Quick refrence

Download Links:- eKalappai 2.0b(Anjal) | eKalappai 2.0b (tamilnet99) - இங்கே தேர்வு செய்யவும்,
Key board layout :- e- kalappai (Anjal) |e-kalappai (Tamil 99) இதே மாதிரி இன்னும் ஏதாவது quick refrence சேர்த்தால் உபயோகமாக இருக்குமானால் பின்னூடத்தில் தெரிவிக்கவும்

Sunday, May 13, 2007

Wordpress X Blogger

வேர்ட்ப்ரெஸ் X ப்ளாகர்

28 comments:

Anonymous said...

தமிழில்,நல்லதொரு விளக்கக் கட்டுரை. நன்றி.

வெற்றி said...

ரவி,
நல்ல உபயோகமான பதிவு. கடந்தவாரம் தான் இந்த Wordpress ன் சில அனுகூலங்களை வாசித்தேன். மிக்க நன்றி.

- யெஸ்.பாலபாரதி said...

நன்றி.. ரவி... அடியேனும் கூட wordpressக்கு மாறி இருக்கிறேன். ஆனால் வார்ப்புறுவில் கை வைக்க முடியாததால்... அப்படியே நிற்கிறேன்.
(தமிழ்மணம் பட்டி போன்றவற்ரை இணைக்க முடியாமை)
:(

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

பாலபாரதி, உங்களை மாதிரி தீவிரப் பதிவர்கள் :) தனித்தளத்திலயே wordpress நிறுவலாம்..அங்க ஒரு கட்டுப்பாடும் இருக்காது !

✪சிந்தாநதி said...

ரவி

தனித்தளத்தில் வேர்ட்பிரஸ் உபயோகம் சிறப்பாக இருக்கும் என்பது உண்மைதான். ஆனால் அதில் கூட பார்வைகள் பேண்ட்விட்த் அதிகரித்தால் கட்டுப்பாடுகள், கட்டணங்கள் என பிர்சினைகள் அதிகம். புதுப்பிக்க தவறி விட்டால் தளமே இழக்கப் பட்டு விடும் அபாயமும் உண்டு.

பிளாக்கர் நமக்கு எண்ணில்லா பேண்ட்விட்த் தருகிறது. அதுவும் இலவசமாகவே.

பிளாக்கர் சொதப்பியது என்பது எனக்கும் நேர்ந்ததுண்டு என்றபோதும் இதுவரை பதிவுகள் இழக்கவில்லை.

வேர்ட்பிரஸ்காம் நிறைய வசதிகள் தந்தாலும் பிரச்சினைகள் உண்டு. கொஞ்சநாட்கள் பதியாமல் விட்டுவிட்டால் ஏற்கனவே பதிந்ததை வேர்ட்பிரஸ் குதறி விட்ட அனுபவம் எனக்கு உண்டு.

✪சிந்தாநதி said...

குறிப்பாக தமிழ்மணம் முதலிய நிரல்கள் இணைக்க முடியாமை... ஆனால் தமிழ்மணம், தேன்கூடு போன்றவை வேர்ட்பிரசின் ஓடையை பயன்படுத்தியே பதிவுகளை திரட்டவும் அது தரும் மறுமொழிக்கான நிரல்கள் பயன்படுத்தி மறுமொழிகளை திரட்டவும் செய்ய முடியும். இப்போது பிளாக்கரும் மறுமொழிக்கான ஓடை வசதி தருவதால் எளிதாக இந்த மாற்றத்தை திரட்டிகள் செயல்படுத்த முடியும். அப்போது வேர்ட்பிரசின் வசதிகள் அனைவருக்கும் எந்த இழப்பும் இன்றி கிட்ட வாய்ப்பு உண்டு

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

சிந்தாநதி, wordpress.comல் சில குறைகள் உண்டு தான். ஆனால், ஒரு சராசரிப் பயனருக்கு அதன் சேவைகள் மிகப் போதுமானவை. தமிழ் வலைப்பதிவுலகம் முழுதும் பிளாகர் போன்ற ஒரே சேவையைச் சுற்றி இயங்குவது நல்லதல்ல. ஜிலேபி எழுத்துரு பிரச்சினை போன்றவை ஒட்டும மொத்தமாக தமிழ் வலைப்பதிவுகள் அனைத்தையும் தாக்கியதை இங்கு எண்ணிப் பார்க்கலாம்.

wordpress.com க்கு மட்டும் கருவிப்பட்டை இல்லாமல் ஓடைகளில் இருந்து திரட்டுமாறு தமிழ்மணம் நிரல் எழுத முடிந்தால் நல்ல விசயம் தான்.

Anonymous said...

பயனுள்ள வகையில் எழுதியுள்ளீர்கள். நன்று.

ஒரு கருத்து

4. பொருத்து - plugin

Plugin இச்சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லாக " சொருகுநிரல் " புழக்கத்திலிருந்து வருகிறது.

நிற்க.

தனியஞ்சலில் உங்களிடம் சில ஐயங்களை கேட்டு எழுதுகிறேன். நன்றி.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

வாசன் - நுட்பச் சொற்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்டவை புழங்குவது இயல்பு. காலம் போகப் போக எளியது நிலைக்கும். எல்லா சொற்களிலும் நிரல் நிரல் என்று சேர்த்து எழுத அவசியமில்லை ன்று நினைக்கிறேன்.

--

wordpress பின்னூட்டங்களை தமிழ்மணம் திரட்டுவதாகப் பொன்ஸ் சொன்னார். இதை யாராவது உறுதிப்படுத்தினால் நன்று

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

//wordpress பின்னூட்டங்களை தமிழ்மணம் திரட்டுவதாகப் பொன்ஸ் சொன்னார். இதை யாராவது உறுதிப்படுத்தினால் நன்று//

தனித்தளத்தில் நிறுவப்பட்ட wordpres குறித்தே பொன்ஸ் சொல்லி இருக்கிறார். அது உண்மை தான். wordpress.com குறித்து யாராவது உறுதிப்படுத்தலாம்

Boston Bala said...

---wordpress.com குறித்து யாராவது உறுதிப்படுத்தலாம்---

இயலாது. இந்த பாதிப்பினால்தான் மேலும் பலர் தாவாமல் இருப்பதாக சொல்கிறார்கள் ;)

Anonymous said...

வாசன் - நுட்பச் சொற்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்டவை புழங்குவது இயல்பு. காலம் போகப் போக எளியது நிலைக்கும். எல்லா சொற்களிலும் நிரல் நிரல் என்று சேர்த்து எழுத அவசியமில்லை ன்று நினைக்கிறேன்.

தமிழ் கலைச்சொற்கள் பரவலாக, மக்களிடையே இயல்பாக புழக்கத்திலிருக்க, ஏற்கனவே இருந்து வரும் சொற்களை பாவிக்க வேண்டும்.

ஒரே சொல்லுக்கு இணையாக பல சொற்களை உருவாக்கி உலாவ விடுவது குழப்பத்தைத் தரும். சொருகுநிரல் எனும் plugin ஐ குறிக்கும் தமிழ்ச்சொல், கடந்த பல வருடங்களாக இருப்பது. மேலும் 'பொருத்து' என்பது மொட்டையாக, பொத்தாம் பொதுவாக உள்ளது.

சொருகுநிரல் எனும் சொல் 'குறிப்பிட்ட ஒரு அருத்தத்தை' படிப்பவருக்கு கொடுக்கும். பொருத்து போன்ற சொற்கள் சிந்தனைகளை ஊட்டாது.

Deepa said...

////////////////////////////////
நுட்பச் சொற்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்டவை புழங்குவது இயல்பு
//////////////////////////////////
Would it be possible to develop a glossary for technical english words & their corresponding tamil words...

like a bloggers' blog dictionary in Tamil

இவ்வளவையும் தமிழில் எழுதினா நிச்சயமா எனக்கே புரிஞ்சிருக்காது.. அதான்.. மன்னிச்சுக்கோங்க..

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

வாசன் - ஆங்கிலத்திலே கூட plugin, add-ons, extensions என்று ஒரே பொருள் தரும் பல சொற்கள் இருப்பதைக் காணலாம். இனி வரும் சொல் குறித்த உரையாடல்களை நாம் தமிழ் விக்சனரி குழுமத்தில் செய்வது பொருத்தமாக இருக்கும். அங்கு உங்களை வரவேற்கிறேன்.

தீபா - நான் எழுதும் கட்டுரைகளின் இறுதியில் பெரும்பாலும் அருஞ்சொற்பொருள் (glossary :)) தருகிறேன். தமிழ் விக்சனரி தளமும் பொருள் அறிய உதவும்.

பொன்ஸ்~~Poorna said...

தீபா,
ta.wiktionary.com இல், இவ்விதமான நுட்பச் சொற்களுக்குத் தமிழ்ச் சொல் தருகிறார்கள்.. உங்களுக்குத் தேவையான சொற்களை அங்கே தேடலாம்..

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

http://ta.wiktionary.org - சரியான முகவரி

மு. மயூரன் said...

ரவி,

சுருக்கமாகச்சொன்னால்,

wordpress இனை பயன்படுத்துவதற்கான காரணங்களாக நாம் சொல்லக்கூடியவை முக்கியமாக 2.

1. கட்டற்ற மென்பொருள்.

2. blogger ஐவிட மிகச்சிறந்த வசதிகள்.


wordpress.com இனைப்பொறுத்தவரை இவை இரண்டுமே அடிபட்டுப்போகின்றன. வார்ப்புருவைக்கூட நாம் முழுமையாக தீர்மானிக்க முடியாதளவுக்கு எம் கைகள் கட்டப்பட்டுள்ளன.

இந்த வகையில் ஒப்பிட்டால் blogger அதிகம் கட்டற்றதாக இருக்கிறது.

எனவே இங்கே wordpress.com பற்றி பேசுவது பெரிதாக எடுபடப்போவதில்லை.

wordpress மென்பொருள் பற்றி, அந்த நிலையில் நின்று பார்த்தால், அதன் முக்கிய போதாமை, அதை நாங்கள் நிறுவிப் பயன்படுத்த சொந்தமாக ஒரு வழங்கி வேண்டும். சொந்தமாக வழங்கி வாங்க பணம் வேண்டும். அதில் மென்பொருளை நிறுவத் தொழிநுட்ப அறிவு வேண்டும். பராமரிக்க தொடர்ச்சியான பணமும் வசதிகளும் வேண்டும்.

இது வலைபப்திவு என்ற தமிழர் நிலை எண்ணக்கருவுக்கே முரணானது. வலைபப்திவு இலவசமானது, அதனை பெரிதாக தொழிநுட்ப அறிவு இல்லாதவர்கள் கூட வைத்துப் பராமரிக்கலாம் என்பதுதானே அடிப்படை அறிமுகம். அதற்கே ஆப்பு விழுந்துவிடுகிறது.

இதற்கு மேலதிகமாக, ப்ளாகர் தரும் கட்டற்ற பாட்டை அகலம், படங்கள் வைத்திருப்பதற்கான இடவசதி போன்றவற்றைக் கொண்ட வழங்கிகள் விலை அதிகம்.

தொடர்ச்சியாக இணையத்தில் செயற்பட்டுக்கொண்டிருக்கும் நான் இன்னமும் சொந்தமாக ஒரு வழங்கியை நம்பி இல்லை.

வழங்கியை நம்பி என் பதிவுகளை பாதுகாக்கவும் முடியாது.

இலங்கையைப்பொறுத்தவரை சாத்தியமே இல்லை என்பது என் கருத்து.

உண்மையில் வேர்ட்ப்ரஸ் யாருக்கானது என்றால்,

உங்களைப்போல சொந்தமாக தனித்த IP முகவரி வைத்திருப்பவர்கள் தமது சொந்த கணினியில் வலைபப்திவிட அது மிகச்சிறந்தது.

அத்தோடு வலைத்தளங்கள் வைத்து பராமரிப்பவர்கள் தமது வலைப்பதிவை வைத்துப்பேண பயன்படுத்தத்தக்கது.

வேர்ட்ப்ரஸ் சிறந்தது அதனால் காசு கொடுத்து வழங்கி வாங்குங்கள் என்று சொன்னால் அந்த marketing தோல்வியடையும்.

சொந்த வழங்கியில் வலைபப்திவு வைத்திருக்க விரும்புபவர்களுக்கு வேர்ட்ப்ரஸ்.

மற்றவர்களுக்கு ப்ளாகர்.

இதுதான் தீர்வு.

மொத்தத்தில் கணினி தொடர்பான அறிவு அற்றவர்களுக்கு வேர்ட்ப்ரஸ் சரிவராது.

ஒரு வழங்கியை நம்புவதை விட கூகிளை நம்பலாம் என்ற முடிவில் தான் தபுண்டுவின் வலைத்தளத்தை கூகிள் பேஜஸ் இல் வைத்திருக்கிறேன்.

எனது viduthalai.org என்னிடம் கடனட்டை இல்லததால் நேற்று காலாவதியாகிவிட்டது ;-)

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

மயூரன் - Blogger தரப்பில் வாதாடியதற்கு நன்றி :)

தலைப்பு Wordpress என்று தான் வைக்கப்பட்டிருக்கிறது. Wordpress.com என்று வைக்கவில்லை. தமிழ்ச் சூழலில் wordpress.comன் குறைகள் குறித்தும் பதிவில் பின்னூடங்களில் அலசப்பட்டிருக்கிறது.

என் கருத்தில் கணினி, நிரலாக்க அறிவு அதிகமற்ற, வார்ப்புரு மாற்றத் தேவையுமற்ற, அவ்வளவு தீவிரமாகவோ, அடிக்கடியோ பதிவிடாத சராசரி தமிழ் வலைப்பதிவருக்கு wordpress.comன் வசதிக் குறைவுகள் ஒரு பொருட்டாக இருக்காது. பொதுவாக, web space விலை வீழ்ச்சி காரணமாக, மின்மடல் சேவை நிறுவனங்கள் கட்டற்ற சேமிப்பு வசதிகளை விரைவில் அளிக்க இருக்கின்றன. அது போல்,
வருங்காலத்தில் கூடிய சேமிப்பு இடம் அல்லது கட்டற்ற சேமிப்பு இடத்தையும் wordpress.com வழங்க முன் வரலாம்.

பிளாகரை நம்பும் அளவுக்கு wordpress.comஐயும் நம்பலாம். உலகின் top 100 தளங்களுள் wordpress.comம் ஒன்றாக முன்னேறி வருவதைக் கவனிக்கலாம்.

wordpressன் இன்னொரு சிறப்பு அதன் MU வசதி. இதைக் கொண்டு செயல்படும் அடடா போன்ற தமிழ்த் தளங்கள் கட்டற்ற சேமிப்பு வசதிகள், தொகுக்கத்தக்க தமிழ் வார்ப்புருக்கள் தருகின்றன. இந்தச் சேவையை இன்னொரு தமிழ்த் திரட்டியிடம் இருந்தும் விரைவில் எதிர்ப்பார்க்கலாம்.

அப்புறம், உங்க தனித்தளத்தையும் கூகுள் வழங்கிக்கு இணையாக நம்பகம் உள்ள தளத்தில் இருந்து நடத்தலாம் தானே? வருங்காலத்தில் கூகுள் கூட hosting தரலாம்.

என் தளத்தில் wordpress நிறுவலை click and publish முறையில் எளிதாகவே நிறுவிக்கொள்ள முடிந்தது. பெரிய கணினி அறிவு தேவைப்படவில்லை. தமிழ் வலைப்பதிவுலகில் கணினி அறிவுள்ளவர்களும் பலர் இருக்கிறார்கள்.அவர்களுக்கு இது ஒரு தடை இல்லை.

தனித்தளத்தில் நிறுவுவதில் பணம் மட்டும் ஒரு தடை என்பதை ஒத்துக் கொள்கிறேன். ஆண்டுக்கு குறைந்தது 750 இந்திய ரூபாயாவது ஆகலாம். (domain registration+hosting)

சயந்தன் said...

//மயூரன் - Blogger தரப்பில் வாதாடியதற்கு நன்றி :)//

யுவர் ஆனர்.. எனது தரப்பு வக்கீல் புளொக்கர் தரப்பு நியாயத்தை மிகத் திறம்பட நடாத்தியிருக்கிறார். அவர் அவ்வளவு விடயங்களையும் சொன்ன பிறகு நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது.. ?
ஆகவே தீர்ப்பை நன்றாக ஆராய்ந்து புளொக்கர் மீதான பொய்க் குற்றச்சாட்டை தள்ளுபடி செய்யவும்..

CAPitalZ said...

அடடா சேவை, வேர்ட்பிறஸ் கட்டற்ற மென்பொருளால் இயக்கப்படுகிறது.

இது ஒரு புதிய முயற்சி என்பதால் இன்னும் Beta ஆகத் தான் செயல்படுகிறது.

இது வேர்ட்பிறஸ் மென்பொருள் என்பதால், அனேகமான அதே வசதிகள் இங்கு கிடைக்கப்பெறுகிறது.

மேலதிகமாக, இந்த தளத்தில் உருவாக்கப்படும் வலைப்பதிவுகளில் நேரடியாக தமிழில் தட்டச்சு செய்யலாம் [Comments, Post, Page, Except, etc.]. கருத்து, இடுகை, பக்கம், சுருக்கம் என்று அனேகமான இடங்களில் நேரடியாக தமிழிலேயே தட்டச்சு செய்யலாம். இதற்கு தமிங்கிலம் [phonetic] முறை (அ) தட்டச்சு [பாமினி - Baamini] முறை என பயனர் (அ) அளுநர் [admin] தெரிவுசெய்யலாம்.

இதைவிட தமிழ் வலைப்பதிவர்கள் உருவாக்கிய அடைப்பலகைகள் [Templates/ Themes] சேர்க்கப்பட்டிருக்கிறது.

ஒரு சோதனை போட செல்லவேண்டிய அடடா வலைப்பதிவு
http://1soothanai.adadaa.com/

Anonymous said...

மயூரன் : நல்ல கருத்துக்கள். சொந்த தளத்தில் இயக்குவதற்கு வேர்ட்பிரஸ்.. நுட்ப அறிவு இல்லாதவர்களுக்கு ப்ளாகர் என்பது மிகச் சரி.

ஆனால், புது ப்ளாகர் பல விதங்களில் கடுப்பேற்றுகிறது.. அனைவருமே tag என்ற குறிச்சொற்களைப் பயன் படுத்தும் போது, அதென்ன புதுசா label? Archives இன் tree வடிவமும் அத்தனை சிலாக்கியமாக இல்லை.. புதுசாக ஒரு வேர்ட்பிரஸ் தளத்திற்குப் போனால், அதன் முகப்புப் பக்கத்திலேயே எத்தனை விவரங்கள் இருக்கின்றன.. ப்ளாகரிலே எல்லாவற்றுக்கும் விட்ஜெட் போடு என்றால், நுட்ப அறிவு இல்லாதவர்கள் என்ன செய்வார்கள். ப்ளாகரிலே நுட்ப அளவிலே செய்ய வேண்டிய மாற்றம் நிறைய இருக்கிறது.

வேர்ட்பிரஸ்.காம் இலே சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன. ஆனால், ஒவ்வொன்றாகத் தளர்த்திக் கொண்டே வந்தால், இறுதியில், வேர்ட்பிரஸ் சேவைதான் சிறப்பானதாக இருக்கும்.

wordpress MU வை வைத்து, இலவச வலைப்பதிவுச் சேவையை அளிக்கிறவர்கள் இருக்கிறார்கள். உதாரணமாக weblogs.us தற்போது அவர்கள் புதிய வலைப்பதிவுகளுக்கு இடம் கொடுப்பதில்லை. adadaa.com , தமிழ் வலைப்பதிவுக்கென்றே, வேர்ட்பிரஸ் வலைப்பதிவுச் சேவையை அளிக்கிறது.. இவை, ப்ளாகரை விட பல விதங்களில் சிறந்தது.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

//நல்ல கருத்துக்கள். சொந்த தளத்தில் இயக்குவதற்கு வேர்ட்பிரஸ்.. நுட்ப அறிவு இல்லாதவர்களுக்கு ப்ளாகர் என்பது மிகச் சரி.//

பிரகாஷ் - wordpress.comக்கும் நுட்ப அறிவு தேவை இல்லை. அங்கு தற்போது வார்ப்புரு தொகுக்க இயலாது. 50MB க்கு மேல் இடம் கிடையாது. இந்த இரண்டும் பிரச்சினையில்லாத எத்தனையோ தமிழ் வலைப்பதிவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு wordpress.com அருமையான தெரிவு.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

சயந்தன் -

//ஆகவே தீர்ப்பை நன்றாக ஆராய்ந்து புளொக்கர் மீதான பொய்க் குற்றச்சாட்டை தள்ளுபடி செய்யவும்..//

நாங்கள் எதிரியைக் குறை சொல்வதில்லை..எங்கள் நிறைகளை மட்டுமே அடுக்குகிறோம் :)

பிரகாஷ் -

//அனைவருமே tag என்ற குறிச்சொற்களைப் பயன் படுத்தும் போது, அதென்ன புதுசா label? Archives இன் tree வடிவமும் அத்தனை சிலாக்கியமாக இல்லை..//

ஆஹா, இது பெரிய பிரச்சினை இல்லீங்க :) ஜிமெயில், google reader எல்லாத்திலயும் உள்ள மாதிரி கூகுள் தயாரிப்பான பிளாகரிலும் லேபல் என்கிறார்கள்.

அப்புறம் இந்த archive அடுக்கு முறை இப்ப wordpress.comலயும் வந்திருக்குன்னு நினைக்கிறேன். இது தவிர, பிற வகை அடுக்குகளை blogger வழங்குகிறது தானே?

மு. மயூரன் said...

//வேர்ட்பிரஸ்.காம் இலே சில கட்டுப்பாடுகள் இருக்கின்றன. ஆனால், ஒவ்வொன்றாகத் தளர்த்திக் கொண்டே வந்தால், இறுதியில், வேர்ட்பிரஸ் சேவைதான் சிறப்பானதாக இருக்கும்.//

நூறு வீதம் கடைந்தெடுத்த உண்மை.

அதற்குப்பிறகு எதற்காக பிளாகர் பயன்படுத்த வேண்டும்?

கட்டற்ற நிரலாக, கட்டற்ற நிரல்களுக்கே உரிய அபரிமிதமான வளர்ச்சியை காட்டும் வேர்ட்பிரசை விட்டுவிட்டு பிளாகரும் மண்ணாங்கட்டியும்!

Anonymous said...

வோர்டுபிரஸிலே வந்த பின்னூட்டங்களை, தமிழ்மணத்தில் அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகளில் வரச் செய்வது எப்படி...?
தமிழ்மணம் தானாக திரட்டிக்கொள்வதாக படவில்லையே...!

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

wordpress.com மறுமொழிகள் இது வரை தமிழ்மணத்தால் திரட்டப்படுவதில்லை. wordpress.com பயனர்கள் பலரும் complaints@thamizmanam.com க்கு இது குறித்து எழுதினால் முன்னுரிமை கொடுத்து கவனிக்கத் தூண்டுகோலாக இருக்கலாம். இது குறித்து தமிழ்மணத்தின் கவனம் இருப்பதாகவே அறிகிறேன். அடுத்தடுத்த மேம்பாடுகளில் இந்த வசதிகளையும் ஏற்படுத்தித் தருவார்கள் என்று எதிர்ப்பார்ப்போம்.

Anonymous said...

தமிழ்ப்பதிவுகளுக்கு http://ta.wordpress.com/ என்ற தளத்திற்கு செல்ல முடிகிறது.

ஆனால் இதற்கென தனி ஓடை வசதி உள்ளதா (feed)

அப்படி இருந்தால் இன்னும் வசதியாக இருக்கும்

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

anonymous - தற்போது ta.wordpress.com முகப்புப் பக்கத்துக்கு ஓடை வசதி இல்லை. இது குறித்த விருப்பக் கோரிக்கையை wordpress மன்றத்தில் பதிவு செய்து வைக்கிறேன். எனினும், wordpress.comல் ஒவ்வொரு தமிழ்க் குறிச்சொலுக்கும் ஓடை வசதி உண்டு. எடுத்துக்காட்டுக்கு, http://ta.wordpress.com/tag/இலக்கியம் பக்கத்தில் கிடைக்கும் ஓடையைப் பாருங்கள்