Quick refrence
Key board layout :- e- kalappai (Anjal) |e-kalappai (Tamil 99) இதே மாதிரி இன்னும் ஏதாவது quick refrence சேர்த்தால் உபயோகமாக இருக்குமானால் பின்னூடத்தில் தெரிவிக்கவும்
Friday, January 18, 2008
வலைப்பக்கத்தில் எழுதுகருவியை இணைப்பது எப்படி?
(பிளாக்கர் பதிவர்கள் மட்டும்) இந்த விட்ஜட்டை தங்கள் பதிவில் நிறுவி விட்டால் கையருகில் எப்போதும் ஆன்லைன் எழுதுகருவி இருந்து கொண்டிருக்கும்.
பிளாக்கர் அல்லாத பதிவுகளுக்கும் அல்லது பிளாக்கரில் பக்கப் பட்டையில் நிரலை எடுத்து இணைக்கவும்
பக்கப் பட்டையில் சுட்டி வைத்திருப்பதை விட உங்கள் பதிவுக்குள்ளேயே நேரடியாக இந்த எழுதுகருவியை இணைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தால் அதற்கான வழி
இந்த நிரலை உங்கள் பதிவில் Layout- Template-Page Elements பகுதியின் footer ல் (கீழ்ப்பகுதி)
-Add a Page Element -HTML/JavaScript வழியாக சேர்க்கலாம்...
ஆனால் இதை பக்கப் பட்டை (side bar)பகுதியில் இணைக்க இயலாது...footer பகுதியில் மட்டுமே இணைக்க வேண்டும். footer (கீழ்ப்பகுதி) அகலம் குறைவாக இருந்தால் நேரடியாக Edit Html - Edit Template பகுதியில் </body> க்கு முன் இணைக்கலாம்.
Sunday, December 16, 2007
கணினியில் தமிழ் எழுதுவது எப்படி?
பதிவுகளை வாசிக்க ஆரம்பித்ததும் விரைவிலேயே தாங்கள் படித்த பதிவுகளில் மறுமொழி இட விரும்புவார்கள்...அவர்களில் சிலரேனும் தாங்களும் ஒரு வலைப்பதிவு செய்ய வேண்டும் என்று விரும்புவார்கள்....
ஆனால் தமிழை வாசிக்க முடிந்தாலும் தமிழில் எழுதுவது எப்படி என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருக்கும்... அதை இன்னொரு வலைப்பதிவரிடமோ, வேறு நண்பர்களிடமோ கேட்டுத் தெரிந்து கொண்டு முதலில் மறுமொழி இடுவார்கள். அடுத்து தங்களுக்கான வலைப்பதிவை உருவாக்கி தங்கள் எண்ணங்களை பதிவாக்குவார்கள்.
இதில் தமிழை கணினியில் எழுதுவது என்பது மிகவும் முக்கியமான கட்டம். இங்கே பலரும் பலராலும் அறிமுகப் படுத்தப் படுவது ரோமன் அல்லது அஞ்சல் எனப்படும் தமிங்கில தட்டச்சு முறையாகும். இது புரிந்து கொள்ள எளியது போலத் தோன்றினாலும் இந்த தட்டச்சு முறையின் சிக்கல்களை அதன் உள, உடல் ரீதியான பிரச்சினைகளை பலரும் உணர்வதில்லை.
அம்மா என்று எழுத்துக் கூட்டி சொல்லச் சொன்னால் சின்னக் குழந்தை கூட "அ-ம்-மா அம்மா" என்று சொல்லும்... நம்ம பதிவர்களோ "a-m-m-a-a அம்மா" என்று சொல்கிறார்கள்.
வலைப்பதிவில் எழுத, பின்னூட்டமிட புதுசா கணினியில் தமிழ் எழுத கற்றுக் கொள்ள விரும்புகிறீர்களா? மிக எளிமையான ஒரு வழி இருக்கு... இங்கே போய் கற்றுக் கொள்ளுங்கள்.
ஏற்கனவே தமிங்கிலத்தில் தட்டச்சிக் கொண்டு இருப்பவர்களும் முயன்று பாருங்கள்... இதன் எளிமையை உடனே உணர்வீர்கள்.
Tuesday, July 24, 2007
தமிழ்99 தட்டச்சு - demo video
Wednesday, June 27, 2007
Saturday, May 26, 2007
99க்கு மாறணுமா?
- தமிழ்99 முறைக்கு மாறுவதால் என்ன பயன்?
- எல்லா தமிழ் எழுத்துக்களுக்கும், shift விசை பயன்படுத்தாமலேயே அடிக்கலாம்.
- உயிர் எழுத்துக்களுக்கும் அகரம் ஏறிய மெய் எழுத்துகளுக்கும் ஒரே விசை.
- உயிர் மெய் எழுத்துகளுக்கு மெய் - உயிர் என்று இரண்டு விசைகள். ்
- தமிழில் அதிகமாகப் புழங்கும் எழுத்துக்கள் வலிமை வாய்ந்த விரல்கள் இயக்கும் விசைகளாகவும் மற்றவை வெளி விரல்களின் விசைகளாகவும் வடிவமைப்பு.
- பழகி விட்ட அனிச்சை செயலை ஏன் மாற்ற வேண்டும்?
பழைய முறையில் தமிழ் எழுத்துக்களை ஆங்கில எழுத்துக்களாக மனதில் மாற்றி அடிக்கிறோம்.
க என்றால் k விசையைப் பயன்படுத்த வேண்டும் என்று மனதில் இணைத்து ஆங்கில தட்டச்சுப் பழக்கத்துக்குத் தாவி விரலை kக்குச் செலுத்தி தட்டச்சுகிறோம். இதனால் பல வீணான அசைவுகள் தேவைப்படுகின்றன. - மாற்றினால் பழைய அஞ்சல் முறை போல வேகம் கிடைக்குமா?
எழுத்துக்களுக்கும் விசைகளுக்குமான தொடர்பு அனிச்சையாக வர ஆரம்பித்து விட்டால் வேகம் கிடைக்கும். மிதி வண்டி ஓட்டுவது போல அனிச்சை இயக்கம் கை கூடும் வரை வேகம் வாய்க்காது. ஒவ்வொரு எழுத்துக்கும், எந்த விசை என்று நிதானித்து அடிக்க வேண்டியிருக்கும். - இதைப் பழகுவதால் ஆங்கில தட்டச்சு வேகம் பாதிக்கப்படுமா?
பாதிக்காது என்று உறுதியாகவே சொல்லலாம். கூடுதல் ஒரு மொழியில் புலமை பெறுவதால் ஏற்கனவே அறிந்த மொழிகள் மறந்து விடாதது போல தமிழ் தட்டச்சால் ஆங்கிலத் தட்டச்சு மறந்து போய் விடாதுதான்.
அஞ்சல் முறையில் பழகியிருக்கும் விரல் அசைவுகள் மறந்து போய் விடும். எல்லா உள்ளீட்டு முறைகளிலிலும் தமிழ்99 முறையும் சேர்ந்தே கிடைப்பதால், அதனால் எந்த இழப்பும் இல்லை. - யார் யாருக்கு முயற்சி செய்து மாறுவது பலனுள்ளதாக இருக்கும்?
புதிதாகத் தமிழில் எழுத ஆரம்பிக்கும் அனைவரும் இந்த முறையில் பழகுவது பயனளிக்கும்.
என்னதான் ஆங்கில வழித் தட்டச்சு முறையான அஞ்சல் உள்ளீட்டுக்குப் புதிதாக எதுவும் கற்க வேண்டாம் என்று சொன்னாலும் நடைமுறையில் பல புதிய விசைக் கோர்வைகளை தெரிந்து கொள்ள வேண்டியிருக்கத்தான் செய்கிறது.
தமிழில் கணிசமான அளவு எழுதும் எல்லோருக்கும் மாற்றம் பலனளிக்கும். மாறுவது குறித்து பரிசீலிக்கலாம். - ஏற்கனவே அஞ்சல் முறையில் வேகமாக அடிக்கக் கூடியவர்கள் மாறுவதற்கு எவ்வளவு சிரமமாக இருக்கும்?
நிறையவே சிரமம்தான். க என்றால் k விசையைப் பயன்படுத்த வேண்டும் என்று மனதில் இணைத்து ஆங்கில தட்டச்சுப் பழக்கத்துக்குத் தாவி விரலை kக்குச் செலுத்தும் அனிச்சை மாறி
க என்றால் அதற்கான விசையை (ஆங்கில H) அடிக்க வேண்டும் என்று பழகுவது வரை சிரமமாக இருக்கும்.
பழைய முறையில் எவ்வளவுக்கெவ்வளவு தேர்ச்சி அதிகமோ அவ்வளவுக்கவ்வளவு மாற்றத்துக்கு நேரம் பிடிக்கும்.
தமிழ்99 குறித்து ரவிசங்கரின் பேட்டி.
தமிழ்99 பயிற்சி நிகழ்படம்
Tuesday, May 22, 2007
மைக்ரோசப்டு வேர்டில் தமிழ் உள்ளீடு
விண்டோசு XPயின் லதா எழுத்துருவை மாற்றி, எ-கலப்பை தரும் எழுத்துருவை அமைத்துக் கொண்டால் சரியாக தெரிந்தது. முயன்று பாருங்கள் வித்யா.
Thursday, April 26, 2007
அதியனும் தமிழ்விசையும்
தமிழில் தட்டச்சிட அப்படி ஒரு நிலைமைதான் இருக்கிறது.
மேசைத் தளத்துக்கான படங்களை வரையும் மென்பொருளை அடிப்படையாகக் கொண்ட விசைப்பலகை, க்னோம் எனப்படும் மேசைத் தளத்தை அடிப்படையாகக் கொண்ட விசைப்பலகை என்று இரண்டுமே கிடைக்கின்றன.
முதலில் சொன்னதில் தமிழ்99 விசைப்பலகை மட்டும்தான் கிடைக்கிறது. மொசில்லா பயர்பாக்சு, அலுவலக மென்பொருட்கள், உரையாடல் கருவிகள் என்று எல்லாவற்றிலும் (எ-கலப்பை போல) பயன்படும். இதற்காகவே தமிழ்99 உள்ளீட்டு முறையைக் கற்றுக் கொள்ள வேண்டியிருக்கும்.
நமக்குத் தெரிந்தது ammaa என்று அடித்து அம்மா என்று வர வைக்கும் அஞ்சல் / தமிங்கில விசைப்பலகை தான் என்றால் மேலே சொன்னது உதவாது.
க்னோமின் உள்ளீட்டுக் கருவியின் மூலம் துரையப்பா வசீகரன் உருவாக்கிய கருவியில்
- அஞ்சல் முறையில் ஒருங்குறி,
- தமிழ்99 முறையில் டிஸ்கி,
- தமிழ்99 முறையில ஒருங்குறி,
- தமிழ்விசைப்பலகை என்ற முறையில் திஸ்கி,
- தமிழ்விசைப்பலகை என்ற முறையில் ஒருங்குறி
நண்பர் பாலபாரதியின் கணினியில் லினக்சை நிறுவும் போது அவர் தமிழ்விசை என்ற பெயரில் ஒரு பயர்பாக்சு நீட்சி கிடைப்பதாகவும் அதைப்பயன்படுத்தி நேரடியாக தமிழில் எழுதலாம் என்று சொல்லியிருந்தார். புதிய மடிக்கணினி வந்ததும், எல்லா மென்பொருளையும் அதிலிருந்தே பயன்படுத்த ஆரம்பித்திருந்தேன். இப்போது இந்த நீட்சியை நிறுவிக் கொள்ளலாம் என்று பாலாவை தொலைபேசிக் கேட்டால், அவர் அதியன் என்ற நீட்சியைத் தேடிப் பிடிக்கச் சொன்னார்.
'பேரை மாத்திட்டாங்களோ' என்று நினைத்துக் கொண்டே அதியனை ஹாய் கோபியின் வலைப்பதிவில் பிடித்து நிறுவிக் கொண்டேன். சரியாக விபரம் பார்க்காமல், பாலாவை நினைத்துக் கொண்டே குறுக்கு வழி விசைகளை அழுத்தினாலும் தமிழில் எழுத்து வர மாட்டேன் என்று அடம் பிடித்தது. வலது புறம் சொடுக்கி விபரம் பார்த்தால் அது பக்கங்களை திஸ்கியிலிருந்து யூனிகோடுக்கும் மாற்றும் நீட்சி.
திரும்ப தொலைபேசியதில், அலுக்காமல் தமிழ் விசை என்பதை நினைவு படுத்திச் சொன்ன பாலாவுக்கு நன்றியுடன் தமிழ் விசையையும் நிறுவிக் கொண்டேன். முகுந்தின் சத்தம் இல்லாத பணிகளில் இன்னொரு பலனுள்ள படைப்பு.
தமிழில் எழுத நீட்சியைத் தேடப் போய் திஸ்கி பக்கங்களைப் படிக்கும் வாய்ப்பும் கிடைத்து விட்டது. அப்படியே என் பெயரை கூகுளில் தேடியதில் ஆறு ஆண்டுகள் முன்பு எறும்புகள் குழுவின் சார்பில் இணையத்தின் மூலம் பல்வேறு நாடுகளில் இருந்து செயற்குழு உறுப்பினர்கள் கலந்து உரையாடியதின் தொகுப்பு திஸ்கியில் கிடைத்தது, அதை ஒருங்குறிக்கு மாற்றி சேமித்து வைத்துக் கொண்டேன்.
பயர்பாக்சில் தமிழில் எழுத தமிழ்விசை (tamilkey), பயர்பாக்சின் திஸ்கி பக்கங்களை ஒருங்குறியில் படிக்க அதியன். என்ன? பயர்பாக்சு இல்லையா? இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் எப்படி என்று தெரிய வேண்டுமா? இதற்கு இரண்டு விடைகள்;
1. இன்டர்நெட் எக்ஸ்புளோரரை என்னுடைய கணினியில் பயன்படுத்தி பத்து ஆண்டுகள் ஆகப் போகின்றன. மோசில்லா, நெட்ஸ்கேப், பயர்பாக்சுதான் இணையத்துக்கு அழைத்துப் போகின்றன.
2. இன்னும் இன்டர்நெட்டில் வலை உலாவிக் கொண்டிருக்கிறீர்களா, என்ன? பயர்பாக்சையும் தரவிறக்கிப் பயன்படுத்திப் பாருங்கள், அது இல்லாமல் எப்படி இணையத்தில் உலாவினோம் என்று ஆச்சரியப்பட ஆரம்பித்து விடுவீர்கள்.
Monday, December 4, 2006
How to Read/Write in Tamil ..
இணையத்தில் முதன்முறையாக தமிழ் உபயோகிக்க துவங்கும் பெரும்பாலானோரின் முதல் கேள்வி தமிழிலுள்ள பக்கங்களை எவ்வாறு படிப்பது, தமிழ் பக்கங்களை படிக்க என்னென்ன Fontகளை தரவிறக்கம் செய்யவேண்டும், தமிழில் எழுதுவது எப்படி, தமிழுக்கென தனி Keyboard இருக்கிறதா என்பதாகத்தான் இருக்கும். கில்லிக்காக Voice on Wings எழுதிய இந்த கேள்விகளுக்கெல்லாம் விடையளிப்பதால் இங்கே மீள்பதிவிடுகிறோம். நன்றி Gilli & Voice on Wings :)
Tamil Computing Tutorial for reading and writing Tamil on the Net - Voice on Wings
Reading Tamil text
When you open a tamil blog and see only question marks or boxes instead of tamil letters, it means your computer is not equipped with any Unicode font for Tamil (Note: 'Unicode' is the universal encoding mechanism for computers, that accommodates all the languages of the world with a single coding scheme).
Step 1: To install the needed font(s), download the installer from this web page and execute it. This would install 10 Unicode Tamil fonts in your computer. If you use Internet Explorer 6.0 or above, this should enable you to view the page correctly.
Step 2: (Only for Firefox browser) You may see consonants and vowel modifiers displayed separately, instead of being shown as composite letters (uyir mei). To correct this, download this file and save it in the folder below:
C:\Documents and Settings\[User Name]\Application Data\Mozilla\Firefox\Profiles\xxxxx.default\chrome (for Windows 2000/XP)
(OR)
C:\WINDOWS\Application Data\Mozilla\Firefox\Profiles\xxxxxxx.default\chrome (for Windows 98/Me)
Note: [Username] denotes your Windows username
'xxxx.default' is a folder name under the Profiles folder with '.default' at the end
If you are not able to locate the folder 'Application Data' (sometimes it is hidden), type '%AppData%' in the Windows' Start>Run dialog box. It would open the folder in an Explorer window, from which you can navigate to the destination folder specified above.
It is very important to save the downloaded file in the correct location as above.
With the above steps, it would be possible to read tamil blogs using IE or Firefox browsers, on Windows platforms.
தமிழில் எழுதுவது
மேற்கூறிய வழிமுறையைக் கையாண்டு (அல்லது அப்படியெல்லாம் எதுவும் செய்யாமலேயே), இதைப் படிக்கும் வசதியைப் பெற்று விட்டீர்கள். இனி, தமிழ்ப்பதிவுகளில் (i.e. Tamil blogs) உங்கள் கருத்துக்களை, தமிழிலேயே பதிக்க விரும்புகிறீர்கள். அது மட்டுமல்லாமல், நீங்களும் ஒரு தமிழ்ப்பதிவைத் தொடங்கி, தொடர்ந்து எழுதவும் விரும்புகிறீர்கள். ஆனால் தமிழில் தட்டச்சு (typing) செய்வது எப்படி என்று உங்களுக்குத் தெரியவில்லை. அப்படியென்றால் மேற்கொண்டு படியுங்கள்.
முதல் கட்டம்: மிகவும் எளிதான வழி இவ்வலைப்பக்கத்திலுள்ள சுரதாவின் 'புதுவை' தமிழ் editorஐப் பயன்படுத்துவதே. இதில் romanized எனப்படும் ஒலியியல் முறையில் தட்டச்சு செய்யலாம். (இம்முறையை, 'அஞ்சல்' என்றும் குறிப்பிடுவதுண்டு) அதாவது, ஆங்கில எழுத்துக்களைக் கொண்டே, அவைகளுக்கு நிகரான ஒலிகளைக் கொண்ட தமிழ் எழுத்துக்களைப் பெறலாம். எப்படி என்று பார்ப்போம்.
தமிழெழுத்துக்களும், அடைப்புக்குறிகளுக்குள் அவற்றைப் பெறுவதற்கான ஆங்கில எழுத்துக்களும், கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:
உயிரெழுத்துக்கள்: அ(a), ஆ(aa or A), இ(i), ஈ(ii or I), உ(u), ஊ(uu or U), எ(e), ஏ(ee or E), ஐ(ai), ஒ(o), ஓ(oo or O), ஔ(au)
ஆய்த எழுத்து: ஃ(f)
மெய்யெழுத்துக்கள்: க்(k of h), ங்(ng), ச்(s or ch), ஞ்(nj), ட்(t or d), ண்(N), த்(th), ந்(n- or w), ப்(p or b), ம்(m), ய்(y), ர்(r), ல்(l), வ்(v), ழ்(z), ள்(L), ற்(R), ன்(n)
கிரந்த எழுத்துக்கள்: ஜ்(j), ஸ்(S), ஷ்(sh), ஹ்(-h), க்ஷ்(ksh), ஸ்ரீ(Srii or SrI)
உயிர்மெய்யெழுத்துக்கள்: இவற்றைப் பெற, மெய்யெழுத்தைத் தொடர்ந்து உயிரெழுத்தை தட்டச்ச வேண்டும். உதாரணம்,
க(ka) = க்(k) + அ(a),
கா(kaa or kA) = க்(k) + ஆ(aa or A).........
இந்த அடிப்படையில், எல்லா உயிர்மெய்யெழுத்துக்களையும், கிரந்த வரிசை எழுத்துக்களையும் (ஜ, ஜா, ஜி, ஜீ, etc.) பெறலாம்.
உற்று நோக்கினால், இதைக் கற்றுக் கொள்வது மிக எளிது என்பது புலப்படும். காரணம், தட்டும் ஆங்கில எழுத்துக்கும், கிடைக்கப்பெறும் தமிழெழுத்துக்குமுள்ள ஒலி ஒற்றுமை. ஒரு சில எழுத்துக்களைத் தவிர, இதில் பெரிதாக மனப்பாடம் செய்ய எதுவுமில்லை. முதல் கட்டமாக, இதைக் கொண்டு நீங்கள் தமிழில் தட்டச்சுவதற்கு பயிற்சி பெறலாம். இதுபோல், வேண்டிய தமிழ் வாக்கியங்களை உருவாக்கி, அவற்றை copy செய்து கொண்டு, அவற்றை வேண்டிய இடத்தில் ஒட்டி (paste), உங்கள் கருத்துகளை தமிழிலேயே வெளியிடலாம்.
இரண்டாவது கட்டம்: இப்போது நீங்கள் தமிழில் தட்டச்சு செய்ய போதிய பயிற்சி பெற்று விட்டீர்கள். வலைப்பதிவு விவாதங்களிலும் தமிழிலேயே உங்கள் கருத்துகளைத் தெரிவிக்கிறீர்கள். இருந்தும், சொந்தமாக ஒரு வலைப்பதிவு இருந்தால் இன்னும் நன்றாயிருக்குமே என்று எண்ணுகிறீர்கள். அப்படியென்றால் உங்கள் கணினியில் (computer / PC) தமிழ் தட்டச்சுக் கருவியை (Tamil typing tool) நிறுவுவதற்கான நேரம் வந்து விட்டதென்று பொருள். இன்று பலரும் பரவலாகப் பயன்படுத்தும் ஒரு கருவி தமிழா குழுவின் 'எ-கலப்பை'யாகும் (அதாவது, எலக்டிரானிக் கலப்பை). இதனை இங்கிருந்து download செய்து நிறுவிக்கொள்ளலாம். இதைக் கொண்டு, browser, notepad, word processor, email client போன்ற பலவற்றில் நேரடியாக தமிழில் தட்டச்சு செய்யலாம். Alt+2 விசைகளை அழுத்தினால், உங்கள் keyboard தமிழுக்கு மாறும். மறுபடி Alt+2 அழுத்தினால், திரும்பவும் ஆங்கிலத்துக்கு மாறிக்கொள்ளும்.
மூன்றாவது கட்டம்: ஒலியியல் / romanized / அஞ்சல் முறையை நன்கு பழகி விட்டீர்கள். ஆனால், கொஞ்சம் எழுதுவதற்குள் அயர்ச்சி ஏற்பட்டு விடுகிறது. ஒரு எழுத்தைப் பெறுவதற்கு நான்கைந்து விசைகளை அழுத்த வேண்டியுள்ளது. இவ்வாறாக, சிறு கட்டுரைகளை எழுதுவதற்கும் அதிகமான நேரம் செலவாகிறது. இதற்குத் தீர்வு 'தமிழ்நெட் 99' எனப்படும் தமிழ் தட்டச்சு முறையைப் பயின்று கொள்வதே. அதைப்பற்றி இந்த வலைப்பக்கத்தில் காணலாம் (ஒரு பயிற்றுக் கருவியும் வழங்கப்பட்டுள்ளது இப்பக்கத்தில்). தமிழ்நெட் 99 முறையில் தட்டச்சுவதற்கு தமிழாவின் எ-கலப்பை (தமிழ்நெட்99) எனப்படும் கருவியை download செய்து நிறுவிக்கொள்ள வேண்டும். இது, செயல்பாட்டில் எ-கலப்பை(அஞ்சல்)ஐ ஒத்ததே. தமிழெழுத்துகளுக்கான விசைகள்தான் மாறும். இதில் பயிற்சி பெற்றால் வெகு வேகமாக தமிழில் தட்டச்ச முடியும், அயர்ச்சியும் ஏற்படாது.
நான்காவது கட்டம்: மேலே குறிப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றியதால், தமிழ்க்கணிமை (Tamil computing) உங்கள் வாழ்வில் ஒரு இன்றியமையாத அம்சமாகி விடுகிறது. அப்படியிருக்கையில், உங்களுக்கு வாரக்கணக்கில் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது, அல்லது அலுவலகத்தில் அதிகமான நேரம் செலவழிக்க வேண்டியுள்ளது. இடையிடையே தமிழ்ப்பதிவுகளைப் படிக்கின்றீர்கள். ஆனால் தமிழில் தட்டச்சுவதற்கு வேண்டிய கருவிகளெல்லாம் இத்தகைய பொதுவிடங்களில் கிடைக்காததால்், உங்களால் விவாதங்களில் முழுமையாகப் பங்கு பெற முடிவதில்லை. அல்லது உங்கள் அனுபவங்களை / எண்ணங்களை சுடச்சுட உங்கள் வலைப்பதிவில் இட முடியவில்லை. இதற்குத் தீர்வுதான் தமிழாவின் TamilKey Firefox Extension. இதற்கு Firefox browser நிறுவப்பட்டிருக்க வேண்டும். அதன் புகழ் நாளுக்கு நாள் அதிகரித்து் வருவதால், நீங்கள் பயன்படுத்தும் பொதுக் கணினியில் அது நிறுவப்பட்டிருப்பது சாத்தியமானவொன்றே. அதன் மீது மேலே குறிப்பிட்ட extensionஐ நிறுவிக் கொண்டால், பிறகு எ-கலப்பையைப் போலவே தமிழில் தட்டச்சலாம். இது 10KBக்கும் குறைவாகயிருப்பதால், ஒரு நொடியில் இதை நிறுவிக் கொள்ள முடியும். (குறிப்பு - இதை Firefoxக்குள் மட்டுமே பயன்படுத்த முடியும். MS Word, Notepad போன்றவைகளுடன் இதைப் பயன்படுத்த முடியாது). F12 விசையை அழுத்தினால் தமிழ்நெட்99 செயல்பாட்டைப் பெறலாம். Ctrl+F12 விசைகளை அழுத்தினால் romanized / அஞ்சல் செயல்பாட்டைப் பெறலாம். F9 விசையைக் கொண்டு ஆங்கிலம் - தமிழ், இவற்றில் ஒரு மொழியிலிருந்து மற்ற மொழிக்குத் தாவிக் கொள்ளலாம். இவ்வாறு, நீங்கள் பொதுக்கணினிகளிலிருந்தும் தமிழில் உங்கள் கருத்துகளை / படைப்புகளை அளிக்க வாய்ப்புள்ளது.