Quick refrence

Download Links:- eKalappai 2.0b(Anjal) | eKalappai 2.0b (tamilnet99) - இங்கே தேர்வு செய்யவும்,
Key board layout :- e- kalappai (Anjal) |e-kalappai (Tamil 99) இதே மாதிரி இன்னும் ஏதாவது quick refrence சேர்த்தால் உபயோகமாக இருக்குமானால் பின்னூடத்தில் தெரிவிக்கவும்

Friday, January 18, 2008

வலைப்பக்கத்தில் எழுதுகருவியை இணைப்பது எப்படி?

எதிர்பாராமல் வெளியூர் போகும்போது எகலப்பையோ எழுதுகருவியோ இல்லாத கணினியில் தமிழ் எழுத முடியாமல் போய்விடுவது பலருக்கும் பல நேரங்களில் வரும் சங்கடம். ஆன்லைன் எழுதுகருவிகள் அப்போது நினைவுக்கு வருவது இல்லை...இப்போது உங்கள் பதிவிலேயே ஒரு ஆன்லைன் எழுதுகருவியை தயாராக வைத்திருந்தால் என்ன? அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது...இதுதான்

(பிளாக்கர் பதிவர்கள் மட்டும்) இந்த விட்ஜட்டை தங்கள் பதிவில் நிறுவி விட்டால் கையருகில் எப்போதும் ஆன்லைன் எழுதுகருவி இருந்து கொண்டிருக்கும்.

















பிளாக்கர் அல்லாத பதிவுகளுக்கும் அல்லது பிளாக்கரில் பக்கப் பட்டையில் நிரலை எடுத்து இணைக்கவும்



பக்கப் பட்டையில் சுட்டி வைத்திருப்பதை விட உங்கள் பதிவுக்குள்ளேயே நேரடியாக இந்த எழுதுகருவியை இணைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தால் அதற்கான வழி



இந்த நிரலை உங்கள் பதிவில் Layout- Template-Page Elements பகுதியின் footer ல் (கீழ்ப்பகுதி)
-Add a Page Element -HTML/JavaScript வழியாக சேர்க்கலாம்...
ஆனால் இதை பக்கப் பட்டை (side bar)பகுதியில் இணைக்க இயலாது...footer பகுதியில் மட்டுமே இணைக்க வேண்டும். footer (கீழ்ப்பகுதி) அகலம் குறைவாக இருந்தால் நேரடியாக Edit Html - Edit Template பகுதியில் </body> க்கு முன் இணைக்கலாம்.

10 comments:

சயந்தன் said...

நான் கூட ஒரு எழுதுகருவியை கடந்த 3 வருசமா வைத்திருக்கேன்.. :) முன்பெல்லாம் பின்னூட்டத்தினை நேரடியாக தமிழில் எழுதுவதற்கே பின்னூட்டத் தமிழ்ப் பெட்டிகளை வைத்திருந்தோம்.

Unknown said...

சேத்துட்டேன்....தகவலுக்கு நன்றி!

நா. கணேசன் said...

உபயோகம் மிக்க பதிவு! நன்றி. பல பதிவர்களும் தமிழ்99 வலையெழுதியைத்
தங்கள் பதிவில் இணைத்தால்,
எளியதும், வல்லமை கொண்டதும் ஆன தமிழ்99 விசைப்பலகை பரவும்.

தமிழ்நாட்டில் தமிழைத் தட்டச்சுவோர் தமிழ்99 விசைப்பலகையைப் பெருவாரியாகப் பாவிக்கும் நிலை உருவாகணும்.

நா. கணேசன்

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

w3 எழுதி இணைப்புக்கான வழிகாட்டி

வடுவூர் குமார் said...

சயந்தன் செய்தது போல் என்னுடைய பதிவில் வைத்திருந்தேன்,பீட்டா வந்தவுடன் எல்லாம் காலியாகிவிட்டது.
சயந்தன் முறை இலகுவாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

Unknown said...

மிக்க நன்றி ,

நானும் இணைத்துவிட்டேன்..

அறிஞர். அ said...

அருமையான கருவி... இக்கருவி div tag ல் வைத்து floating with dragging போன்ற வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டால் இன்னும் நன்றாக இருக்கும். அதாவது ஒரு லிங்கில் javascript function மூலம் அழைத்துக்கொள்ளலாம்.

தமிழ் எழுதத் தெரியாத வாசகர்களுக்கு மட்டுமின்றி பதிவர்களுக்கும் மிகவும் பயன்படும்.

நேரம் கிடைக்கும் பொழுது நானும் முயற்சிக்கிறேன்.

அத்துடன், ஜாவாஸ்கிர்ப்ட்டை, dean.edwards.name/packer கொண்டு zip செய்தால் அளவு குறைவதோடு, தரவிறக்கும் நேரமும் கூடும். க்னு முறையில் இருப்பதால் இதற்கு உருவாக்கியவரிடம் அனுமதிபெறவேண்டும்.

இக்கருவியை உருவாக்கியவருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்.

ஆடுமாடு said...

தகவலுக்கு நன்றி. நானும் சேர்த்துட்டேன்.

Unknown said...

i need anjal. Dunno tamil typing and notime to learn also. Used to anjal. Can't u provide that. I appreciate 99, but anjal will do save my time.

✪சிந்தாநதி said...

//anjal will do save my time.//

tamil99 இங்க போய் ஒரே ஒரு நிமிடம் இடப்பக்கம் எழுதி இருக்கிற வரிகளை முடிந்தால் வாசித்துப் பாருங்கள்.