Quick refrence

Download Links:- eKalappai 2.0b(Anjal) | eKalappai 2.0b (tamilnet99) - இங்கே தேர்வு செய்யவும்,
Key board layout :- e- kalappai (Anjal) |e-kalappai (Tamil 99) இதே மாதிரி இன்னும் ஏதாவது quick refrence சேர்த்தால் உபயோகமாக இருக்குமானால் பின்னூடத்தில் தெரிவிக்கவும்

Tuesday, December 12, 2006

comments - பின்னூட்டம் / மறுமொழி

ஒரு இடுகையின் வாசகர் அதை எழுதியவருக்குச் சொல்ல விரும்புவதை அதே இடுகையின் பக்கத்தில் சொல்ல வழி செய்வதே மறுமொழி அல்லது பின்னூட்டம் ஆகும். உங்கள் ப்ளாக்கர் பதிவில் பின்னூட்டம் இடுவது குறித்த அமைப்புகள் என்னென்ன, அதை எப்படிப் பயன்படுத்துவது போன்ற கேள்விகளுக்கு இந்த இடுகை பதில் சொல்ல முயல்கிறது:

Settings => Comments

1. Comments - Show/Hide
பின்னூட்டங்களைக் காட்டவோ மறைக்கவோ செய்யலாம். ஒரு பதிவில் பின்னூட்டத்தைக் காட்டுவதா கூடாதா என்ற கேள்விக்கு இந்தத் தெரிவு விடையளிக்கிறது. show என்றால் காட்ட முடியும். Hide என்றால் பின்னூட்டங்கள் இருக்கும்; ஆனால் பார்க்க முடியாது.

பொதுவாக இது show என்று தான் இருக்கும்.

2. Who can Comment?
பின்னூட்டம் யாரெல்லாம் இட முடியும்?
* ப்ளாக்கர் கணக்கு வைத்திருப்பவர்கள் (Only Registered Users) -
ப்ளாக்கரில் கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்தப் பதிவுகளுக்குப் பின்னூட்டமிடமுடியும்.

* யார் வேண்டுமானாலும் (Anyone)
ப்ளாகர் கணக்கு இல்லாத பெயரில் பிறரும் (other), எந்த வித பெயர் அடையாளமும் காட்டிக் கொள்ளாமலும் (anonymous) யார் வேண்டுமானாலும் பின்னூட்டமிடலாம்.

* அந்தப் பதிவின் உறுப்பினர்கள் மட்டும் (Only Members of this blog)
அந்தப் பதிவின் members அல்லது permissions பக்கத்தில் இருக்கும் உறுப்பினர்கள் மட்டுமே.

பொதுவாக இவற்றில் முதல் இரண்டைத் தான் பயன்படுத்துகிறோம். புது ப்ளாகரிலும் இதே வகைகள் தாம். ஆனால், புது ப்ளாகரில் கணக்கு வைத்திருப்பவர்கள் பழைய ப்ளாக்கரில் பின்னூட்டம் இடும்பொழுது, அவை anonymous பின்னூட்டங்களாகவே அனுமதிக்கப்படுகின்றன. அதனால் தான் ப்ளாக்கர் கணக்கு தெரிவை மட்டுமே வைத்திருக்கும் சிலரால் இந்த புதிய ப்ளாகர் பின்னூட்டங்களைப் பதிப்பிக்க முடிவதில்லை.

அத்துடன் other தெரிவின் வழியே வரும் பின்னூட்டங்களின் புகைப்படங்கள் தெரியாது. ஆனால், ப்ளாக்கர் கணக்கு வழியே வருபவற்றின் படங்களும் தெரியும். பதிவுக் கணக்கு இல்லாதவர்களுக்காகவே உருவானவை தான் இந்த other மற்றும் anonmous தெரிவுகள்.

3. Comments Default for Posts - New Posts Have Comments/New Posts Do not have comments

இந்தத் தெரிவின் மூலம் புதிதாகப் பதியப் போகும் இடுகைகளுக்குப் பின்னூட்டம் வேண்டுமா வேண்டாமா என்று பதிவாசிரியரே முடிவெடுக்கலாம். மேலே உள்ள show/hide தெரிவைப் பொறுத்தவரை அது எல்லா இடுகைகளுக்குமான தெரிவு. இந்த புது இடுகைகள் பற்றிய தெரிவு, இனிமேல் எழுதப் போகும் இடுகைகளின் பின்னூட்டப் பெட்டிகளை மட்டுமே கணக்கில் கொண்டு இயங்கும்.

4. Backlinks = show/hide
Backlink என்பது, உங்கள் பதிவின் முகவரியைத் தனது இடுகையின் இடையில் கொடுத்து எழுதப்படும் புதிய இடுகை. - தொடர்புடைய இடுகை என்றும் இதனை அழைக்கலாம். அப்படி எழுதப் படும் பிற இடுகைகளின் முகவரி உங்கள் பதிவில் தெரிய வேண்டுமா வேண்டாமா என்று முடிவு செய்வதே இந்தக் கேள்வியின் நோக்கம்.

5. Backlinks Default for Posts
புது இடுகைகளில் இது போன்ற தொடர்புடைய சுட்டிகள் தெரிய வேண்டுமா? வேண்டாமா? (கவனிக்க, 4ஆம் எண் தெரிவு எல்லா இடுகைகளுக்குமானது. 5 ஆவது, புது இடுகைகளுக்கு மட்டுமானது)

6. Comments Timestamp Format
இடுகைகளின் பின்னூட்டங்களின் நேரம் எத்தனை துல்லியத்துடன் அறிவிக்கப் படவேண்டும் என்ற தெரிவு இது.

7. Show comments in a popup window? Yes/No
பின்னூட்டங்கள் ஏற்கும் பெட்டி, வலையுலாவியில், புதிய பக்கத்தில் தெரிய வேண்டுமா? அல்லது அதே பக்கத்திலா? இந்தக் கேள்விக்கான விடையை இந்த தெரிவு சொல்லலாம்.

இதை அதே பக்கத்தில் தெரியுமாறு வைப்பதே வேகமான வலைப்பக்கப் புதுப்பித்தலுக்கு உதவும்.

8. Enable comment moderation? Yes/No
பின்னூட்ட மட்டுறுத்தல் - மிக மிக முக்கியமான தெரிவு இது. பின்னூட்டம் மட்டுறுத்தப்படுதல் என்றால், புதிதாக இடப்படும் பின்னூட்டத்தை முதலில் பதிவாசிரியர் பார்த்து, அதன் சொற்சுவை, பொருட்சுவை உணர்ந்து பிரசுரிப்பதா வேண்டாமா என்று முடிவெடுக்க உதவுவது இந்தத் தெரிவு.

பொதுவாக இதைத் தெரிந்தெடுப்பதே சிறந்தது. புதுப் பின்னூட்டங்கள் எந்த மின்முகவரிக்கு மடலாக அனுப்பப்பட வேண்டும் என்பதையும் இங்கே சொல்வது நல்லது.

9. Show word verification for comments? Yes/No
கவனிக்கப் படவேண்டிய மற்றொரு தெரிவு இது. வலைப் பதிவில் எரிதப் (spam) பின்னூட்டங்கள் வராமல் இருப்பதைத் தடுப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். இந்தத் தெரிவு இயங்கினால், பின்னூட்டமிடும் ஒவ்வொருவருக்கும் ஒரு சொற்பெட்டி காண்பிக்கப்படும். அந்தப் பெட்டியில் உள்ள எழுத்துக்களைப் பார்த்து மீண்டும் எழுதினால் மட்டுமே பின்னூட்டம் ஏற்கப்படும். தமிழ்ப்பதிவுகளில் இதைச் செய்வது கொஞ்சம் தொல்லையான விசயமே.. இந்தத் தெரிவை வேண்டாம் என்று சொல்லிவிடுவதே அதிக பின்னூட்டம் வர முதல் வழி ;) தவிர, மறுமொழி மட்டுறுத்தலை முடுக்கி விட்டிருந்தால், இந்தத் தெரிவு அவ்வளவு அவசியமாக இருக்காது.

10. Show profile images on comments? Yes/No
இந்தத் தெரிவை இயக்குவதால், பின்னூட்டமிடுபவர்களின் ப்ரொபைல் (profile) படங்கள் பதிவில் தெரியும். இதன்மூலம் கொஞ்சம் பக்கம் புதுப்பித்தலில் தாமதமானாலும், பின்னூட்டமிட்ட பதிவரின் தனித்துவம் காப்பாற்றப்படும்.

11. Comment Notification Address
இதில் மின்மடல் முகவரியைக் கொடுத்தால், இடப்படும் ஒவ்வொரு பின்னூட்டமும் இந்த முகவரிக்கு மடலாக அனுப்பப்படும்.

இவை தவிர, ஒவ்வொரு இடுகையின் இறுதியிலும் பின்னூட்டங்களுக்கான ஒரு தெரிவு ஒளிந்துள்ளது.

புது இடுகையைத் தட்டும் பொழுதில்,
Posting => Create =>
இங்கே, இடுகை தட்டச்சும் பெட்டிக்குக் கீழே Post Options என்ற அம்புக் குறி உள்ளது. இதைத் திறந்து பார்த்தால், Comments - Allow/Dont allow என்றும் Backlinks Allow/Dont Allow என்றும் தெரிவுகள் உண்டு.

இவற்றின் மூலம் இடப்படும் ஒவ்வொரு இடுகைக்கும் பின்னூட்டம் காட்டுவதா வேண்டாமா என்பதை இடுகை இடும் பொழுதும் மீள்பரிசோதனை செய்யலாம்.


அருஞ்சொற்பொருள்:
  • இடுகை - Post
  • பின்னூட்டம் - Comment
  • உலாவி - Browser

12 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

ரொம்ப எளிமையா விளக்கி இருக்கீங்க.
என்னைபோல புதிதா எழுத வரவங்க குழம்பாம இருக்க அவசியாமானது.நன்றி.

கானா பிரபா said...

வலையுலாவி Explorer இற்குப் பதில் Browser என்றிருந்தால் பொதுவானதாக் இருக்கும் இல்லையா?

Anonymous said...

தமிழ்மணத்திலே அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள் பகுதியிலே பதிவாளர்களின் பின்னூட்டம் தோன்ற

8. Enable comment moderation? Yes என்ற பின்னூட்ட மட்டுறுத்தல் என்பது கட்டாயம்.

பதிவாளர்கள்
9. Show word verification for comments? Yes என்பதைத் தேர்ந்தால் போதாது.

பொன்ஸ்~~Poorna said...

நன்றி லட்சுமி, இந்தப் பதிவு எழுதத் தூண்டியது நீங்கள் தான். அதற்கும் நன்றி :))

ப்ரபா, ஹி ஹி.. மாத்திட்டேன்.. விண்டோஸ் சார்பெல்லாம் இல்லை.. ஆங்கிலச் சொல் தேர்வதில் குழப்பம் :))

Anonymous said...

பொன்ஸ் மற்றும் தமிழ் வலைப்பதிவர் உதவிபக்க குழுவினருக்கு,

நல்ல முயற்சி. பலரும் பயனடைவார்கள் என ந்ம்புகிறேன்.
என் உளம் கனிந்த வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் மற்றும் நன்றியை உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பூர்ணா
எங்கோ ஒரு பதிவில் பின்னூட்டத்தில் எப்படி link கொடுப்பது , அதாவது hyperlink feature (href)ஐ எப்படிப் பாவிப்பது என்று ஒரு பதிவர் கேட்டிருந்தார். அதற்கும் விளக்கமாக ஒரு பதிவு போடுங்கோ. பலருக்கும் உபயோகமாக இருக்கும்.மிக்க நன்றி.

Oh, இன்னுமொரு விடயம், எனது Blogger account ஐப் பாவித்து இங்கே பின்னூட்டம் இட முடியாமல் இருக்கிறதே!

அன்புடன்
வெற்றி

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

1. நான் தமிழ்மணத்தில் சேர்த்த பதிவுகளின் பின்னூட்டம் தமிழ்மணத்தால் திரட்டப்படவில்லை. என் வலைப்பதிவில் பின்னூட்டு மட்டுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்மணம் என் பின்னூட்டுக்களை திரட்டச் சொல்லி எங்கு எப்படி கேட்பது.

2. ஒரு இடுகையை தவறுதலாக இட்டு நீக்கி விட்டேன். ஆனால், அது இன்னமும் தமிழ்மண முகப்பில் காட்டபடுகிறது. இதை எப்படி நீக்குவது? தமிழ்மண மஞ்சள் ஆச்சரியக்குறி மூலம் தமிழ்மணத்துக்கு தெரிவிப்பது மட்டும் தான் ஒரே வழியா?

நன்றி

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

பொன்ஸ், browserக்கு தமிழ் சொல் - உலாவி. இது போல் நுட்பச் சொல்ல குழப்பம் இருந்தா தமிழ் விக்சனரி தளத்தில் தயங்காம கேளுங்க

கௌசி said...

என் வலைப்பதிவில் பின்னூட்டு மட்டுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்மணம் என் பின்னூட்டுக்களை திரட்டச் சொல்லி எங்கு எப்படி கேட்பது.பதிவுகளின் பின்னூட்டம் தமிழ்மணத்தால் திரட்டப்படவில்லை

பொன்ஸ்~~Poorna said...

ரவிசங்கர்,
//1. நான் தமிழ்மணத்தில் சேர்த்த பதிவுகளின் பின்னூட்டம் தமிழ்மணத்தால் திரட்டப்படவில்லை. என் வலைப்பதிவில் பின்னூட்டு மட்டுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்மணம் என் பின்னூட்டுக்களை திரட்டச் சொல்லி எங்கு எப்படி கேட்பது. //
பின்னூட்ட மட்டுறுத்தல் செய்யப்பட்டதை இந்தப் பதிவில் சொல்ல வேண்டும்..

// 2. ஒரு இடுகையை தவறுதலாக இட்டு நீக்கி விட்டேன். ஆனால், அது இன்னமும் தமிழ்மண முகப்பில் காட்டபடுகிறது. இதை எப்படி நீக்குவது? தமிழ்மண மஞ்சள் ஆச்சரியக்குறி மூலம் தமிழ்மணத்துக்கு தெரிவிப்பது மட்டும் தான் ஒரே வழியா? //
ஆம்.. மஞ்சள் ஆச்சரியக் குறியை அழுத்தித் தான் தமிழ்மணத்துக்குச் சொல்ல முடியும்.

பொன்ஸ்~~Poorna said...

//என் வலைப்பதிவில் பின்னூட்டு மட்டுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்மணம் என் பின்னூட்டுக்களை திரட்டச் சொல்லி எங்கு எப்படி கேட்பது.பதிவுகளின் பின்னூட்டம் தமிழ்மணத்தால் திரட்டப்படவில்லை //

கௌசி,
பின்னூட்ட மட்டுறுத்தல் செய்யப்பட்டதை இந்தப் பதிவில் சொல்ல வேண்டும்..

பொன்ஸ்~~Poorna said...

வெற்றி,
நீங்கள் கேட்டது செய்திருக்கிறோம். பதிவர்கள் அடிக்கடி கேட்கும் கேள்விகள் இடுகையைப் படித்தால் தெரியும்..

தமிழ்பித்தன் said...

அண்ணா,
நான் புதிதாக ப்ளாக் எழுதுகிறேன் ஆனால், நான் கடைசியாக செய்ததுதான் முதல் பக்கமாக வருகிறது இதை எப்படி சரி செய்வது என்பதை தயவு செய்து கீழ்கண்ட முகவரிக்கு சொல்லுவீர்களா?
sankar02@gmail.com