- வலைப்பதிவு (Blog) என்றால் என்ன?
வலைப்பதிவு - தமிழ் விக்கிபீடியா கட்டுரை பார்க்கவும். - வலைப்பதிவு கணக்குகளை துவக்குவது எப்படி?
ப்ளாக்கர் (எ) வோர்ட்பிரஸ் - ஒப்பீடு - இன்பா - சொந்த தளங்களிலிருந்து எப்படி வலைப்பதிவிடுவது?
- குழு வலைப்பதிவுகளை எப்படி அமைப்பது?
முதலில் ஒரு வலைப்பதிவு தொடங்குகள்.
Blogger - dashboard->settings->permissions->add authors சென்று உங்கள் குழுவில் சேர்த்துக் கொள்ள விரும்பும் நண்பர்களுக்கு அழைப்பு அனுப்புங்கள்.
Wordpress.com - dashboard -> Users -> Add user from Community சென்று நண்பர்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள். - செய்தியோடை என்றால் என்ன? எப்படி வேலை செய்கிறது?
- பதிவில் இணைக்கப்படும் நிரல்கள் என்ன செய்கின்றன?
பதிவில் இணைக்கப்படும் நிரல்கள் உங்கள் பதிவின் செயல்பாடு, தோற்றத்தை மாற்ற உதவும். உங்கள் வலைப்பதிவுக்கான வருகையாளர் புள்ளிவிவரங்கள், வலைப்பதிவுத் திரட்டிகளின் சேவைகள் போன்றவற்றைப் பெறவும் நிரல்களை இணைக்கலாம். - நிரல்களை பதிவு வார்ப்புருவில் சேர்ப்பது எப்படி?
Blogger -> Dashboard - > Layout -> Add Page element - > HTML / JavaScript சென்று உங்கள் நிரலை சேருங்கள்.
Wordpress.com - > Dashboard - > Presentation - > Widegets - > Text 1 சென்று உங்கள் நிரலை சேருங்கள். - வார்ப்புருக்களில் மாற்றம் செய்வது எப்படி?
Blogger -> Dashboard - > Layout -> Template -> Edit HTML சென்று உங்கள் வார்ப்புருக்களில் மாற்றம் செய்யலாம்.
Wordpress.com இலவச சேவை பயனர்கள் வார்ப்புரு மாற்றம் செய்ய இயலாது. சிறு நிரல்களை பக்கப்பட்டையில் இணைக்க Wordpress.com - > Dashboard - > Presentation - > Widegets - > Text 1 சென்று உங்கள் நிரலை சேருங்கள். - தமிழில் வார்ப்புருக்கள் எங்கே கிடைக்கும்?
சில தமிழ் வார்ப்புருக்கள் (template) தமிழ்மணத்தில் இருந்து சுட்டப்பட்டுக் கிடைக்கின்றன. - புகைப்படங்களை இணைப்பது எப்படி?
பதிவில் படத்தை இணைக்க அதிரடி வழி - செந்தழல் ரவி - கோப்புகளை பதிவுடன் இணைக்க முடியுமா?
புகைப்படங்கள் - Photobucket
ஒலிக்கோப்புகள் - ijigg
ஒளிக்கோப்புகள் - Youtube
போன்ற சேவைகளில் உங்கள் கோப்புகளை இணைத்துக் கொண்டு அதற்கான நிரலை உங்கள் இடுகையில் பொதிந்து கொள்ளுங்கள். - எழுதியதை மற்றவர்களுக்கு எப்படித் தெரிவிப்பது?
தமிழ்மணம், தேன்கூடு, தமிழ்ப் பதிவுகள்டெக்னாராட்டி போன்ற திரட்டிச் சேவைகளுடன் இணைத்துக் கொள்ளுங்கள். - profileல் சில வலைப்பதிவுகளை மறைத்து விடுவது எப்படி?
Blogger -> Dashboard -> Edit profile - > Select blogs to display சென்று வேண்டிய பதிவுகளை மட்டும் தெரிவு செய்யுங்கள். சேவைகள் - நூற்றுக் கணக்கான வலைப்பதிவுகளை படித்துப் பிடித்தவற்றைக் குறித்துக் கொள்வது எப்படி?
தேன்கூடு பெட்டகம் - சிறில் அலெக்ஸ் - டெக்னோரெட்டி (Technorati) என்றால் என்ன?
டெக்னோரட்டி என்பது உலகளாவிய வலைப்பதிவுகளுக்கான தேடு பொறி ஆகும். பார்க்க - ஆங்கில விக்கிபீடியா கட்டுரை. - வீடியோ ஆடியோ பதிவுகள் எப்படி செய்வது?
ஒலிப்பதிவு இடுவது எப்படி? - ரவிசங்கர். - பழைய பதிவு ஒன்றை மீண்டும் முதல் பக்கத்தில் வர வைப்பது (மீள்பதிவு செய்வது) எப்படி?
மீண்டும் கோயிந்து - பொன்ஸ் - இடுகையில் சுட்டியை இணைப்பது எப்படி?
திருவாளர் கோயிந்தும் அப்பாவி பொன்ஸும் - பொன்ஸ் - பின்னூட்டத்தில் சுட்டியைச் சேர்ப்பது எப்படி?
பின்னூட்டத்தை அழகுபடுத்துவது - பொன்ஸ் - மறுமொழி மட்டுறுத்தல் என்றால் என்ன?
உங்கள் பதிவுக்கு வரும் வாசகர் கருத்துக்கள் தானாகப் பதிப்பித்துக் கொள்ளாமல் முதலில் மின்மடல் உங்கள் பார்வைக்கு வந்து பிறகு ஒப்புதல் அல்லது திருத்தத்துடன் பதிப்பிக்கப்படுவதே மறுமொழி மட்டுறுத்தலாகும். தனி மடல்கள், விளம்பர, ஆபாசக் கருத்துக்களை உங்கள் பதிவில் தோன்றச் செய்யாமல் இருக்கு இது உதவும். - மறுமொழி மட்டுறுத்தலைச் செயல்படுத்துவது எப்படி?
மறுமொழி மட்டுறுத்தல் செய்வது எப்படி? - ஆவி அண்ணாச்சி
பின்னூட்ட மட்டுறுத்தல் - பிரசுரி/நிராகரி - ஆவி அண்ணாச்சி - நமக்கு வந்த பின்னூட்டத்தை மாற்றி அனுமதிப்பது எப்படி?
பின்னூட்ட மாற்றம்.(எடிட்) - Manikandan Vaa
எடிட்.. edit.. எடிட்... - பொன்ஸ் - பின்னூட்டம் வந்துள்ளதா என்று தெரிந்து கொள்வது எப்படி?
Blogger - > Dashboard -> Settings -> Comments - > Comment Notification Addressல் உங்கள் மின்மடல் முகவரியை தாருங்கள்.
Wordpress.com - > Dashboard -> Options -> Comments - > Email me whenever - > Anyone posts a comment என்று அமைப்பை மாற்றுங்கள். - என்னுடைய வலைப்பதிவிலும் விளம்பரங்களைக் காட்ட முடியுமா?
வலையில் சம்பாதியுங்கள் - மயூரேசன்
வலைப்பதிவில் விளம்பரமிட்டுச் சம்பாதியுங்கள் - மயூரேசன் - என் வலைப்பதிவைப் படித்துச் சென்றவர்களைப் பற்றிய விபரங்களை எப்படித் தெரிந்து கொள்வது?
Wordpress.com தளத்தில் உள்ளிணைந்த புள்ளிவிவரங்கள் கிடைக்கும். Blogger பயனர்கள் Statcounter போன்ற சேவைகளைப் பயன்படுத்தி வாசகர் எண்ணிக்கை, நாடு போன்ற விவரங்களை அறியலாம். - புதிய இடுகையை தமிழ் மணத்தில் வரச் செய்வது எப்படி?
தமிழ்மணக் கருவிப் பட்டைச் சேவை பெற்றிருந்தால் அதில் உள்ள "அனுப்பு" பொத்தான் கொண்டு தமிழ்மணத்துக்கு அனுப்பலாம். அல்லது தமிழ்மண முகப்பில் தெரியும் "இடுகைகளைப் புதுப்பிக்க" என்ற சேவை மூலம் தெரியப்படுத்தலாம். - புதிய பின்னூட்டத்தை தமிழ் மணம் முதல் பக்கத்தில் வரச் செய்வது எப்படி?
இதற்குத் தமிழ்மணக் கருவிப்பட்டை நிறுவப்பட்டிருக்க வேண்டும். உங்கள் பதிவில் பின்னூட்டங்களைப் பதிப்பித்த பின் குறிப்பிட்ட இடுகையின் பக்கத்தை ஒரு முறை திறந்து பார்த்தால் தமிழ் மணம் உங்கள் பதிவின் அண்மைய மறுமொழிகளைத் திரட்டிக் கொள்ளும். - புதிய வலைப்பதிவை தமிழ் மணம்/ தேன்கூடு/தமிழ்பிளாக்ஸ் திரட்டிகளில் சேர்ப்பது எப்படி?
தமிழ்மணம் - இங்கு சென்று விண்ணப்பியுங்கள். விரும்பினால், கருவிப்பட்டையை நிறுவிக்கொள்ளுங்கள்.
தேன்கூடு - இங்கு விண்ணப்பியுங்கள்.
தமிழ்ப்பதிவுகள் - இங்கு விண்ணப்பியுங்கள். - தமிழ் மணத்தில் குறிச்சொற்களை எப்படிப் பயன்படுத்துவது?
தமிழ்மணமும் குறிச்சொற்களும் - சிந்தாநதி - தமிழில் தட்டச்சிடுவது எப்படி?
தமிழ்த் தட்டச்சுப் பயிற்சிப் படிகள் - Voice on Wings - கில்லி கையேடு - ஃபயர்ஃபாக்ஸில் வலைப்பதிவு சரியாக தெரிவதில்லை, என்ன செய்ய வேண்டும்?
http://thamizmanam.com/tmwiki/index.php?id=firefox - ஜிமெயிலில் லேபல்களைப் பயன்படுத்துவது எப்படி?
ஜிமெயில் மடல்களைத் தெரிவு செய்து - > More Actions -> Apply label -> New label அல்லது ஏற்கனவே உள்ள குறிச்சொற்களைத் தெரிவு செய்யுங்கள்.
வார்ப்புரு
கோப்புகள்
தெரிவித்தல்
இடுகை மேலாண்மை
மறுமொழிகள்
விளம்பரங்கள்
புள்ளிவிவரங்கள்
தமிழ்மணம்
தமிழ்
பிற
17 comments:
கேள்வி எண் 30. தமிழ் மணத்தில் குறிச்சொற்களை எப்படிப் பயன்படுத்துவது?
இந்த பதில்போதுமா?
http://valai.blogspirit.com/archive/2006/12/08/தமிழ்மணமும்-குறிச்சொற்களும்.html
மறுமொழிகள் திரட்டப்பட என்ன் செய்ய்வேண்டும்.ஒஉதிய பின்னூட்டங்கள் தமிழ்மண முகப்பில் வர என்ன செய்வது?
After reading a Tamil blog, how to leave a comment in Tamil?
தமிழ்மணம் திரட்டியில் இல்லாத ஒரு wordpress பதிவை, தமிழ்மண முகப்புக்குச் சென்று URL இட்டு, "அளி" அழுத்தியாகிவிட்டது. வகைப்படுத்தத் தவறிவிட்டதால், அனைத்தும் வகைப்படுத்தாதவையாகப் போய்விட்டன. பிறகு எப்படி வகைப்படுத்தலாம்? வழியுண்டா? நன்றி.
சிந்தாநதி,
தாமதமான பதிலுக்கு முதலில் எங்களின் வருத்தங்கள்.. உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளது. இந்தக் கேள்விபதில்களில் சேர்க்கப் பட்டுவிட்டது. தமிழ்வலைப்பதிவர் உதவிக் குழுவின் சார்பாக, எங்களின் அன்பார்ந்த நன்றிகள்.
கௌசி, உங்களுக்கான விடை வேறு ஒரு பதிவில் கொடுத்த நினைவு..
அனானி,
தமிழில் எழதுவது பற்றி அறிய,நான்காவது கேள்விகான பதிலை வாசியுங்கள்
சேது,
ஏற்கனவே வகைப்படுத்தப் பட்ட இடுகையை நாமாக மாற்ற முடியாது. தமிழ்மணத்தில் இடுகை தோன்றுமிடத்து அருகில் ஒரு ஆச்சரியக்குறி தெரியும். அதைக் க்ளிக்கி அதில் வகையை மாற்றுவது குறித்தான உங்களின் விளக்கங்களுடன் தமிழ்மண உதவிக் குழுவுக்குத் தெரிவித்தால், அவர்கள் மாற்றித்தருவார்கள்.
செய்தியோடை என்றால் என்ன?
அனானி,
Newsfeed என்பதின் தமிழாக்கம் இந்த செய்தியோடை. கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து
நன்றி பொன்ஸ்.
அந்த சுட்டியில் தகவல்கள் தொகுக்கப்படவில்லை. பரவாயில்லை இப்போதைக்கு எனது வலைப்பதிவை எந்த திரட்டியிலும் இட விரும்பவில்லை. நேரமிருந்தால் விளக்கமாக சொல்லுங்கள். இல்லையென்றால் பிறகு தெரிந்து கொள்கிறேன்
நண்பர்களே,
தமிழ்மணத்தில இடுகையைச் சேர்த்தல் குறித்து எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது. எடுத்துக்காட்டாக., எனது பதிவில் உள்ள இரு இடுகைகள் இன்னும் தமிழ்மணத்தில் சேர்க்கப்படவில்லை என்று வைத்துக் கொள்வோம். ஆனால் எனக்கு இரு இடுகைகளையும் தமிழ்மணத்தில் சேர்க்க விருப்பமில்லை. ஒன்றை மட்டும் சேர்க்க விரும்புகிறேன்.
அவ்வாறு எப்படி செய்வது ? எனது பதிவின் முகவரியை தமிழ்மண முகப்பில் கொடுத்தால் இரு இடுகைகளையும் சேர்க்க முயல்கிறது. எனது இடுகைகளில் விருப்பமானதை மட்டும் தமிழ்மணத்தில் சேர்த்தல் எப்படி என்று கூறுங்கள்.
நன்றி.
இன்றுதான் இதை அண்ணன் பாலா அறிமுகப்படுத்தினார். மிக்க நன்றி. நல்ல வலைப்பூ..!
அனைவருக்கும் மிக்க நன்றி..
கூமுட்டை - நீங்கள் கேட்பது போல் சில பதிவுகளை சேர்க்காமல் விட முடியாது என்று நினைக்கிறேன். வேண்டுமானால் தமிழ்மணத்தில் சேர்க்கப்பட்ட பிறகு, ! குறி சேவை கொண்டு அவர்களைத் தொடர்பு கொண்டு நீக்கச் சொல்லலாம்.
எனது பதிவில் பின்னூட்டமிட்டவர்களின் பெயர் தெரிவதில்லை. வெறும் "said.." என்றுதான் வருகிறது. பெயர் வருமாறு செய்வது எப்படி?
செய்தியோடை என்றால் என்ன? கொஞ்சம் விளக்கமாக சொல்ல முடியுமா?
இந்த இடுகையை குறித்த ஓர் சிறிய ஆலோசனை.
அதிக கேள்விகள் ஆகிவிட்டது, வெறும் கேள்விகளை மட்டும் இதன் தலைப்பில் போட்டு வேறு இடத்துக்கு தாவ வழிவகை செய்யலாம்.
சத்தியா, உங்கள் யோசனை குறித்து முன்னரே நினைத்து இருந்தோம். விரைவில் செய்கிறோம்.
அருமை, பயனுள்ள தொகுப்பு. நன்றி
///தமிழ்மணக் கருவிப் பட்டைச் சேவை பெற்றிருந்தால் //
Could you kindly guide me how to get this?
anonymous,
தமிழ்மணம் வழிகாட்டி பாருங்கள்.
ப்ளாகரில் பதிவு வைத்திருந்தால், பட்டையை இணைத்துக் கொள்ள பூர்ணாவின் கருவியையும் பயன்படுத்தலாம்.
Post a Comment