Quick refrence

Download Links:- eKalappai 2.0b(Anjal) | eKalappai 2.0b (tamilnet99) - இங்கே தேர்வு செய்யவும்,
Key board layout :- e- kalappai (Anjal) |e-kalappai (Tamil 99) இதே மாதிரி இன்னும் ஏதாவது quick refrence சேர்த்தால் உபயோகமாக இருக்குமானால் பின்னூடத்தில் தெரிவிக்கவும்

Thursday, November 29, 2007

மறுமொழிப் பெட்டியில் தகவல் பலகை!

நம்மளோட ஜிமெயில் முகவரியில் ஸ்டேடஸ் மெசேஜ் ஏதாவது நாம் எழுதுவது உண்டு. அதே மாதிரி பிளாக்கர் பதிவோட மறுமொழிப் பக்கத்தில் ஏதாவது செய்தி சொல்ல முடியுமா?

முடியும்.

அதற்காக பிளாக்கர் பக்கத்தில் settings - comments பக்கத்துக்கு போக வேண்டும்.



அங்கே Comment Form Message என்று ஒரு பெட்டியைப் பார்க்கலாம்.



அந்தப் பெட்டிக்குள் நமது தகவலை, செய்தியை இட்டு save செய்தால் மறுமொழி எழுதுவதற்கான பக்கத்தில் அந்தச் செய்தி இடம் பெற்று விடும்.

Tuesday, November 20, 2007

கூகுள் டாக்கை உங்கள் வலைப்பதிவில் இணைப்பது எப்படி?

வலைப்பதிவுகளில் பலவிதமான சாட் தொடர்பு விட்ஜட்டுகளை பலரும் இணைப்பதை பார்த்திருக்கலாம். கூகுள் டாக் விட்ஜட்டை இந்த மாதிரி வலைப்பதிவின் பக்கப் பட்டியில் (சைடுபார்) இணைப்பது எப்படி?



பதிவுகளில் இந்த நிரலை எடுத்து இணைத்துக் கொண்டால் கூகுள்டாக் உங்கள் பதிவுக்கு வந்து விடும்.

Dashboard - Layout

- Template - page element

- Add a Page Element

- HTML/JavaScript - ADD to BLOG.


Friday, November 16, 2007

உங்கள் gravatar என்ன?

Gravatar உருவாக்குவது, வலைப்பதிவில் gravatar காட்டுவது எப்பட?