Quick refrence

Download Links:- eKalappai 2.0b(Anjal) | eKalappai 2.0b (tamilnet99) - இங்கே தேர்வு செய்யவும்,
Key board layout :- e- kalappai (Anjal) |e-kalappai (Tamil 99) இதே மாதிரி இன்னும் ஏதாவது quick refrence சேர்த்தால் உபயோகமாக இருக்குமானால் பின்னூடத்தில் தெரிவிக்கவும்

Saturday, February 10, 2007

எண்களாகத் தொகுக்கபட்ட பின்னூட்டங்கள்

பொதுவா தமிழ் பதிவுக்கெல்லாம் எக்கசக்கமான பின்னூட்டங்களை பார்த்திருக்கேன்..அதில் அனானி பின்னூட்டங்கள் ஏராளம்..அப்புறம் பதிவு போட்டவர் ...ஒவ்வொருத்தருக்கும் பதில் பின்னூட்டம் ".. முதல் அனானிக்கு -- xyz -பின்னூட்டம் இட்ட நண்பருக்கு.."... அப்படின்னு ஒருவழியா எல்லாருக்கும் பதில் பின்னூட்டம் போட்டு முடிக்குறத்துக்குள்ளே.. கழுத்து ஒரு வழியாயிடும்

இதை எளிமையாக்க.. எல்லா பின்னூட்டத்திற்கும் எண் குடுத்து வரிசைப்படுத்தினா...reference சொல்ல உதவியா இருக்குமில்லே..குறிப்பை கவனமா படிச்சு பண்ணுங்க
  1. வார்ப்புருவின் நகலை Edit-HTML போய் பத்திரப்படுத்திக் கொள்ளவும்.இதுவே வார்ப்புருவின் தாரக-மந்திரம்
  2. வார்ப்புருவில் கீழே காணும் வரிகளைக் கண்டுபிடிக்கவும்
    STEP-1

    <dl id='comments-block'>
    <b:loop values='data:post.comments' var='comment'>
    <dt class='comment-author' expr:id='"comment-" + data:comment.id'>

  3. சிகப்புநிறத்தில் இருக்கும் tags (HTML code) ஐ சுட்டிக்காட்டியிருக்கும் இடத்தில் இணைக்கவும்.
    <dl id='comments-block'>
    <ol>
    <b:loop values='data:post.comments' var='comment'>
    <li>
    <dt class='comment-author' expr:id='"comment-" + data:comment.id'>
  4. TEMPLATE ல் கீழே காணும் வரிகளை கண்டுபிடிக்கவும்
    STEP: 2

    <span class='comment-timestamp'>
    <a expr:href='"#comment-" + data:comment.id' title='comment permalink'> <data:comment.timestamp/>
    <b:include data='comment' name='commentDeleteIcon'/>
    </span>
    </dd>
    </b:loop>
  5. சிகப்புநிறத்தில் இருக்கும் tags (HTML code) ஐ சுட்டிகாட்டியிருக்கும் இடத்தில் இணைக்கவும்.
    <span class='comment-timestamp'>
    <a expr:href='"#comment-" + data:comment.id' title='comment permalink'> <data:comment.timestamp/>
    <b:include data='comment' name='commentDeleteIcon'/>
    </span>
    </dd>
    </li>
    </b:loop>
    </ol>

எண்களாகத் தொகுக்கப்பட்ட பின்னூட்டங்கள், பின்னூட்டப் பக்கத்தில் காணக்கிடைக்காது. அவையெல்லாம் உங்கள் பதிவு காணக்கிடைக்கும் URL பக்கத்திலேயே தெரியும். முழுமையான பதிவு எக்ஸ்புளோரரில் தெரியும் போது அதனுடன் பின்னூட்டங்களும் தெரியும்

2 comments:

thiru said...

பயனுள்ள தகவல். எனது வலைப்பதிவில் மாற்றம் செய்துவிட்டேன். நன்றி!

Deepa said...

நன்றி திரு..