸ் - டெக்னோரெட்டி (Technorati) என்றால் என்ன?
டெக்னோரட்டி என்பது உலகளாவிய வலைப்பதிவுகளுக்கான தேடு பொறி ஆகும். பார்க்க - ஆங்கில விக்கிபீடியா கட்டுரை. - வீடியோ ஆடியோ பதிவுகள் எப்படி செய்வது?
ஒலிப்பதிவு இடுவது எப்படி? - ரவிசங்கர். - பழைய பதிவு ஒன்றை மீண்டும் முதல் பக்கத்தில் வர வைப்பது (மீள்பதிவு செய்வது) எப்படி?
மீண்டும் கோயிந்து - பொன்ஸ் - இடுகையில் சுட்டியை இணைப்பது எப்படி?
திருவாளர் கோயிந்தும் அப்பாவி பொன்ஸும் - பொன்ஸ் - பின்னூட்டத்தில் சுட்டியைச் சேர்ப்பது எப்படி?
பின்னூட்டத்தை அழகுபடுத்துவது - பொன்ஸ் - மறுமொழி மட்டுறுத்தல் என்றால் என்ன?
உங்கள் பதிவுக்கு வரும் வாசகர் கருத்துக்கள் தானாகப் பதிப்பித்துக் கொள்ளாமல் முதலில் மின்மடல் உங்கள் பார்வைக்கு வந்து பிறகு ஒப்புதல் அல்லது திருத்தத்துடன் பதிப்பிக்கப்படுவதே மறுமொழி மட்டுறுத்தலாகும். தனி மடல்கள், விளம்பர, ஆபாசக் கருத்துக்களை உங்கள் பதிவில் தோன்றச் செய்யாமல் இருக்கு இது உதவும். - மறுமொழி மட்டுறுத்தலைச் செயல்படுத்துவது எப்படி?
மறுமொழி மட்டுறுத்தல் செய்வது எப்படி? - ஆவி அண்ணாச்சி
பின்னூட்ட மட்டுறுத்தல் - பிரசுரி/நிராகரி - ஆவி அண்ணாச்சி - நமக்கு வந்த பின்னூட்டத்தை மாற்றி அனுமதிப்பது எப்படி?
பின்னூட்ட மாற்றம்.(எடிட்) - Manikandan Vaa
எடிட்.. edit.. எடிட்... - பொன்ஸ் - பின்னூட்டம் வந்துள்ளதா என்று தெரிந்து கொள்வது எப்படி?
Blogger - > Dashboard -> Settings -> Comments - > Comment Notification Addressல் உங்கள் மின்மடல் முகவரியை தாருங்கள்.
Wordpress.com - > Dashboard -> Options -> Comments - > Email me whenever - > Anyone posts a comment என்று அமைப்பை மாற்றுங்கள். - என்னுடைய வலைப்பதிவிலும் விளம்பரங்களைக் காட்ட முடியுமா?
வலையில் சம்பாதியுங்கள் - மயூரேசன்
வலைப்பதிவில் விளம்பரமிட்டுச் சம்பாதியுங்கள் - மயூரேசன் - என் வலைப்பதிவைப் படித்துச் சென்றவர்களைப் பற்றிய விபரங்களை எப்படித் தெரிந்து கொள்வது?
Wordpress.com தளத்தில் உள்ளிணைந்த புள்ளிவிவரங்கள் கிடைக்கும். Blogger பயனர்கள் Statcounter போன்ற சேவைகளைப் பயன்படுத்தி வாசகர் எண்ணிக்கை, நாடு போன்ற விவரங்களை அறியலாம். - புதிய இடுகையை தமிழ் மணத்தில் வரச் செய்வது எப்படி?
தமிழ்மணக் கருவிப் பட்டைச் சேவை பெற்றிருந்தால் அதில் உள்ள "அனுப்பு" பொத்தான் கொண்டு தமிழ்மணத்துக்கு அனுப்பலாம். அல்லது தமிழ்மண முகப்பில் தெரியும் "இடுகைகளைப் புதுப்பிக்க" என்ற சேவை மூலம் தெரியப்படுத்தலாம். - புதிய பின்னூட்டத்தை தமிழ் மணம் முதல் பக்கத்தில் வரச் செய்வது எப்படி?
இதற்குத் தமிழ்மணக் கருவிப்பட்டை நிறுவப்பட்டிருக்க வேண்டும். உங்கள் பதிவில் பின்னூட்டங்களைப் பதிப்பித்த பின் குறிப்பிட்ட இடுகையின் பக்கத்தை ஒரு முறை திறந்து பார்த்தால் தமிழ் மணம் உங்கள் பதிவின் அண்மைய மறுமொழிகளைத் திரட்டிக் கொள்ளும். - புதிய வலைப்பதிவை தமிழ் மணம்/ தேன்கூடு/தமிழ்பிளாக்ஸ் திரட்டிகளில் சேர்ப்பது எப்படி?
தமிழ்மணம் - இங்கு சென்று விண்ணப்பியுங்கள். விரும்பினால், கருவிப்பட்டையை நிறுவிக்கொள்ளுங்கள்.
தேன்கூடு - இங்கு விண்ணப்பியுங்கள்.
தமிழ்ப்பதிவுகள் - இங்கு விண்ணப்பியுங்கள். - தமிழ் மணத்தில் குறிச்சொற்களை எப்படிப் பயன்படுத்துவது?
தமிழ்மணமும் குறிச்சொற்களும் - சிந்தாநதி - தமிழில் தட்டச்சிடுவது எப்படி?
தமிழ்த் தட்டச்சுப் பயிற்சிப் படிகள் - Voice on Wings - கில்லி கையேடு - ஃபயர்ஃபாக்ஸில் வலைப்பதிவு சரியாக தெரிவதில்லை, என்ன செய்ய வேண்டும்?
http://thamizmanam.com/tmwiki/index.php?id=firefox - ஜிமெயிலில் லேபல்களைப் பயன்படுத்துவது எப்படி?
ஜிமெயில் மடல்களைத் தெரிவு செய்து - > More Actions -> Apply label -> New label அல்லது ஏற்கனவே உள்ள குறிச்சொற்களைத் தெரிவு செய்யுங்கள்.
வார்ப்புரு
கோப்புகள்
தெரிவித்தல்
இடுகை மேலாண்மை
மறுமொழிகள்
விளம்பரங்கள்
புள்ளிவிவரங்கள்
தமிழ்மணம்
தமிழ்
பிற