Quick refrence

Download Links:- eKalappai 2.0b(Anjal) | eKalappai 2.0b (tamilnet99) - இங்கே தேர்வு செய்யவும்,
Key board layout :- e- kalappai (Anjal) |e-kalappai (Tamil 99) இதே மாதிரி இன்னும் ஏதாவது quick refrence சேர்த்தால் உபயோகமாக இருக்குமானால் பின்னூடத்தில் தெரிவிக்கவும்

Wednesday, June 10, 2009

வலைப்பதிவுகளை பெரிய எழுத்தில் படிக்க...

வலைப்பதிவுகள், இணையப் பக்கங்களின் எழுத்துரு அளவுகள் சிலருக்கு தங்கள் வாசிப்புக்கு ஏற்றதாக இல்லாமல் இருக்கலாம். குறிப்பாக வயதானவர்கள், கண்பார்வை குறைபாடுள்ளவர்களுக்கு பல தளங்களை வாசிக்க இயலாது. இதனால் இப்போது சில தளங்களில் எழுத்துரு அளவை மாற்றும் ஸ்கிரிப்ட் இணைக்கப் பட்டுள்ளது. அவை இல்லாத தளங்களில் கூட எளிதாக வாசிப்பவர்களே பெரிய எழுத்தில் வாசிக்க உங்கள் விசைப்பலகையில் Ctrl மற்றும் + விசைகளை அழுத்துங்கள். நீங்கள் வாசிக்கும் இணையப் பக்கத்தின் எழுத்து அளவு பெரிதாவதை காணலாம். மீண்டும் இந்த விசைகளை அழுத்துவதன் மூலம் தேவையான அளவுக்கு பெரிதாக்க்கிக் கொள்ளலாம். சிறிதாக்க Ctrl மற்றும் - விசைகளை பயன்படுத்த வேண்டும்.

பெரிதாக்க Ctrl மற்றும் +
சிறிதாக்க Ctrl மற்றும் -

-----------------
தமிழ்.கணிமை

Tuesday, March 4, 2008

உங்கள் வலைப்பதிவில் அதிகமாக மறுமொழி இட்டவர்களை அறிவது எப்படி?

இந்த Top Commentators யாகூ பைப் பயன்படுத்திப் பாருங்க. அதில் கிடைக்கும் ஓடையை blogger layout - add page element - feedல் சேர்த்துக் கொள்ளலாம்.

கூடுதல் விவரம் அறிய Google Operating system வலைப்பதிவு பாருங்கள்.

Wednesday, February 27, 2008

Google ன் புதிய user status

எல்லாரும் Desktop gTalk application தானே பெரும்பாலும் பயன்படுத்துவீங்க.. ஒரு மாறுதலுக்கு gmail லிருந்தே.. singin to chat ஐ க்ளிக்கி பாருங்க.. இத்தனை நாளா... available - busy - custom message ன்னு இருந்தது.. நம்ம மக்கள்ஸும் கற்பனைக்கேத்தாமாதிரி கஸ்டம்-மெஸேஜ் போட்டு கஷ்ட்டப்படுத்தினாங்க... இனிமேலிருந்து.. gTalk லேயும் yaahoo மாதிரி invisible mode லே இருக்கலாம்...

சைலெண்ட்டா இருந்து என்ன நடக்குதுன்னு கவனிங்க..

Tuesday, February 26, 2008

கூகுள் திரட்டும் தமிழ்ப்பதிவுகளைக் கண்டு கொள்வது எப்படி?

கூகுள் திரட்டும் தமிழ்ப்பதிவுகளைக் கண்டுகொள்வது எப்படி என்று அறிந்து கொள்ளுங்கள். இப்படி கூகுள் திரட்டிய பதிவுகளில் இருந்து நமக்குத் தேவையான பதிவுகளை மட்டும் வடிகட்ட யாகூ பைப்ஸ் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு, என் யாகூ பைப்ஸ் பக்கம்.

ப்ளாகர் டிராப்ட் வலைப்பதிவில் உங்கள் ஓடைகளைப் பெற்றுக் கொள்வதற்கான கருவிகளை இலகுவாக இணைக்கலாம்

ப்ளாகர் டிராப்ட் வலைப்பதிவில் உங்கள் ஓடைகளைப் பெற்றுக் கொள்வதற்கான கருவிகளை இலகுவாக இணைக்கலாம்

ப்ளாகர் டிராப்ட்டில் கூகுள் gadgetகளை உங்கள் வலைப்பதிவில் இணைக்கலாம்

ப்ளாகர் டிராப்ட்டில் கூகுள் gadgetகளை உங்கள் வலைப்பதிவில் இணைக்கலாம். ப்ளாகரில் ஒரு புது வசதி வரும் முன்னர் பெரும்பாலும் அது ப்ளாகர் டிராப்ட் தளத்தில் அறிமுகப்படுத்தப்படும். எனவே, உங்கள் பதிவை ப்ளாகர் டிராப்ட்டுக்கு மாற்றிக் கொள்வது புதுப்புது வசதிகளைப் பெற உதவும். ப்ளார் டிராப்ட் தளத்துக்கு மாற, வெறுமனே http://draft.blogger.com என்ற முகவரியில் புகுந்து அங்கிருந்து வலைப்பதியத் தொடங்குங்கள். வேறு எதுவும் மெனக்கெடத் தேவை இல்லை. ப்ளாகர் டிராப்ட் அறிமுகப்படுத்தும் புதுப்புது வசதிகளை அறிய ப்ளாகர் டிராப்ட் வலைப்பதிவைக் கவனித்து வரலாம்.

ப்ளாகர் டிராப்ட்டில் மேம்பட்ட பதிவுப் பட்டியல்

ப்ளாகர் டிராப்ட்டில் மேம்பட்ட பதிவுப் பட்டியல். கூடுதல் வசதியாக, இதன் மூலம் கூகுள் ரீடர் பயன்படுத்துபவர்கள் தங்கள் வாசிப்புப் பட்டியலில் உள்ள பதிவுகளில் விரும்பியவற்றை தங்கள் வலைப்பதிவின் பதிவுப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.