Quick refrence

Download Links:- eKalappai 2.0b(Anjal) | eKalappai 2.0b (tamilnet99) - இங்கே தேர்வு செய்யவும்,
Key board layout :- e- kalappai (Anjal) |e-kalappai (Tamil 99) இதே மாதிரி இன்னும் ஏதாவது quick refrence சேர்த்தால் உபயோகமாக இருக்குமானால் பின்னூடத்தில் தெரிவிக்கவும்

Sunday, October 28, 2007

பிளாகரில் இடும் மறுமொழிகளின் விவரத்தை உங்கள் மின்-அஞ்சலில் பெறலாம்

ஒரு நாள் நாம பல பதிவுகளை படிக்கறோம்... / பின்னூடம் எழுததோம்.. கொஞ்ச நாள் முன்னே வரை.. நாம எழுதியிருக்கும் கமெண்டுக்கு பதிவாசிரியர் / வேறு யாராவது பதில் கமெண்ட் போட்டிருக்காங்களான்னு தெரிஞ்சுக்க ஒரே வழி.. அதே பதிவை போய் பார்க்கிரதா தான் இருந்தது... அதுவும் பதிவின் சுட்டிய்யை நீங்கள் book mark செய்து வச்சிருந்தா.. ஒரு வேளை url மறந்து போச்சுன்னா.. பதில் ஏதாவது வந்திருக்கான்னு தெரிஞ்சுக்கவே வாய்ப்பில்லை... ( பதில் போட்டவரே உங்க கிட்டே வந்து சொன்னாலொழிய).
இனிமே அப்படி இல்லை.. கமெண்ட் எழுதும் போது கவனிச்சிருப்பீங்க.. உங்க மின் - அஞ்சல் முடவரியோட.. Email Follow up comments ன்னு ஒரு பொட்டி இருக்கும்.. அதை க்ளிக்கி tick -mark குடுத்தீங்கன்னா...போதும். பதில் கமெண்ட் வரும்போதெல்லாம்.. அதன் ஒரு பிரதி உங்க Inbox லெயும் இருக்கும்... ஒருவேளை.. உங்களுக்கே சம்பந்தப்பட்ட டாபிக் போரடிச்சுப்போச்சுன்னா... unsubscribe ஐ க்ளிக்கினா போதும்...
எனக்கென்னமோ இது ரொம நல்ல ஐடியாவாத்தான் தோணுது.. ரொம்ப பிசியா இருக்கும்போது.. (பதிவெழுதவோ.. தமிழ்மணம் போய் படிக்கவோ நேரமில்லாத போது).. நாம எழுதின கமெண்ட்டுக்கு பதில் வந்திருக்கான்னு தெரிஞ்சுக்க பிளாகரின் இந்த feature ரொமவும் உபயோகமாத் தான் இருக்கு.. இதே வேலையை co-Comment மூலமாகவும் செய்யலாம்... ( ஒரு புதிய கணக்கு துவங்கி... )... அது உங்க சௌகர்யம்.. எனக்கு பிளாகரின் Email Follow-up comments தான் சரின்னு படுது... எல்லாம் ஒரே இடத்தில் இருந்தா மிஸ்ஸாக சான்ஸில்லே பாருங்க...
-