Quick refrence

Download Links:- eKalappai 2.0b(Anjal) | eKalappai 2.0b (tamilnet99) - இங்கே தேர்வு செய்யவும்,
Key board layout :- e- kalappai (Anjal) |e-kalappai (Tamil 99) இதே மாதிரி இன்னும் ஏதாவது quick refrence சேர்த்தால் உபயோகமாக இருக்குமானால் பின்னூடத்தில் தெரிவிக்கவும்

Monday, August 27, 2007

Blidget - உங்க photoblog ஐ ட்ரைலர் மாதிரிக் காட்டுங்க

நம்ம தமிழ் மக்கள் பல பேருக்கு "படம்-காட்டரது"..ன்னா ரொம்ப பிடித்தமான விஷயம்... அய்யோ !.. எதுவும் வில்லங்கமா சொல்லலை... நம்ம செல்லா & குழு நடத்தும் Photography In Tamil ஐ தான் சொன்னேன்.. அங்கே கிளாஸ் அட்டெண்ட் பண்ணி இப்பொ நிறைய பேர் புகைப்படங்கள் மட்டுமே பதிவு செய்ய ஒரு தனி-தனி photoblog ஏ வச்சிருக்காங்கன்னா.. எவ்வளவு ஆர்வம் இருக்கணும்

எல்லாரும் ஏதாவது ஒரு திரட்டியை உபயோகித்துக்கொண்டு தான் இருப்பீங்க.. சில பேர் நேரடியா கூகிள்-ரீடர் லே படிப்பீங்க... இன்னும் சில பேர்.. உங்க பிளாகின் sidebar லே ஒரு விட்ஜெட் மாதிரி அதை வச்சிருப்பீங்க.. photoblog க்கு இந்த மாதிரி sidebar லே அம்சமா உட்காரமாதிரி எந்த திரட்டியும் இல்லாம நான் ரொம்ப அவஸ்தை பட்டேன்.. அப்போ தான் இந்த் blidget சமாசாரத்தை தெரிஞ்சுக்கிட்டேன்... இப்போ இங்கே / இங்கே பாருங்க.. ரெண்டு இடத்திலேயும் என் photoblog ல் இருக்கும் படங்களை சும்மா ஒரு ட்ரைலர் மாதிரி பார்க்கலாம்... பட்த்தின் தலைப்பிலே க்ளிக்கினால்.. நேரடியா பதிவுக்கே போகலாம்

இந்த blidget ஐ குறித்து ஏர்க்கணவே ஒரு பதிவு இங்கே போட்டிருக்கேன்.. ஆனா அந்த நேரத்திலே வெறும் english எழுத்துக்கள் தான் சரியா படிக்க முடிஞ்சுது.. தமிழ் (unicode) எழுத்துக்கள் வெறும் டப்பா-டப்பாவா தான் வந்தது... நிறையபேர் கேட்டுகிட்ட்தாலே... இப்போ தமிழ்( unicode) எழுத்துக்களும் அருமையா தரியுது...செய்முறை விளக்கம்.. இதோ

இது widgetbox.com ன் Blidget என சொல்லப்படும். அதாவது உங்கள் பிளாகையே மொத்தமா ஒரு widget ஆக்கிடலாம்.. என்னை பொறுத்தவரையில் இது photoblogs க்கு மிகச்சிறந்தது.. தேவையும் கூட...

செய்வது ரொம்ப சுலபம்
PHASE 1 :- blidget ஐ உருவாக்குவது

  1. widgetbox.com ல் ஒரு பயணர் கணக்கு உருவாக்க வேண்டும்
  2. Make Blidget ன்னு இருப்பதை தேர்வு செய்து.. உங்கள் phothoblog ன் முகவரியை கொடுக்கவும்
  3. அடுத்தது LAYOUT .. இது உங்கள் விருப்பம் பொறுத்தது.. Sidebar லே வைக்கணும்ன்னா Narrow வும்:::: header க்கு கீழே / எல்லா பதிவுகளுக்கும் மேலே ன்னா Wide ஐ தேர்வுசெய்யலாம்
  4. DISPLAY ல் header style ஐ title only ன்னு கொடுப்பது தான் photoplog க்கு சிறந்தது...(படத்தை தானே முக்கியமா காட்டணும்...படத்தை குறித்து எழுதியிருப்பதை பதிவிலே படிக்கலாமே)
  5. அப்புறம் உள்ளதெல்லாம் சிம்பிள்.. நீங்கள் செய்து கொண்டிருக்கும் இந்த blidget ஐ பொதுஜன பார்வைக்கு வைக்கவும் மற்றும் உங்கள் பிளாக் குறித்து ஒரு சில வரிகளில் சொல்லணும்..
ஈஸி தானே...blidget ஐ publish பண்ணவேண்டியது தான்
PHASE 2 :- blidget ஐ உங்கள் பிளாகில் சேர்ப்பது
இதுக்கு அவங்களே எல்லா option ம் கொடுத்திருக்காங்க.. கீழே இருக்கும் படத்துகு மேலே mouse - move பண்ணினால்..எந்தெந்த platform ல் சேர்க்கலாம் ன்னு தெரிஞ்சுக்கலாம் ( blogger - typepad - goodle - netvibes..etc etc)
TypePad   Blogger   MySpace   Facebook   Netvibes   Pageflakes   Google   Blogger PostFreewebs   Piczo   Widget Code
நேரடியா அங்கேயிருந்தே உங்க பிளாகிலேயும் சேர்க்கலாம்.. இல்லை get code ங்கிரதை க்ளிக்கி ஜாவஸ்க்ரிப்ட் கோடை தேர்ந்தெடுத்து... உங்கள் பிளாகின் template-page elemnts - add new elelents - html hjavascript element ன்னு செய்தும் சேர்க்கலாம்

அம்புட்டுத்தேன்... ஒண்ணும் பிரம்மவித்தை இல்லை.. இது ஒரு மீள்பதிவ

Wednesday, August 22, 2007

BloggerDraft அறிமுகபடுத்தும் Search-Widget

நாம எல்லாரும் கூகிளில் பல விஷயத்தை எப்போதுமே தேடிகிட்டே இருப்போம்... சில பேருக்கு கூகிளின் பக்கம் தெரிய சில நொடிகள் காலதாமதமானாலே கையெல்லாம் வெட-வெடன்னு நடுக்கம் வரும்.. அவ்வளவு தூரம் " தேடுதல்"" லில் ஈடுபாடு... பல விஷயங்களை இப்படி தேடி-தேடி தான் படிச்சு தெரிஞ்சுக்கிறோம். சில நேரத்திலே நம்ம பிளாகிலே கூட ஒரு தேடுதல் பொட்டி இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்ன்னு நீங்க நினனச்சுப்பார்த்துண்டா ? ? ?ஏதோ ஒரு டாபிக்கை பார்த்தோம்... "அட.. இதை குறித்து நானும் ஒரு பதிவு போட்டேனே... எங்க போச்சு ? ? ? ".... ( இன்னேரத்தில் 150 பதிவுகள் போட்டிருப்பீங்க... ஒவ்வொண்ணாவா தேட முடியும் ? ? )... ஒரு வேளை உங்க வலைபதிவுக்கு வருபவர் தேடும் சொல் உங்க label லே இல்லாமல் இருக்கலலாம்... இந்த மாதிரி சந்தர்பங்களில் இந்த "தேடுதல் பொட்டி" search widget ரொம்பவும் உபயோகமா இருக்கும்.

என்னடா.. நம்ம template - page elements - add elements லே.. இங்கே சொல்லறா மாதிரி search-widget எதுவும் இல்லையேன்னு அவசரபடாதீங்க... இந்த search -widget .. பிளாகரின் புதிய அறிமுகங்கிரதால.... நம்ம தினமும் பார்க்கிர Dashboard லே தெரியாது....அதனாலே உங்க வலையுலாவியில் draft.blogger.com ன்னு type பண்ணூங்க....உங்க dashboard தெரியும்.. அப்படியே மேலே பாருங்க .... Blogger in Draft ன்னு போட்டிருக்கும்.. அதாவது.... பிளாக்ர் ஏதாவது புதுசா அறிமுகபடுத்தினா... அது இனிமேல் உங்கள் Template - page elements - Add New elements ல் தெரியும்...

இதை சேர்க்கும் போது எங்கெல்லாம் தேடலாம்ன்னு உங்க கிட்டே கேக்கும்..
  1. இந்த பதிவில் மட்டும் தேடு - Results from This Blog
  2. இந்த பதிவில் குடுத்திருக்கும் சுட்டிகளில்் தேடு -Results from the Links used here
  3. இணையம் முழுவதும் தேடு - Results from The Web


இப்படி 3 சாய்ஸ் இருக்கு... இதிலே உங்களுக்கு தேவையானதை சொடுக்கி தேட சொல்லலாம். மற்ற விட்ஜெட்டுகள் போலே இதை click - and Drag முறையில் எங்கே வேணும்ன்னாலும் வச்சுக்கலாம்.. தேடுதல் விவரங்கள் ( பதிவுகளின் தலைப்பு.. etc etc) எல்லாமே எப்பவுமே... எல்லா பதிவுகளுக்கு மேலே தான் தேரியும்..

இந்தபொட்டி எப்படி வேலை செய்யும்... தேடிய பிறகு Results ஐ எப்படி காட்டும்ன்னு உங்களுக்கு பரிசோதனை செய்து பார்க்க இங்கே க்ளிக்கவும்

Friday, August 17, 2007

கோயிந்தும் விட்ஜட்டும்

"இன்னாமே பொன்சு, இன்னும் சென்னைல தான் கீறியா?" என்றபடி வந்தான் கோயிந்து..

"ஏன்? இங்க தானே இருக்கேன்?!" என்றபடி புரியாமல் பார்த்தேன் நான்..

"இல்ல, அப்படியே ரொம்ப புரியாத தமிழ்ல எழுதித் தள்ளுறியாமே! அதான் டைம் ட்ராவல் பண்ணப் போயிட்டியோன்னு..."

"கோயிந்து, என்ன இப்படி கிண்டலடிச்சா எப்படி? என்ன விசயமா வந்த?"

"அதான் ஏதோ, இன்னா துண்டு அது, ஆங், நிரல் துண்டு நிறுவுனராமே! அத்தப் பத்தி ஏதோ சொன்னியாம், உனக்கு மட்டுமே பிரியற மாதிரி எழுதிட்டு உதவிப் பதிவுன்னு வேற சொல்லிகினு சுத்துறியாம்.. ஒரே கம்ப்ளேய்ண்ட் மேல கம்ப்ளேய்ண்ட் உம்மேல.. ."

விவகாரமான புகாராக இருக்கிறதே என்று பயந்து கொண்டே, குரலே எழும்பாமல் "இப்ப அதில என்ன புரியலை உனக்கு? ரொம்ப தெளிவாத்தானே எழுதிருக்கேன்.." என்றேன்

"நல்லா எழுதினியே தெளிவா! ஒரு மண்ணாங்கட்டியும் புரியலை.. என்னை மாதிரி சாதா ஜனங்களுக்கும் பிரியற மாதிரி சொல்ல தாவலியா?! அதான் உன் கழுத்துல துண்டப் போட்டு இந்த நிரல்துண்டக் கத்திட்டு வரச் சொல்லி தல அனுப்பிவச்சிருக்காரு என்ன.. இது ஒனக்கு மொத எச்சரிக்கை.. இந்த தபா ஒயுங்கா சொல்லலைன்னு வையி.... "

"சொல்லலைன்னா?... " இந்த முறை என் குரல் எனக்கே கேட்கவில்லை..

"அப்பால தல பாலா நேரில் வந்திடுவாரு.. என்ன நடக்கும்னு யாருக்குமே தெரியாது.." பயங்கரமாக முடித்தான் கோயிந்து..

"கோயிந்து, அந்தப் பதிவ எத்தனை நல்லா எழுதி இருக்கேன்.. இப்படிச் சொல்லிட்டியே! இப்ப என்ன புரியலை அதில?" என்றேன் லேசாக நடுங்கியபடி

"விட்ஜட்டுன்னு அழகான பேரு இருக்க சொல, அதென்ன துண்டு, துப்பட்டான்னு பேஜாரான ஒரு பாஷைல எளுதிகிட்டு?.. சரி அத்த வுடு.. இப்ப இந்த விட்ஜட் இன்ஸ்டால்லர் எதுக்குப் பயன்படுது? "

"அது வந்து கோயிந்து, இந்த விட்ஜட் இன்ஸ்டாலர் வச்சி ஏதாச்சும் குட்டி நிரல் துண்டை.."

"இஸ்டாப்பு... மறுபடி துண்டுக்கு வந்திட்டியா! இந்த துண்டு, குண்டு, நிரலி, குறளி எல்லாம் இல்லாம, நல்ல டமில்ல, பிரியற மாதிரி, விட்ஜட்டு, கோடுன்னு சொல்லு.. இல்லையின்னா..."

விட்ஜட்டும் கோடும் நல்ல தமிழான மாயத்தைக் கண்டு என்னை நொந்து கொண்டு தொடர்ந்து சொல்ல ஆரம்பித்தேன்.

"சரி கோயிந்து.. இனி எல்லாருக்கும் பிரியிற தமிழ்லயே சொல்றேன்.. விட்ஜட் என்கிறது இப்ப புதுப்ளாக்கர் கொடுத்திருக்கும் ஒரு சேவை.. சின்னச்சின்ன விளம்பரம், செய்தியோடை, படம் எதுனாச்சும் உங்க பதிவில் போட இந்த விட்ஜட் உதவியா இருக்கும்.. "

"இஸ்டாப்பு" என்றான் கோயிந்து..

"என்ன?" என்பது போல் நிமிர்ந்து பார்த்தேன்.

"கூவத்து ஓடைலயே தண்ணி இல்லை.. காஞ்சு போன செய்தியோடையை பதிவுல போட்டு இன்னா பண்ணுறது?"

"கோயிந்து, இது அந்த மாதிரி ஓடை இல்லை.. பதிவோட ஓடை.. feed, இதை போட்டா நீ போடுற ஒவ்வொரு இடுகையும் இதில் அப்டேட் ஆகும். தெரியும். பிரியுதா? ச்சே.. புரியுதா?" என்றேன்

"இப்பிடி பிரியுறாப்புல சொல்லுன்னு இன்னும் எத்தினி தபா சொல்லணுமோ ஒனக்கு! ம்கும்.. " அலுத்துக் கொண்டான் கோயிந்து..

"சரி, இந்த விட்ஜட்டை என் பதிவில் நான் போடுறது சுலபம். ஆனா மத்தவங்க பதிவில் நான் விரும்பும் விட்ஜட் வரணும்னா அதுக்கும் புது ப்ளாக்கரில் சுலப வழி இருக்கு.. அது தான் விட்ஜட் இன்ஸ்டால்லர் அதாவது நிரல்துண்டு நிறுவுனர்" அந்த வார்த்தையைக் கேட்டவுடனேயே மீண்டும் துண்டை எடுத்து மிரட்டிய கோயிந்தை அட்ஜஸ்ட் செய்தவாறே தொடர்ந்தேன்..

"விட்ஜட் இன்ஸ்டால்லர்ங்கிறது ஒரு சின்ன பட்டன் மாதிரி இருக்கும். இதை அமுக்கினதும் உங்க புது ப்ளாக்கர் பதிவுகளில் எதில் விட்ஜட்டை போடுறதுன்னு கேட்கும். எதுன்னு முடிவு சொன்னது அதில் போட்டு அழகாக்கி வுட்ரும்.. உதாரணத்துக்கு இந்த பதிவில் வலப்புறம் உள்ள தமிழ்99 பட்டனைத் தட்டிப் பாரு!"

"அட!" என்றான் கோயிந்து, அதைத் தட்டிப் பார்த்து தன் பதிவில் சேர்த்த பின்னர். "சரி, இதை இப்ப எப்படி நான் பண்ணுறது?"

"சொல்றேன். ரொம்ப சுலபம். கொஞ்சமே கொஞ்சம் HTML தெரிஞ்சாலே போதும். அதிகம் வேண்டாம். முதல்ல நீ எந்த விட்ஜட் கொடுக்கணுமோ, அதை உன்னோட சொந்த ப்ளாக்குல ஒரு பக்கத்துல போட்டு வச்சிக்கணும். இப்ப இந்தப் ப்ளாக்குல ஒரு தமிழ்99 விட்ஜட் போட்டுருக்கம் இல்ல, அதையே உதாரணமா எடுத்துக்குவோம். இந்த விட்ஜட்டை எங்க பதிவுல போட


ங்கிற மாதிரி கோட் எழுதி அதை Add New widget வழியா பதிவுல போட்டுக்கிடணும்.."

"ஆமாம் பொன்சு, இது மாதிரி விட்ஜட் போட அல்லாருக்குமே தெரியுமே.. இதைத் தானா இத்தினி நீட்டி மொழக்கி சொன்ன? மத்தவங்க பதிவுல வர இன்னா செய்யணும்? அத்தச் சொல்லு மொதல்ல.."

"இரு கோயிந்து, அடுத்து அதான்.. " என்று சமாதானப்படுத்திவாறே அடுத்த பகுதியை ஆரம்பித்தேன்.

"இப்ப நம்ம பதிவில் விட்ஜட் போட்டாச்சு.. இதை மத்தவங்க பதிவில் போட விட்ஜட் இன்ஸ்டால்லர் உருவாக்கணும். ஒரு சுலபமான விட்ஜட் இன்ஸ்டால்லரோட கோடு கீழ சொல்லிருக்கிறது மாதிரி இருக்கும்..



"இரு இரு.. இதில எதெல்லாம் மாத்தினா எனக்கு ஒரு சுலபமான விட்ஜட் உருவாக்க முடியும்.. அதை மட்டும் சொல்லு.. போன தபா மாதிரி பார்ட் பார்ட்டா பிரிச்சி மேஞ்சி உசுர எடுக்காத.."

"ம்ஹூம்.. உன்னைக் குத்தம் சொல்ல முடியாது கோயிந்து.. மெட்ராஸ் ட்ராபிக்ல ஷார்ட் கட்டுல போயே பழகிட்ட! என்னத்த பண்ண?!" அலுத்துக் கொண்டே கோயிந்தின் மூடுமாறுவதற்குள் சொல்ல ஆரம்பித்தேன்...

"இதுல, widget.title னு இருக்கு பத்தியா.. அது தான் மத்தவங்க பதிவில் தெரியப் போகும் உன் விட்ஜட்டின் தலைப்பு. தலைப்பு என்னவா இருக்கணுமோ, அதை அந்த வரியில் இருக்கும் 'value=' வுக்கு அப்புறம் கொடுக்கணும்.."

"ஓ.. அப்ப உன்னோட விட்ஜட்டுக்கு டைட்டிலு தமிழ்99, கரீகிட்டா? "

"ரொம்ப சரி. அடுத்து, widget.contentனு இருக்கு பத்தியா, அந்த வரியை மாத்தணும்.. உன்னோட பக்கதுலயே உருவாக்கி வச்சிருந்தியே ஒரு விட்ஜட், அதோட கோட் என்ன இருக்கோ, அது முழுக்கவும் இந்த widget.content வரியின் value பகுதியில் கொடுக்கணும்.."

"சொல்றதப் பாத்தா சுளுவாதாங்கீது.. ஆனா அதுல நீ இப்ப எளுதியிருக்கது பிரியவேல்லேயே!"

"அது என்னன்னா, <,> இது ரெண்டும் இந்த widget.content ஓட value பகுதியில் வரக் கூடாது.. அதுனால < இருக்கிற இடத்தில் எல்லாம் &lt; உம்.. > இருக்கிற இடத்தில் எல்லாம் &gt; உம் போடணும். அப்படி மாத்தி போட்டா இந்த மாதிரி வந்திடும்.. அதான் குழப்பமா இருக்கு.. "

"அப்ப இவ்வளவு தானா? ரொம்ப ஈஸி தான்.. ரெம்ப நாளா ஒரு பொகச விட்ஜட் போட்டு வுடணும்னு நெனச்சிகினே இருந்தேன்.. இப்பத் தான் அதுக்கு வேள வந்திருக்கு.. வர்ட்டா? " என்றபடி கிளம்பினார் கோயிந்து..

"அடப்பாவி.. இதான் சொந்த செலவில் சூன்யமா?! " என்று கேட்டுக் கொண்டே நான் வாயைப் பிளந்தது அவனுக்கு காதில் கேட்கவே இல்லை போலும்..

பழைய கோயிந்து இடுகைகள்:
1. பாலபாரதி - இஞ்ஜினியர், தமிழ் வலைப் பதிவுகள்
2. எடிட்.. edit.. எடிட்…
3. மீண்டும் கோயிந்து
4. பாலபாரதியின் செல்போன்

Thursday, August 9, 2007

Paint.net-- Photoshop ன் அம்சங்கள் கொண்ட ஒரு இலவச மென்பொருள்

உங்களில் பலபேர் கிட்டே photoshop (any version... the latest is CS3) இருக்கும்.. ஆதை விட்டா image - editing க்கு வேறே எந்த மென்பொருளும் கிடையாதுன்னு வாதாடுகிரவங்களும் இருப்பீங்க.. ஒண்ணும் தப்பில்லே.. நானும் அப்படி தான் சொல்லுவேன்.. ஏன்னா நானும் ஒரு photoshop fanatic.. வேறே ஏதாவது மென்பொருள் அதை விட சூப்பர்னு யாராவது சொன்னா.. ஒரு காலத்திலே சண்டைக்கே போய்டுவேன்...

ஆனா எல்லாராலெயும் photshop பெரமுடியாதில்லையா... Trial- version 30 நாட்களுக்கு பிறகு உபயோக படுத்த முடியாமல் போவிடுகிரது...மட்டுமில்லை... trial version லே எல்லா விதமான அம்சங்களும் இருப்பதில்லை... ஆனாலும் நம்ம மக்கள் உள்ளதை வச்சு அர்புதமா photo-editing எல்லாம் பண்ணராங்க. அப்படி photoshop ஐ முழுமையா பயன்படுத்த முடியாத்தாவங்களுக்கு இந்த Paint.net ஒரு வரபிரசாதம்.... ஏன்னா.....
  1. இது ஒரு இலவச மென்பொருள்... ...Paint.net
  2. அதனால்... குறிப்பிட்ட காலத்துக்கு தான் பயன்படுத்த முடியும்ன்னு "கெடு" எதுவும் கிடையாது
  3. இதன் அளவு வெறும் 1.4 MB தான்....பட்டியலில் இருக்கும் ஏதாவது ஒன்றை தேற்வு செய்து தரவிறக்கம செய்யலாம்் Download here


  4. இதன் ஒவ்வொரு ஆப்ஷனும் photoshop ஐ போன்றதே...photoshop லே என்னென்ன பண்ண முடியுமோ..(Brightness.. color..crop.. curve.. hue..etc etc).. அவை அனைத்தும் இதெலேயும் பண்ணலாம்....photoshop ன் சில advanced அம்சங்களை தவிர
  5. இதிலும் layer ல் நாம் மாற்றங்கள் செய்யலாம்...


  6. இதன் அம்சங்களை கற்றுக்கொள்ளவும்.. தெரிந்துகொள்ளவும் இவர்களின் Online Documentation்ட இருக்கு...மறக்காம படிச்சுப்பருங்க
  7. புதிதாய் உபயோகிப்பவருக்காக... இவர்களின் உதவி-குழு ரொம்பவும் அருமை.... Paint.net forum
  8. Paint.net தலத்தில் என்னென்ன நிகழ்வுகள் இருக்குன்னு நமக்கு அவங்களுடைய பிளாகிலே சொல்லறாங்க... Paint.net's Blog
  9. Animated Gif ஐ தவிர எல்லா images ம் இதில் நீங்கள் திருத்தலாம்
ஒரு முறை தரவிறக்கம் செய்து உபயோகித்து பாருங்க.. கண்டிப்பா இது உங்களை ஏமாற்றாத்துன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.. உங்க கருத்தை சொன்னா மற்றவர்களுக்கும் உதவியா இருக்கும்