- தமிழ்99 முறைக்கு மாறுவதால் என்ன பயன்?
- எல்லா தமிழ் எழுத்துக்களுக்கும், shift விசை பயன்படுத்தாமலேயே அடிக்கலாம்.
- உயிர் எழுத்துக்களுக்கும் அகரம் ஏறிய மெய் எழுத்துகளுக்கும் ஒரே விசை.
- உயிர் மெய் எழுத்துகளுக்கு மெய் - உயிர் என்று இரண்டு விசைகள். ்
- தமிழில் அதிகமாகப் புழங்கும் எழுத்துக்கள் வலிமை வாய்ந்த விரல்கள் இயக்கும் விசைகளாகவும் மற்றவை வெளி விரல்களின் விசைகளாகவும் வடிவமைப்பு.
- பழகி விட்ட அனிச்சை செயலை ஏன் மாற்ற வேண்டும்?
பழைய முறையில் தமிழ் எழுத்துக்களை ஆங்கில எழுத்துக்களாக மனதில் மாற்றி அடிக்கிறோம்.
க என்றால் k விசையைப் பயன்படுத்த வேண்டும் என்று மனதில் இணைத்து ஆங்கில தட்டச்சுப் பழக்கத்துக்குத் தாவி விரலை kக்குச் செலுத்தி தட்டச்சுகிறோம். இதனால் பல வீணான அசைவுகள் தேவைப்படுகின்றன. - மாற்றினால் பழைய அஞ்சல் முறை போல வேகம் கிடைக்குமா?
எழுத்துக்களுக்கும் விசைகளுக்குமான தொடர்பு அனிச்சையாக வர ஆரம்பித்து விட்டால் வேகம் கிடைக்கும். மிதி வண்டி ஓட்டுவது போல அனிச்சை இயக்கம் கை கூடும் வரை வேகம் வாய்க்காது. ஒவ்வொரு எழுத்துக்கும், எந்த விசை என்று நிதானித்து அடிக்க வேண்டியிருக்கும். - இதைப் பழகுவதால் ஆங்கில தட்டச்சு வேகம் பாதிக்கப்படுமா?
பாதிக்காது என்று உறுதியாகவே சொல்லலாம். கூடுதல் ஒரு மொழியில் புலமை பெறுவதால் ஏற்கனவே அறிந்த மொழிகள் மறந்து விடாதது போல தமிழ் தட்டச்சால் ஆங்கிலத் தட்டச்சு மறந்து போய் விடாதுதான்.
அஞ்சல் முறையில் பழகியிருக்கும் விரல் அசைவுகள் மறந்து போய் விடும். எல்லா உள்ளீட்டு முறைகளிலிலும் தமிழ்99 முறையும் சேர்ந்தே கிடைப்பதால், அதனால் எந்த இழப்பும் இல்லை. - யார் யாருக்கு முயற்சி செய்து மாறுவது பலனுள்ளதாக இருக்கும்?
புதிதாகத் தமிழில் எழுத ஆரம்பிக்கும் அனைவரும் இந்த முறையில் பழகுவது பயனளிக்கும்.
என்னதான் ஆங்கில வழித் தட்டச்சு முறையான அஞ்சல் உள்ளீட்டுக்குப் புதிதாக எதுவும் கற்க வேண்டாம் என்று சொன்னாலும் நடைமுறையில் பல புதிய விசைக் கோர்வைகளை தெரிந்து கொள்ள வேண்டியிருக்கத்தான் செய்கிறது.
தமிழில் கணிசமான அளவு எழுதும் எல்லோருக்கும் மாற்றம் பலனளிக்கும். மாறுவது குறித்து பரிசீலிக்கலாம். - ஏற்கனவே அஞ்சல் முறையில் வேகமாக அடிக்கக் கூடியவர்கள் மாறுவதற்கு எவ்வளவு சிரமமாக இருக்கும்?
நிறையவே சிரமம்தான். க என்றால் k விசையைப் பயன்படுத்த வேண்டும் என்று மனதில் இணைத்து ஆங்கில தட்டச்சுப் பழக்கத்துக்குத் தாவி விரலை kக்குச் செலுத்தும் அனிச்சை மாறி
க என்றால் அதற்கான விசையை (ஆங்கில H) அடிக்க வேண்டும் என்று பழகுவது வரை சிரமமாக இருக்கும்.
பழைய முறையில் எவ்வளவுக்கெவ்வளவு தேர்ச்சி அதிகமோ அவ்வளவுக்கவ்வளவு மாற்றத்துக்கு நேரம் பிடிக்கும்.
தமிழ்99 குறித்து ரவிசங்கரின் பேட்டி.
தமிழ்99 பயிற்சி நிகழ்படம்
20 comments:
நன்றி. முயற்சிக்கிறேன்
உண்மை தான் சிவகுமார்.. மாறுவதற்குக் கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும், மாறியபின் ரொம்பவும் வேகமாகவும், சுலபமாகவும் தட்ட முடிகிறது... நல்ல தட்டச்சு முறை இது... :)
சொல்றது ஈஸிதான் வாத்யாரே.. ஆனா ரோட்டுக்கு வந்து நின்னு பாரு..
ஒரு மாசம் வேண்ணாம்.. ஒரு பத்து நாள் டிரெயினிங் எடுக்கணும். அப்பால ஒவ்வொரு எழுத்தையும் மனப்பாடம் பண்ணி நீ சொன்னியே.. அது இன்னாது சொன்ன.. 'அனிச்சை'.. ஆங்.. அந்த 'அன்னிச்சையா' வர்றவரைக்கும் நான் ஒரு வேலையும் செய்ய முடியாது. வர்றவனையெல்லாம் ' இன்னிக்குப் போயிட்டு அப்பால வா'ன்னு நம்ம ராமன் சொன்னானேமே.. அத்த மாதிரி சொல்லியனுப்பணும். போறவன் வருவானா? இல்லாட்டி எதுக்கு வர்றவனையும் சேர்த்துக் கூட்டிட்டுப் போயிருவானான்னு என் அப்பன் முருகனுக்கே வெளிச்சம்..
அப்பால பாரு நைனா.. என் பதிவுல ஒரு பாரா டைப் பண்ணவே எனக்கு ஒரு மணி நேரமாகும்.. பொதுவா நான் அம்பது பாராலதான் மேட்டரே போடுவேன்.. இது உலகம் பூரா தெரிஞ்ச விஷயம்.. அப்பால நான் யாரண்டை போய் டைப் செய்யக் கொடுக்கிறது.. நமக்குத்தான் மண்டைல இருக்கிறது நேரா கீ போர்ட்ல கை வைச்சாத்தான் இறங்குது.. பேப்பர்ல இறங்க மாட்டேங்குது..
ரெண்டு நாள் எதுனாச்சும் எழுதலைன்னா பால் தெளிச்சு கருமாதி கொண்டாடிருவாக வலையுலகத்துல.. தெரியுமா உனக்கு..? அதுலேயும் இங்கன எனக்கு எக்கச்சக்கமான பிரெண்ட்ஸாக்கும்.. உனக்குத்தான் தெரியுமே? அம்புட்டு பேரும் ஆளுக்கு ஒரு நாலு வரில எதுனாச்சும் எழுதிப்போட்டு, டாஸ்மாக்ல போய் ஒரு half அடிச்சிட்டு, அனுதாபம் வுட்டுட்டு போயிருவாங்க.. அப்பால நான் திரும்பி வந்து பார்த்தா யார்ரா நீயின்னு நீயே கேப்ப..
எனக்கு இந்த டிரிக்கெல்லாம் வேண்ணாம்.. உண்மைத்தமிழனுக்கு ஈஸியா பின்னூட்டம் போடணும்.. ஈஸியா கமெண்ட்ஸ் பாக்லயே டைப் பண்ணணும்.. எதுனாச்சும் செஞ்சுட்டு எனக்குச் சொல்லிவிடு.. அப்புறம் உனக்கு பீஸ் வேணாம்னு சொல்லுவ.. கவலைப்படாத.. உன்னைப் பத்தி எனக்குத் தெரியும்.. நீ எம்புட்டு நல்ல புள்ளைன்னு.. நீ இதைச் செஞ்சுக் கொடுத்தீன்னா இதுக்காக நம்ம பாலபாரதி மெட்ராஸ்லருந்து திருப்பதிக்கு நடந்தே போய் ஒரு மொட்டை போட்டுக்குவாரு.. சரியா..?
சீக்கிரமா சாப்ட்டுவேரை ரெடி பண்ணிட்டு அப்பால வந்து இங்கன கும்மியடி.. ஓகே..
நன்றி சிவகுமார்.
தமிழ் லினக்ஸ் இயக்கத்தோடு தொடர்புடைய நீங்கள் தமிழ்99 முறையில் தான் தட்டச்சுவீர்கள் என்று நினைத்திருந்தேன். ஆனால் சமீபத்தில் லினக்சில் இயல்பான முறை தமிழ்99 என்பதால் உங்களுக்கு அஞ்சல் முறை தேவை என்று எழுதியிருந்தது பார்த்த போது மிகவும் ஆச்சரியமாக / வருத்தமாகவும் இருந்தது.
எப்படியோ நீங்களும் தமிழ்99 கற்றுக் கொண்டது மகிழ்ச்சி. பலருக்கும் இது எதற்கு எனற மெத்தனம் இன்னும் இருக்கிறது. தமிங்கில தட்டச்சில் நமது சிந்தனைகள் ஆங்கிலத்திலேயே அமைகிறது என்பதை அவர்கள் மறந்து விடுகிறார்கள்.
தவிர இன்னும் சிலர் tam, tab எழுத்துருக்கள் அங்கீகரிக்கப் பட்ட அதே காலகட்டத்தில் இந்த தட்டச்சு முறையும் அறிமுகம் செய்யப் பட்டதால் அதன்மீதான அரசியல் எதிர்ப்பை இந்த தட்டச்சு முறை மீதும் காட்ட முயல்கிறார்கள்.
இந்த தட்டச்சு முறை குறித்து நாங்கள் எழுதும்போதெல்லாம் எத்தனையோ தட்டச்சு முறைகள் இருக்க இதை தூக்கிப் பிடிக்க அவசியம் என்ன என்றும் சிலர் கேட்பதுண்டு.
அதற்கான விடை உங்கள் பதிவில் குறிப்பிடப்பட்டு உள்ள இதன் எளிமை. இதைவிட குறைந்த விசையழுத்த முறைகளில் தமிழை தட்டச்சு செய்யும் ஒரு முறை வேறொன்று இல்லவே இல்லை.
முயற்சி செய்யுங்கள் வினையூக்கி,
நீங்க ஏற்கனவே மாறி விட்டீங்களா பொன்ஸ்!
நான் ஒரு வாரமா முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் ஒரு வாரம் பத்து நாட்களில் பழைய வழக்கமான வேகம் வந்து விடும் என்று நினைக்கிறேன்.
அன்புடன்,
மா சிவகுமார்
சிவக்குமார் நான் இப்போது பாமினி முறை பாவிக்கின்றேன்... அஞ்சல் முறையைவிட இது வினைத்திறனானது ஆனாலும் தமிழ் 99 அளவுக்கு இல்லை என்பதை ஏற்றுக்கொள்கின்றேன். விரைவில் தாவ முயற்சிக்கின்றேன்.!!!
உண்மைத் தமிழன் - சிறு மறுமொழிகள், பதிவுகள் இடுபவர்களை விட உங்களை மாதிரி அதிகம் எழுதம்பவர்களுக்குத் தான் தமிழ்99 கூடுதல் பலனளிக்கும். ஓரிரு நாட்கள் முயற்சி எடுத்து தமிழ்99 பழகிக் கொண்டால் வாழ்நாள் முழுக்க வீணாக்கும் தட்டச்சு நேரத்தை மிச்சப்படுத்தலாம் தானே? தமிழ்99 முறையில் 40% வது உங்கள் தட்டச்சும் நேரம், அயர்ச்சி குறையும்.
நீங்கள் கேட்ட மாதிரி தமிழ்99ஐ விடவும் சிறந்த ஒரு விசைப்பலகை உருவாக்கலாம் தான். ஆனால், அதுவும் தமிங்கிலப் பலகையில் இருந்து மாறுபட்டிருக்கும் என்பதால் தமிங்கிலத்தட்டச்சில் இருந்து மாற விரும்பாதவர்களுக்கு எந்த விதத்திலும் உதவாது.
சிவகுமார் - நல்ல கவர்ந்திழுக்கும் தலைப்பு. சுருக்கமான இடுகை அருமை. இந்தத் தலைப்பு குறித்து கூடுதல் விழிப்புணர்வு பரவும் வகையில் இந்த இடுகையை ஓரிரு வாரமாவது விட்டு வைத்து அடுத்த இடுகையை இடலாம் என்று வேண்டுகிறேன்.
//ஏற்கனவே அஞ்சல் முறையில் வேகமாக அடிக்கக் கூடியவர்கள் மாறுவதற்கு எவ்வளவு சிரமமாக இருக்கும்?
நிறையவே சிரமம்தான்.//
இந்தக் கருத்து தவறாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். நான் மாறிய போது பெரிதாக சிரமத்தை உணரவில்லை. நம் மனதில் ஒலிகளுக்கான விசை வரிசைகளைத் தான் பதிய வைத்திருக்கிறோம். அதாவது k, t, p எங்க இருக்குன்னு தான் பதிஞ்சு வைச்சிருக்கோம். தமிழ்99ல் க, த, ப என்று வேறு ஒலிகளைத் தான் மனதில் பதிய வைக்கிறோம் என்பதால் பழகிய பின்னும் பழகும் போதும் ஆங்கில ஒலிகளுடன் அவ்வளவாக குழப்பிக் கொள்ள வாய்ப்பிருக்காது.
ஆனால், பாமினி, tamil typewriting முறைகளில் இருந்து மாறுபவர்களுக்கு உண்மையிலேயே வெகு வெகு சிரமம். இன்னும் கொஞ்சம் கூடுதல் பயிற்சி, பொறுமை தேவைப்படும். இவர்களால் மாற முடியாவிட்டாலும் அவர்கள் புதிதாகப் பிறருக்குத் தட்டச்ச சொல்லித் தரும்போது தமிழ்99 முறையை சொல்லித் தரலாம்.
தமிழ்99 குறித்த என் வலைப்பதிவு இடுகையையும் வலைப்பதிவு நண்பர்கள் பார்க்கலாம்.
உண்மைத்தமிழன்,
//ஆனா ரோட்டுக்கு வந்து நின்னு பாரு..//
ஏற்கனவே வந்துட்டேன். இந்த இடுகையே புது முறையில் எழுதியதுதான்.
//அது இன்னாது சொன்ன.. 'அனிச்சை'.. ஆங்.. அந்த 'அன்னிச்சையா' வர்றவரைக்கும் நான் ஒரு வேலையும் செய்ய முடியாது.//
அது உண்மைதான் :-(
//ரெண்டு நாள் எதுனாச்சும் எழுதலைன்னா பால் தெளிச்சு கருமாதி கொண்டாடிருவாக வலையுலகத்துல..//
வலையுலகம் பொறுத்த வரை கவலை வேண்டாம், உங்க எழுத்து என்றைக்கும் சுண்டி இழுத்து விடும்.
//இதுக்காக நம்ம பாலபாரதி மெட்ராஸ்லருந்து திருப்பதிக்கு நடந்தே போய் ஒரு மொட்டை போட்டுக்குவாரு..//
நீங்க 99க்கு மாறிட்டா ஒரு மொட்டை என்ன 100 மொட்டை போட்டுப்பாரு!
அன்புடன்,
மா சிவகுமார்
சிந்தாநதி,
//எப்படியோ நீங்களும் தமிழ்99 கற்றுக் கொண்டது மகிழ்ச்சி. பலருக்கும் இது எதற்கு எனற மெத்தனம் இன்னும் இருக்கிறது.//
அந்த மெத்தனம்தான் இவ்வளவு நாள் ஓட்டி விட்டேன் :-(
//எத்தனையோ தட்டச்சு முறைகள் இருக்க இதை தூக்கிப் பிடிக்க அவசியம் என்ன //
தமிழ் இரண்டாம் நிலையில் இருக்கும் வரை இது போன்ற கேள்விகள் வரத்தான் செய்யும் :-(
அன்புடன்,
மா சிவகுமார்
நன்றி மயூரேசன், ரவிசங்கர்
புதிதாகத் தமிழில் எழுத ஆரம்பிப்பவர்களுக்கு தவறாமல் தமிழ்நெட் 99 ஐ பரிந்துரைக்க வேண்டும்.
அன்புடன்,
மா சிவகுமார்
பிற தட்டச்சு முறைகளில் இருந்து தமிழ்99க்கு மாறப் பயற்சி செய்பவர்கள் முதலில் நினைவில் கொள்ள வேண்டியது - பழைய முறையைத் தலையைச் சற்றி தூக்கிப் போட்டு விடுவது. அவசரத்தக்குப் பழைய முறையிலும் ஓய்வில் தமிழ்99லும் மாறி மாறித் தட்டச்சிக் கொண்டிருந்தால் தமிழ்99 கற்கும் வேகம் மிகவும் மெதுவாகும். கடினமாகவும் தெரியலாம்.
சிவகுமார்
எதையும் உடனே கற்றுக் கொள்கிற நம்ம பாலா உங்களுக்கு முன்னமே இதை பயிற்சி செய்ய ஆரம்பித்தார். பயிற்சிக்கான கருவி கூட கொடுத்தேன். ஆனா ஒரு வாரத்தில் தளர்ந்து போய்விட்டு விட்டார். அவரைக் கொஞ்சம் கவனியுங்க..;)
Is there any online tools like
suratha unicode typewriter or higopi?
please let me know
சார்,
தமிழ்மணம் பதிவுப்பட்டையை எனது பிளாக்கில் இணைக்கும் முயற்சியில் ஏதோ தவறு செய்துவிட்டேன் போலும், ஒவ்வொரு பதிவுக்கும் மேல் 4 பதிவு பட்டை வருகிறது. சரி செய்ய உதவமுடியுமா?
உண்மைத்தமிழன்,
நான் ஒரு செயலி வைத்திருந்தேன்(பேரச்சொல்லி நாலு பேர் அதப்பாக்கரத்துக்கா.. வேண்டாம்)
அது தான் உசத்தின்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன். tamil 99க்கு மாறிப்பாருங்க அப்ப தெரியும் அதோடு அருமை.
// Anonymous said...
Is there any online tools like
suratha unicode typewriter or higopi?
please let me know
//
நிறைய இருக்கிறது. online tamil unicode transliteration என்று கூகுளில் தேடிப் பாருங்கள்.
http://developer.thamizha.com/tamilkey.html
http://www.iit.edu/~laksvij/language/tamil.html
என்பவை சில
தகவலுக்காக: பதிவர் செல்வேந்திரனின் பதிவு வார்ப்புருவைச் சரிசெய்து விட்டோம்..
சிந்தாநதியும் ரவிசங்கரும் ஊக்குவித்ததில் தமிழ்99 முறையைப் பயன்படுத்தத் துவங்கினேன். ஒரே நாளில் விசைகளின் இருப்பிடம் மனப்பாடமாகிவிட்டது என்றாலும் மாறுவதற்கு சிரமமாகத் தான் இருக்கிறது :-( ஆனால் நிறைய தட்டச்சு செய்யவேண்டியிருந்தால் அஞ்சல் முறைக்கு மாறிவிடுகிறேன், அதனால் culprit நானே! (நீங்க விக்கிற ஊக்கு தீர்ந்து போனாலும் சரி, டோஸ் மட்டும் விடாதீங்க, சொல்லிட்டேன் :-))
புதிய ஆக்கள் ஓகே.
சேதுக்கரசி - திரும்பத் தமிங்கலத்துக்குத் திரும்பிப் போகலாமா என்ற தடுமாற்றம் இருக்கும் வரை தமிழ்99 கைக்கூடும் நாள் தள்ளிப்போகும். தமிங்கிலத்தில் தினம் எழுதுபவர்கள் தமிழ்99 பழகும் காலத்தில் வேகம் குறையுமே என்று தயங்குவார்கள். எத்தனையோ பணிகளை ஒதுக்கி வைத்து விட்டு விடுமுறையில் ஊருக்குப் போவது மாதிரி, கொஞ்சம் நாள் அதிகத் தமிழ்த் தட்டச்சுத் தேவைகளை ஒதுக்கி வைத்து விட்டு தமிழ்99 முழுமூச்சாகப் பழகினால் ஒரு வாரம் கூட போதுமான காலம் தான்.
Post a Comment