Quick refrence

Download Links:- eKalappai 2.0b(Anjal) | eKalappai 2.0b (tamilnet99) - இங்கே தேர்வு செய்யவும்,
Key board layout :- e- kalappai (Anjal) |e-kalappai (Tamil 99) இதே மாதிரி இன்னும் ஏதாவது quick refrence சேர்த்தால் உபயோகமாக இருக்குமானால் பின்னூடத்தில் தெரிவிக்கவும்

Friday, December 1, 2006

வலைப்பதிவுத் தொழில்நுட்ப உதவிக்குழு - ஏன், எதற்கு??

நண்பர்களே,

வலைப்பதிவுலகில் தமிழ் வலைப்பதிவுகளின் எண்ணிக்கை வியக்கத்தக்க வகையில் அதிகரித்து வருகின்றன. நாளுக்கு நாள் தமிழில் வலைப்பதிவு தொடங்குவது குறித்த ஆலோசனைகளை வேண்டி வரும் மின்னஞ்சல்களும், தொலைபேசி அழைப்புகளும் அதிகரித்திருக்கின்றன. ஏற்கனவே வலைப்பதிவு செய்யும் நண்பர்களுக்கும் வலைப்பதிவுகளின் சில தொழிற்நுட்ப விஷயங்களை குறித்த சந்தேகங்களை தீர்த்து வைக்க தொழில்நுட்பம் தெரிந்த நண்பர்களின் வழிகாட்டுதல்களும் தேவையாயிருக்கின்றன.

சென்னை வலைப்பதிவர் சந்திப்பின்போது தொழில்நுட்ப விஷயமறிந்த நண்பர்கள் குழுவாக இணைந்து உதவி செய்யலாம் என்ற வேண்டுகோள்கள் வைக்கப்பட வலைப்பதிவு தொழில்நுட்ப உதவிக்குழு அமைக்கலாம் என முடிவு செய்தோம். இது குறித்த செய்தியினை பதிவு செய்தபோது பல்வேறு பகுதிகளில் வாழும் நண்பர்கள் பலர் குழுவில் இணைய முன்வந்தார்கள். இது போன்ற ஒரு குழுவின் தேவையை பல நண்பர்கள் தங்கள் பின்னூட்டத்தில் தெரிவித்திருந்தார்கள். அவர்களுக்கு எங்கள் நன்றிகள்.

முதற்கட்டமாக நாங்கள் செய்ய நினைத்திருக்கும் பணிகள்

1. வலைப்பதிவு தொழில்நுட்ப விஷயங்களை பதிவு செய்யும் ஒரு பதிவு
2. வலைப்பதிவு தொழில்நுட்ப சந்தேகங்களுக்கு, பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க உதவும் ஒரு குழுமம்

1. வலைப்பதிவு தொழில்நுட்ப விஷயங்களை பதிவு செய்யும் ஒரு பதிவு

இந்தப்பதிவில் வலைப்பதிவு சார்ந்த தொழில்நுட்ப விஷயங்களை தாங்கிய இடுகைகள் வெளிவரும். தமிழில் எழுதுவது எப்படி என்பதில் தொடங்கி வலைப்பதிவு திரட்டிகளில் பதிவுகளை இணைப்பது, மட்டுறுத்தல் செய்வது, படங்கள்/ஒலிப்பதிவுகள்/நிகழ்படங்களை இணைப்பது என வலைப்பதிவுகள் சார்ந்த பல்வேறு தலைப்புக்களின் இடுகைகளை பதிவு செய்வதாக எண்ணம். ஏற்கனவே இது குறித்து மற்ற நண்பர்களின் இடுகைகளை அவர்களின் அனுமதியோடு மீள்பதிவு செய்யவிருக்கிறோம். உங்களின் கருத்துக்களையும் எண்ணங்களையும் பின்னுட்டதின் மூலம் பகிர்ந்து கொள்ளுங்கள். வலைப்பதிவு தொழில்நுட்பம் சார்ந்த தலைப்புக்களின் இடுகைகளை எழுத முன்வரும் நண்பர்களை வரவேற்கிறோம்.

2. வலைப்பதிவு தொழில்நுட்ப உதவிக்குழுமம்.

tamilblogging-support என்ற கூகுள் குழுமத்தை உருவாக்கியிருக்கிறோம். வலைப்பதிவு குறித்த உங்கள் சந்தேகங்களை, அது மிக அடிப்படையானதாக இருந்தாலும் இந்த குழுமத்திற்கு அனுப்பலாம். உங்கள் கேள்விகளை tamilblogging-support [at] googlegroups [dot] com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். பல்வேறு பகுதிகளில் வசித்துவரும் உதவிக்குழு நண்பர்கள் உங்களுக்கு பதிலளிப்பார்கள்.

இந்த உதவிக்குழு குறித்த உங்கள் கருத்துக்களை எங்களுக்கு அவ்வப்போது தெரியப்படுத்துங்கள். அது இந்தக்குழு மேம்பட உதவும். தொடர்ந்து ஆதரவளியுங்கள்.

10 comments:

சேதுக்கரசி said...

அருமையான முயற்சி. வாழ்த்துக்கள்! எனக்கும் ஒரு நாள் உபயோகப்பட வாய்ப்புண்டு :-)

வடுவூர் குமார் said...

தேவையான ஒன்று.
அதே சமயத்தில் வலைப்பூக்களுக்கு தேவையான நிரட்சிகளையும் வழங்கலாம்.
உதாரணத்திற்கு
தமிழிலேயே பின்னூட்டம் இடக்கூடிய வசதியை ஏற்படுத்திக்கொடுக்கலாம்.
தேவையான தொழிற்நுட்ப அறிவு என்னிடம் இல்லாததால் அதை செய்ய முடியவில்லை.அடுத்தவர்களிடம் வேலை சொல்வது சுலபம் என்று தெரியும்.
மன்னிக்கவும்.

Vicky said...

நன்றி சேதுக்கரசி & வடுவூர்குமார்.

//அதே சமயத்தில் வலைப்பூக்களுக்கு தேவையான நிரட்சிகளையும் வழங்கலாம்.

நல்ல ஆலோசனை. நிச்சயம் அடுத்த கட்டமாக நிரட்சிகளை எழுதவும் முயற்சிக்கலாம்.

கண்மணி/kanmani said...

my posts are not showen in tamilmanam front page under'recently commented posts'
plz help me in this matter

கௌசி said...

நான் பதிவிற்கு புதியவள்.
என் இடுகைகள் 'அண்மையில் மறுமொழி மட்டறுக்கப்பட்ட இடுகைகள்'' பகுதியில் காட்டப் படுவதில்லை.உதவவும்.நன்றி

செல்லி said...

பொன்ஸ்

கௌசியைப் போல நான் பதிவிற்கு புதியவள்.
என் இடுகைகள் தமிழ்மணத்தில் 'அண்மையில் மறுமொழி மட்டறுக்கப்பட்ட இடுகைகள்'' பகுதியில் காட்டப் படுவதில்லை.
தயவு செய்து உதவவும்.
நன்றி
எனது மின்னஞ்சல் முகவரி:
umathev@gmail.com

Anonymous said...

தமிழில் வலைப்பதிவதெப்படி என்று யாரேனும் கொஞ்சம் செல்லிக்கொடுங்களேன் please.

Anonymous said...

வலைப்பதிவு என்றால் blogger.com மட்டுமல்ல. வேர்ட்பிரஸ்ஸையும் அவ்வப்போது ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளலாம் :-)

deepamtimes said...

இனிய வணக்கம்

கடந்த ஆண்டு ஆகஸ்டு சென்னை வலைப்பதிவர் சந்திப்பு மற்றும் பாண்டி வலைப்பதிவா சந்திப்பில் கலந்து கொண்டு ஒரளவு தெளிவு பெற்றுள்ளேன்,
வலைப்பதிவு தகவல்களை அனைவருக்கும் தெரிவிக்க விழைகிறேன் ஆகவே மேல் தகவல்களுக்கு அடிக்கடி பயிற்சி வகுப்பு நடத்தினால் நல்லது, அதற்கு தகுந்த கட்டணம் செலுத்தவும் தயார்

cnotrol pannel Reginol Setting Tamil correct செய்தபிறகு m s Word ல் தெரிகிறது ஆனால் PAGE MAKE ல் தமிழ் எழுத்துக்கள் சரியாக தெரியவில்லை இது பற்றி விவரிக்கவும்
MC Jaya kumar Tiruvannamlai
Deepamtimes@gmail.com

- யெஸ்.பாலபாரதி said...

//cnotrol pannel Reginol Setting Tamil correct செய்தபிறகு m s Word ல் தெரிகிறது ஆனால் PAGE MAKE ல் தமிழ் எழுத்துக்கள் சரியாக தெரியவில்லை இது பற்றி விவரிக்கவும் //

ஜெயக்குமார்.. உங்களின் ஆர்வத்திற்கு நன்றி! நீங்கள் குறிப்பிடும் பேஜ்மேக்கர், போட்டோசாப் போன்ற மென்பொருட்கள் இன்னும் யுனிக்கோடு எழுத்துருவை தன்னகப்படுத்தும் படி தயாராகவில்லை. மாறாக இவற்றில் திஸ்கி, டாம்,டாப் போன்ற எழுத்துருக்களில் நீங்கள் வேலை செய்ய இயலும்.

முயன்று பாருங்கள்.

டாம்,டாப், திஸ்கி எழுத்துருக்கள் இணையத்திலேயே இலவசமாக சில இடங்களில் கிடைக்கும். (மத்திய அரசின் தளம் ஒன்று உள்ளது http://www.ildc.in/indext.aspx இங்கே கிடைக்கும்)