Quick refrence

Download Links:- eKalappai 2.0b(Anjal) | eKalappai 2.0b (tamilnet99) - இங்கே தேர்வு செய்யவும்,
Key board layout :- e- kalappai (Anjal) |e-kalappai (Tamil 99) இதே மாதிரி இன்னும் ஏதாவது quick refrence சேர்த்தால் உபயோகமாக இருக்குமானால் பின்னூடத்தில் தெரிவிக்கவும்

Thursday, January 17, 2008

PDF பாடம்-2... PDF கோப்புகளை தரவிறக்கம் செய்யாமலே வலைப்பதிவிலுந்து நேரடியாக படிக்கலாம்

தகவல் பரிமாற்றத்துக்கு pdf கோப்புகள் எவ்வளவு முக்கியம் , மற்றும் சாதாரண கோப்புகளை pdf ஆக எப்படி மாற்றலாம்ன்னும் பார்த்தோம். தனிப்பட்ட கோப்புகளை சம்பந்தபட்ட நபருக்கு மெயில் அனுப்பலாம்.. ஆனால் to cater to a vast audience , ஒவ்வொருவருக்கும் மெயில் அனுப்பவது சாத்தியமில்லை .. அப்போ என்ன பண்ணுவீங்க.. உங்களுடைய வலைப்பதிவிலே சம்பந்தபட்ட pdf கோப்புக்கு இணைப்பு குடுத்து எல்லாரையும் தரவிறக்கம் செய்து படித்துக்கொள்ளும்படி சொல்லுவீங்க.. (தப்பில்லை)

அதிலே என்னை மாதிரி சோம்பேரியெல்லம்.. அப்புறம் படிச்சுக்கலாம்ன்னு... தாளத்திலே போட்டு,... கடைசீயிலே படிக்காமலேயே போயிடுவோம்.. இந்த மாதிரி இருக்கிரவங்க கவனத்தை ஈர்க்க pdf கோப்புகளை நேரடியாகவே வலைப்பதிவில் காட்டினால்... ஒரு glance பார்த்துவிட்டு.. இஷ்டபட்டா தரவிறக்கம் கூட செய்ய வாய்ப்பிருக்கு ... ( ஸோ .. வாசகர்கள் இன்னும் கொஞ்ச நேரம் உங்க வலைப்பதிலே இருப்பாங்க.. படிப்பாங்க)

என்ன நம்பிக்கை வரலையா.. கீழே இருப்பது ஒரு சோதனை pdf கோப்பு.. இதை நேரடியா பதிவிலிருந்தே படிக்கிரா மாதிரி செஞ்சிருக்கேன்.. படிக்கிரதோட மட்டும் இல்லாம.. "கை" போல இருக்கும் கருவிய்யை வைத்து பக்கத்தை மேலும்-கீழும் நகர்த்தாலாம் --- I போலே இருக்கும் கருவிய்யைக்கொண்டு வேண்டிய text ஐ தேற்வு செய்யலாம் --- "ஜூம்" க்கு பக்கதிலே இருக்கும் slider ஐ உபயோகப்படுத்தி பக்கத்தை பெரிதாக்கி படிக்கலாம் இதை எப்படி செய்யலாம்ன்னு செய்முறை விளக்கம் கீழே ..

இது சாத்தியமாகிரதுக்கு முக்கிய காரணம் Scribd.com. இந்த தளம் pdf மட்டுமில்லை.. பல கோப்பு வடிவங்களை பதிவிலே நேரடியாக காட்ட வசதி செஞ்சிருக்காங்க.. மேலும் விவரங்களுக்கு இவங்களுடைய FAQ ஐ படிக்கவும் .. நீங்க காட்ட விரும்பும் கோப்பை.. பிரிண்ட் செய்யலாமா / கூடாதா ..னெல்லம் தேர்வு செய்ய வசதி இருக்கு.. எல்லா ஆப்ஷணையும் நிதானமா படிச்சு செயல்படுங்க

இந்த மாதிரி இரு pdf கோப்பை பதிவிலே நேரடியா காட்ட என்ன செய்யணும்ன்னா ....
UPLOADING AND CONVERTING IN SCRIBD

 1. http://www.scribd.com ல் ஒரு பயணர் கணக்கை உருவாக்கவேண்டும்

 2. UPLOAD ன்னு சொல்லும் சுட்டிய்யை (கண்டுபிடித்து) க்ளிக்கவேண்டும்

 3. நீங்க மற்றவர்களுடன் பகிந்து கொள்ள விரும்பும் கோப்பை (pdf) நேரடியாக உங்கள் கணினியில் இருந்தும் (அல்லது) url லிருந்தும் வலையேற்றலாம்

 4. சரியாக upload செய்தாகிவிட்டதுக்கு அறிகுறி... உங்கள் கோப்பு flash document ஆக மாற்றப்படுவதை பார்க்கலாம் ... (Converting....ன்னு பார்ப்பீங்க)

 5. வரிசயில் உங்கள் கோப்பு என்ன இடத்தில் இருக்குங்கிரதை பொறுத்து 10 min லிருந்து 30 min ஆகும்.. முழுசா convert ஆக

 6. converstion complete ன்னு ஆனதுக்கப்புறம்.. அங்க கோப்பை க்ளிக்கினா... scribd தளத்திலே உங்கள் pdf கோப்பை நேரடியாக பார்க்கலாம்...( இனி அடுத்தது.. இதை உங்க சொந்த வலைப்பதிவில் எப்படி தெரியச்செய்வது ...)

SCRIBD லிருந்து pdf கோப்பை வலைப்பதிவில் நேரடியாக காட்ட

 1. Scribd பக்கத்தில் உங்கள் pdf கோப்பை பார்க்கலாம்ன்னு சொன்னேனில்லையா.. அதே பக்கத்திலேயே.. இடது பக்கம்... இந்த கோப்பை எப்படியெல்லாம் பகிர்ந்துக்கொள்ளலாம்ன்னு .. நிறைய option குடுத்திருப்பாங்க

 2. அதில் ஒன்று தான் EMBED ன்னு இருக்கும் ( சில நேரத்தில் இந்த EMBED option உடனடியா தெரியாது.. என்னாச்சோ.. ஏதாச்சோன்னு படப்படாதீங்க.. சில மணி நேரம் விட்டு மறுபடியும் வந்து பாருங்க.. கண்டிப்பா EMBED option இருக்கும் ... எனக்கு 1 நாள் ஆச்சு EMBED option தெரிய)...

 3. EMBED option ல் இருக்கும் code ஐ copy செய்து.. உங்கள் பதிவில் ஒட்டினால் போதும்.. .. pdf கோப்பு உங்கள் பதிவுக்குள்ளேயே தெரியும்

 4. அதிலே இருக்கும் இன்னும் advanced options ஐ ட்ரை பண்ணி .. pdf தெரியும் பக்கத்தை உங்கள் பதிவின் நீளம்- அகலத்துக்கு தோதா மாற்றி பிரசுரிக்கலாம்

 5. அவ்வளவு தான்.. அதுக்கப்புறம் வெறும் copy paste தான்


இந்த செய்முறை விளக்கத்தை ஆங்கிலத்தில் படிக்க..

9 comments:

வடுவூர் குமார் said...

இது சூப்பர் ஆனாலும் இன்னொரு கணக்கு திறந்து ஆடிக்கு ஒரு நாள் அம்மாவாசைக்கு ஒரு நாள் போகிற ஆட்களுக்கு மேலும் ஒரு சிரமம்.
பிளாக்கரிலேயே அந்த வசதி வந்தா இன்னும் நன்றாக இருக்குமே?!

Deepa said...

உண்மை தான் குமார்.. அதுக்கு தான் இந்த மாதிரி கணக்குகளுக்கு.. same username - same paswrd வச்சுக்கணும்.. மறக்க சான்ஸ் கம்மி... எல்லாத்தையும் பிளாகராலே குடுக்க முடியாதுன்னு தானே இதெல்லாம் தேடி போக வேண்டியிருக்கு.. ஸோ.. பிளாகர் இந்த வசதி கொண்டுவர வரைக்கும்.. இதை வச்சு சமாதான பட்டுக்க வேண்டியது தான் .. :)

வவ்வால் said...

நல்லத்தகவல் நன்றி!

நான் பெரும்பாலும் கூகிளில் சர்ச் செய்யும் போது வரும் பிடிஎப் கோப்பாக மட்டும் இருக்கும் தளங்களை "view as html" என்று கூகிளில் தரும் முறையில் படித்துக்கொள்வேன், அப்போது எல்லாம், நேராகவும் அத்தளத்துக்கு போனால் இப்படி படிக்கும் வசதி இருந்தால் நன்றாக இருக்குமே என நினைப்பேன்.இப்பொழுது இப்படி ஒரு வழியை சொல்லி இருக்கிங்க!

செ. நாகராஜ் said...

link is correct as scribd.com, but in the text matter it is appearing as scribid.com. please correct it.

பொன்வண்டு said...

பயனுள்ள தகவல் தீபா !

உங்களுக்கு மட்டும் எங்கிருந்து தான் மாட்டுதோ? :)))

தமிழ்நெஞ்சம் said...

Thanks dear Friend

sathish said...

vanakam.atoz puriyara mathiri anna, aavanna solli tharramathiri blog uruvakum murai ,eluthum murai ,athai valai akkum murai soll
i tharakoodatha...?
sathish,eroe

Deepa said...

Vanakam sathish
enna solla varenga..
blog uruvakkum murai - eyhuthum murai ellaam solli irukkome..
Please follow the links in the sidebar ( vakaikal)

appuram athu enna ...
///athai valai akkum murai ///
puriyalaingalee

தமிழ்நெஞ்சம் said...

தொடர்புடைய சுட்டியாக நான் கருதுவது :


PDF file-ஐ பதிவில் எப்படி இணைப்பது? படங்களுடன் கூடிய விளக்கம்