Quick refrence

Download Links:- eKalappai 2.0b(Anjal) | eKalappai 2.0b (tamilnet99) - இங்கே தேர்வு செய்யவும்,
Key board layout :- e- kalappai (Anjal) |e-kalappai (Tamil 99) இதே மாதிரி இன்னும் ஏதாவது quick refrence சேர்த்தால் உபயோகமாக இருக்குமானால் பின்னூடத்தில் தெரிவிக்கவும்

Wednesday, January 16, 2008

PDF பாடம் -1... சாதாரண கோப்புகளை pdf ஆக இணையத்திலேயே இலவசமாக மாற்றலாம்

தகவல் பரிமாற்றம் தவிர்க்க முடியாத்த விஷயம்.. வளர்ச்சிக்கு இது தேவையும் கூட.. ஆனாலும்.. தகவல் பரிமாற்றத்துக்கிடையே எங்கேயோ எப்படியோ.. data manipulation உம் நடக்குது.. ஒரு கட்டத்துகு மேலே எது உண்மை, எது manipulation ன்னு சொல்ல முடியாம போயிடுது..

உதா ;-MS word , Excel ல் எழுதப்பட்ட கொப்புகளை மற்றவர்களுடன் பகிந்துகொள்ள அதை நேரடியாக ஈமெயில் சேய்து விடுவோம்.. ஆனால் அப்படி செய்வதில் பல சிக்கல் இருக்கு.. தர்ச்செயலாக சில data வை மாற்றிவிடலாம் .. மற்றவர்களுக்கு forward செய்து அது ஒரு ரவுண்ட் முடிச்சு வரும்போது நீங்க முதலில் பதிவுசெய்த விஷயத்திலிருந்து மாறுபடலாம்..

இதெல்லாம் தவிற்க்க தான்.. pdfonline.com எல்லா முக்கிய file formats ஐ pdf கோப்பாக மாற்றும் வசதி இணையத்திலேயே செய்திருக்காங்க .. உதா {MS Word (DOC | RTF)--MS PowerPoint (PPT)---MS Publisher (PUB)--MS Excel (XLS)--HTML (MHT)--Text (TXT)--JPG , GIF,TIFF, BMP,PNG, EMF,WMF } இவையெல்லாம் அவர்களுடைய இணையதளத்திலிருந்தே pdf ஆக மாற்றலாம்.. இலவசமாக ..

  1. மாற்ற வேண்டிய கோப்பை இங்கே வலையேற்றவேண்டும

  2. மாற்றி வரும் கோப்புக்கு என்ன பெயர்ன்னு சொல்லணும்

  3. pdf ஆக மாற்றிய கோப்பை எங்கே அனுப்பவேண்டும்.. உங்க ஈ மெயில் முகவரியை குடுக்கவும் (official மெயில் குடுக்க தயக்கமா இருந்தா.. சும்மா யாகூ - கூகிள் லே.. ஒரு லொளலொலாய் மெயில் create பண்ணி அதை குடுக்கலாம்)

  4. சப்மிட் செய்த 10 min க்கெல்லாம் மாற்றி அமைக்கப்பட்ட கோப்பு உங்க மெயிலில் attachment ஆக இருக்கும்

இனிமேல்.. data manuplation பயம் இல்லாம உங்க கோப்புகளை மற்றவர்களுடன் பரிமாறிக்கொள்ளலாம்

PDF பாடம்-2... PDF கோப்புகளை தரவிறக்கம் செய்யாமலே வலைப்பதிவிலுந்து நேரடியாக படிக்கலாம

6 comments:

வடுவூர் குமார் said...

தீபா இதுக்கு மற்றொரு எளிய வழி இருக்கு.
cute pdf மென்பொருள் அளவில் சிறியது.வேலையும் எளிதாக இருக்கும்.அதோடு ghost scripter ம் நிறுவ வேண்டும்.அவ்வளவு தான்.

Deepa said...

குமார்.. இது ரெண்டுமே தரவிறக்கம் செய்து நம்ம கணினியில் நிறுவணும்.. இல்லையா ??.. ஆனா pdf online லே அதெல்லாம் ஒன்னுமில்லையே..
dialup ன்னா நீங்க சொல்லரா மாதிரி ஒவ்வொரு முறையும் அப்லோட் -டவுண்லொட் எல்லாம் பண்ணணுன்னா யோசிக்கணும்.. ஆனால்
broadband வந்ததுக்கப்புறம்.. எல்லாமே ஆண்லைன் தானே.. எதுக்கு இன்னொரு installation !!

Yogi said...

நீங்க சொல்றதும் சரிதான் தீபா !

ஆனால் வடுவூர்குமார் சொன்ன cutepdfwriter இணையத்தொடர்பு மெதுவாகவோ அல்லது இணையத் தொடர்பு இல்லாத கணினிகளில் பயன்படுத்த இது ஒரு அருமையான மென்பொருள்.

Deepa said...

பொன்வண்டு..
//இணையத்தொடர்பு மெதுவாகவோ அல்லது இணையத் தொடர்பு இல்லாத கணினிகளில் பயன்படுத்த இது ஒரு அருமையான மென்பொருள///
சொன்னீங்களே... இது பாயிண்ட் .. அப்பீலே இல்லை..
broad band வரதுக்கு முன்னே.. நான் கூட எல்லா அப்லோட் - டவுண்லோட்.. கோட்டானாட்டம்...10.00 - 2.00 மணி வரைக்கும் பண்ணுவேன் .. அப்பெல்லாம்.. extra usage க்கு காசு குடுக்கணும்ன்னாலே ரத்தக்கண்ணீர் தான்

I I Libni Hezron said...

இத்தளம் உண்மையிலேயே சிறப்பு நிறைந்த தகவல்களை தருகின்றது

Deepa said...

வாங்க உயிரோன்...
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி