Quick refrence

Download Links:- eKalappai 2.0b(Anjal) | eKalappai 2.0b (tamilnet99) - இங்கே தேர்வு செய்யவும்,
Key board layout :- e- kalappai (Anjal) |e-kalappai (Tamil 99) இதே மாதிரி இன்னும் ஏதாவது quick refrence சேர்த்தால் உபயோகமாக இருக்குமானால் பின்னூடத்தில் தெரிவிக்கவும்

Sunday, October 28, 2007

பிளாகரில் இடும் மறுமொழிகளின் விவரத்தை உங்கள் மின்-அஞ்சலில் பெறலாம்

ஒரு நாள் நாம பல பதிவுகளை படிக்கறோம்... / பின்னூடம் எழுததோம்.. கொஞ்ச நாள் முன்னே வரை.. நாம எழுதியிருக்கும் கமெண்டுக்கு பதிவாசிரியர் / வேறு யாராவது பதில் கமெண்ட் போட்டிருக்காங்களான்னு தெரிஞ்சுக்க ஒரே வழி.. அதே பதிவை போய் பார்க்கிரதா தான் இருந்தது... அதுவும் பதிவின் சுட்டிய்யை நீங்கள் book mark செய்து வச்சிருந்தா.. ஒரு வேளை url மறந்து போச்சுன்னா.. பதில் ஏதாவது வந்திருக்கான்னு தெரிஞ்சுக்கவே வாய்ப்பில்லை... ( பதில் போட்டவரே உங்க கிட்டே வந்து சொன்னாலொழிய).
இனிமே அப்படி இல்லை.. கமெண்ட் எழுதும் போது கவனிச்சிருப்பீங்க.. உங்க மின் - அஞ்சல் முடவரியோட.. Email Follow up comments ன்னு ஒரு பொட்டி இருக்கும்.. அதை க்ளிக்கி tick -mark குடுத்தீங்கன்னா...போதும். பதில் கமெண்ட் வரும்போதெல்லாம்.. அதன் ஒரு பிரதி உங்க Inbox லெயும் இருக்கும்... ஒருவேளை.. உங்களுக்கே சம்பந்தப்பட்ட டாபிக் போரடிச்சுப்போச்சுன்னா... unsubscribe ஐ க்ளிக்கினா போதும்...
எனக்கென்னமோ இது ரொம நல்ல ஐடியாவாத்தான் தோணுது.. ரொம்ப பிசியா இருக்கும்போது.. (பதிவெழுதவோ.. தமிழ்மணம் போய் படிக்கவோ நேரமில்லாத போது).. நாம எழுதின கமெண்ட்டுக்கு பதில் வந்திருக்கான்னு தெரிஞ்சுக்க பிளாகரின் இந்த feature ரொமவும் உபயோகமாத் தான் இருக்கு.. இதே வேலையை co-Comment மூலமாகவும் செய்யலாம்... ( ஒரு புதிய கணக்கு துவங்கி... )... அது உங்க சௌகர்யம்.. எனக்கு பிளாகரின் Email Follow-up comments தான் சரின்னு படுது... எல்லாம் ஒரே இடத்தில் இருந்தா மிஸ்ஸாக சான்ஸில்லே பாருங்க...
-

20 comments:

கோவி.கண்ணன் said...

விரிவான இடுகைக்கு பாரட்டுக்கள். ஏற்கனவே பயன்படுத்த ஆரம்பித்துவிட்டேன்.

நம்ம பின்னூட்டம் மட்டும் வெளிவரவில்லை என்றால் அதை அவர் வெளி இட விரும்பவில்லை என்றும் தெரிந்து கொள்ளலாம் !
:)

✪சிந்தாநதி said...

நான் பயன்படுத்தி வரும் பிளாக்ஸ்பிரிட்டில் இந்த வசதி இருக்கிறது. பிளாக்கரும் தந்திருப்பது மிக நல்ல விஷயம்.

மாயா said...

ஏற்கனவே பயன்படுத்த ஆரம்பித்துவிட்டேன்.

Thanks :)

Bee'morgan said...

உபயோகமான தகவல்.. நன்றி.. :)

பாரதிய நவீன இளவரசன் said...

வரவேற்கப்படவேண்டிய விஷயம்தான். ப்ளாகருக்கும், இந்தத் தகவலை அளித்த வலைப்பதிவருக்கும் நன்றி.

கோபிநாத் said...

விரிவான பதிவுக்கு நன்றி ;)

ஜமாலன் said...

தகவலுக்கு நன்றி..

Anonymous said...

தகவலுக்கு நன்றி..

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

பயன் படுத்துகிறேன்.

A Simple Man said...

நல்ல வசதியா இருக்குதே...
ஒரு மாசம் முன்னாடியே தெரிஞ்சிருந்தா ஒரு 2/3 வலைப்பூக்களைத் தவற விட்டிருக்க மாட்டேன் :-((

A Simple Man said...

முந்தைய பின்னூட்டத்திலேயே சொல்ல மறந்துட்டேன்..
*நன்றி*

cheena (சீனா) said...

தகவலுக்கு நன்றி - பயன் படுத்துகிறேன்.

வந்தியத்தேவன் said...

மிகவும் நல்ல வசதி இன்றுமுதல் நானும் பயன்படுத்தத் தொடங்குகின்றேன். ஒரு சந்தேகம் என் ஈமெயில் ஐடி அந்த வலைப்பதிவாளரால் பார்க்கமுடியுமா?

Puducherry said...

adira sakka addira sakka

super anna super thabi

vazhaka une kuitrram and kodai

lollu siva
pondicherry

Deepa said...

கண்ணன்
///நம்ம பின்னூட்டம் மட்டும் வெளிவரவில்லை என்றால் அதை அவர் வெளி இட விரும்பவில்லை என்றும் தெரிந்து கொள்ளலாம் !///
இதெல்லாம் inside information.. இப்படி பகிரங்கமா சொல்லக்கூடாது

Deepa said...

சிந்தாநதி..அம்மாம் இது நீண்ட நாள் குறை..i shall personally not recommend coComment & haloscan for comment updates

Deepa said...

மாயா...
morgan
பா.ந.இ
கோபிநாத்
ஜமாலன்
வள்ளி
யோகன் பாரீஸ்
அபுல்
சீனா..
.... best of luck

Deepa said...

வந்தியதேவன்
...//ஒரு சந்தேகம் என் ஈமெயில் ஐடி அந்த வலைப்பதிவாளரால் பார்க்கமுடியுமா?////
.. பார்க்க முடியாது... தைரியமாக பயன்படுத்தலாம்.. அனானியாக பின்னூடம் போட்டு.. இந்த வசதியை பயன்படுத்தலாம்ன்னா... முடியாது...

இதை பயன்படுத்த நீங்கள் உங்கள் பிளாகர் கணிக்கில் பின்னூடமிட்டால் தான் முடியும்...
... பிளாகரும் உஷாருங்கோ !!!

Muruganandan M.K. said...

உபயோகமான தகவல். பயன்படுத்த எண்ணியுள்ளேன்.

Deepa said...

வணக்கம்.. திரு.முருகானந்தன்
நன்றி