மைக்ரோசாப்டு வேர்டில் எ-கலப்பையைப் பாவித்து எழுதும் போது கட்டம் கட்டமாக வருவதாக கோவை பதிவர் பட்டறையில் வித்யா தீர்வு கேட்டிருந்தார். இன்று வாடிக்கையாளர் ஒருவர் கணினியில் அதே பிரச்சனையைச் சந்தித்தேன்.
விண்டோசு XPயின் லதா எழுத்துருவை மாற்றி, எ-கலப்பை தரும் எழுத்துருவை அமைத்துக் கொண்டால் சரியாக தெரிந்தது. முயன்று பாருங்கள் வித்யா.
Quick refrence
Download Links:-
eKalappai 2.0b(Anjal) | eKalappai 2.0b (tamilnet99) - இங்கே தேர்வு செய்யவும்,
Key board layout :- e- kalappai (Anjal) |e-kalappai (Tamil 99) இதே மாதிரி இன்னும் ஏதாவது quick refrence சேர்த்தால் உபயோகமாக இருக்குமானால் பின்னூடத்தில் தெரிவிக்கவும்
Key board layout :- e- kalappai (Anjal) |e-kalappai (Tamil 99) இதே மாதிரி இன்னும் ஏதாவது quick refrence சேர்த்தால் உபயோகமாக இருக்குமானால் பின்னூடத்தில் தெரிவிக்கவும்
Tuesday, May 22, 2007
Subscribe to:
Post Comments (Atom)
28 comments:
களத்துமேட்டிலுள்ள பதிவுகளின் தலைப்புக்களை Mozilla Firefox இல் வாசிக்க முடியவில்லை, இக் குறைபாட்டை எவ்வாறு நிவர்த்தி செய்யலாம்.
www.ekalamm.net.ms
களத்துமேடு - எனக்கு உங்கள் பதிவுத் தலைப்பு firefoxல் நன்றாகவே தெரிகிறது. உங்கள் குறையைப் போக்க https://addons.mozilla.org/en-US/firefox/addon/748 என்ற முகவரியில் இருந்து greasemonkey நீட்சியை நிறுவுங்கள். அதற்குப் பிறகு, http://userscripts.org/scripts/show/1480 என்ற பக்கம் சென்று வலப்பக்கம் காணப்படும் install script என்பதை அழுத்துங்கள்.
எல்லாத்தையும் நிறுவிட்டு firefoxஐ மீளத்தொடங்கினால் விசயம் சரியாகி இருக்க வேண்டும். எல்லா தமிழ் இணையத்தளங்களும் நன்றாகத் தெரியும்.
wordpadல் எந்தப் பிரச்சினையுமின்றி தானாகவே தமிழ் எழுத்துக்கள் நன்றாகத் தெரியும். சாதாரணக் கோப்புகளுக்கு dpad பயன்படுத்தலாம்.
இல்லை, கட்டற்ற மென்பொருளான openofficeல் sooriyan.com எழுத்துரு பயன்படுத்தினால், spreadsheet, presentation என்று எல்லாவற்றிலும் பிரச்சினையின்றி தமிழில் எழுதலாம்.
இகலப்பை தரும் எழுத்துருவை அமைத்துக் கொண்டால் சரியாக தெரிந்தது
///
இகலப்பை எழுத்துரு...???
பெயர் என்ன...?
களத்துமேட்டின் தலைப்பு Mozilla Firefox இல் இப்போது தெளிவாகத் தெரிகின்றது, உதவி செய்த ரவிசங்கருக்கு மிக்கநன்றி.
கட்டற்ற மென்பொருளான openofficeல் sooriyan.com
ரவிசங்கர்
லினக்ஸ்ஸில் முடியுமா?
இன்னும் முட்டி மோதிக்கொண்டிருக்கிறேன்.மயூரன் கொடுத்துள்ள தபூண்டு இன்னும் உபயோகிக்கவில்லை,ஏனென்றால் என்னிடம் இருப்பது பழைய பொதி.
இது ஒரு மேல் தகவல்
என்னை மாதிரி இன்னும் வின் 95 கணினி வைத்திருப்பவர்களுக்காக!!
"குறள்" என்ற மென்பொருள் 3 மாத இலவச உபயோகிப்புக்கு கொடுக்கப்படுகிறது.அது வேர்டில் அனாயசமாக தமிழ் அடிக்க முடிகிறது.
வாங்க முடியாதவர்கள் உபயோகித்து முடிந்தவுடன் அது உபயோகப்படுத்திய TSCArial என்னும் எழுத்துரு மற்றும் இ.கலப்பை ஐ வைத்து தமிழ் தட்டச்சு செய்யலாம்.
greasemonkey போன்று பிரவுசரை சரிப்படுத்தும் இணைப்புகளால் இப்பிரச்சினையை தீர்க்க முடியும் என்றாலும் இன்னமும் அதை செய்யாத, செய்ய தெரியாதவர்கள் இம்மாதிரி பதிவுகளை படிக்க முடியாவிட்டால் கடந்து போய்விடுவார்கள். அதனால் அந்த பதிவர்கள் தங்கள் பதிவுகளில் style பகுதியில் text align justify என்று எங்காவது இருந்தால் அதை text align left என்று மாற்றி விடுவதும், letter-spacing என்ற வரிகளை நீக்குவதும் அனைவரும் பயர்பாக்சில் உங்கள் பதிவுகளை வாசிக்க உதவும்.
குமார் "குறள்" தமிழ்ச்செயலி 90 நாட்களுக்குள் இணைய இணைப்பு உள்ளவர்கள் பெயரை பதிவு மட்டும் செய்தால் நிரந்தரமாகவே அதைப் பயன்படுத்தலாமே. (இப்போது அதற்கு கட்டணம் ஏதும் வைத்திருக்கிறார்களா என்ன? முன்பு இலவசப் பதிவு மட்டுமே அவசியம். இப்போது நான் சோதிக்கவில்லை.)
விண்டோசில் தமிழுக்காக தரப்பட்டுள்ள எழுத்து லதா. ஆனால் ms office தொகுப்பில் தமிழுக்காக arial unocode ms என்ற எழுத்துருவை தந்திருக்கிறார்கள். வேர்டில் உள்ள font setting பகுதியில் coplex script க்கு இந்த எழுத்துருவை செட் செய்து கொண்டால் எந்த பிரச்சினையும் இல்லாமல் கலப்பையில் எழுதலாம். தமிழ் மட்டுமல்ல எல்லா இந்திய மொழிகளையும் இந்த எழுதுருவால் எழுதலாம். (அந்தந்த மொழிக்கான விசைப்பலகை செயலி இருந்தால்.
//coplex script க்கு இந்த எழுத்துருவை// மன்னிக்கவும்
latin text font மற்றும் compex scripts font இரண்டிலும் Arial Unicode MS செட் செய்ய வேண்டும்.
இது குறித்து ஒரு தனிப்பதிவு இடுகிறேன்.
"குறள்" தமிழ்ச்செயலி 90 நாட்களுக்குள் இணைய இணைப்பு உள்ளவர்கள் பெயரை பதிவு மட்டும் செய்தால் நிரந்தரமாகவே அதைப் பயன்படுத்தலாமே
அப்படியில்லை.தரவிரக்கம் செய்யும் போது இலவசமாக தோன்றும்.நிறுவும் போது, கடைசியில் 3 மாத காலத்துக்கு மட்டும் என்ற செய்தியோடு கால கடிகாரம் பயணிக்கும்.
வேர்டில் உள்ள font setting பகுதியில் coplex script க்கு இந்த எழுத்துருவை செட் செய்து கொண்டால் எந்த பிரச்சினையும் இல்லாமல் கலப்பையில் எழுதலாம்./
////
ms office 2003 யில் நீங்கள் சொல்லும் arial unocode ms என்ற எழுத்துருவை கானவில்லை
latin text font மற்றும் compex scripts font இரண்டிலும் Arial Unicode MS செட் செய்ய வேண்டும்.
//
arial
arial black
arial narrow
arial rounded MT bold
மட்டுமே உள்ளது
(ms office 2003)
???
இது குறித்து ஒரு தனிப்பதிவு இடுகிறேன்.
//
தனி பதிவு போடும் போதும் முடிந்தால் மெயில் தட்டவும்
alif007@gmail.com
//"குறள்" தமிழ்ச்செயலி 90 நாட்களுக்குள் இணைய இணைப்பு உள்ளவர்கள் பெயரை பதிவு மட்டும் செய்தால் நிரந்தரமாகவே அதைப் பயன்படுத்தலாமே
அப்படியில்லை.தரவிரக்கம் செய்யும் போது இலவசமாக தோன்றும்.நிறுவும் போது, கடைசியில் 3 மாத காலத்துக்கு மட்டும் என்ற செய்தியோடு கால கடிகாரம் பயணிக்கும்.//
அதன்பிறகு கட்டணம் செலுத்த கூறுகிறார்களா? அல்லது அதற்குள் பதிவு செய்ய கூறுகிறார்களா?
மின்னுது மின்னல்
(ms office 2003)
ஏரியல் யூனிகோடு இல்லை எனில் கலப்பையுடன் வரும் எழுத்துருக்கள், TheneeUniTx பயன்படுத்திப் பார்க்கலாம்.
ஏரியல் யூனிகோடு இல்லை எனில் கலப்பையுடன் வரும் எழுத்துருக்கள், TheneeUniTx பயன்படுத்திப் பார்க்கலாம்.
///
பாத்துட்டேன் வரவில்லை
பதிவு
http://valai.blogspirit.com/archive/2007/05/24/word.html
ஒரு பிரபல பதிவரிடமிருந்து குறிப்பு:
சிவகுமார் I saw your post on Tamil fonts in MS word, use TSCu_Paranar, TSCu_Vaigai fonts. the problem will be solved.
The problem with other Unicode fonts is that rendring is not taken care properly. UNI-KS-Thunaivan will also work. aAvarangal will also work.
latha will not work. பெண் பெயர் என்பதால் இருக்கலாம் என்று நினைக்கிறேன் :-)
நீங்களே பின்னூட்டமா போட்டுவிடுங்கள். நன்றி
நன்றி
நன்றி
நன்றி
//கட்டற்ற மென்பொருளான openofficeல் sooriyan.com
ரவிசங்கர்
லினக்ஸ்ஸில் முடியுமா?//
கண்டிப்பாக லினக்ஸில் முடியும்..openoffice இல்லாமல் லினக்ஸா :)
6.10, 7.04 இரண்டுக்குமே மயூரனின் தபுண்டு உதவும். SCIM கொண்டு எந்த விசைப்பலகை வேண்டுமானால் பயன்படுத்தலாம்.
எல்லாரும் ஏன் MS Wordக்கு இவ்வளவு மல்லுக்கட்டுகிறார்கள் என்று புரியவில்லை. Wordpad, Openoffice இவையே போதுமானதாக இருக்கும். எந்தப் பிரச்சினையுமின்றி தமிழ் எழுதலாம்.
லதா என்ற பாண்ட் என்னுடைய கணினியில் தேர்வு ஆகாமல் அடம்பிடிக்கிறது. பட்டறையின் போது முகுந்த் சொன்னபடி
settings>contorl panel> Regional languages போய் டிக் செய்தால் விண்டோஸ் எக்ஸ்.பி. சிடி இன்சர்ட் செய்ய சொல்லி வருகிறது.
வோர்ட் பேட்டில் டைப் செய்த்தாலும், சேவ் செய்து பின் திரும்ப ஓபன் செய்கையில் சில எழுத்துகள் வட்டமாக துணைக்காலகள் முன்பின் மாறுபட்டும் வருகிறது.
நோட்பேடில் டைப் செய்து சேவ் செய்தால். ஓபன் செய்யும் போது வெறும் கேள்விக் குறி (?) மட்டும் தான் வருகிறது.
உதவவும்.
நன்றி
living smile, நான் எப்பவுமே wordpad (start-programs-accessories) தான் பயன்படுத்துறேன்..ஒரு பிரச்சினையும் வர்றது இல்ல..அத முயன்று பாருங்க
ரவிஷங்கர், மொட்டைத்தலைக்கு முடி கேட்டா கொட்டைப்பாக்குக்கு பெயிண்டு அடிக்காதீங்க...
தோழி ஸ்மைல், நீங்கள் நோட் பேடில் சேவ் செய்யும்போது - பைல் நேம், சேவ் அஸ் டைப், என்கோடிங் என்று மூன்று ஆப்ஷன்கள் இருக்கும்..
அதில் பைல் பெயரை முதலில் கொடுக்கவும்
பிறகு ஸேவ் அஸ் டைப் (save as type) என்பதில் டெக்ஸ் டாக்குமண்ட் என்று இருக்கும் அதை ஒன்றும் செய்யவேண்டாம்
பிறகு encoding என்கோடிங் என்ற இடத்தில் ANSI என்று இருக்கும்..அதை UTF-8 என்று மாற்றி சேவ் செய்யவும்...
மீண்டும் எத்தனை முறை ஓப்பன் செய்தாலும் நீங்கள் டைப்பியது டைப்பியபடியே இருக்கும்...
நமது வாழ்க்கையை கேள்விக்குறியாக்காது...
(என்னுடைய முதல் கதை எழுதும் முயற்சி கேள்விக்குறியானபோது கற்றுக்கொண்டது..)
இதற்கு சம்பந்தமான என்னுடையப் பதிவு இங்கே
எல்லாரும் ஏன் MS Wordக்கு இவ்வளவு மல்லுக்கட்டுகிறார்கள் என்று புரியவில்லை
////
ஐய்யா windows use பண்ணிக்கிட்டு இருக்கேன் பிரச்சனைனு சொன்னா... லினக்ஸ் use பண்ணு, நான் அதுதான் யூஸ் பண்ணுகிறேன்னு சொல்லுரீங்க
சில பல காரணங்கள் இருக்கு எல்லாத்துக்கும் இல்லனா வேலைக்கு ஆவாது
பிரச்சனைக்கு தீர்வு என்ன..?
அதுதான் இங்கே...
:)
//ரவிஷங்கர், மொட்டைத்தலைக்கு முடி கேட்டா கொட்டைப்பாக்குக்கு பெயிண்டு அடிக்காதீங்க...//
செந்தழல் ரவி - உங்கள் கருத்துக்கு நன்றி. wordpad, notepad இரண்டுமே இலவசமாகவே windowsல் கிடைக்கிறது. ஒன்று நன்றாக வேலை செய்கிறது. இன்னொன்று தகராறு செய்கிறது...
//ஐய்யா windows use பண்ணிக்கிட்டு இருக்கேன் பிரச்சனைனு சொன்னா... லினக்ஸ் use பண்ணு, நான் அதுதான் யூஸ் பண்ணுகிறேன்னு சொல்லுரீங்க //
மின்னுது மின்னல் - இந்த இடுகையில் யாரையும் லினக்சுக்கு மாறச் சொல்லி நான் கேட்கவில்லை. வடுவூர் குமாரின் ஒரு கேள்விக்கே பதில் சொல்லி இருந்தேன். openoffice போன்றவற்றை windowsல் கூட இலவசமாக நிறுவலாம். wordpad தானாகவே windowsல் கிடைக்கும். ஒரு மென்பொருளை விட இன்னொன்று சிறந்தது என்றால் பயன்படுத்தலாம் தானே?
நான் Word-ல் யுனிகோடு தட்டச்சு செய்யும்போது TSCu_Paranar (பரணர்) எழுத்துரு பயன்படுத்துகிறேன்.
Post a Comment