Quick refrence

Download Links:- eKalappai 2.0b(Anjal) | eKalappai 2.0b (tamilnet99) - இங்கே தேர்வு செய்யவும்,
Key board layout :- e- kalappai (Anjal) |e-kalappai (Tamil 99) இதே மாதிரி இன்னும் ஏதாவது quick refrence சேர்த்தால் உபயோகமாக இருக்குமானால் பின்னூடத்தில் தெரிவிக்கவும்

Monday, December 4, 2006

How to Read/Write in Tamil ..

இணையத்தில் முதன்முறையாக தமிழ் உபயோகிக்க துவங்கும் பெரும்பாலானோரின் முதல் கேள்வி தமிழிலுள்ள பக்கங்களை எவ்வாறு படிப்பது, தமிழ் பக்கங்களை படிக்க என்னென்ன Fontகளை தரவிறக்கம் செய்யவேண்டும், தமிழில் எழுதுவது எப்படி, தமிழுக்கென தனி Keyboard இருக்கிறதா என்பதாகத்தான் இருக்கும். கில்லிக்காக Voice on Wings எழுதிய இந்த கேள்விகளுக்கெல்லாம் விடையளிப்பதால் இங்கே மீள்பதிவிடுகிறோம். நன்றி Gilli & Voice on Wings :)

Tamil Computing Tutorial for reading and writing Tamil on the Net - Voice on Wings

Reading Tamil text

When you open a tamil blog and see only question marks or boxes instead of tamil letters, it means your computer is not equipped with any Unicode font for Tamil (Note: 'Unicode' is the universal encoding mechanism for computers, that accommodates all the languages of the world with a single coding scheme).

Step 1: To install the needed font(s), download the installer from this web page and execute it. This would install 10 Unicode Tamil fonts in your computer. If you use Internet Explorer 6.0 or above, this should enable you to view the page correctly.

Step 2: (Only for Firefox browser) You may see consonants and vowel modifiers displayed separately, instead of being shown as composite letters (uyir mei). To correct this, download this file and save it in the folder below:

C:\Documents and Settings\[User Name]\Application Data\Mozilla\Firefox\Profiles\xxxxx.default\chrome (for Windows 2000/XP)
(OR)

C:\WINDOWS\Application Data\Mozilla\Firefox\Profiles\xxxxxxx.default\chrome (for Windows 98/Me)
Note: [Username] denotes your Windows username
'xxxx.default' is a folder name under the Profiles folder with '.default' at the end


If you are not able to locate the folder 'Application Data' (sometimes it is hidden), type '%AppData%' in the Windows' Start>Run dialog box. It would open the folder in an Explorer window, from which you can navigate to the destination folder specified above.

It is very important to save the downloaded file in the correct location as above.

With the above steps, it would be possible to read tamil blogs using IE or Firefox browsers, on Windows platforms.

தமிழில் எழுதுவது

மேற்கூறிய வழிமுறையைக் கையாண்டு (அல்லது அப்படியெல்லாம் எதுவும் செய்யாமலேயே), இதைப் படிக்கும் வசதியைப் பெற்று விட்டீர்கள். இனி, தமிழ்ப்பதிவுகளில் (i.e. Tamil blogs) உங்கள் கருத்துக்களை, தமிழிலேயே பதிக்க விரும்புகிறீர்கள். அது மட்டுமல்லாமல், நீங்களும் ஒரு தமிழ்ப்பதிவைத் தொடங்கி, தொடர்ந்து எழுதவும் விரும்புகிறீர்கள். ஆனால் தமிழில் தட்டச்சு (typing) செய்வது எப்படி என்று உங்களுக்குத் தெரியவில்லை. அப்படியென்றால் மேற்கொண்டு படியுங்கள்.

முதல் கட்டம்: மிகவும் எளிதான வழி இவ்வலைப்பக்கத்திலுள்ள சுரதாவின் 'புதுவை' தமிழ் editorஐப் பயன்படுத்துவதே. இதில் romanized எனப்படும் ஒலியியல் முறையில் தட்டச்சு செய்யலாம். (இம்முறையை, 'அஞ்சல்' என்றும் குறிப்பிடுவதுண்டு) அதாவது, ஆங்கில எழுத்துக்களைக் கொண்டே, அவைகளுக்கு நிகரான ஒலிகளைக் கொண்ட தமிழ் எழுத்துக்களைப் பெறலாம். எப்படி என்று பார்ப்போம்.

தமிழெழுத்துக்களும், அடைப்புக்குறிகளுக்குள் அவற்றைப் பெறுவதற்கான ஆங்கில எழுத்துக்களும், கீழே பட்டியலிடப்பட்டுள்ளன:

உயிரெழுத்துக்கள்: அ(a), ஆ(aa or A), இ(i), ஈ(ii or I), உ(u), ஊ(uu or U), எ(e), ஏ(ee or E), ஐ(ai), ஒ(o), ஓ(oo or O), ஔ(au)

ஆய்த எழுத்து: ஃ(f)

மெய்யெழுத்துக்கள்: க்(k of h), ங்(ng), ச்(s or ch), ஞ்(nj), ட்(t or d), ண்(N), த்(th), ந்(n- or w), ப்(p or b), ம்(m), ய்(y), ர்(r), ல்(l), வ்(v), ழ்(z), ள்(L), ற்(R), ன்(n)


கிரந்த எழுத்துக்கள்: ஜ்(j), ஸ்(S), ஷ்(sh), ஹ்(-h), க்ஷ்(ksh), ஸ்ரீ(Srii or SrI)

உயிர்மெய்யெழுத்துக்கள்: இவற்றைப் பெற, மெய்யெழுத்தைத் தொடர்ந்து உயிரெழுத்தை தட்டச்ச வேண்டும். உதாரணம்,
க(ka) = க்(k) + அ(a),
கா(kaa or kA) = க்(k) + ஆ(aa or A).........

இந்த அடிப்படையில், எல்லா உயிர்மெய்யெழுத்துக்களையும், கிரந்த வரிசை எழுத்துக்களையும் (ஜ, ஜா, ஜி, ஜீ, etc.) பெறலாம்.

உற்று நோக்கினால், இதைக் கற்றுக் கொள்வது மிக எளிது என்பது புலப்படும். காரணம், தட்டும் ஆங்கில எழுத்துக்கும், கிடைக்கப்பெறும் தமிழெழுத்துக்குமுள்ள ஒலி ஒற்றுமை. ஒரு சில எழுத்துக்களைத் தவிர, இதில் பெரிதாக மனப்பாடம் செய்ய எதுவுமில்லை. முதல் கட்டமாக, இதைக் கொண்டு நீங்கள் தமிழில் தட்டச்சுவதற்கு பயிற்சி பெறலாம். இதுபோல், வேண்டிய தமிழ் வாக்கியங்களை உருவாக்கி, அவற்றை copy செய்து கொண்டு, அவற்றை வேண்டிய இடத்தில் ஒட்டி (paste), உங்கள் கருத்துகளை தமிழிலேயே வெளியிடலாம்.

இரண்டாவது கட்டம்: இப்போது நீங்கள் தமிழில் தட்டச்சு செய்ய போதிய பயிற்சி பெற்று விட்டீர்கள். வலைப்பதிவு விவாதங்களிலும் தமிழிலேயே உங்கள் கருத்துகளைத் தெரிவிக்கிறீர்கள். இருந்தும், சொந்தமாக ஒரு வலைப்பதிவு இருந்தால் இன்னும் நன்றாயிருக்குமே என்று எண்ணுகிறீர்கள். அப்படியென்றால் உங்கள் கணினியில் (computer / PC) தமிழ் தட்டச்சுக் கருவியை (Tamil typing tool) நிறுவுவதற்கான நேரம் வந்து விட்டதென்று பொருள். இன்று பலரும் பரவலாகப் பயன்படுத்தும் ஒரு கருவி தமிழா குழுவின் 'எ-கலப்பை'யாகும் (அதாவது, எலக்டிரானிக் கலப்பை). இதனை இங்கிருந்து download செய்து நிறுவிக்கொள்ளலாம். இதைக் கொண்டு, browser, notepad, word processor, email client போன்ற பலவற்றில் நேரடியாக தமிழில் தட்டச்சு செய்யலாம். Alt+2 விசைகளை அழுத்தினால், உங்கள் keyboard தமிழுக்கு மாறும். மறுபடி Alt+2 அழுத்தினால், திரும்பவும் ஆங்கிலத்துக்கு மாறிக்கொள்ளும்.

மூன்றாவது கட்டம்: ஒலியியல் / romanized / அஞ்சல் முறையை நன்கு பழகி விட்டீர்கள். ஆனால், கொஞ்சம் எழுதுவதற்குள் அயர்ச்சி ஏற்பட்டு விடுகிறது. ஒரு எழுத்தைப் பெறுவதற்கு நான்கைந்து விசைகளை அழுத்த வேண்டியுள்ளது. இவ்வாறாக, சிறு கட்டுரைகளை எழுதுவதற்கும் அதிகமான நேரம் செலவாகிறது. இதற்குத் தீர்வு 'தமிழ்நெட் 99' எனப்படும் தமிழ் தட்டச்சு முறையைப் பயின்று கொள்வதே. அதைப்பற்றி இந்த வலைப்பக்கத்தில் காணலாம் (ஒரு பயிற்றுக் கருவியும் வழங்கப்பட்டுள்ளது இப்பக்கத்தில்). தமிழ்நெட் 99 முறையில் தட்டச்சுவதற்கு தமிழாவின் எ-கலப்பை (தமிழ்நெட்99) எனப்படும் கருவியை download செய்து நிறுவிக்கொள்ள வேண்டும். இது, செயல்பாட்டில் எ-கலப்பை(அஞ்சல்)ஐ ஒத்ததே. தமிழெழுத்துகளுக்கான விசைகள்தான் மாறும். இதில் பயிற்சி பெற்றால் வெகு வேகமாக தமிழில் தட்டச்ச முடியும், அயர்ச்சியும் ஏற்படாது.

நான்காவது கட்டம்: மேலே குறிப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றியதால், தமிழ்க்கணிமை (Tamil computing) உங்கள் வாழ்வில் ஒரு இன்றியமையாத அம்சமாகி விடுகிறது. அப்படியிருக்கையில், உங்களுக்கு வாரக்கணக்கில் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது, அல்லது அலுவலகத்தில் அதிகமான நேரம் செலவழிக்க வேண்டியுள்ளது. இடையிடையே தமிழ்ப்பதிவுகளைப் படிக்கின்றீர்கள். ஆனால் தமிழில் தட்டச்சுவதற்கு வேண்டிய கருவிகளெல்லாம் இத்தகைய பொதுவிடங்களில் கிடைக்காததால்், உங்களால் விவாதங்களில் முழுமையாகப் பங்கு பெற முடிவதில்லை. அல்லது உங்கள் அனுபவங்களை / எண்ணங்களை சுடச்சுட உங்கள் வலைப்பதிவில் இட முடியவில்லை. இதற்குத் தீர்வுதான் தமிழாவின் TamilKey Firefox Extension. இதற்கு Firefox browser நிறுவப்பட்டிருக்க வேண்டும். அதன் புகழ் நாளுக்கு நாள் அதிகரித்து் வருவதால், நீங்கள் பயன்படுத்தும் பொதுக் கணினியில் அது நிறுவப்பட்டிருப்பது சாத்தியமானவொன்றே. அதன் மீது மேலே குறிப்பிட்ட extensionஐ நிறுவிக் கொண்டால், பிறகு எ-கலப்பையைப் போலவே தமிழில் தட்டச்சலாம். இது 10KBக்கும் குறைவாகயிருப்பதால், ஒரு நொடியில் இதை நிறுவிக் கொள்ள முடியும். (குறிப்பு - இதை Firefoxக்குள் மட்டுமே பயன்படுத்த முடியும். MS Word, Notepad போன்றவைகளுடன் இதைப் பயன்படுத்த முடியாது). F12 விசையை அழுத்தினால் தமிழ்நெட்99 செயல்பாட்டைப் பெறலாம். Ctrl+F12 விசைகளை அழுத்தினால் romanized / அஞ்சல் செயல்பாட்டைப் பெறலாம். F9 விசையைக் கொண்டு ஆங்கிலம் - தமிழ், இவற்றில் ஒரு மொழியிலிருந்து மற்ற மொழிக்குத் தாவிக் கொள்ளலாம். இவ்வாறு, நீங்கள் பொதுக்கணினிகளிலிருந்தும் தமிழில் உங்கள் கருத்துகளை / படைப்புகளை அளிக்க வாய்ப்புள்ளது.

31 comments:

சேதுக்கரசி said...

உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் இணையத் தமிழ்ச் சேவை.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

வலைப்பதிவின் நோக்கம் அருமை. தமிழ் மட்டும் அறிந்நவர்கள், தமிழ் வலைப்பதிவர்கள் ஆகியோருக்கு நல்ல தகவல் ஆதாரம். இது போன்ற உதவிப் பதிவுகள், இடுகைகள் வரத் தொடங்கி இருப்பது, தமிழ் வலைப்பதிவு உலகம் அடுத்த கட்டத்துக்கு போவதை தான் தெரிவிக்கிறது. தமிழ்99 விசைப்பலகை பயன்படுத்துங்கள் என்று இன்னும் கொட்டை எழுத்தில் கூட போடுங்கள். அதை விட அருமையானது வேறொன்றுமில்லை. தமிழ்கீ நீட்சியை மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

இது குறித்த என் இடுகை -
http://thamizhthendral.blogspot.com/2006/12/blog-post_08.html

Anonymous said...

i tried the tamilkey extension in firefox but ctrl+F12 for switching to romanized key layout is not happening.

moreover also include the one I am using now to type in tamil kuraL tamilz Seyali from http://kuralsoft.com/screen.htm

Voice on Wings said...

செல்லா, தமிழ் விசை நீட்சி மாற்றப்பட்டிருப்பதாக அறிகிறேன். Shortcut keys Alt+F8 to Alt+F12 ஆகிய விசைக் கலவைகளை முயன்று பாருங்கள்.

One more change w.r.t FF - Instead of downloading userContent.css (which left justifies everything), use Firefox options and set the display font for Tamil as TSCu_Paranar, and _disallow_ pages from using their own fonts. This will force the browser to use Paranar, which is the only tamil font which works well with FF. Absense of userContent.css might revive the text-align:justify problem.
In such cases, using 'View' menu option, select 'Page Style -> No style' in order to read the broken text. (Request: Can this updated in the post?)

scientists said...

உங்கள் சேவை பாராட்டக்கூடியது. எனக்கு ஒரு சிறு சந்தேகம் என் வலைப்பூவில் நான் வெளியிடும் ஒவ்வொரு பதிப்பும் ஒரே பக்கத்தில் வருகிறது பேக்லிங்க் கிட் என்றுதான் உள்ளது தயவு செய்து பதில் அளிக்கவும்.

Expatguru said...

I have a firewall installed in my office pc which does not accept .exe files. Can you please tell me a method to install ekalappai?

ஏமாறாதவன் said...

ஐயா,

தங்களின் இந்த பதிவு மிக உபயோகமானது. மிக விவரமாகவும், தெளிவாகவும் எழுதியிருக்கிறீர்கள்.

ஆனாலும், இரண்டு குறைகளை நான் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

நீங்கள் புதிதாக தமிழில் டைப்பிங் கற்கும் மாணவர்களுக்கு டிரான்ஸ்லிட்ரேஷன் வழியிலேயே டைப்பிங் பழக்குவது மிகவும் தவறாகும். தமிழில் தட்டச்சு செய்ய மிகச்சுலபமான முறை டாம்99 முறையே. இதைப்பற்றி நீங்கள் அறியவில்லை என்று நினைக்கிறேன். டாம்99 முறை தமிழ் தட்டச்சு நுட்பத்தில் ஒரு சாதனை. ஷிப்ட் விசைகள் உபயோகிக்காமலே அற்புதமாக ஒரு 40% வேகமாக சுலபத்தில் தட்டச்சு செய்ய முடியும். இதை நீங்கள் தெரிவிக்காமல், புதியவர்களை தவறான, கடினமான, பிழைக்கு வாய்ப்பளிக்கும் இந்த முறையை சொல்லிக்கொடுப்பது மிகவும் தவறு.

இரண்டாவதாக, என் ஆழ்ந்த குறை இந்த தமிழ் தட்டச்சு செயலிகளில் புதிய ஆராய்ச்சிகள் தீவிரமாக ஒன்றையும் காணோம். ஒருங்குறி யூனிகோட் 2.0 பாகம் வெளியாகி சில ஆண்டுகள் ஓடிவிட்டன. இதில் புதிதாக பல எழுத்துருக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இவை இன்னும் ஒரு செயலிகளிலும் சேர்க்கப்படவில்லை. இதனால், எல்லா செயலிகளும் முழுமை பெறாமலேயே நிற்கின்றன.

இந்த செயலிகளில் பல மேம்பாட்டுகள் தேவை. எழுத்துருக்களின் கெர்னிங் முதலிய சிறப்பம்சங்களிலும் மேம்பாட்டுகள் தேவை. ஒருங்குறியில் எழுத முடியும் என்ற ஒரு நிலை முதல் வெற்றி. ஆனால், அதனோடே நாம் நின்றுவிட்டோமோ என்று தோண்றுகிறது. டாம்99 கடைசி வெர்ஷன் வந்த 7 ஆண்டுகள் ஓடிவிட்டன. மேலே மேம்பாட்டுகள் ஒன்றுமில்லை.

நாடோடி said...

//Step 2: (Only for Firefox browser) You may see consonants and vowel modifiers displayed separately, instead of being shown as composite letters (uyir mei). To correct this, download this file and save it in the folder below://

இதை நான் போன் வருடம் என பதிவில் போட்டு இருந்தேன்.
http://naagariika-naadoodi.blogspot.com/2006/08/solution-for-tamil-letter-rendering-in.html

so credit எனக்குதான், எனக்குதான் :)))).
TSCu_Paranar பாண்ட்ல் சில பிரச்சனைகள் உள்ளது. தமிழ்ல்லாத மற்ற பக்கங்கள் சரியாக Render ஆகாது. இதற்கு தீர்வாக stylish அல்லது greashmonkey extensionஐ யூஸ் பண்ணலாம். நான் stylish யூஸ் பண்ணுகிறேன். அதில் ஒரு புது ஸ்டைல் create பண்ணி அதில் நாம தமிழ் பக்கங்களை மட்டும் சேர்த்துகொள்ளவேண்டும்(மேலே பதிவில் உள்ள பாண்ட ஸ்டைலுடன்).

Eg.

@-moz-document domain(blogspot.com)
{
*{
letter-spacing: 0 !important;
text-align:left !important;
font:10pt "Arial", "Times New Roman", "TSCu_Paranar","TSCu_Times","TSCu_Comic", "ThendralUni","Latha", "TSCu_InaiMathi", "Arial Unicode MS", "TheneeUni", "TheneeUniTx", "TAU_1_ELANGO_Barathi","TSCu_Veeravel" !important;
}
}

Anonymous said...

யக்கா http://muralinz.blogspot.com/ இதிலே ஓருத்தர் எயீதி இருக்கார் பாருங்கா,அத்தே ஓரு தபா படிங்க.

Anonymous said...

We're sorry, but we were unable to complete your request.

When reporting this error to Blogger Support or on the Blogger Help Group, please:

Describe what you were doing when you got this error.
Provide the following error code and additional information.
bX-3dkwaz (WHAT TO DO FOR THIS WHEN I TRIED TO OPEN THIS BLOG http://muralinz.blogspot.com in THAMIZMANAM.COM)

உண்மைத்தமிழன் said...

நான் தற்போது inscript method-ல் டைப்பிங் செய்து வருகிறேன். பயன்படுத்தும் software, keyman 6.0. ஆனால் எ-கலப்பையில் எனது inscript keyboard 'kmn' file work ஆகவில்லை. இதனால் அலுவலகம் தவிர வேறு இடங்களில் என்னால் தமிழில் டைப் செய்ய முடியவில்லை.

எ-கலப்பையில் inscript typing method-க்கான kmn file-ஐ யாராவது வடிவமைத்துத் தர முடியுமா? கட்டணங்களைச் செலுத்தத் தயாராக இருக்கிறேன்.

இன்று நான் இருக்கும் சூழ்நிலையில் இந்த typing method-ஐ மாற்றிக் கொள்ள முடியவில்லை. மன்னிக்கவும். வருந்துகிறேன்..

இப்போது எனக்கு மேற்கண்ட பிரச்சினைக்கு தீர்வு வேண்டும்? தயவு செய்து யாராவது உதவுங்கள்..

Anonymous said...

//எ-கலப்பையில் inscript typing method-க்கான kmn file-ஐ யாராவது வடிவமைத்துத் தர முடியுமா?//

இதை முயற்சி செய்தால் நீங்களே செய்யலாம். ஏதாவது ஒரு KMX பைலை காப்பி பண்ணி அதை Notepadல் திறந்து தங்களின் தேவைக்கேற்ப மாற்றிகொள்ளுங்கள். இதை Keymanனுடன் இனைக்கும் shortcutகீஸ்தான் சிறிது கடினமாது என எண்ணுகிறேன்.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

ராஜூ - எ-கலப்பை நிறுவ இயலாவிட்டால், Firefox உலாவியில் தமிழ் விசை நீட்சி நிறுவிக் கொண்டும் தமிழ்த் தட்டச்சு செய்யலாம். Firefox ஒரு முக்கியமான உலாவி என்பதால் இதை நிறுவதற்கான அனுமதியை நீங்கள் எளிதில் உங்கள் அலுவலகத்தில் கேட்டுப் பெறலாம்.

Anonymous said...

ஐய்யா, தயவு செய்து இந்த பக்கத்தை கூகிள் தேடலில் ் முதல் பக்கட்த்தில் வரும்படி செய்யுங்கள் for the search on tamil fonts
keywords: tamil-font firefox, tamil-typing, tamil-unicode. etc.

நன்றி!

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

கொக்கி, கூகுள் தேடலில் முதற்பக்கத்தில் வருவது நம் கையில் இல்லை. சில கூடுதல் குறிச்சொற்களைப் பக்கத்தில் சேர்க்க முயல்கிறோம். இந்தப் பக்கத்துக்குப் பலரும் இணைப்பு கொடுக்கும்போதும் இப்பக்கத்தின் கூகுள் தரம் உயரும்.

NAADOODI said...

கோவை அனந்த்

பயனுள்ள தகவல்கள்.
உதவிக்கு நன்றி.

10.06.2007

NAADOODI said...

பயனுள்ள தகவல்கள்.
உதவிக்கு நன்றி.

10.06.2007

Anonymous said...

இதையும் பாருங்க!

http://ubuntu-tam.org/tamil_ubuntu_wiki/index.php/கேயுபுண்டு/கேள்வியும்_பதிலும்

Anonymous said...

Thank you so much. I have been struggling since months to get it right in Firefox. Stumbled upon your blog recently.

Please continue your service .. God bless you.

Anonymous said...

அது சரி நல்ல பதிவுதம

Anonymous said...

நன்பரே இந்த பக்கம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

Rajan said...

Hi friends,
Now i shifted my OS from WinXP to Ubuntu.
I dont know how to install e-kalappai in ubuntu.
Anybody can help me? Pls...

Rajan

SALAI JAYARAMAN said...

மிகப் பயனுள்ள பதிவு.

எனக்கு தங்கள் உதவி தேவைப்படுகிறது,

நான் Tamil Unicode TW Anbuselvan என்ற font மூலமாக இதுவரை பிளாக்குகளில் எழுதிக் கொண்டு வருகிறேன். எனக்கு புதிய தட்டச்சு வழிமுறைகளான எ கலப்பை (தமிழ்நெட்,99) போன்ற புதிய வடிவங்களில் தட்டச்சு செய்ய இயலவில்லை.

பழைய தட்டச்சுக் கருவிப் பயன்பாடு (ய,ள, ன,க) முறையில் அதிகம் பழக்கம் உள்ளதால் என்னால் பாமினி, அஞ்சல் போன்ற எழுத்துருக்களில் வடிவமைக்க முடியவில்லை.

பழைய தட்டச்சு வடிவத்தில் key board பதிவிறக்கம் செய்து கொள்ள எந்த முகவரியைத் தொடர்பு கொள்ள வேண்டும். Tamil Unicode TW Anbuselvan Font எந்த முகவரியில் கிடைக்கும்?

தகவல் தந்தால் மிக உதவியாக இருக்கும்.

நன்றியுடன்,

சாலை ஜெயராமன்.

Unknown said...

உங்கள் சேவைக்கு என் நெஞ்சம் நிறை நன்றிகள்.தமிழ் கூறும் நல் உலகம் உங்களை பாராட்டி மகிழும்.nellaikanna

Bee'morgan said...

oh.. wow.. உண்மையிலேயே மிகவும் பயனுள்ள பதிவு இது.. நீண்ட நாட்களாக, firefox ் ல் சரியாக படிக்கமுடியாமல் ie வைத்து திணறிக்கொண்டிருந்தேன்.. இப்போது firefox லேயே சரியாக படிக்க முடிகிறது.. நன்றிகள் பல.. :-) உங்கள் சேவை இன்னும் தொடரட்டும்..

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

எனக்கு ஒரு சந்தேகம்.
நான் இ-கலப்பை-அஞ்சல் எழுத்துரு உபயோகிக்கிறேன்.
இ கலப்பையில் இரு தேர்வுகள் இருக்கின்றன- யூனிகோடு தமிழ் மற்றும் டி எஸ் சி அஞ்சல்-இவை முறையே ALT+2 மற்றும் ALT+3 விசைகளால் தேரிந்தெடுக்கப் படுகின்றன.
யூனிகோடு தமிழ் தேர்ந்துடுக்கும் போது தமிங்கிலத்தில்-அஞ்சல் விசைப்பலகை-அடிக்க முடிகிறது.
ஆனால் டாம்99 தேர்ந்தெடுத்தால்-அஞ்சல் விசைப்பலகை வேலை செய்ய மாட்டென் என்கிறது.
இ-கலப்பையில்-அஞ்சல்,மற்றும் டாம்99 விசைப் பலகைகளை ஒரே நேரத்தில் நிறுவி,வேண்டிய விசைப் பலகையை ALT விசை கொண்டு மாற்றிக் கொள்ளும் வசதி சாத்தியமா?

விளக்கவும்.நன்றி.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

Hi,There is also a link for visual keyboard in Keyman-E Kalappai configuration menu.When we clisk this there is an onscreen keyboard displayed in right below corner of the screen.
But that is normal english keyboard ! Is there a way to set TAmil99 key board as a visual keyboard in E-Kallapai?

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

அறிவன், நீங்கள் கேட்டுள்ளபடி எ-கலப்பையில் காண் விசைப்பலகையை அடுத்த எ-கலப்பை பதிப்பிலேயே தர நினைத்திருக்கிறோம்.

**

எ-கலப்பையில் ஒரே நேரத்தில் அஞ்சல், தமிழ்99 ஆகியவற்றை நிறுவ முடியாது. ஒன்றை நீக்கியே இன்னொன்றை நிறுவ முடியும். அடுத்தடுத்த பதிப்புகளில் உங்கள் தேவை சாத்தியமாகலாம்.

ஒரே நேரத்தில் இது போல் மாற்றி மாற்றி பயன்படுத்த விரும்பினால், firefox tamilkey நீட்சி, NHM writer போன்றவற்றைப் பயன்படுத்தலாம்.

✨முருகு தமிழ் அறிவன்✨ said...

//////ஒரே நேரத்தில் இது போல் மாற்றி மாற்றி பயன்படுத்த விரும்பினால், firefox tamilkey நீட்சி, NHM writer போன்றவற்றைப் பயன்படுத்தலாம்./////////
ரவிசங்கர்,மிக்க நன்றி.
நான் எக்ஸ்ப்ளோரர் உபயோகிக்கிறேன்,
நீங்கள் குறிப்பிட்ட விதயங்களுக்கான,விளக்கங்கள்,சுட்டிகள் இருப்பின் அறியத் தரவும்.
மீண்டும் நன்றிகள்.

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

http://software.nhm.in/writer.html

என்ற முகவரியில் இருந்து NHM writerஐப் பதிவிறக்கலாம். நன்றி.