Quick refrence

Download Links:- eKalappai 2.0b(Anjal) | eKalappai 2.0b (tamilnet99) - இங்கே தேர்வு செய்யவும்,
Key board layout :- e- kalappai (Anjal) |e-kalappai (Tamil 99) இதே மாதிரி இன்னும் ஏதாவது quick refrence சேர்த்தால் உபயோகமாக இருக்குமானால் பின்னூடத்தில் தெரிவிக்கவும்

Wednesday, June 27, 2007

தமிழில் சிந்திப்போம் - தமிழ்99 விழிப்புணர்வு widget

தமிழ்99 விசைப்பலகை விழிப்புணர்வு widget

Monday, June 18, 2007

கூட்டு பதிவில் "பதிவு-செய்தவர்" பெயரை அவர்-அவர் profile க்கு இணைக்க

நமக்கு தெரிஞ்ச சில விஷயங்களை மத்தவங்களுக்கு சொல்லரதுக்கும்,, நமக்கு தெரியாத பல விஷங்களை தெரிஞ்சுக்கிரதுக்கும் கூட்டுபதிவு ரொம்பவே உதவியா இருக்கு. இப்படியிருக்க.. ஒவ்வொரு பதிவுக்கு கீழே பதிவுசெய்தவர் பெயர் இருக்கும்.. (என்ன பிரமாதம்..அதான் எங்களுக்கு தெரியும்லே..ன்னு தங்கவேலு/வடிவேலு மாதிரி சொல்லப்படாது..)பதிவர்-பெயரை எங்கேயும் default ஆ பிளாக்ர் இணைத்திருக்காது..அதாவது..பதிவர் பெயர் வெறும் ஒரு சொல் தான்

ஒவ்வொரு பதிவர் பெயரை ஒரு சுட்டி மாதிரி அவர்-அவர் profileக்கு இணைக்க முடியும். பதிவு நிர்வாகி பண்ணவேடியதெல்லாம் இது தான்
step:1 ஒவ்வொரு பதிவரின் profile-URL லிருந்து அவர் பெயரும்(Profile Name ) & pID ( Profile ID) ஐ எடுத்து notepad ல் பத்திரப்படுத்தவும்

உதாகரணம்:- என் பிரொபைல் URL இது :- http://www.blogger.com/profile/08368941819092880320


இதில் 08368941819092880320 தான் என் pID. உங்கள் கூட்டுபதிவில் செயல்படும் பதிவர்களின் Profile Name & pID ஐ கீழே சொல்லியிருப்பது போல் பட்டியல் போட்டு வைக்கவும். Profile Name படத்தில் காட்டியிருப்பது போல் பதிவரின் Profile லில் இருக்கும் பெயர் தான் தேவை.. ஏன்னா <data: postauthor> tag பிரொபைலில் இருக்கும் பெயர் தான் பதிவில் வெளிப்படுத்தும்

Team_Member ( profile லில் இருக்கும் பதிவர் பெயர்)
pID ( profile ID number)

Team_Member 1 : pID
Team_Member 2 : pID
Team_Member 3 : pID
Team_Member 4 : pID
Team_Member 5 : pID
Team_Member 6 : pID

இந்த பட்டியல் தெயாரானதும் அந்த notepad ஐ பத்திரப்படுத்திகொள்ளவும் ( எல்லாம் ஒரு முன்-ஜாகிரதை தான்)

STEP:2 : கீழே இருக்கும் code ஐ இன்னொரு Notepad ல் ஒட்டி.. Team_member க்கு பதிலாக Profile லில் இருக்கும் பதிவர் பெயரும் , pID க்கு பதிலாக .. பதிவரின் profile லிருந்து எடுத்த pID எண்ணையும் போடவேண்டும்

<script type='text/javascript'>
var team = new Array();
team[' Team_Memeber 1 ']=' pID number ';
team[' Team_Memeber 2 ']=' pID number ';
team[' Team_Memeber 3 ']=' pID number ';
team[' Team_Memeber 4 ']=' pID number ';
team[' Team_Memeber 5 ']=' pID number ';
team[' Team_Memeber 6 ']=' pID number ';

function makeprofilelink (authorname)
{
var pid = team[authorname];
document.write("<a href='http://www.blogger.com/profile/" + pid + "'>" + authorname + "</a>");
}
</script>


Notepad ஐ பத்திரப்படுத்தி கொள்ளவும் ( எல்லாம் ஒரு முன்-ஜாகிரதை தான்)

STEP 3:- மேலே இருக்கும் கோடில் பெயரும் pID எண்ணையும் சரிபார்த்து..திருப்தியானப்புறம்... அதை உங்கள் டெம்ப்ளேட்டின் </head> tag க்கு மேலே இணைக்கவும்

STEP4 :- உங்கள் டெம்ப்ளேட்டில் கீழே இருக்கும் code ஐ கண்டுபிடிக்கவும்
  1. கண்டுபிடிக்க:-

    <b:if cond='data:top.showAuthor'>
    <data:top.authorLabel/>
    <data: post.author/>
    </b:if>
  2. இதில் <data: post.author/> க்கு பதிலாக இதை எழுதவும்


  3. <script type='text/javascript'> makeprofilelink('<data: post.author/>');
    </script>
  4. அதாவது.. மாற்றங்கள் செய்தப்புறம் உங்க கோட் பார்க்க இப்படி இருக்கும்

<b:if cond='data:top.showAuthor'>
<data:top.authorLabel/>
<script type='text/javascript'> makeprofilelink('<data: post.author/>');
</script>

</b:if>


STEP:5 Save செய்து உங்கள் பிளாகை browser ல் பார்க்கவும்.. எல்லா பதிவர்களும் அவரவ்ர் Profile க்கு ஆடோமேட்டிகா இணைக்கப்பட்டிருப்பார்கள்.
பிளகர் உதவி பக்கத்தில் இதுக்காக சொல்லியிருக்கும் கோட் வெலைகாவாதுஅம்புட்டுதேன்..

Friday, June 15, 2007

வார்ப்புரு மேம்பாட்டுக் கருவி

புதிய ப்ளாக்கருக்கு மாறியபின் தமிழ்மணப் பட்டி தொடங்கி வார்ப்புரு மாற்றங்கள் எல்லாமே கொஞ்சம் கடினமான விசயமாகத் தான் ஆகி விட்டது. அந்தப் பிரச்சனையிலிருந்து விடுவிக்க இதோ ப்ளாக்கர் மேம்பாட்டுக் கருவி.

குழலி செய்யத் தொடங்கிய இந்தக் கருவியில், மேலும் பல மாற்றங்களுடன் முன்னேற்றங்களுடன், பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு, இதோ, உங்களுக்காக: புதிய ப்ளாக்கர் வார்ப்புரு மேம்பாட்டுக் கருவி

இந்த புதிய ப்ளாக்கர் வார்ப்புரு மேம்பாட்டுக் கருவியின் மூலம் நீங்கள் பெறக்கூடிய வசதிகள் பின்வருமாறு:

  • தமிழ்மணத்தின் கருவிப்பட்டையைச் சேர்த்துக்கொள்ளலாம்.
  • பழைய ப்ளாக்கரிலிருந்து மாறியவர்களுக்கு ஒருங்குறி எழுத்துக்களை சரியான முறையில் தெரிய வைக்கலாம்.
  • நாளும் நேரமும் தமிழில் காட்டலாம்.
  • தேன்கூட்டின் பின்னூட்டங்கள் திரட்டும் பட்டியைச் சேர்த்துக் கொள்ளலாம்..
  • யாஹூ சிரிப்பான்களைப் பதிவில் காட்டும் நிரலியையும் சேர்த்துக் கொள்ளலாம்.

ஒரே ப்ளாகர் கணக்கின் கீழ் இருக்கும் வெவ்வேறு பதிவுகளில் பதிவர் பெயரை javascript இல்லாமலும் மாற்றலாம்

இந்த பதிவுக்கு ஐடியா தந்தவர் பொன்வண்டு..பிளாகரில் உள்ள conditional tags உபயோகபடுத்தி இதே வேலையை செய்யமுடியும்.

DONOT FORGET TO SAVE AND BACK UP YOUR TEMPLATE

1. பதிவுகளின் கீழே வரும் பதிவர் பெயரை மாற்ற :-
டெம்ப்ளேட்டில் இப்படி ஒரு கோட் இருக்கு

<span class='post-author'>
<b:if cond='data:top.showAuthor'>
<data:top.authorLabel/> <data: post.author/> </b:if>
</span>

இதில் <data:top.authorLabel/> தான் Posted by ன்னு காட்டுது.. ஸோ.. அந்த ஒரு code ஐ மட்டும் அழித்துவிட்டு .."எழுதியது / சொன்னது / சொன்னவர் / பதிவு போட்டவர்.." இப்படி என்ன வேணும்னாலும் எழுதலாம்

அதே மாதிரி<data: post.author/> தான் உங்கள் Profile ல் இருக்கும் பெயரை காட்டுகிரது.. ஸோ அதை அழித்துவிட்டு.. உங்க பெயருக்கு பதிலா என்ன பெயர் போடணும்ன்னு விரும்புரீங்களோ அதை தாராளமா போடலாம்... அது தான் எல்லா பதிவுக்கு கீழே தெரியும்

2.மறுமொழியில் உங்கள் பெயரை மாற்றி காட்ட.. மற்றும்.. அதிலிருந்து உங்கள் profile க்கு தொடுப்பு இல்லாமல் செய்ய

இது பின்னூட்டப் பக்கத்தில் காணக்கிடைக்காது. அவையெல்லாம் உங்கள் பதிவு காணக்கிடைக்கும் URL பக்கத்திலேயே தெரியும். முழுமையான பதிவு எக்ஸ்புளோரரில் தெரியும் போது அதனுடன் பின்னூட்டங்களும் தெரியும்.. இங்கே மட்டுமே இது சாத்திம்..

comments page ல் உங்கள் original profile name ம்.. அதனுடன் உங்கள் profile க்கு தொடுப்பும் இருக்கும்

டெம்ப்ளேட்டில் சிகப்பு நிறத்தில் இருக்கும் code ஐ இணைக்க வேண்டும்
மஞ்சள் நிறத்தில் இருப்பதை உங்க விருப்பம் போல மாற்றி எழுதலாம்


<b:if cond='data:comment.author == data: post.author'>
my name is YIPPIE-YIPPE..YEEEEE
<b:else/>
<b:if cond='data:comment.authorUrl'>
<a expr:href='data:comment.authorUrl' rel='nofollow'> <data:comment.author/></a>
<b:else/>
<data:comment.author/>
</b:if>
</b:if>
<data:commentPostedByMsg/>
</dt>


இதில் <data:commentPostedByMsg/> தான் said.. ன்னு காட்டும்.. விருப்பபட்டா.. இதையும் அழித்துவிட்டு .. உங்க கற்பனைக்கேற்றால் போல் மாற்றி அமைக்கலாம்

Thursday, June 14, 2007

Blogger Draft - ப்ளாகரின் அடுத்த பதிப்புக்கான சோதனைத் தளம்

http://draft.blogger.com என்ற முகவரியில் ப்ளாகரின் அடுத்த பதிப்புக்கான சோதனைத் தளம் வந்திருக்கிறது. இதில் தற்போது பலரும் பயன்படுத்தும் புது ப்ளாகரைக் காட்டிலும் கூடுதல் வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டு சோதிக்கப்படும். தற்போது, இடுகையில் இருந்தே நேரடியாக நிகழ்படத்தைப் (video) பதிவேற்றும் வசதி இங்கு கிடைக்கிறது. Blogger draftக்கு மாறியவர்கள் விரும்பினால் திரும்ப தற்போது இருக்கும் ப்ளாகருக்கே எந்த சிரமமுன்றி மாறிக் கொள்ளலாம்.

மேலதிகத் தகவல்களுக்கு - http://bloggerindraft.blogspot.com/

ஒரே ப்ளாகர் கணக்கின் கீழ் இருக்கும் வெவ்வேறு பதிவுகளில் பதிவர் பெயரை மாற்றலாம்

இந்தக் குறிப்பைத் தருபவர் - பொன்வண்டு

எல்லோரும் பிளாக்கர் டெம்ப்ளேட்டில் ஜாவா ஸ்கிரிப்டில் புகுந்து விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்து எனக்கும் அப்படி ஏதாவது செய்ய மாட்டோமா என ஆவல் இருந்து வந்தது. அதற்கேற்றார் போல போன வாரம் நான் ஒரு பிரச்சினையை எதிர் கொண்டேன். ஜாவா ஸ்கிரிப்ட் மூலம் சரி செய்தேன். தீபா, ஜெகத் போன்ற ப்ளாக்கர் விஞ்ஞானிகளின் ; -) script-களை ஒப்பிடும்போது என்னுடையது மிகவும் சிறியது தான்.

எனது கூகுள் account-ன் கீழ் இரண்டு Blogs உள்ளன. அதில் ஒன்று தான் இந்த பொன்வண்டு வலைப்பதிவு தளம்.

ஆனால் நம்மால் ஒரு account-க்கு ஒரே ஒரு profile மட்டுமே வைத்துக் கொள்ள முடியும். அந்த profile-ல் நாம் கொடுக்கும் display name-தான் நமது பதிவுகளில் author name-ஆக வரும் என்பது எல்லோருக்கும் தெரியும்.

நான் ஒரு வலைப்பதிவில் பொன்வண்டு என்ற பெயரில் எழுதுகிறேன். எனது மற்றொரு வலைப்பதிவில் வேறொரு பெயரில் எழுத நினைத்தாலும் முடியவில்லை. ஏனென்றால் ஒரு account-ன் கீழ் இருக்கும் எல்லா வலைப்பதிவுகளுக்கும் ஒரே profile-ல் இருந்தே display name-ஐ எடுத்துக் கொள்கிறது. எனது ப்ளாக்கர் profile-ல் display name பொன்வண்டு என்று உள்ளது.

அதனால் என்னுடைய இரண்டாவது தளத்தில் நான் வேறொரு பெயரில் எழுத நினைத்தேன். எப்படி என்று யோசித்தபோது கை கொடுத்தது ஜாவா ஸ்கிரிப்ட்.

ஒரு வலைப்பதிவு தளத்தில் 2 இடங்களில் author name தெரியும்.

1. பதிவின் கீழ், எழுதியவர் பெயர் தெரியுமிடத்தில்.
2. பின்னூட்டங்களில்

எனவே எந்த வலைப்பதிவு தளத்தில் மாற்றம் செய்ய வேண்டுமோ அங்கு அந்த tag-களைக் கண்டுபிடித்து template-ல் மாற்றி விட்டால் பிரச்சினை சரியாகிவிடும்.

செய்ய வேண்டியது :

1. Edit HTML போய் Expand widgets தேர்வு செய்து கொள்ளவும்.

2. கீழே இருக்கும் script-ல் profile_name-ல் உங்கள் profile-ல் உள்ள name-ஐக் கொடுங்கள். new_name-ல் உங்கள் விருப்பப் பெயரைக் கொடுங்கள்.
வழக்கம் போல் script-ஐ </head> tag-க்கு மேலே copy-paste செய்யவும்.

<script type='text/javascript'>
function replace_profile_name(str)
{
var profile_name='பொன்வண்டு';
var new_name='கழுதை';
if (str == profile_name)
str = new_name;
return str;
}
</script>

3. பின்னர் <data: post.author/> tag-ஐக் கண்டுபிடித்து கீழே உள்ள வரியால் replace செய்யவும்.

<script>document.write(replace_profile_name('<data: post.author/>'))</script>

4. பின்னர் <data:comment.author/> tag-களைக் கண்டுபிடித்து கீழே உள்ள வரியால் replace செய்யவும்.

<script>document.write(replace_profile_name('<data:comment.author/>'))</script>

5. Template-ஐ Save மாடி.




என்னுடைய இன்னொரு வலைத்தளம் - மாற்றம் செய்வதற்கு முன்







மாற்றம் செய்த பின்





இந்தக் குறிப்பைத் தருபவர் - பொன்வண்டு

--
பதிவர் உதவிப் பக்கத்தில் இதைப் பதிப்பிக்க அனுமதி தந்ததற்கு நன்றி - ரவி.

wordpress.comன் நீளமான தமிழ் URLகளை மாற்றுவது எப்படி?

wordpress.comல் பதிபவர்களின் இடுகைகளின் URL முகவரிகள் நீளமாக வருவதைக் காணலாம். இதனால், பக்கங்களை address barல் தட்டச்சு செய்து சென்று பார்ப்பது வரை, திரட்டிகள் மற்றும் பிற இடங்களில் இருந்து இணைப்பு தருவது வரை பிரச்சினைகள் வருகின்றன. எடுத்துக்காட்டுக்கு, கீழ் உள்ள பாமரன் அவர்களின் வலைப்பதிவின் திரைப்பிடிப்பைப் பாருங்கள்.



இந்தப் பிரச்சினையைத் தீர்க்க ஒவ்வொரு இடுகைக்கும் நாம் விரும்பும் சுருக்கமான ஆங்கில அல்லது வரிசை எண் அடிப்படையில் URLகளைத் தரலாம்.

wordpress.comல் write post பக்கத்தின் வலப்புறம் உள்ள post slug என்ற இடத்தில் உங்கள் விருப்பத் தலைப்பைத் தரலாம். இங்கு முழு urlஐத் தரத் தேவை இல்லை. மாற்றுத் தலைப்பை மட்டும் தந்தால் போதும். எடுத்துக்காட்டுக்கு, சோதனை என்று உங்கள் இடுகைத் தலைப்பு இருக்குமானால், test என்று post slug தரலாம். இல்லை, உங்கள் இடுகையின் வரிசை எண்ணோ ஏதாவது ஒரு எண்ணோ தரலாம்.

கீழே உள்ள விளக்கப் படத்தைப் பாருங்கள்.



இதே சொந்தத் தளத்தில் wordpress நிறுவி உள்ளவர்கள் options-->permalinks போய் ஒட்டு மொத்தமாக எல்லா இடுகைகளுக்கும் இந்த அமைப்பை மாற்ற முடியும்.

இங்கு, கவனிக்க வேண்டியது, இந்த நீளமான தமிழ் முகவரிகள் இருந்தால், ஒருவேளை, கூகுள் போன்ற தேடு பொறிகளில் உங்கள் இடுகைகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் கிடைக்கலாம். அதனால், சுருக்கமான முகவரி வேண்டுமா தேடு பொறிகளில் கூடுதல் முக்கியத்துவம் வேண்டுமா என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்.

மேலதிக விளக்கம் தேவைப்பட்டால் மறுமொழிகளில் கேளுங்கள்.

ரவி