திரட்டிகள் மூலமாகவோ, பத்திரிகைகள் மூலமாகவோ, நண்பர்கள் அறிமுகப் படுத்துவதாலோ புதிதாக பலர் வலைப்பதிவுகளை வாசிக்க வருகிறார்கள் ...
பதிவுகளை வாசிக்க ஆரம்பித்ததும் விரைவிலேயே தாங்கள் படித்த பதிவுகளில் மறுமொழி இட விரும்புவார்கள்...அவர்களில் சிலரேனும் தாங்களும் ஒரு வலைப்பதிவு செய்ய வேண்டும் என்று விரும்புவார்கள்....
ஆனால் தமிழை வாசிக்க முடிந்தாலும் தமிழில் எழுதுவது எப்படி என்ற சந்தேகம் எல்லோருக்கும் இருக்கும்... அதை இன்னொரு வலைப்பதிவரிடமோ, வேறு நண்பர்களிடமோ கேட்டுத் தெரிந்து கொண்டு முதலில் மறுமொழி இடுவார்கள். அடுத்து தங்களுக்கான வலைப்பதிவை உருவாக்கி தங்கள் எண்ணங்களை பதிவாக்குவார்கள்.
இதில் தமிழை கணினியில் எழுதுவது என்பது மிகவும் முக்கியமான கட்டம். இங்கே பலரும் பலராலும் அறிமுகப் படுத்தப் படுவது ரோமன் அல்லது அஞ்சல் எனப்படும் தமிங்கில தட்டச்சு முறையாகும். இது புரிந்து கொள்ள எளியது போலத் தோன்றினாலும் இந்த தட்டச்சு முறையின் சிக்கல்களை அதன் உள, உடல் ரீதியான பிரச்சினைகளை பலரும் உணர்வதில்லை.
அம்மா என்று எழுத்துக் கூட்டி சொல்லச் சொன்னால் சின்னக் குழந்தை கூட "அ-ம்-மா அம்மா" என்று சொல்லும்... நம்ம பதிவர்களோ "a-m-m-a-a அம்மா" என்று சொல்கிறார்கள்.
வலைப்பதிவில் எழுத, பின்னூட்டமிட புதுசா கணினியில் தமிழ் எழுத கற்றுக் கொள்ள விரும்புகிறீர்களா? மிக எளிமையான ஒரு வழி இருக்கு... இங்கே போய் கற்றுக் கொள்ளுங்கள்.
ஏற்கனவே தமிங்கிலத்தில் தட்டச்சிக் கொண்டு இருப்பவர்களும் முயன்று பாருங்கள்... இதன் எளிமையை உடனே உணர்வீர்கள்.
Quick refrence
Download Links:-
eKalappai 2.0b(Anjal) | eKalappai 2.0b (tamilnet99) - இங்கே தேர்வு செய்யவும்,
Key board layout :- e- kalappai (Anjal) |e-kalappai (Tamil 99) இதே மாதிரி இன்னும் ஏதாவது quick refrence சேர்த்தால் உபயோகமாக இருக்குமானால் பின்னூடத்தில் தெரிவிக்கவும்
Key board layout :- e- kalappai (Anjal) |e-kalappai (Tamil 99) இதே மாதிரி இன்னும் ஏதாவது quick refrence சேர்த்தால் உபயோகமாக இருக்குமானால் பின்னூடத்தில் தெரிவிக்கவும்
Sunday, December 16, 2007
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
நான் கை வலிக்கத்தான் ரொம்ப நேரம் தமிழில் டைப் செய்றேன்.நீங்க சொன்னதை முயற்ச்சி செஞ்சு பார்திட்டு சொல்றேன்.
எந்த எழுத்து எங்கிருக்கிறது என்று மனத்தில் பதிய வைத்துக்கொண்டால் எளிதாக கைவரப்பெறும் போலிருக்கிறது.வாழ்த்துக்கள்
நான் ekalappi தான் உபயோகித்து வருகிறேன்.. இங்கே Key board Layout பாருங்கள்.. உதவுமான்னு தெரியாது.. பார்த்துவிட்டு சொல்லுங்கள்
சாமான்யன் சிவா,
இங்கு உள்ள படத்தைப் பாருங்கள்.
உயிர் குறில்கள் - இட நடு வரிசை
உயிர் நெடில்கள் - இட மேல் வரிசை.
அதிகம் பயன்படாத ஒ, ஓ, ஔ இட கீழ் வரிசை.
அதிகம் பயன்படும் க ச த ப - வல நடு வரிசை.
அடிக்கடி ஒன்றாக வரும் ஞ்ச, ன்ற, ண்ட, ந்த, ம்ப, ங்க போன்ற எழுத்து வரிசைகள் பக்கம் பக்கமாக உள்ளன.
தீபா - நீங்கள் பயன்படுத்துவது எ-கலப்பை அஞ்சல் பதிப்பு. எ-கலப்பையிலேயே தமிழ்99 பதிப்பும் இருக்கு. அதை முயன்று பாருங்கள். எ-கலப்பை தமிழ்99 நிறுவினால் எ-கலப்பை அஞ்சல் செயல் இழந்து விடும். இதை நீங்கள் விரும்பாவிட்டால் தமிழ்விசை firefox நீட்சி நிறுவி முயன்று பார்க்கலாம்
Ravi
//நீங்கள் பயன்படுத்துவது எ-கலப்பை அஞ்சல் பதிப்பு. எ-கலப்பையிலேயே தமிழ்99 பதிப்பும் இருக்கு. ///
ஓ அப்படியா.. எனக்கு எ-கலப்பைலேயே ரெண்டு இருக்குன்னு இப்போ தான் தெரியும்..
ஏதோ எழுத ஆரம்பிக்கும்போது ஒரு சக-பதிவர் இந்த எ-கலப்பைக்கான லின்க்கை தான் தந்தார்.. இது நாள் வரை எந்த பிரச்சனையும் இல்லை.. more over I have got used to the Translitration - mode of the present e-kalappai (anjal).
மாத்தரா மாதிரி ஐடியா எல்லாம் இல்லை.. anyway thanks for the information
@Ravi
Thanks for the info and pic
I have included that for a quick refrence
தமிழ்மணத்தில் என் ப்ளாகை சேர்க்க முயற்சிக்கும்போது கீழ்க்கண்ட மெசேஜ் வந்துவிட்டது. எனது உரல்:
http://boochandi.blogspot.com
படைப்புகள் யுனிகோடு தமிழில் எழுதப்படவில்லை அல்லது யுனிகோடு தமிழின் அடர்த்தி போதுமானதாயில்லை (இடையில் நிறைய ரோமன் எழுத்துக்கள் வந்திருக்கலாம்).
நான் தற்போதைக்கு இதில் (http://ezilnila.com/tane/unicode_Writer.htm) தமிழில் அச்சடிக்கிறேன். எனக்கு உதவ முடியுமா??
//படைப்புகள் யுனிகோடு தமிழில் எழுதப்படவில்லை அல்லது யுனிகோடு தமிழின் அடர்த்தி போதுமானதாயில்லை (இடையில் நிறைய ரோமன் எழுத்துக்கள் வந்திருக்கலாம்).//
இது தமிழ்மணத்தில் புதிதாக இணைக்கும்போது பலருக்கும் வரும் பிழைச்செய்தி...இது சில நேரங்களில் தவறுதலாகவும் வரலாம்... அப்படியே தமிழ்மணத்திற்கு மின்னஞ்சல் செய்து தகவலைச் சொல்லி விட்டால் அவர்கள் உங்கள் பதிவை இணைத்து தகவல் தெரிவிப்பார்கள்.
தமிழ் எழுத நீங்கள் ரோமனைஸ்டு அஞ்சல் முறையை பயன்படுத்துகிறீர்கள்...நிரந்தரமாக பயன்படுத்த எகலப்பை மென்பொருள் நல்லது. ஆர்வம் இருந்தால் தமிழ்99 எகலப்பை பயன்படுத்திப் பாருங்கள்...அல்லது
http://valai.blogspirit.com/archive/2007/12/31/writer.html
இதைப் பயன்படுத்திப் பாருங்கள்.
ஆலோசனைக்கு நன்றி.
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
http://www.araichchi.net/kanini/TamilNet99-Keyboard.pdf
நான் அலுவலக கணிணியை பயன்படுத்திகிரேன்.சில சமயம் இண்டர்னெட் மையத்தில் பயன்படுத்துகிரேன்.அதனல்,நான் கணிணியில் ஈ - கல்ப்பையை நிறுவ முடியாது. அதற்க்கு
http://www.geocities.com/techsharing/TamilType.htm
சரியாய் வருகிறது.
ஒரு வேண்டுகோள் : ஒருத்தருடைய பதிவில் பின்னூட்டமிடும்போது, வேறு ஏதாவதொரு முறையில்(e-kalappai) தமிழில் எழுதிவிட்டு பிறகு காப்பி-பேஸ்ட் செய்ய வேண்டியுள்ளது. அதற்க்குப்பதில், ஆர்குட் அல்லது நாணயம் விகடனில் உள்ளதுபோல் தமிழிலோ,ஆங்கிலத்திலோ மாற்றி மாற்றி தட்டச்சு செய்வதுபோல் இருந்தால் எல்லோருக்கும் உபயோகமாய் இருக்கும். நா.விகடனில் தட்டச்சு செய்தபின் மாறுதல் செய்ய முடிவதில்லை.
@Siva
//தமிழிலோ,ஆங்கிலத்திலோ மாற்றி மாற்றி தட்டச்சு செய்வதுபோல் இருந்தால் எல்லோருக்கும் உபயோகமாய் இருக்கும்.///
தமிழில் எழுத நான் பயன்படுத்துவது eKalappai 2.0b (tamilnet99) Popular .. இதில் Alt+2 ஐ ஒரு முறை க்ளிக்கினால்.. தமிழில் எழுதலாம்.. அதுவே இன்னொருமுறை க்ளிக்கினால் ஆங்கிலத்தில் மாறிவிடும்.
orkut - google mail - yahoo - notepad - ன்னு எல்லாத்துக்கு எனக்கு இது தோதா இருக்கு. இந்த கலப்பையின் keyboard layout diagram ஐ.. இந்த வலைப்பதிவின் மேலே இருக்கும் keyboard layout for quick refrence ல் பார்க்கலாம்
இதை எப்படி நிறுவ வேண்டும்ன்னு இங்கே பார்க்கலாம்
hope this helps
என் பதிவை தமிழ்மணத்தில் இணைத்து விட்டேன். ஆனால், 'மறுமொழி திரட்டப் படுவதில்லை' என்று 'பதிவுகள்' பக்கத்தில் வருகிறது.
என்னுடைய புதிய பதிவுகள் 'publish' செய்தவுடன் தமிழ்மணத்தில் தெரிய என்ன செய்ய வேண்டும்?
Please advice me how to install hitter counter to my blog.
சின்னப்பையன் - உங்கள் மறுமொழிகள் திரட்டப்படாவிட்டால், complaints@thamizmanam.com க்கு எழுதிக்கேளுங்கள்.
பதிவு எழுதியவுடன் தமிழ்மணத்தில் தெரிய தமிழ்மணக் கருவிப்பட்டையில் உள்ள அனுப்பு பொத்தானை பயன்படுத்துங்கள். அல்லது, தமிழ்மண முகப்பில் காணப்படும் இடுகைகளைப் புதுப்பிக்கவும் என்ற பெட்டியில் உங்கள் பதிவின் முகவரியைத் தரவும்.
அருவை பாஸ்கர் - http://statcounter.com http://sitemeter.com போன்ற தளங்களில் கணக்கு உருவாக்கி உங்கள் பதிவின் முகவரியைத் தந்து பதிந்து கொள்ளுங்கள். அவர்கள் தரும் நிரலைக் கொண்டு வந்து blogger dasboard-layout-add page elements-html/javascript பக்கத்தில் சேருங்கள்.
Post a Comment