வரு இணைப்புகள் (Backlinks) பற்றி அண்மையில் ஒரு நண்பர் கேள்விகள் கேட்டிருந்தார். இது பற்றிச் சொல்லவே இந்தப் பதிவு:
1. வரு இணைப்பு என்றால் என்ன?
நம் இடுகைக்கு வேறு ஒருவர் இணைப்பு கொடுத்து எழுதும் பொழுது அது நம் இடுகையில் வரு இணைப்பாகத் தெரியும். எடுத்துக்காட்டுக்கு, இடுகை(1)இல் இருக்கும் சில கருத்துகளை மேற்கோளிட்டு நாம் ஒரு இடுகை(2) இடுகிறோம். இடுகை(2)வில் இடுகை(1)இன் பதிவு முகவரியை மீயிணைப்பாகக் (hyperlink) கொடுக்க வேண்டும். இதனால், மூல இடுகையான இடுகை(1)இல் உங்கள் இடுகை(2)ன் பெயரும், முகவரியும் பின்வழித் தொடர்பாகப் பதிவாகிவிடுகிறது.
2. வரு இணைப்பு உருவாக்க, இடுகையின் பெயரையும் முகவரியையும் பதிவில் எங்கு வேண்டுமானாலும் கொடுக்கலாமா?
ஆம். பின்வரும் இடங்களில் எல்லாம் கொடுக்கலாம்:
அ. இடுகையின் தலைப்பின் கீழ் வரும் link என்ற பகுதியில் (சிலருக்கு இந்த field வராது. அதற்குச் சில settings செய்ய வேண்டி இருக்கிறது)
ஆ. இடுகையின் உள்ளே.
இ. பின்னூட்டங்களில்.
3. இந்த மூன்று இடங்களில் எப்படிக் கொடுத்தாலும் அந்தப் பதிவிற்கு வரு இணைப்பு உருவாகுமா?
இல்லை. எடுத்துக்காட்டுக்கு, இந்தப் பதிவின் பழைய இடுகைகளைக் கொடுப்போம். http://tamilblogging.blogspot.com/2007/02/blog-post_22.html - இப்போது இந்த முகவரியை மற்றுமொரு கட்டுரைப் பகுதியாக எழுதி இருக்கிறேன். இப்படி முகவரியாக இல்லாமல், எழுத்தாக எழுதும் பொழுது பின்வழித் தொடர்பு உருவாவதில்லை. முகவரியுடன் இணைப்பும் கொடுத்தால் மட்டுமே வரு இணைப்பு உருவாகும்.
4. முகவரியுடன் இணைப்பு கொடுப்பது என்றால் ?
இந்த இடத்தில் கொடுத்திருப்பது போல், சொடுக்கிப் பார்க்கக் கூடிய இணைப்பாக இந்த முகவரிகளைக் கொடுத்தால் மட்டுமே அவற்றிற்கு வரு இணைப்பு உருவாகும்.
5. சில சமயம், இது போல் இணைப்புகளாகக் கொடுத்தாலுமே வரு இணைப்புகள் உடனடியாக உருவாவதில்லை. அது ஏன்?
வரு இணைப்பு உருவாக்குவது ப்ளாக்கரின் ஒரு தனிப்பட்ட வேலை. ஒரு நாளைக்கு ஒரு முறை எல்லாப் பதிவுகளுக்கும் வரு இணைப்பு உருவாக்கப் பட்டுள்ளதா என்று தேடிப் பார்த்து இற்றைப்படுத்துகிறது (update) ப்ளாக்கர். இதனால், உங்கள் பதிவுக்கு இணைப்பு கொடுத்து யாரேனும் எழுதி இருந்தால் இருபத்திநாலு மணிநேரத்துக்குள் இந்த வரு இணைப்பு உருவாகிவிடும்.
6. நம் பதிவிற்கு இணைப்பு கொடுத்து யாராவது எழுதி இருக்கிறார்களா இல்லையா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது?
இதற்கும் பல வழிகள் உள்ளன:
அ. நம் பதிவின் comment settings இல் Show backlinks என்பதை ஆமோதித்திருந்தால், சுலபமாக வந்துவிடும். நம் இடுகையின் கீழேயே இந்த இணைப்பு உருவாகி அதைப் பார்த்துவிடலாம்
ஆ. கூகிள் பதிவுத்தேடல் வந்த பின்னர், இன்னும் வசதியான வழியாகிவிட்டது. இந்த கூகிள் பதிவுத் தேடலில் உங்கள் பதிவின் முகவரியை, "link:yourblog.blogspot.com" என்று கொடுத்துத் தேடினாலே தெரிந்துவிடும்.
இ. இப்படி கூகிள் தேடலில் கண்டுபிடிப்பவற்றைத் தனி RSS ஓடையாக்கி அதை உங்கள் பதிவின் பக்கப் பட்டியிலேயே இணைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் அன்றாடம் உங்கள் பதிவைக் குறிப்பிட்டு எழுதப் படும் இடுகைகளைக் குறிப்பாகத் தேடிப் பெறலாம். எடுத்துக்காட்டுக்கு என் பதிவில் "சமீபத்தில் பொன்ஸ் பற்றிப் பிளிறியவர்கள்" என்ற பகுதி இதையே சுட்டுகிறது.
7. இந்த வரு இணைப்புப் பட்டியலால் என்ன நன்மை?
உங்களைப் பற்றி, உங்கள் பதிவைப் பற்றி யாரேனும் எழுதி இருந்தால் தேடாமல் தெரிந்து கொள்ளலாம். ஏதேனும் விவாதப் பதிவுகளில் படிப்பவர்களுக்கு மற்ற விவாதங்களைச் சுலபமாகத் தேடித் தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும்.
8. வரு இணைப்பை நம் பதிவில் தெரிவு செய்வதால் என்ன பிரச்சனைகள் வரலாம்?
சில சமயம் தேவையில்லாத பதிவுகள், நாம் விளம்பரம் கொடுக்க விரும்பாத பதிவுகளின் தலைப்பு - முகவரி இவை நம் பதிவில் தெரிந்துவிட வாய்ப்பிருக்கிறது. வரு இணைப்பு என்றால் அதை அழித்து விடலாம். பக்கப் பட்டியில் அழிக்க முடியாது.
Quick refrence
Download Links:-
eKalappai 2.0b(Anjal) | eKalappai 2.0b (tamilnet99) - இங்கே தேர்வு செய்யவும்,
Key board layout :- e- kalappai (Anjal) |e-kalappai (Tamil 99) இதே மாதிரி இன்னும் ஏதாவது quick refrence சேர்த்தால் உபயோகமாக இருக்குமானால் பின்னூடத்தில் தெரிவிக்கவும்
Key board layout :- e- kalappai (Anjal) |e-kalappai (Tamil 99) இதே மாதிரி இன்னும் ஏதாவது quick refrence சேர்த்தால் உபயோகமாக இருக்குமானால் பின்னூடத்தில் தெரிவிக்கவும்
Thursday, March 22, 2007
Friday, March 2, 2007
நீங்கள் விரும்பும் படத்தை Posted by ல் (அல்லது) date-header ன் பக்கத்தில் காட்ட
இடுகை ஆரம்பமாகும் முன்னே..தேதிக்குப் பக்கத்தில் நீங்கள் விரும்பும் படம்..அதேபோல் பதிவு முற்றும் இடத்தில் posted by <நீங்கள் விரும்பும் படம்> (உங்கள் photoவா கூட இருக்கலாம்..) போட்டால் எப்படி இருக்கும்ன்னு நினைத்து பார்த்ததுண்டா...
எடுத்துக்காட்டுக்கு..மேலே சொல்லியிருக்கும் சுட்டிகளில்... date பக்கத்தில் யும் ... posted by யில் யும் குடுத்துள்ளேன்
செய்முறை விளக்கம் :-
எடுத்துக்காட்டுக்கு..மேலே சொல்லியிருக்கும் சுட்டிகளில்... date பக்கத்தில் யும் ... posted by யில் யும் குடுத்துள்ளேன்
செய்முறை விளக்கம் :-
- சரியான படத்தை தேர்வு செய்யவேண்டும்
- படத்தை..Googlepages (can use your Gmail account to login), Fileden , Ripway போன்ற ஏதாவது File hosting services ல் கணக்கு துவங்கி பதிவேற்றவும் (upload)
- animated gif படங்களை பிளாகரில் பதிவேற்றுவது பெரிய தலைவலி..இதைத் தவிர்க்கவே..மேலே சொல்லியிருக்கும் Free File hosting services ல் பதிவேற்றுகிறோம்
- பதிவேற்றிய பிறகு..அந்தப் படத்தின் file-path ஐ (Right-Click செய்து பெறலாம்) notepad ல் copy-paste செய்துகொள்ளவும்
- வார்ப்புருவின் நகலை Edit-HTML போய் பத்திரப்படுத்திக் கொள்ளவும்.
- வார்ப்புருவில் கீழே காணும் வரிகளைக் கண்டுபிடிக்கவும்
- நீங்கள் இணைக்க விரும்பும் படத்தை..மேலே சொல்லியிருக்கும் Tags ஐ அழித்துவிட்டு (எதை வேண்டாம்ன்னு நினைக்கறீங்களோ..அதை மட்டும் அழிங்க..) <img src="File_path "/> குடுத்து...SAVE & view
- கவனிக்க : - File_path க்கு பதில் notepad ல் நீங்கள் பத்திரப்படுத்தியுள்ள படத்தின் முகவரியை கொடுக்கவும்
- வார்ப்புருவின் நகலை Edit-HTML போய் பத்திரப்படுத்திகொள்ளவும்.
- வார்ப்புருவில் கீழே காணும் Tag ஐக் கண்டுபிடிக்கவும்
- நீங்கள் இணைக்க விரும்பும் ப்டத்தை..மேலே சொல்லியிருக்கும் Tags க்குப் பக்கத்தில்
<img src="File_path"/>
குடுத்து...SAVE & view - கவனிக்க : - File_path க்கு பதில் notepad ல் நீங்கள் பத்திரப்படுத்தியுள்ள படத்தின் முகவரியை கொடுக்கவும்
- கீழே காண்பது போல் மாற்றவும்
படம் இங்கு வைப்பதாக இருந்தால் | Width | Height |
---|---|---|
தேதிக்குப் பக்கத்தில் நீங்கள் விரும்பும் படம் | 20px | 20px |
posted by <நீங்கள் விரும்பும் படம்> | Any | 25px |
மேலே சொல்லியிருக்கும் dimension ல் படம் இருந்தால் உத்தமம்..இல்லைன்னா.. ஒவ்வொண்ணும்.. நீயாரோ - நான் யாரோ ன்னு மூஞ்சி்யைத் திருப்பிக்கும்
PHASE :-1
PHASE:-2 posted by <நீங்கள் விரும்பும் படம்>
<span class='post-author'>
<b:if cond='data:top.showAuthor'>
<data:top.authorLabel/>
<data:post.author/>
</b:if>
</span>
<data:top.authorLabel/>.. இது " Posted by " ஐ குறிக்கும்
<data:post.author/>........ இது உங்கள் பெயரைக் குறிக்கும்
PHASE:-3 தேதிக்குப் பக்கத்தில் நீங்கள் விரும்பும் படம்
<data:post.dateHeader> அல்லது <data:post.timestamp/>..இது அவரவர் வார்ப்புருவைப் பொறுத்தது
PHASE:-4படத்தைச் சுற்றி border இருந்தால்
.post img (கண்டுபிடிக்கவும்)
{
padding: 0px;
border: 0px solid #cccccc;
vertical-align:middle;
}
Subscribe to:
Posts (Atom)