Quick refrence

Download Links:- eKalappai 2.0b(Anjal) | eKalappai 2.0b (tamilnet99) - இங்கே தேர்வு செய்யவும்,
Key board layout :- e- kalappai (Anjal) |e-kalappai (Tamil 99) இதே மாதிரி இன்னும் ஏதாவது quick refrence சேர்த்தால் உபயோகமாக இருக்குமானால் பின்னூடத்தில் தெரிவிக்கவும்
Showing posts with label wordpress. Show all posts
Showing posts with label wordpress. Show all posts

Wednesday, January 30, 2008

உங்கள் வலைப்பதிவில் சின்னச் சின்ன இடுகைகள் இட விரும்புறீங்களா?

உங்கள் வலைப்பதிவில் சின்னச் சின்ன இடுகைகளை சிரமமின்று ஒரு நொடியில் இட விரும்புறீங்களா?

நீங்க Twitter ரசிகரா?

உங்கள் நண்பர்கள், அலுவலகப் பணியாளர்களுடன் சின்னச் சின்ன செய்திகளை குறுஞ்செய்தி போன்று இணையத்தில் பரிமாறிக் கொள்ள விரும்புகிறீங்களா? இவை பொதுப் பார்வைக்கு வராம உங்கள் வட்டத்துக்குள் மட்டும் இருக்கணும் என்று நினைக்கிறீங்களா?

அப்ப, நீங்க எல்லாரும் WordPress அறிமுகப்படுத்தி இருக்கும் prologue வார்ப்புருவைப் பயன்படுத்தலாம்.

ரவி

Monday, January 21, 2008

Wordpress.comல் 3 GB இலவச இடம்

Wordpress.com ல் 50 MB இலவச இடம் மட்டுமே இருந்து வந்தது பெரும் குறையாக உணரப்பட்டது. தற்போது இதை 60 மடங்கு உயர்த்தி 3 GB இலவச இடமாக்கி இருக்கிறார்கள்.. ஜிமெயில் போல் தொடர்ந்து இலவச இடத்தை கூட்டப்போவதாகச் சொல்லி இருக்கிறார்கள். ஒப்பீட்டுக்கு ப்ளாகரில் தற்போதைய சேமிப்பு இடம் 1 GB மட்டுமே. வேர்ட்ப்ரெஸ் தரும் கூடுதல் பயன்களையும் பார்க்கவும்.

Sunday, July 15, 2007

Wordpressல் பதிவிடுவது எப்படி? - நிகழ்பட விளக்கம்

Wordpressல் பதிவு தொடங்குவது, இடுகை எழுதுவது, அமைப்புகள் மாற்றுவது எப்படி என்பது குறித்த 13 நிமிட விளக்க நிகழ்படத்தை இங்கு பதிவிறக்கவும் (.zip கோப்பு, 31.7 MB). அதை unzip செய்து உள்ளிருக்கும் html கோப்பைத் திறந்தால் Windows உள்ளிட்ட எல்லா இயக்குதளங்களிலும் உங்கள் உலாவியிலேயே flash வடிவில் இந்த நிகழ்படத்தைக் காணலாம்.

Thursday, June 14, 2007

wordpress.comன் நீளமான தமிழ் URLகளை மாற்றுவது எப்படி?

wordpress.comல் பதிபவர்களின் இடுகைகளின் URL முகவரிகள் நீளமாக வருவதைக் காணலாம். இதனால், பக்கங்களை address barல் தட்டச்சு செய்து சென்று பார்ப்பது வரை, திரட்டிகள் மற்றும் பிற இடங்களில் இருந்து இணைப்பு தருவது வரை பிரச்சினைகள் வருகின்றன. எடுத்துக்காட்டுக்கு, கீழ் உள்ள பாமரன் அவர்களின் வலைப்பதிவின் திரைப்பிடிப்பைப் பாருங்கள்.



இந்தப் பிரச்சினையைத் தீர்க்க ஒவ்வொரு இடுகைக்கும் நாம் விரும்பும் சுருக்கமான ஆங்கில அல்லது வரிசை எண் அடிப்படையில் URLகளைத் தரலாம்.

wordpress.comல் write post பக்கத்தின் வலப்புறம் உள்ள post slug என்ற இடத்தில் உங்கள் விருப்பத் தலைப்பைத் தரலாம். இங்கு முழு urlஐத் தரத் தேவை இல்லை. மாற்றுத் தலைப்பை மட்டும் தந்தால் போதும். எடுத்துக்காட்டுக்கு, சோதனை என்று உங்கள் இடுகைத் தலைப்பு இருக்குமானால், test என்று post slug தரலாம். இல்லை, உங்கள் இடுகையின் வரிசை எண்ணோ ஏதாவது ஒரு எண்ணோ தரலாம்.

கீழே உள்ள விளக்கப் படத்தைப் பாருங்கள்.



இதே சொந்தத் தளத்தில் wordpress நிறுவி உள்ளவர்கள் options-->permalinks போய் ஒட்டு மொத்தமாக எல்லா இடுகைகளுக்கும் இந்த அமைப்பை மாற்ற முடியும்.

இங்கு, கவனிக்க வேண்டியது, இந்த நீளமான தமிழ் முகவரிகள் இருந்தால், ஒருவேளை, கூகுள் போன்ற தேடு பொறிகளில் உங்கள் இடுகைகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் கிடைக்கலாம். அதனால், சுருக்கமான முகவரி வேண்டுமா தேடு பொறிகளில் கூடுதல் முக்கியத்துவம் வேண்டுமா என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்.

மேலதிக விளக்கம் தேவைப்பட்டால் மறுமொழிகளில் கேளுங்கள்.

ரவி

Sunday, May 13, 2007

Wordpress X Blogger

வேர்ட்ப்ரெஸ் X ப்ளாகர்