Quick refrence

Download Links:- eKalappai 2.0b(Anjal) | eKalappai 2.0b (tamilnet99) - இங்கே தேர்வு செய்யவும்,
Key board layout :- e- kalappai (Anjal) |e-kalappai (Tamil 99) இதே மாதிரி இன்னும் ஏதாவது quick refrence சேர்த்தால் உபயோகமாக இருக்குமானால் பின்னூடத்தில் தெரிவிக்கவும்

Tuesday, February 13, 2007

ஒரே நாளில் எழுதப்படும் எல்லா இடுகைகளுக்கும் Date Header வரவேண்டுமா?

நம்மிடையே நிறைய பேருக்கு இந்தப் பழக்கம் உண்டு..ஒரே நாள் 3-4 இடுகைகள் எல்லாம் போடுவாங்க..(அவங்க கிட்டே அத்தனை விஷயம் இருக்கு..ஹ்ம்ம்..) ஆனா ஒரே நாளில் போடப்படும் எல்லா இடுகைகளுக்கும் தேதி விவரம் (..இடுகையைப் பதிப்பித்த தேதி) Bloggerல் இருக்காது. (எனக்கு Wordpress..etc குறித்து தெரியாது)

ஒரு சோதனைப் பதிவில் இதை செய்து பாருங்க
பதிவு எழுதும் நாள் :- 14-Feb-07
பதிவு -1 :: 10.00 am
பதிவு -2 :: 10.30 pm
பதிவு -3 :: 11.00 am
பதிவு -4 :: 11.30 am
Technically நீங்க ஒரே நாள் 4 இடுகை போட்டிருக்கீங்க.ஆனா.. பதிவைப் பார்த்தீங்கன்னா..இடுகை-4 க்கு மட்டும் தான் தேதி இருக்கும்..

இதை தவிர்த்து.. எல்லா பதிவுக்கும் தேதி வரணும்ன்னா.. பண்ணவேண்டியதெல்லாம்..இது தான்
  1. வார்ப்புருவின் நகலை Edit-HTML போய் பத்திரப்படுத்திகொள்ளவும்.இதுவே வார்ப்புருவின் தாரக-மந்திரம்

  2. வார்ப்புருவில் கீழே காணும் வரிகளை கண்டுபிடிக்கவும்
    <div class='blog-posts'>
    <b:loop values='data:posts' var='post'>
    <b:if cond='data:post.dateHeader'>
    <h2 class='date-header'><data:post.dateHeader/></h2>
    </b:if>

    <b:include data='post' name='post'/>

  3. சிகப்பு நிறத்தில் இருப்பவைகளை அழித்துவிட்டு..
    பச்சை நிறத்தில் சுட்டிக்காட்டியிருக்கும் வரிகளை போல் மாற்றி எழுதவும்
  4. <div class='blog-posts'>
    <b:loop values='data:posts' var='post'>
    <div class='date-header'>
    <data:post.timestamp/>
    </div>

    <b:include data='post' name='post'/>
    <b:if cond='data:blog.pageType == "item"'>

4 comments:

வடுவூர் குமார் said...

பயனுள்ள தகவல்.
நன்றி

Deepa said...

:) நன்றி

Yogi said...

தீபா, நேரம் மட்டுமே தெரியுமா? தேதி தெரியாதா?

Deepa said...

பொன்வண்டு... நீங்கள் உங்கள் timeStamp ஐ எப்படி செட் பண்ணுவீங்களோ.. அது அப்படியே தெரியும்.. .timestamp ல் நேரம் செட் செய்திருந்தால்..நேரமும் தெரியும்